வாசி யோக விளக்கம் 5

சாகா பாதையில் காணும் தோற்றங்கள் 

இதுவரை காண்பதில் இணைந்துள்ள 25 தத்துவங்கள் பார்த்தோம் . இந்த தத்துவங்களை கொண்டு காண பயன்படும் கண்களை பார்ப்போம்.

காகபுசுண்டர் சொல்வதை பார்ப்போம் .

ஓய்ந்துபார் தனித்திருந்து உற்றுப்பாரு 
ஊர்சுற்றுங் கண்ணோடு மனக்கண் சாரு 
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 639

ஞானக்கண் நெற்றிக்கண் உச்சிக்கண்ணு 
நயனக்கண் மேலேதான் யோகக்கண்ணு 
ஊனக்கண் சதைக்கண்ணு பாடல் விழியின்கண்ணு . 

சாகாபாதை தோற்றங்கழும கண்களும் 25 தத்துவங்களும் 

சாகாபாதை பற்றி

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 648


சொன்னதை கொண்டுமே விசாரித்தேன் யான் 
துரியபத ஒளிக்கண்ணாம் ஞானக்கண்ணாம்
 
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 621


காகபுசுண்டர் நமக்குள் இருக்கும் பலவித கண்களை சொல்கிறார் .

கண் / சதைக்கண்/ ஊனக்கண் / விழி கண் 
நினைவு நிலையில், நிஜத்தில் நம்முன் உருவங்கள்மற்றும் நிகழ்வுகள் தோன்றுவது . புரககண்களால் அல்லது விழிகளால் காண்பது. இவ்விதம் காண்பது ;நமது புரக்கண்னின், பார்க்கும் தன்மை , சூழ்நிலை, தூரத்தை சார்ந்து நிகழ்வது மற்றும் மூளையின் ஒருங்கிணைப்பு தன்மையை சார்ந்தது ..

மனக்கண் / நயனக்கண்

தனித்து இருந்து கண்களை மூடி உற்று பார்க்கும் போது காட்சிகள் தோன்றும் . இது மனக்கண் கண்களை மூடி நாம் ஏற்கெனவே பார்த்தவற்றை மீண்டும் ஞாபகம் செய்து பார்ப்பது . இது மனக்கண்ணால் ஸ்துலதேகத்தில் ஜாக்கிரத அவத்தையில் காண்பது . 
திராடக , சூரிய யோகம் .சந்திரயோகம், ஆகிய பயிற்சசிகள் செய்யும்போது கண்களை மூடி பாக்கும் போது தோன்றும் ஒளி மற்றும் உருவங்கள் மனக்கண்ணால் காணப்படுவது இவை சூக்குமதேகத்தில் ஜாக்கிரதா அவத்தையில் மனக்கண் நிலையில் காண்பது.


யோககண்;
வாசி யோகத்தில் கண்களை மூடியபடி பிரத்தியாகாரம், தாரணை ஆகிய பயிற்சசிகள், செய்யும்போது நாம் காணும் காட்சிகள் சூட்ச்சம தேகத்தில் ஜாக்கிரதா அவத்தையில் யோககண் கொண்டு பார்க்க படுவது . இதில் தோன்றும் ஒளி வாலை இல்லை .

 
ஞானக்கண்/ ஒளிக்கண் 
வாசி யோகத்தில் துரிய தியான நிலையில் காணும் ஒளி வாலை . இந்த வாலை ஒளியை காண பயன்படுவது ஞானக்கண். இந்த கண் கொண்டு தூரத்தில் இருப்பதையும் , நடந்தவற்றையும் நடக்க போவதையும் காண்பது இயலும் . இதை ஞான திருஷ்டி என்றும் சொல்லுவார்கள் , இந்த நிலையில் சித்தர்களை பார்க்கலாம் . பேசலாம்

நெற்றிக்கண்/ மூன்றாம் கண் 
கூடாத நெற்றிக்கண் திறந்ததனால் 
குரு முனியே யாகலையா நாரதாதி 

காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 7௮2 
. .
சித்தர்கள் , ரிஷிகள் முனிகளின் புருவமத்தியில் மறைந்திருக்கும் கண் தான் நெற்றிக்கண். என்ற மூன்றாம் கண். மூன்றாம் கண் திறக்கபட்டால் குருமுனி என்ற நிலை கிடைக்கும் அவவிதம் குரு முனி ஆனவர் அகத்தியர் . மூன்றாம்கண் சித்தசக்தியை வெளிபடுத்த பயன்படும் . சிவன் நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரித்தார்.. கொக்கை கொங்கணர் எரித்தார் . இதன் பயன்பாடு அழிப்பதற்கு உள்ளது ..இந்தகண் சுழிமுனையில் , சூட்ச்சம தேகத்தில் துரிய நிலையில் செயல்படும் .

உச்சிக்கண்
இது சகஸ்ரார சக்கரத்தில் இயங்குவது .. சூட்சம தேகத்தில் துரிய நிலையில் இயங்குவது . இதனால் முப்பாழ் என்னும் பாழ்வெளியை தரிசிக்க முடியும் .இதை மௌன யோகம் என்பார்கள் . வெளிப்பாழில் பரவெளியில் இருக்கும் உண்மணித்தாய் என்ற பிரபன்ச்ச வாலை கண்டு பிரபன்ச்சத்தில் இறைவனோடு ஒன்றுதல் . இதை பரமுக்தி என்பார்கள் .
இந்த கண்கள் வாசியோக தியானத்தில் உருவாகும் .

இன்றைய அறிவியல் ஆய்வில் தியானம் .

100 ஆண்டுகள் முதல் 4௦0 ஆண்டுகள் வரை தியானம் செய்து ,தியானத்தில் முதிர்ந்தவர்களையும் ஆரம்ப நிலையில் தியானம் செய்பவர்களையும் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .. 

தியானத்தின் போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி Electro Encephala Gram கருவியால் ஆய்வு செய்யப்பட்டது .இந்த ஆய்வு தியானத்தின் போது மூளையில் ஐந்துவகை அலை வரிசைகள் உருவாவதாக சொல்கிறது .. அவைகள் உருவாககும் உணர்வு நிலைகளை சொல்கிறது . அவைகள் 
b Deltawave :upto 3 Herdz….. Deep sleep state 
Thetawave :4 to to 7HZ Transition between deep sleep and dream state 
Alpha wave:, 8 to 15 Dream state when the eye is closed and not in deep sleep 
Beta wave: 16 to 31 consciousness state 
Gamma wav 32 to 100 HZ at the higher stage of meditation . , Stochastic resonance 
.


டெல்டா அலைவரிசை : ஆழ்ந்த தூக்கத்தில் உணர்வு அற்ற நிலையில் உருவாகிறது . இந்த அலைவரிசை 3 ஹெர்ட்ஸ் வரை இருக்கும் இதை சித்தர்கள் சுழுத்தி. என்றனர் Delta wave upto 3 Herdz….. Deep sleep state

தீடா அலைவரிசை . இது 4 முதல் 7 ஹெர்ட்ஸ் வரை இருக்கும் இது கனவு நிலையில் இருந்து ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும் . Thetawave 4 to to 7HZ Transition between deep sleep and dream state . 
ஆல்பா அலை வரிசை :கண்களை மூடியநிலையில் உருவாவது . இந்த நிலையில் 8 முதல் 15 ஹெர்ட்ஸ் உருவாகும் . 15 ஹெர்ட்ஸ் உயர் அலைவரிசையில் கனவு தோன்றும் Alpha wave, 8 to 15 Dream state when the eye is closed and not in deep sleep. இதை சொப்பனா அவஸ்தை என்றாற்கள் சித்தர்கள் .

பீடா அலை வரிசை : இந்த அலைவரிசை 16 முதல் 32 ஹெர்ட்ஸ் அதிர்வில் உருவாகும் . இது, கண் திறந்த நிலையில் சுய உணர்வு நிலையில் உருவாகும் . இதை விழிப்பு அல்லாது ஜாக்கிரதா அவஸ்தா என்றார்கள் சித்தர்கள் .
சாதாரண மனிதர்கள் பீட்டா அலை வரிசை என்ற சுய உணர்வு நிலையில் இருந்து ஆல்பா அலைவரிசையில் கனவுநிலைக்கு சென்று தீட்டா அலைவரிசையில் தூக்கநிலை அடைகின்றனர் பின்பு டெல்டா அலைக்கு சென்று ஆழ்ந்த தூக்கம் அடைந்து சக்தி பெறுகின்றனர் . சக்திபெற்றபின் விழிப்பு அடைகிறார்கள் . இது மரணிக்கும் பாதை . . 


