வாசி யோக விளக்கம் 4

சாகாபாதை தோற்றங்கழும் கண்களும் 25 தத்துவங்களும் 

தீர்க்க தரிசிகளும், ஞானிகளும், யோகிகளும், யோகபாதையில் இருப்பவர்களும், பக்தர்களும் இறைவனின் ரூபங்களை , சித்தர்களை , குருமார்களை, மகான்களை, தன்னுள் தரிசிக்கிறார்கள். 

சிலர் சில நிகழ்வுகளை தன்னுள் பார்கிறார்கள். எனது முக நூல் நண்பர் Lakshmi Rajanசிவவாக்கியரை தரிசித்ததாக தெரிவித்தார். இன்றும் வீட்டில் வாசி யோகம் பாடங்களை படித்து, யோகா பழகும் அன்பர்கள் பலர் பல தரிசன்களையும் , ஓசையையும் கேட்டதாக சொல்லி வருகிறார்கள் . 

இவை உண்மையா சாத்தியமா? சாத்தியம் என்றால் எவ்விதம் ?

இத்தகைய தோற்றங்களை மனதிரிபு (Hallucination மன நோய் ) அல்லது பைத்தியம் என்றுஓஷோ சொல்வது சரியா ?


ஓஷோ சொல்வது உண்மை என்றால் மரணிக்கும பாதை எது ? மரணமில்லா பாதை எது?
halusination .

அன்பர் Mathi vaanan அவர்கள் ஓஷோவின் கருத்தை பதிவு செய்துள்ளார் .

“ கேள்வி : ஓஷோ , என் நண்பன் ஒருவன் ' கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதுவதைக் காணுகிறேன் ' என்று சொல்லுகிறான் . இது சாத்தியமா ?


புல்லாங்குழல் ஊதுவதைக் காணுகிறேன் ' என்று சொல்லுகிறான் . இது சாத்தியமா ?


‪#‎பதில்‬ : " ஆமாம் - என்னிடமேகூட பலபேர் வந்து , ' கிருஷ்ணன் ' புல்லாங்குழல் ஊதுவதைக் கண்டேன் . ' ஜீசஸை சிலுவையில் அறைவது என் கண்முன்னே வந்தது . புத்தர் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டேன் " என்று கூறுவார்கள் . இதைக்கேட்டு நான் , ' நீங்கள் உண்மையாக ஆன்மீகத்தில் முன்னேறிவிட்டீர்கள் ' என்று கூறுவேன் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் . இது கனவில் அல்ல ; விழித்திருக்கும்பொழுதே , இந்தக் காட்சிகள் அவர்களுக்கு நேர்ந்திருக்கிறது !
கடவுள் உருவங்கள் மற்றும் ஓவியங்கள் எல்லாம் சில புத்திசாலிகளின் கற்பனை வடிவங்கள் . உங்கள் மனதை எப்படி நிலைநிறுத்துவது ? ஒருவன் ஒரு ஓவியத்திலேயோ அல்லது சிலை உருவத்திலேயோ , இல்லை தானே ஒரு கற்பனை உருவத்தை உண்டாக்கி , அதிலேயே மனதை செலுத்தும்பொழுது , அந்த உருவம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

இராமகிருஷ்ணருக்கு காளி உருவம் எப்படிப் பதிந்தது , அப்படியேஇப்படி மனதில் பதிந்த உருவம் பிரக்ஞையற்ற நிலையில் நீங்கள் தூங்கும்பொழுது பல கனவாக வெளிப்படும் . அப்பொழுது நீங்கள் அதி விதீவிரமாகி அதை தியானமாக்கிடுவீர்கள் . பிறகு விழித்திருக்கும்பொழுது , பிரக்ஞை நிலையில் அது தோன்றும் ஏன்பேசகூட செய்யும் இது .மனவியாதி (Hallucination) . இப்பொழுது நீங்கள் அந்த உருவத்தோடு ஒருவித பைத்திய நிலையில் இருக்கிறீர்கள் ! ஆனால் இது ஒரு சாத்வீக பைத்தியம் . பிறருக்கு எந்தக் கெடுதலும் கிடையாது - அவர்கள் அவற்றை உங்கள் மண்டைக்குள் திணிக்காத வரையில் !” “. பழக்கத்தாலேயே உங்களைக் கொன்றுவிடும் ! இவையெல்லாம் உண்மையான ஆன்மீகமாகாது . உண்மையான ஆன்மீகம் உங்கள் தியானத்தில்தான் இருக்கிறது”

