வாசி யோக விளக்கம் 8

கடவுள் -மனிதன் - முக்தி (பகுதி 3)

மரணம் என்றால் என்ன? மரணத்தைக் கடத்தல் என்றால் என்ன ? மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவது எப்படி? நிலைத்த பேரின்பம் எது ? முக்தியால் கிடைப்பது என்ன? முக்தியின் நிலைகள் எவை?

3.மரணம் என்றால் என்ன? 

உடலை விட்டு உயிர் பிரிதலை மரனம் யென்று சொல்கிறோம் . எவ்விதம் மரணம் அடைகிறான், எப்படி தவிர்க்கலாம் என்று பார்ப்போம். மனிதன் மூன்று வகையில் மரணம் அடைகிறான். 
  1. இயற்கை மரணம்
  2. இளவயது மரணம் அல்லது இயற்கையான அகால மரணம் 
  3. இயற்கை இல்லா அகால மரணம்

3.1 இயற்கை மரணம்
வயது முதிர்ந்து மூப்பு அடைந்து தீர்க்கமுடியாத நோயால் பீடிக்கப்பட்டு பிணியால் மரணம் அடைகிறான். இது இயற்கை மரணம். இதை senescence என்கிறது அறிவியல் . இது மருத்துவத்தால் தடுக்க முடியாதது, சித்தர்களின் காய சித்தி வழியில் மரணத்தை தடுக்கலாம் ..

3.2 இளவயது மரணம் அல்லது இயற்கையான அகால மரணம்

வயது முதிராமல் நோய்,பிணி ,கன்மம் என்ற தீர்க்கமுடியாத நோய்களால் மரணம் ஏற்படுகிறது . புற்றுநோய், இதயக் கோளாறு, நுரை ஈரல் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்ற தீர்க்க முடியாத பிணிகளால் மரணிக்கிறார்கள். இது இளவயது மரணம் அல்லது இயற்கையான அகாலமரணம்

3.3 இயற்கை இல்லா அகால மரணம்
கொலை, தற்கொலை, விபத்து , விசக்கடி ,மிருகங்கள் அல்லது பிற உயிரினங்கள் தாக்குதல்,இயற்கைப் பேரிடர் , இடுமருந்து என பல காரணங்களால் மரணிக்கிறார்கள் . இவை இயற்கை இல்லா மரணம் .. இந்த இயற்கை இல்லா மரணமடைந்தவர்களில் சிலர் பேய்களாக உலவுகிறார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது . சித்தர்கள் பேய்கள் இல்லை என்ற கோட்பாடு உடையவர்கள் .


இம் மூன்றுவித மரணங்களிலும் அடிப்படையாக இருப்பது செல் மரணம் என்கிறது இன்றைய அறிவியல் .. மரணம் அடையும் உடல்பற்றி அறிந்தால் மரணம் தவிர்ப்பது அல்லது கடப்பது புரியும் .

சித்தர்களின் மருத்துவக் கோட்பாட்டின்படி உடல் கூறு என்பது 
ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த மூன்று தேகங்கள் கொண்டது . . .

தேகங்கள் மூன்று
  1. பருஉடல் அல்லது ஸ்தூல தேகம் 
  2. நுண்உடல் அல்லது சூட்சம தேகம், 
  3. காரண தேகம்

1. பருஉடல் அல்லது ஸ்தூல தேக மரணமும் தவிர்த்தலும்.

பருஉடல் என்பது வெளி உறுப்புகள் மற்றும் உள் உறுப்புகளால் ஆனது..

முடி, நெற்றி,கண்,காது,மூக்கு,வாய்,மார்பு ,கை , கால், பாலின உறுப்பு போன்றவை வெளி உறுப்புகள். மூளை, நுரை ஈரல், இதயம், கல்ஈரல், மண் ஈரல், சிறு நீரகம் , குடல்கள் , சிறுநீர்ப்பை, சினைபை/விதைகொட்டை ஆகியவை உள் உறுப்புகள் . பல உறுப்புகளால் அமைந்த உடலே பருஉடல் அல்லது ஸ்தூல தேகம் .. இந்த உறுப்புகள் தோல் , தசை, நரம்பு, எலும்பு மஜ்சை, இரத்தம் ,சுக்கிலம் / சுரோணிதம் ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது . 