ஆனால் விழிப்பு நிலையில் இருந்து அதாவது பீட்டா நிலை யில் இருந்து காமா நிலைஎன்ற் துரிய நிலை சென்று அளப்பரிய சக்தியும் , சித்தியும் பெறுவது மரணமில்லா பாதை . அப்பொழுது பிரத்தியாகாரம தாரணை தியானம் ஆகிய படித்தரநிலைகளை கடக்கவேண்டும் என்று சித்தர்களின் வாசி யோகம் சொல்கிறது இது ராஜ பாட்டை என்ற ராஜ யோகம் .என்ற அஷ்டாங்க யோகம் .எளிதாக , மனம் குழப்பம் அடையாமல் துரியம் என்ற காமா நிலை அடையமுடியும் மேலும் பாதுகாப்பானது .


வாசி யோகமும் பிற தியானமுறைகளும்.


.ஆராய்ச்சி முடிவுகளின்படி , புத்த துறவிகளில் ஆரம்ப நிலை தியானம் செய்தவர்களுக்கு காமா அலை வரிசை உருவாகவில்லை காரணம் அவர்கள் தூக்கநிலை சென்றார்கள் அல்லாது சுய உணர்வு நிலையை கடக்க முடியவில்லை . . ஆனால் 1000 ஆண்டு தியானம் முதல் 4 0 ஆண்டு தியானம் செய்தவர்கள்தான் காமா அலை உருவாக்கினார்கள் . .

பிற தியானமுறைகள் துரியம் அல்லது காமா நிலை அடைய பிரத்தியாகாரம் தாரணை போன்ற படித்தரங்களை அல்லது படிகளை செல்லாமல் நேரடியாக துரிய நிலை செல்ல செல்வதால் மனக்குழப்பம் ஏற்படும் . இது தான் ஓஷோ சொல்லும் தியானம் . மேலும் நேரடியாக தியானம் செய்வதில் மனம் குவியாது .,துரிய நிலை செல்லாமல் தூக்க நிலை செல்லும் அல்லது குழப்பம் அடையும் தியானம் கை கூடாது 


யோகா என்றாலே வாசி யோகம் என்ற அஷ்டாங்க யோகம் என்கிறது
விஷ்ணுபுராணம் ஆறாம் அத்தியாயம் வாசி யோகத்தின் எட்டு அங்கங்களை விளக்குகிறது . 

ஞானத்தின் மூலம் யோகிகள் பரமாத்மாவவுடன் ஒன்றுவது பற்றி சொல்லும் வித்தையே யோகம் ... இத்தகைய யோகிகளுக்கு பிறப்போ இறப்போ இல்லை . இது ஆத்யந்திக பிரளயம் அல்லது மோட்சம். இந்த முயற்சியை மேற்கொள்பவன் மும்முசு என்ற யோகி . யோகத்தை மேற்கொள்பவன் யுஞ்ஜானன் மற்றும் யோக யுக .. சமாதி கை கூடினால் யுக்தன்.


மன திரிபு அல்லது பைத்தியம் .. .

ஒருமனிதனை மிகுந்த மன அழுத்தம் தாக்கும் போது. அல்லது தூங்கவிடாமல் இடையூறுகள் அல்லது சித்ரவதை செய்யும் போது ஆழ்தூக்கம் பெறமுடியாமல் உடல் சக்தி பெறமுடியாமல் போகிறது. . மேலும் ஒரு அலை வரிசை நிலையில் அல்லது அவத்தை நிலையில் இருந்து வேறு அவத்தை நிலைக்கு முறையாக செல்ல முடிவது இல்லை . ஒரு அவத்தைநிலை மற்றொன்றால் நெருக்கப்பட்டு இரண்டும் கலந்து மன குழப்பத்தை தருகிறது . அப்பொழுது ஏற்படும் தோற்றங்கள் மனத்திரிபு அல்லது பைத்திய நிலையில் ஏற்படுவது . உதாரணமாக யாரோ ஒருவர் காதில் சொல்வது போன்ற தோற்றம் . 