ஓஷோவின் இந்த கருத்து மேலை நாட்டு மனவியலார் சிக்மன்ட் பிராய்ட அவர்களின் மனபகுப்பாய்வு கொள்கை (psycho analysis). சார்ந்தது. பைத்தியகாரன் காணும் காட்சியையும் (Hallucination) நல்ல மனநிலையில்ஞானியர் காணும் காட்சியையும் இந்த கொள்கையால் பிரித்துபார்க்க முடியவில்லை. காரணம் இந்த மனபகுப்பாய்வு கொள்கை மனிதனில் இருந்து மனதை மட்டும் தனியே பிரித்து ஆய்வு செய்கிறது . மேலும் துரியம் மற்றும் துரியாதீதம் போன்ற அதீத சக்திதரும் மனதின் உயர்நிலை பற்றி அல்லது காமா அலை வரிசை பற்றி சிக்மன்ட் பிராய்ட பேசவில்லை .
தவநிலை தோற்றங்களுக்கும் மற்றும் மனநிலை திரிபு தோற்றங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் ஓஷோ விற்கு தெரியவில்லை. .தியானம் என்பதன் உண்மை தன்மை புரியாமல் தியானம் செய்ய சொல்கிறார் . தியானம் என்பதின் உண்மை தன்மையை வீட்டில் வாசியோகம் பாடத்தில் தெளிவாக சொல்லி உள்ளேன் siddharyogam.com சென்று படியுங்கள்.

.ரிஷிகள் மற்றும் சித்தர்களின் அறிவியல் கொள்கை அறியாததாலும் சிக்மன்ட் பிராய்டடின் முழுமை பெறாத தத்துவத்தை பின்பற்றி ஓஷோ , தவறான முடிவுக்கு வந்துளlளார். இது அறியாமையின் வெளிப்பாடு . இவற்றை பகுப்பாய்வு செய்வோம் .

சித்தர்களின் அறிவியல் மனம் பற்றி சொல்வதை பார்ப்போம்

“தன்னைத்தான் தான் அறிந்து பார்க்கும் போது 
தத்துவமாய் நின்றதொரு தொன்னூற்று ஆறு “
ரோமரிஷி பரிபாசை 500 பாடல் 38 


தான் என்பதை ஆராய்ந்து பார்த்தால் நான் என்ற மனிதன் 96 தத்துவங்களால் ஆனவன் . மனிதன் தாய் வயிற்றில் கருவாக வளரும்போது சிறிது சிறிதாய் இந்த தத்துவங்கள் உருவாகிக்கொண்டே வரும் .இதுவே கரு வளர்ச்சி . கருவில் தத்துவங்கள் 96 உருவானபின் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் இந்த தத்துவங்களில் மனம் ஒரு தத்துவம் ..

மனம் என்னும் தத்துவம் பிற தத்துவங்களை சார்ந்து இயங்குவது என்கிறது .சித்தர் அறிவியல். அதாவது மனதை பிற தத்துவங்களில் இருந்து பிரிக்க முடியாது . பிற தத்துவங்களோடு இணைந்து ஒட்டுமொத்தமாக இயங்கும் இயக்கமாக (Holistic psyco analysis ) மனம் இயங்குகிறது..