இன்பம்,துன்பம் துக்கம், மகிழ்ச்சி கோபம். பயம், வேதனை , அருவருப்பு , நோவு, வலி,பயம்,நடுக்கம், குளிர்ச்சி,வெப்பம் ,இனிப்பு,கசப்பு, இசை ,சத்தம் ஆகிய மனதாலும் உடலாலும் அறியப்படும் உணர்வுகளைப் பிரித்து அறியக்கூடியது பருஉடல்.

பருஉடலில் மட்டும் ஏற்படும் உள் மற்றும் வெளிப்புறத் தாக்குதல்களால் 

வலி, நோவு உண்டாகுகின்றன . இதனால் துயரம் உண்டாகிறது .. இவை நோய் என்று அறியப்படும் . நோயைப் போக்க மூலிகை மருந்துகள் , உணவுகள், ஆசனங்கள் , ஒத்தடங்கள் , பத்துகள் ,தடவுதல் , குளியல் , ஆகியவை பயன்படும்.இவைகள் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன . பெரும்பாலும் இம்மருந்துகள் நோயைப் போக்கும் தன்மை கொண்டவை . நமது உடல் உருவாக்கும் ஆண்டி பாடி என்ற புரதத்தை உருவாக்கி ,உடல் உறுப்புகளை பலப்படுத்தி நோயை போக்குகின்றன.

உடலில் வெளியே இருந்து புகுந்த நச்சுகள் மற்றும் உடலில் உள்ளே உற்பத்தியான நச்சுகளை ஒன்பது பெரும் துவாரங்கள் வழியாகவும் மூன்றுகோடி நுண் துவாரங்கள் வழியாகவும் பருஉடல் வெளிஏற்றுகிறது.எனவே பக்க விளைவுகளை அவை பெரும்பாலும் உருவாக்குவது இல்லை. 

ஹோமியோபதி மருந்துகள் ஒத்தவை ஒத்தவற்றை குணமாக்கும் என்ற கோட்பாட்டின்படி பக்க விளைவு இன்றி நோய் நிலையில் இருந்து உடலை ஆரோக்கியமாக மாற்றி நலமாக்குகின்றன.இந்த மருத்துவமுறைகள் யாவும் மாற்று மருத்துவமுறைகள் என்று அறியப்படுகின்றன. மாற்று மருத்துவ முறைகள் பெரும்பாலும் நமது உடலில் ஆண்டி பாடி என்ற புரதத்தை உருவாக்கியும் ,உடல் உறுப்புகளை பலப்படுத்தியும் நலமாக்குகிறது.

ஆங்கிலமருத்துவம் பரு உடல் அமைப்பை விரிவாக ஆராய்ந்து உள்ளது. அதில் உருவாகும் நோய்களை கண்டறிய சிறந்த , போற்றத்தக்க நோய் ஆய்வு முறைகளை உருவாக்கி உள்ளது . பரு உடல் நோய்களை போக்கும் மருந்துகள்(curative medicines curativec ) நோயால் உருவாகும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்துகள் ( sedatives ), நோயை உள்ளே அமுக்கி துயர் தெரியாமல் செய்யும் ஊக்க மருந்துகள்(Steroids pain killers ) பரு உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பரு உடலில் தொற்றிக்கொள்ளும் கிருமிகளைக் கொல்லும் கிருமி நாசினி மருந்துகள் ( Antibiotics )
உடல் உறுப்புகளைத் தூண்டும் சுரப்பி( Hormones )மாருந்துகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன . 
அவசர உலகில் அவசரமாக நோயை போக்க விரும்புகிறோம் ., எனவே . நோயால் உருவாகும் வலி தெரியாமல் இருக்க, மயக்க மருந்துகள் (sedatives), நோயை உள்ளே அமுக்கி துயர் தெரியாமல் செய்யும் ஊக்க மருந்துகள்(Steroids pain killers ) பரு உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பரு உடலில் தொற்றிக்கொள்ளும் கிருமிகளைக் கொல்லும் கிருமி நாசினி மருந்துகள் ( Antibiotics ) அதிகம் பயன்படுத்த படுகின்றன ஆங்கில மருத்துவமுறையில் ..இதனால் நோய் குறைந்தது போல் தோன்றும். நோவு மறைந்தது போல் தோன்றும் . பல பக்க விளைவுகள் உருவாகும். உடல் எதிர்ப்புச்சக்தியை இழக்கிறது . உடலில் உருவாகும் நச்சுக் கழிவுகள் வெளி ஏற்றப்படாமல் போகிறது .நோய் வலிமை பெற்று வேறு விதமாக தாக்குகிறது . எனவே நல்ல ஆங்கில மருத்துவர்கள் இத்தகைய மருந்துகளை மிகக் குறைவாக பயன்படுத்துவார்கள் . ஆங்கிலமருத்துவம் பயன்படுத்தி இக்குறைகளை அறிந்தவர்கள் மாற்று மருத்துவத்தை நாடுகிறார்கள் .