தியானத்தின் போது மனம் ஒரு உணர்வு நிலை அல்லது அவத்தை நிலையில் இருந்து அடுத்த மன உணர்வு நிலைக்கு சென்று மீண்டும் சுயஉணர்வு நிலைக்கு திரும்பும் . அப்பொழுது உருவாகும் தோற்றங்கள் இயல்பான தோற்றங்கள் . இது அறிவியல் படி சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை . 
ஆக ஓஷோ பைத்தியங்கள் காணும் தோற்றங்களையும் காமாநிலை அல்லது துரியநிலை தியான தோற்றங்களையும் பிரித்து அறியமுடியாத அறியாமையால் சொன்ன கருத்துகளே மேலே சொன்னவை .

ஸ்டோகாஸ்டிக் ரேசொனான்ஸ் Stochastic resonance மற்றும் சாகா பாதை

தியானத்தில் ஏற்படும் நிலைகள் மற்றும் அலை வரிசைகளை சித்தர்கள் அவத்தைகள் என்றனர் . இன்றைய அறிவியல் சோதனைகளின்படி பெறப்பட்ட அலை வரிசைகளிள் காமா அலை வரிசை மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறது . அறிவுநிலையை அதிகரித்து முடிவெடுக்கும் திறனை உயர்த்துகிறது . மன அமைதியும் ஆனந்தமும் தருகிறது . அளப்பரிய சக்தி தருகிறது . இந்த காமாநிலையில் ஸ்டோகாஸ்டிக் ரேசொனான்ஸ் என்னும் நிகழ்வு ஏற்படுகிறது என்கிறது ஆய்வுகள் . ஆனால் அது எப்படி ஏற்படுகிறது என்பதை அவர்களால் அறிய முடியவில்லை .

ரேசொனான்ஸ் என்பது ஒரு அலைவரிசை மற்றொறு அலை வரிசையோடு இணையும்போது அதன் அலை உயரம் வியக்கத்தக்க வகையில் உயரும் . அப்பொழுது அளப்பரிய சக்திவெளிப்படும் .. சுனாமியின் போது அலை உயரம் அதிகரிக்க செய்வது ரேசொனான்ஸ். ஸ்டோகாஸ்டிக் என்பது கால ஒழுங்கற்ற நிகழ்வு . 
எனவே ஸ்டோகாஸ்டிக் ரேசொனான்ஸ் காமாநிலையில் கால ஒழுங்கற்ற அளப்பரிய சக்தி கிடைகிறது . இந்த புரியாதபுதிரை நம் சித்தர்கள் தெளிவாக சொன்னார்கள் . இடகலை பிங்கலை தாரைகலை ஆகிய அதிர்வலைகளை சுழிமுனையில் இணைத்தால் வாலை பிறக்கும் . அப்பொழுது கோடி சூரிய பிரகாச ஒளி தோன்றும் . இதுவே வாலை இதுவே அளப்பரிய சக்தி சமநிலை . இந்த சக்தியால் உருவாவது அமிர்தம் . இந்த அமிர்தம் சாகா நிலை தறும் ... வாலை உருவாக்குவதை படிப்படியாக வாசி யோகத்தில் சொல்லி உள்ளார்கள் சித்தர்கள்., ஸ்டோகாஸ்டிக் என்ற கால ஒழுங்கு அற்ற நிலையை தவிர்த்து , கால ஒழுங்கான சமநிலையான அலைகளை இணைத்து ரேசொனான்ஸ் உருவாக்கி அளப்பரிய சக்தியும் சித்தியும் பெற்றனர் சித்தர்கள் . நீங்களும் பெறமுடியும் இந்த அறிவியலை இன்றைய அறிவியலார் மற்றும் பிற தியான முறைகள் தொடமுடியவில்லை.