நாம் காணும் தோற்றங்களின் உண்மை தன்மை

காட்சி அல்லது நிகழ்வுகளை காண 96 தத்துவங்களுள் முக்கியமாக 25 தத்துவங்கள்ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும் . அவைகள் பொறிகள் ஐந்து , புலன்கள் ஐந்து , கோசங்கள் ஐந்து, அவத்தைகள் ஐந்து ,மனதின் தொகுப்பான அந்தகரனங்கள் நான்கு மற்றும் அறிவு ஒன்று உள்பட இருபத்து ஐந்து தத்துவங்களை அறியவேண்டும்.. 
. இந்த 25 தத்துவங்கள் , ஐந்துவகைகளில் தோற்றங்கள் மற்றும் நிகழ்வுகளை தெரிவிக்கின்றன

நாம் காணும் ஐந்துவகை தோற்றங்களை

1. நினைவு நிலையில், நிஜத்தில் நம்முன் உருவங்கள் மற்றும் நிகழ்வுகள் தோன்றுவது . புறக்கண்களால் அல்லது விழிகளால் காண்பது. இவ்விதம் காண்பது ;நமது புரக்கண்னின், பார்க்கும் தன்மை , சூழ்நிலை, தூரத்தை சார்ந்து நிகழ்வது மற்றும் மூளையின் ஒருங்கிணைப்பு தன்மையை சார்ந்தது ..

2. நினைவு நிலையில் கண்கள் மூடிய போது நமக்குள் மனதில் தோன்றுவது மூளையால் உணரபடுவது .

3.கனவுநிலையில் பார்ப்பது மற்றும் நிகழ்வது

4..தவநிலையில் காண்பது அல்லாது யோக நிலையில் தோன்றுவது( பிரத்தியாகாரம் , தாரணை ,துரியம் மற்றும் துரிய அதீதம் )
.
5.மனநிலை திரிபு அல்லது பைததியநிலை( Hallucination / Illusion) நிலையில் தோன்றுவது
இவற்றை புரிந்து கொள்வதற்கு முன் நாம் காண்பதில் செயல்படும் நிகழ்வுகளை படிப்படியாக அறியவேண்டும். இதற்ககு முதலில் 25 தத்துவங்களை அறிவோம் . .
.
காண பயன்படும் தத்துவங்கள் 25

பொறி ஐந்து 
கண் , மூக்கு , செவி , நாக்கு தோல்

புலன் ஐந்து

ஐந்து பொறிகளின் செயல்கள்தான் புலன்கள் . அவை காணல்,நுகர்தல் கேட்டல் ,ருசித்தல் , உணரல் ..

நம்மை சுற்றியுள்ள பொருள்கள் உயிர்கள் ஆகியவற்றின் தன்மைகளை அதன் நிகழ்வுகளை ஐம் புலன்களால் அறிகிறோம் . இந்த அனுபவங்களின் இன்பநிலை துயர்நிலை ஆகியவற்றின் தொகுப்பு மனம் . மனதிற்கு உணர்வுகள் உண்டு ..

கோசங்கள் ஐந்து 
நம்உள் ஒன்றிற்குள் ஒன்றாக அடங்கி உள்ள அடுக்குகள் கோசங்கள் .நம்முள் ஐந்து கோசங்கள் உண்டு. . நாம் காணும் மனிதன் இந்த ஐந்து அடுக்குகளால் ஆனவன்.