குறிப்பாக விசங்களால் , வைரஸ் தாக்கத்தால் வரும் நோய்களை போக்கும் வழி முறைகள் ஆங்கில மருத்துவமுறைகளில் பெரும்பாலும் இல்லை . உதாரணமாக மஞ்சள் காமாலை , பெரிய அம்மை, வைரஸ் காய்ச்சல்கள் . டெங்கு , சிக்கன் குன்யா பன்றிக்காய்ச்சல் ஆகியவை . இத்தகைய நோய்கள் மாற்று மருத்துவமுறைகளில் எளிதாகப் போக்கிவிடமுடியும் .

பரு உடல் நோய்களை போக்க முடியாத நிலையில் மரணம் நேருகிறது .. இது வயோதிகத்திலும் ஏற்படும் . இளம் வயதிலும் ஏற்படும் . இந்த நோய்களைப் போக்கி மரணத்தைத் தவிர்க்க முடியும் .

2. நுண் உடல் அல்லது சூட்சம தேக மரணமும் தவிர்த்தலும்

பரு உடலுக்கு உள்ளே அமைந்திருப்பது நுண் உடல் . உடலுள் இருக்கும் ஆறு ஆதாரங்களும் ,உடலுக்கு வெளியே இயங்கும் நிராதாரம் ஒன்றும் மாக ஏழு ஆதாரங்களில் இயங்கும் சக்கரங்களும் , கண்களுக்குப் புலனாகாத 10நாடி களும், 10 வாயுக்களின் ஓட்டங்களும் நுண் உடலில் அடங்கும் . ஏழு ஆதாரங்கள் பற்றி விரிவாகச் சொல்லி உள்ளேன் . தச நாடிகளையும் அதில் தச நாடிகளின் இயக்கங்களையும் பற்றி தனிப்பதிவு செய்கிறேன் ..

சூக்கும உடலில் பஞ்ச பூதங்களும் இயங்குகின்றன . இவை சக்தியை உருவாக்கி, சக்தியைப் பரிமாறும். சக்தி பலவித ஓட்ட ங்களாக உள்ளன .. இந்த சக்தி ஒட்டமே சக்தியை உருவாக்கி அனைத்து செல்களுக்கும் சக்தியை எடுத்துச் செல்கின்றன . கழிவுகளை வெளியேற்றுகின்றன .பஞ்ச பூதங்களும் சமநிலையில் இயங்கினால் சக்தி ஓட்டம் சீராக இருக்கும் . ஆகையால் மரணம் இல்லை . 
சக்தி சமநிலையில் மாறுபாடு ஏற்பட்டால் பிணி உருவாகிறது .பிணி சூக்கும தேகத்தில் பிணைந்து உள்ளது . பிணியால் மரணம் ஏற்படுகிறது . நமது உடல் சக்தி சமநிலை அற்ற வகையில் மரணிக்க படைக்கப்பட்டு உள்ளது. இதனால் மூப்பு , பிணி ,சாக்காடு உருவாகிறது அல்லது அகால மரணம் மற்றும் இயற்கை அற்ற மரணம் ஏற்படுகிறது .. இதுபற்றி திருமூலர் சொல்வதைப் பார்ப்போம் .

ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள 
மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர் 
பாத்தியிற் பாயாது பாழ் பாய்ந்து போயிடிற்
கூத்தி வளர்த்த கோழிபுள் ளாமே

திரு மூலர் திருமந்திரம் 2873

நமது சூக்கும உடலில் ஏழு ஆதாராங்கள் சக்தியை உருவாக்கி சேமித்து பரிமாற்ற உதவுகின்றன. இதில் சூரியகலை என்ற ஏற்றம், சக்தியை மூலாதாரத்தில் இருந்து மேலே ஏற்றி சகஸ்ராரம் கொண்டுசென்று அங்கு சக்தியை எடுத்து பரிமாற்றம் செய்ய சந்திர கலைக்கு கொடுக்கிறது . சூரிய கலையில் ஏற்றம் பெற்ற சக்தியை சந்திரகலை பரு உடலுக்கு ஏற்றி உடல் உறுப்புகளுக்குப் பரிமாறுகிறது . உடல் உறுப்புகளுக்கு பரிமாறும் நிலையில் சந்திரகலை இளயான் என்று அழைக்கப்படுகிறது . உடலுக்கு தேவையான சக்தி உருவாக்கத்திலும் பரிமாற்றத்திலும் சமநிலை இல்லாமல் குறைபாடு இருந்தால் உயிர் அழியும் . விலைமகளிர் வீடுகளில் இருக்கும் கோழிகள் வாடிக்கையாளர்களுக்கு விருந்து படைக்க அழிக்கப்படுவது போல் பிணியால் மரணம் நேரும்.

நுண் உடலில் இருக்கும் பிணிகளைப் போக்க கல்ப மருந்துகளும் வாசி யோகமும் பயன்படும். கல்ப மூலிகைகளும் கல்ப பஸ்பங்களும் உட்கொண்டு மரணத்தை கடக்கமுடியும்.

சித்தர் வழிமுறைகள் மரணத்தை கடக்கச் செய்வதில் இன்றைய அறிவியலிலும் மேன்மை பெற்றவை என்பதைப் பார்ப்போம் .

இன்றைய அறிவியல்படி நுண் உடல் என்பது செல்களால் உருவானது . செல்கள் உட்புறம் DNA , RNA ஆகிய Acid கள் உள்ளன . எனவே செல்கள் ஆசிட் தன்மை வாய்ந்தவை .. ஒரு செல் தனது செயல்பாட்டால் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது . அப்பொழுது செல்லுக்குள் கழிவுப் பொருட்கள் நச்சுப் பொருட்கள் உருவாகின்றதன. இந்த விசப் பொருட்கள் செல்களை அழிக்காமல் இருக்க நச்சுப் பொருள்களை செல் வெளியேற்றுகிறது .

செல் ரத்தத்தில் இருந்து சத்துகளைப் பெற்று, தன்னுள் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தில் சேர்க்கிறது .. இந்தச் செயல்பாடு Acid base balance என்ற நிலையில் சவ்வூடு பரவல் முறைகளில் நடை பெறுகிறது . இந்த செயல்பாடு சரியாக இருந்தால் உடல் வலுவான நிலையில் இருக்கும் .

உடலின் ஆசிட் என்பதை புளிஎன்றும் , பேஸ் என்பதை உப்பு என்று பிரிந்து 5000ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் சொல்லி உள்ளார்கள் . உடலின் புளி உப்பு சமநிலையானது பஞ்ச பூத சமநிலையை உருவாக்கி மரணத்தை கடக்கும் என்று சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். அதற்கான கல்ப மருந்துகள், மருத்துவ முறைகள் சொல்லி உள்ளார்கள். 

இதுவே இளமையுடன் மரணத்தை தாண்டும் உபாயம் .


கார சார சமநிலை Acid base balance எப்படி உருவாகிறது?

நமது ரத்தம் காரத்தன்மை கொண்டது (Base). செல்லின் உட்புறம் புளித்தன்மை கொண்டது (Acid). . செல்லானது நானோ துளைகள் கொண்ட சவ்வால் மூடப்பட்டு உள்ளது. செல்சுவர்களின் ஊடே நானோ அளவு நுண் துகள்கள் மட்டும் பயணம் செய்யும் . நானோ துளைகளின் வழியாக சவ்வூடு பரவல் முறையில் சத்துப் பொருட்கள் உள்ளே செல்கின்றன .கழிவுகள் வெளியே செல்கின்றன . இதற்கு அடிப்படை காரணம் இரத்தத்தின் காரத் தன்மையும் செல்களின் புளித் தன்மையும் ஆகும். இது தொடர்ந்து பராமரிக்கப்படவேண்டும் . . அதாவது ரத்தத்தின் காரத்தன்மையும் செல்களின் புளித்தன்மையும் காக்கப்படவேண்டும்.