1. அன்னமயகோஷம்:: நமது உணவால் பிரபஞ்ச பொருட்களால் உண்டான பருஉடல் .நமது கண், மூக்கு செவி மற்றும் அவயவங்கள் அடங்கியது. இதனுள் பிற அடுக்குகள் அல்லது கோசங்கள் செயல் படுகின்றன ..
2.பிராண மய கோஷம் : பரு உடலை இயக்கம் செய்யும் காற்று , நீர் , வெப்பம் , திடம், மின்சாரம் , காந்தம் போன்ற சக்தி ஓட்டங்கள் .பருஉடலில் உள்ளே உள்ளது 
3. மனோமயகோசம் . மனதின் தொகுப்பான , மனம் புத்தி , சித்தம் அகங்காரம் ஆகியநான்கும் அந்த காரணங்கள் எனப்படும் .இவற்றை இயக்கம் செய்யும் அறிவு ஆகியவை நுன்னுடல்லில் உள்ளது . இந்த ஐந்தின் தொகுப்பே மனோமய கோசம் . ஆக நாம் சாதாரணமாக குறிப்பிடும் மனம் என்பது நுண் உடலில் செயல்படும் மனோமயகோசம் .
3 .1 .மனம் :கண். காது, நாக்கு ,மூக்கு தோல் ஆகியவற்றால் பார்த்தல் கேட்டல் , ருசி, உணர்வு ஆகிய 10 தத்துவங்களின் அனுபவங்களின் தொகுப்பு மனம் . இதற்க்கு இன்பம் துன்பம் ஆகிய உணர்வுகள் உண்டு .செயலின் தொடக்கம் மனம் . மனோமய கோசத்தின் மூலமே அனைத்து காட்சிகளும் அறியப்படுகிறது . கரு உருவாகும்போது தத்துவங்கள் உருவாகின்றன . எனவே கருவில் மனம் உருவாகிறது . சுழிமுனை வாசல் திறந்தாள் மனம் ஒடுங்கும் .
3.2 புத்தி : ஒரு செயலின் இன்பம் துன்பம் ஆகிய உணர்வை இணைக்காமல் நன்மை தீமையை , பிரித்து பார்ப்பது 
3.3 சித்தம் : செயலில் உள்ள இன்பம் துன்பம் நான்மை தீமை ஆகியவற்றை ஆராய்ந்து செயலின் வடிவத்தை தீர்மானம் செய்து செய்வதா வேண்டாமா என முடிவு செய்வது . பலநேரங்களில் புத்தியும் மனமும் ஒரே நிலைபாட்டை எடுக்க முடியாமல் இருக்கும் ஆகையால் மனம் என்ற கோசம் குழப்பமடையும் . இதுவே நாம் குழப்பமடைவதன் காரணம் . ஒருசர்கரை நோயாளி , விருந்தில் பரிமாறப்படும் இனிப்பாய் உண்ணலாமா வேண்டாமா என்ற நிலை . இனிப்பின் சுவை இன்பம் கருதி மனம் உன்ன சொல்லும் . இனிப்பில்வரும் நோய் கருதி புத்தி உண்ணக்கூடாது என்று முடிவு செய்யும் . . இந்த குழப்பம் தான் சித்த தடுமாற்றம் . . சூழ்நிலைக்கு ஏற்ப சித்தம் முடிவு செய்ததும் , அதை அகங்காரம் செயல் படுத்தும் . 

3.4 அகங்காரம் : செயலை செய்ய வைப்பது 
அறிவு: அனைத்து தத்துவங்களையும் ஒருங்கிணைத்து மனிதன் உயர்நிலை அடைய செயல்படுவது.
.
4. விஞ்ஞான மய கோஷம் :. நாம் அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறியசெயும் தன்மை நுண அறிவு தன்மை  நுன்னுடல்லில் உள்ளது

5..ஆனந்தமயகோசம் : நம்முள் இருக்கும் இன்பமயமான இறை தன்மை . இது காரண தேகத்தில் உள்ளது .இதை நம்முள் அறிந்து உணர்தல் பேரின்பம் . அதுவே மோட்சம் 
.
அவத்தைகள் என்ற உணர்வு நிலைகள் ஐந்து

நமது உணர்வின் நிலைகள் ஐந்து விதமாக உள்ளன . இவை அவத்தைகள் என பெயர் கொண்டவை .இந்த அவத்தைகள் மனோமய கோஷத்தால் உணரப்படும்.


1. ஜாக்கிரத அவஸ்தா சுய உணர்வு நிலை / வழிப்பு உணர்வு நிலை . உடலும் மனமும் விழிப்பு நிலையில் பிரங்கையாக இருக்கும் உணர்வு நிலை . மனம் விழித்து இருக்கும் . அறிவின் படி உடல் இயங்கும் புர உலக நிகழ்வுகள் பதியப்படும் அதன்படி தோற்றங்கள் ஊனக்கண்ணால் அல்லது பரு உடல் கண்ணால் பார்க்கப்படும் . 
பருஉடலில் நிகழ்வது . சில புள்ளி களை கோடு போன்று பார்ப்பதும் இதில் அடங்கும் . மனம் , புத்தி சித்தம் , அகங்காரம் அறிவு ஆகியவை செயல் படும் .நாம் ஒரு கோபுரத்தை கண்கள் விழித்த நிலையில் பார்க்கிறோம் . 

இது நிஜம் . அதன் பின் கண்களை மூடிக்கொண்டு அந்த கோபுரத்தை நம்முள் பார்க்கிறோம் . அது மனக்கண்ணால் வழிபபு நிலையில் மனதில் பதியப்பட்டு பின்பு கண்கள் மூடிய நிலையில் மீட்டு எடுக்கப்படுவது . . Betawave


2.சொப்பனா அவஸ்தா அல்லது கனவு உணர்வு நிலை
பரு உடல் தூக்க நிலையில் இருக்கும் போது ஏற்படும் ..மனம் விழித்து இருக்கும் . மனதின் பதிவுகளில் இருந்து தோற்றங்கள் வெளிப்படும் . ஆனால் பரு உடல் செயல் படாது மனதின் உணர்வு மட்டும் செயல் படும். . பிராணமயகோசம் செயல் படும் . மனோமய கோசத்தில் மனம் மட்டும் செயல் படும். புத்தி , சித்தம், அகங்காரம், அறிவு செயல் படாது .
நாம் தூங்கும் போது விழிப்பு நிலையில் பார்த்த அந்த கோபுரத்தை பார்க்கிறோம் . இது கனவு . நிழல் ஆனால் நிஜம் இல்லை . .சூட்சம தேகத்தில் மனக்கண் என்ற சூட்சம தேககண்ணால் காட்சிகள் காணப்படும் . இதன் பார்வை தன்மை புரக்கண்ணுக்கு அப்பாற்பட்டது
.
3. சுழுத்தி: உணர்வு அற்ற தூக்க நிலை

:ஆழ்ந்த தூக்க நிலையில் ஏற்ப்படும் . மனோமய கோசத்தில் ஏற்ப்படும் . அந்த கரணங்களான மனதின் உணர்வுகள் , புத்தி சித்தம், அகங்காரம் செயல் படாது . சூட்சமதேகம் செயல் படும்.பிராணமய கோசம் செயல் படும் . விஞ்ஞானமயகோசம் மற்றும் ஆனந்தமய கோசம் செயல் படாது . காரண தேகம் இயங்கும். பரு உடல் பலப்படும் .. எந்த கண்ணும் இயங்காது .இந்தநிலை சிறிதுநேரம் அதாவது 15 நிமிடம் இருக்கும் . இந்த நிலையில் இருந்து மனம் பிற நிலைக்கு தானாக வந்துவிடும் .. நாம் பார்த்த கோபுரமோ அல்லது வேறு ஒன்றும் பார்க்கமுடியாது . நாம் இருந்தோம் என்பது உண்மை ஆனால் அதை உணரமுடியாது . விழித்தபின்பு தூங்கினோம் என்று அறிவோம் . .பருவுடல் பிரபஞ்ச சக்தியை பெறும். மயக்கம் போன்றது 
.
. ஆனால் மயக்கம் நோய்த்தன்மையானது மற்றும் உடல் பிரபஞ்ச சக்தியை பெறாது . பருவுடல் சக்தி பெறாது மாறாக பலம் இழக்கும்.பருஉடலின் செயல்கள் ஆரோக்கியம் அற்று இருக்கும்.. .Delta wave