இரத்தம் காரத்தன்மையை இழந்துவிட்டால் செல் கழிவுகளை வெளி ஏற்ற முடியாது. சத்துப்பொருட்கள் செல்லுக்குள் வராது . அது போன்று, செல்லின் உட்புறம் அமிலத் தன்மையை இழந்தால், கழிவுகளை வெளி ஏற்ற முடியாது. சத்து பொருட்கள் செல்லுக்குள் வராது.

செல் தொடர்ந்து வேலை செய்வதால் செல் புளித்தன்மை இழக்கும் நிலை அடைகிறது .செல் ரத்தத்தில் இருந்து சத்துப் பொருட்களைக் கிரகிக்க முடியாமல் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போய்விடுகிறது . அந்தசெல் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது . அதன் பின் இறந்த செல் முடிந்தவரை கழிவுகளை வெளியேற்றுகிறது.தன்னைத்தான் அழித்துக் கொண்ட செல் ரத்தத்தில் இருக்கும் சத்துப் பொருட்களை எடுத்துக்கொண்டு, மீண்டும் புதிதாக உருப்பெறுகிறது . அப்போது சில நச்சுப் பொருட்களை செல் வெளியேற்ற முடியாமல் போகிறது . இந்த நச்சுப் பொருட்கள் புதிய செல்லுடன் ஒட்டிகொள்கிறது .

இவ்விதம் செல்லுடன் ஒட்டிக் கொள்ளும் விசங்களால் செல் தனது செயல் பாட்டில் ஒரு பகுதியை இழக்கிறது. இவ்விதம் செல் தன்னைத்தானே அழித்தும் புதுப்பித்துக் கொள்ளும் போது செல்களில் விச தன்மை அதிகரித்துக்கொண்டே செல்கிறது . . இதனால் செல் தனது புதுப்பிக்கும் உயிர்சக்தியை இழக்கிறது , இதனால் பலவித பிணிகள் உருவாகிறது . நோய்வாய்பட்ட செல் அதிகபட்சம் சுமார் 30௦முறை தன்னை தானே புதுப்பித்துக்கொள்ளும் . இதன் பின் செல்புதுப்பிக்கும் தன்மை இழந்து விடுகிறது . ஆகையால் செல்கள் நிரந்தரமாக அழிந்து விடுகின்றன.
  
செல்களில் உள்ள கழிவுகள் கூடக்கூட உடல் உறுப்புகள் செயல்திறன் இழக்கின்றன . இதுவே முதுமை. முடிவில் செல்கள் முழுமையாக ஒரு அவயவத்தில் அல்லது பல உறுப்புகளில் செயல் இழந்து போனால் மரணம் நேருகிறது . மூளையில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படாமல் போகும்போது மூளைச் சாவு ஏற்படுகிறது . அப்பொழுது பிறஉறுப்புகளிள் உள்ள செல்கள் குறிப்பிட்ட நேரம் வரை உயிருடன் இருக்கும் . அதன் பின் அனைத்து செல்களும் மரணிக்கும் .. 
அனைத்து செல்களும் மரணிக்கும் போது மனிதனுக்கு முழுமையான மரணம் நேர்கிறது . . இது இயற்கை மரணம்.

இள வயது மரணம் 
புற்றுநோய்

செல்களில் ஏற்படும் தீயமாற்றம் உறுப்புகளில் சிதைவை அல்லது இயற்கைக்கு மாறான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது இள வயது மரணம் மற்றும் அகால மரணத்தையும் ஏற்படுத்தும் . மரணங்களில் கொடுமையானது புற்றுநோய் . இதை சுருக்கமாகப் பார்ப்போம் . 
செல்களில் தேங்கும் கார்சிநோஜன் என்ற நச்சுக்கழிவு தேங்கும் அளவு கூடினால் செல்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடுகின்றன . இதனால் புற்றுநோய் செல்லாக மாறுகிறது . புற்று நோய் செல்கள் பெரியவை மற்றும் வேகமாக பெருகும் தன்மை கொண்டவை . இதனால் புற்றுக் கட்டிகள் , அல்லது உறுப்புகளில் தேவை அற்ற வளர்ச்சி அல்லது சிதைவு ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது . செல்களில் கார்சினோஜன் விஷம் கூடுவதால் அளவு கடந்த வலி, சோர்வு ஏற்படுகிறது. உறுப்புகள் செயல் இழக்கின்றன .. எனவே தாங்கமுடியாத துயரம் ஏற்பட்டு மரணம் நேர்கிறது . இந்த மரண நேரவலியை துடிப்பை போக்கும் மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் இல்லை. ஆகையால் பிறமரணங்களை விட புற்று நோய்க்கு பயப்படுகின்றார்கள் .