4.துரிய உணர்வு நிலை 
தவம் அல்லது அஷ்டாங்க யோகம செய்யும் போது பிரத்தியாகாரம் , தாரணை, தியானம் ஆகிய நிலைகளில் தோற்றங்கள் ஏற்படும் . தியானத்தில் கோபுரத்தை பார்க்கிறோம் . அதன் உள்ளே சூட்சம வடிவில் இருக்கும் தெய்வம் நமக்கு காட்சி தருகிறது . அல்லது சித்தர் காட்சி தருகிறார்.இந்த நிலையில் பரு உடல் செயல் படாது . அந்தகரனங்களில் மனம் புத்தி சித்தம் அகங்காரம் அறிவு செயல் படும் ஐந்து கோசங்களும் செயல் படும் . விழிப்பு நிலை இருக்கும் . குறிப்பாக துரிய தியான நிலையில் சித்தர்களுடன் பேசமுடியும் .சூட்சமதேகம் மற்றும் காரண தேகம் செயல் படும் . . ஞானக்கண்ணால் பார்க்கப்படும் .. இது உண்மை . கனவு இல்லை . . துரியநிலையில் இருந்து ஜாக்கிரத நிலைக்கு வந்துவிடலாம் . நாம் காண்பது மீண்டும் நினைவுக்குவரும் . சொல்லமுடியும் . சிருங்கேரி சங்கரா ஆச்சாரியார் தேவியை தரிசித்து அவளின் பாதங்களை தொட்டு உணர்ந்ததாக தெரிவித்து உள்ளார் சிவபெருமான் நுட்பமான ஆசனங்களை சிருங்கேரி சங்கரா ஆச்சாரியார் அவர்களுக்கு சொல்லி கொடுத்தார் என்றும் சொல்கிறார் .இதுவே துரியநிலை.இதை அதீத உணர்வு நிலை அல்லது காமா நிலை என்று இப்போது அறிவியலார் சொல்கிறார்கள் . இதை Electro Encephalo Gram கருவியுடன் ஆய்வுசெய்து உறுதி செய்துள்ளார்கள் .


5 துரிய அதீதம் .
இந்த நிலை விவரிக்கமுடியாதது . ஆனந்த மய கோசத்தில் காரண தேகம் மட்டும் இயங்குவது . நிற்விகல்ப சமாதி இந்த நிலையில் கை கூடும். திரு மூலரும் பிற சித்தர்களும் இந்தநிலையை உணர்ந்து பார் என்று சொல்கிறார்கள் . இது இறைவனோடு ஒன்றிய நிலை. சமாதி பற்றி அறிய சித்தர்யோகம்.காம் வலைதளத்தில் யோகாபழகு பகுதி சென்று பார்க்க வேண்டுகிறேன். துரிய அதீதம் நிலையை தொட்டவிதத்தை சுபரமன்யர் சொல்கிறார் . இந்த நிலையில் 9 6 தத்துவங்களும் செயல்படாது .ஆதாரம் ஆறும் ஒன்றாகி அக்கினிதம்பம் என்ற நெருப்பாறு உருவாகும் . இது மயிர்பாலம் என்ற புருவமத்தியை தாண்டும் . பரவெளியில் சேரும் .. அதன்பின் துரிய அதீதம் ஏற்படும் . 
துரியாதீத நிலையில் பரவெளியில் இறைவனை கண்டு அவனுடன் ஒன்ற முடியும் Electro Encephala Gram . இது மௌன யோகம் எனப்படும்.