செல்களின் புதுப்பிக்கும் திறன் மற்றும் தூய்மையை நிர்ணயிப்பவை 
1.ஆசிட் பேஸ் பேலன்ஸ் மற்றும் 2.செல்களில் தங்கும் விசங்களைப் போக்கல் அல்லது செல்களை சுத்தம் செய்தல் .

இந்த இரண்டும் சரியாக இருந்தால் செல்கள் ஆரோக்கியமாக இருக்கும் . உறுப்புகள் இளமையாய் இருக்கும் . மனிதன் இளமையாய் இருப்பான். மரணம் தவிர்க்கப்படும் ..

இத்தகைய தொழில் நுட்பத்தை ரேஜூவிநேசன் என்கிறனர் இன்றைய மருத்துவ உலகம் இன்றைய அறிவியல் இந்த தொழில்நுட்பத்தில் முழுமை பெறமுடியவில்லை. அவர்கள் வெற்றி பெறவில்லை . ஆராய்ச்சிகள் தொடர்கின்றன . ஆகையால் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை . வலியும் மரணமும் தவிர்க்கப் படவில்லை.

சித்தர்கள் சூக்குமதேகத்தில் (செல்களால் ஆனஉடல் )அதாவது செல்களில் உவர் என்ற விஷம் அதிகமாவதால் உடல் செயல் இழந்து மரணமடைகிறது என்று 5000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியுள்ளார்கள் . இந்த உவர் ( carcinogen and other toxins) என்ற விசத்தைப் போக்கி மரணத்தை வென்றேன் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். இந்த உவர் கோழையை உருவாக்கும் . கோழை மரணம் உண்டாக்கும் . கோழையைப் போக்க இந்த உவர் என்ற விசத்தைப் போக்கி மரணத்தை வென்றேன் என்று சித்தர்கள் சொல்கிறார்கள்..

“கோழையை வென்றேனப்பா யெமனை வெண்றேனப்பா” என்கிறார் காகபுசுண்டர்

இன்றும் சித்தர்களின் இந்த தொழில் நுட்பம் செயல் படுகிறது. 

உடலின் ஆசிட் என்பதை புளிஎன்றும் , பேஸ் என்பதை உப்பு என்று பிரிந்து 5000ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் சொல்லி உள்ளார்கள் . உடலின் புளி உப்பு சமநிலை யானது பஞ்ச பூத சமநிலை உருவாக்கி மரணத்தை கடக்கும் என்று சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். அதற்கான கல்ப மருந்துகள், மருத்துவ முறைகள் சொல்லி உள்ளார்கள் . இதுவே இளமையுடன் மரணத்தை தாண்டும் உபாயம் .

“புளி உப்பு , அறிந்துண்டால் யாக்கைக்கு அழிவு இல்லை “ என்கிறார் யூகிமுனி . . புளி உப்பு என்பது நாம் சாப்பிடும் உப்பு புளி இல்லை . புளி உப்பு என்பவை மூலிகை கல்ப மருந்துகளும் பஷ்பங்களும் ஆகும். 

இன்றும் சித்தர்களின் இந்த தொழில் நுட்பம் செயல் படுகிறது. இம்முறைகள் சாகாக் கல்வியாகும் .

காரண தேகம் 
சூக்கும தேகத்தை இயக்குவது காரண தேகம் . காரண தேகத்தை இன்றய அறிவியல் ஜீன் பாடி என்கிறது.. காரண தேகத்தில் உருவாவது கன்ம வியாதி . பெரும்பாலும் பிறக்கும் போது உருவாவது 
சித்தர் திருமூலர் இதுபற்றி சொல்கிறார்

திங்கள் பத்தாகிற் தேய் வொடு வாயுசேர்ந்
தங்கிமலர்த்தி யமளியாய் கீழ்ணோக்கிப்
பொங்கி பிறந் தனாள்புகழ்வார் வெறுவீணர்
தங்கி செனிக்கையில் றாணோயு முற்றதே

திரு மூலர் கருக்கிடை 600 பாடல் 16

பெண் கற்பமுற்று பத்து மாதம் சென்றபின் வெப்பமும் அபாண வாயுவும்
சேர்ந்து கருவில் இருக்கும் குழந்தையை கீழ்நோக்கித் தள்ளும்.
குழந்தை பிறந்தது யென்று வீணர்கள் மகிழ்வார்கள். குழந்தை கருத்தரிக்கும் போது கன்ம வியாதியும் சேர்ந்து பிறந்தது.

குடி வழியே தொடருமடா கன்மந்தானும் 
குறிப்பறிந்து கன்மத்தை நிவர்த்தி செய்யே

அகத்தியர் கன்ம காண்டம் 300 பாடல் 12

மரபுவழி நோய்கள் பரம்பரையாகத் தொடரும் . இதன் குறிகள் சாதாரண நோய் போல தோண்றும் . ஆயினும் கன்ம நோயை சாதாரன நோயில் இருந்து வேறு படுத்தி அறிய வேண்டும். அதற்கான மருத்துவம் செய்து நலமாக்க வேண்டும். 
அகத்தியர் கன்மம் பற்றியும் ,அதை நலமாக்கல் பற்றியும் 300 பாடல்கள், அகத்தியர் கன்ம காண்டம் என்ற நூலில் பாடி உள்ளார் . . ஜீன்தேகத்தில் அதாவது ஜீன் குறை பாட்டால் புற்று கட்டிகள் உருவாகின்றன என்று இன்றைய ஆங்கில மருத்துவம் சொல்கிறது. ஆனால் இதுவரை நலமாக்கும் மருந்துகள் கண்டு பிடிக்கப் படவில்லை. 

சித்தர்கள் 5000 ஆண்டுகளூக்கு முன்பு கன்மத்தால் புற்று நோய் காரண தேகத்தில் உருவாகும் என்றனர். அந்த நோயைப் போக்க மருந்து சொல்லி உள்ளார் அகத்தியர்.

கிட்டிடா அரும்பொருள் தான் முப்பு உப்பு
கிட்டினா லுந்தனுக்கு நோயுந் தோற்கும் 
அட்டிசெய்யு யெமனணுக மாட்டானப்பா
..................................................................................
கட்டிதிர ளரையாப்பு புரை புத்தெல்லாம் 
கரைப்பது மிதுவு மல்லா லதினங்கேளே 

அகத்தியர் கன்ம காண்டம் 300 பாடல்304

கொன்றுவிடும் மும்மூல வஷ்தின் பற்பம் 
குணமதனை யறிந்தவரா ருலகிலில்லை 
நன்றுநாலாயிரத்து நாணூற்றுநாற்பத் தெண்ணோய்
நாசமறுந் தீப்பூடு நகைத்த மார்க்கம் 

அகத்தியர் கன்ம காண்டம் 300 பாடல்304


முப்பு உப்பு யென்ற அரும் பொருள் கிடைப்பது அரிது. அது கிடைத்தால் கட்டிகள், அரையாப்பு, புரையோடி ஆறாத புண், புற்று நோய்கள் ஆகியவை குணமாகும் . நோயால் மரணமடைய மாட்டார்கள்.

மும்மூலவஷ்தின் பஷ்பம் என்ற தீப்பூடு என்ற முப்பூ பஷ்பத்தில் செய்த மருந்துகளின் குணங்களை யாரும் அறியமாட்டார்கள். மனிதருக்கு ஏற்படும் 4448 நோய்களையும் தீர்க்கும்.

மரணத்திற்கும் முக்திக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் முக்தியின் வகைகள் பற்றியும், சித்தர்களின் முக்திக் கொள்கை பற்றியும், மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவது எப்படி?நிலைத்த பேரின்பம் எது ? முக்தியால் கிடைப்பது என்ன? முக்தியின் நிலைகள் எவை?என்பவைகளை
வரும் வாசி யோக விளக்கம் 9 பதிவில் பார்ப்போம்.