இந்தநிலையில் கருநெல்லிமரம் ( சூரியகலையில் ) , வெண்சாரை (சந்திரகலையில் ) சுணங்க விருட்சம் (அக்கினிகலையில் ) சூரியகலையும் அக்கினிகளையும் (12+4 = 16 ) சந்ர கலையில்(+16) சேரும் இம்மூன்றும் சேர்ந்தது ஜோதி விருட்சம் உருவாகும் .. இதுவே பராபரன் என்ற இறைவன் அவன் தருவது கணை எருமைப்பால் என்ற அமிர்தம் இந்த நிலையில் தத்துவங்கள் 96 றும் கடந்து இந்த மவுன யோக காட்சியை தினம் தினம் பார் என்கிறார் சுபரமன்யர் .. அப்பொழுது நீயே இறைவனாக இருக்க காண்பாய்.


தொட்டகுறை சொல்லுகிறேன் துரியாதீதம் 
துலங்குமட வன்னியும்தான் அதன்மேல்நிற்கும்
வட்டமிட்ட சூரியன்தான் தனளில்சென்று 
வட்டவரை னுசசியினில் மாரிப்பாயும் .
திட்டமுடன் அக்கினியும் பிர்மவீடில் 
சிறந்துமிக சேர்ந்திடவே அமிர்தமாகும் . 

சுபரமன்யர் ஞானம் 20 பாடல் 17


ஆச்சடா கருநெல்லி மரமீதாச்சு 
அப்பனே வெண்சாரை சநரநாமம் 
மூச்சடா அக்னியே சுனங்கனாகி
முழுதுமடா கனைஎருமை பாலுண்டாச்சே 
நீச்சடா விருச்சம்தான் சோதி என்றால்
நிலையான பராபரமே சோதிசோதி 
வாச்சடா இம்மென்ற மௌனம் தன்னை
தினம் தினம் நீ காணு கானே 

சுபரமன்யர் ஞானம் 20 பாடல் 20 


“ தானவனு மாகிநின்றாலப்பா சொல்வேன் 
தத்துவம் தொண்ணுற்றாறு . தாண்டியோடும்”

சுபரமன்யர் ஞானம்12 பாடல்10


தூக்கம் என்பது யாது .? 
மனிதன் பிரபஞ்சத்திலிருந்து சக்தியை பெற்று அதனுடன் தான் உண்ட உணவினில் இருந்து சக்தியை பெற்று . 96 தத்துவங்களை இயங்கசெய்து வாழ்கிறான் . தத்துவங்களை இயங்கச்செய்வதால் தினமும் சக்தி விரயமாகிறது . இந்த விரயமான சக்தியால் களைப்பு அடைகிறான் . . விரயமான சக்தியை மீட்டு எடுக்க சுழுத்தி நிலைக்கு சென்று சக்தியை மீட்டு எடுக்கிறான் . இப்படி சக்தியை மீட்டு எடுக்க ஜாக்ரத அவஸ்தை நிலையில் இயங்கிய 96 தத்துவங்களில் பலவற்றை இயங்க செய்யாமல் நினைவு குறைந்து அல்லது விழிப்பு நிலை குறைந்து சொப்பனா அவஸ்தை சென்றுஅங்கும் பல தத்துவங்களை இயக்காமல் சுழுத்தி அவஸ்தை செல்லும் தன்மையை தூக்கம் என்கிறோம் . 

சுழுத்தியில் சக்தி பெற்றபின் ஜாக்ரத அவஸ்தைக்கு திரும்பி மீண்டும் 96 தத்துவங்களை இயக்க செய்வது விழிப்பு . இவ்விதம் தூங்கி போவது நித்ய பிரளயம் . பின்பு சக்தி பெற்று விழித்து எழுவது நித்ய ஸ்ருஸ்டி என்கிறது விஷ்ணு புராணம் .

இயற்கை மரணம் .என்பது என்ன ?

இவ்விதம் தினம் தூங்கி விழிக்கிறோம் இவ்விதம் தூக்கத்தில் சக்தியை திரும்பபெறும்போது 30 வயதுக்குமேல் உள்ளவர்கள் இழந்த சக்தியைவிட குறைவான சக்தியே பெறுகிறோம் .வயது செல்ல செல்ல இதனால் தத்துவங்கள் போதிய சக்தி பெறாமல் செயல் திறன் இழக்கிறது . இதனால் கேட்கும் தன்மை , பார்க்கும் தன்மை சிந்திக்கும் தன்மை அற்று நரை திரை மூப்பு 
அடைகிறோம். . நாட்கள் செல்ல செல்ல உடல் சுளுத்திநிலை செல்ல முடியாமல் . சக்தியை மீட்கும் தன்மையை இழந்து விடுகிறது . அப்போது தத்துவங்கள் 96றும் செயல் படாமல் சிதைந்து போகிறது . இதுவே மரணம் 

மரணிக்கும் மனிதன் பாதை
ஜாக்கிரதா அவத்தை என்ற சுயநினைவு நிலை என்ற விழிப்பு நிலையில் இருந்து கனவுநிலை மற்றும் சுழுத்தி நிலைக்கு தினம் தினம் சென்று தூங்கி மீண்டும் விழிப்புநிலை அடைவது மனிதன் மரணிக்கும் பாதை. இதை நித்ய பிரளயம் நித்திய சிருஷ்டி என்கிறது விஷ்ணு புராணம் .
இதை காகபுசுண்டர் சொல்கிறார் . 
தூங்கினார் தெய்வபயம் கோனின் அச்சம் 
துடர்பிரம்ம சர்பபயம் தொக்கி நோயால் 
ஏங்கினார் குடற்பசியால் தாரித்திரத்தால்
எல்லாறும் மாண்டார்கள் துன்பம் மிஞ்சி 
......
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 667 
தூங்கி விழிப்பவர்கள் தெய்வபயம் , அரசின்பயம் விசபயம் அடைவார்கள் . முதுமைக்கும் நோய்க்கும் , பயம் கொள்வார்கள் . தரித்திரம் பெற்று பசியால் ஏங்கினார் . தினமும் துன்பப்பட்டு மரணமாவார்கள் .

சாகாதன்மை மற்றும் கிழவன் பாலன் ஆதலும் முடியுமா ?

விழிப்பின் போது இழந்த சக்தி அளவு தினமும் மீட்டு பெறும் சக்திஅளவு சமமாக இருந்தால் மரணம் இல்லை. இழந்த சக்தியைவிட மீட்டு பெறும் சக்தி அதிகம் இருந்தால் நரை திரை மூப்பு மாறி கிழவன் பாலனாகமுடியும் . இது மரணம் இல்லா சக்தி சமநிலை . உடல் உயிரை சக்தியை சமநிலையில் தக்கவைக்கும். இந்த சக்தி சமநிலையை இழக்காமல் தொடர்ந்து பெற வேண்டும் . இந்த தொழில் நுட்பமே காயசித்தி . இதில் கற்பம் உண்பதும் அஷ்டாங்க யோகம் என்ற வாசி யோகம் செய்வதும் பெரும் பங்கு வகிக்கிறது காய சித்தி அடைவது முக்தியில் ஒரு பகுதி...

நாம் சக்திசமநிலை பெறுவது எப்படி ? சாகாநிலை அடைவது எப்படி ?

நமது உடல்12 சூரியகலை பிரபஞ்ச சக்தியை வலது நாசி சுவாசத்தில் பெறுகிறது இது எதிர்மறை சக்தி . நமது இடது நாசி 16 சந்திரகலை சக்தியை உடலுக்கு கொடுக்கும் திறன் வாய்ந்தது .. இது நேர்மறை சக்தி . சூரியகலை சக்தி 12 சந்திரனின் 16 கலை சக்தியில் இருந்து 1 2 கலையுடன் சேர்ந்து 24 கலை சூரியசந்திர சக்தி யாக மாறும் . இந்த சூரியசந்திர சக்தி நமது உடலில் 48 கலை சகதி உருவாக்கும் . ஆக நமது உடல் சக்தி 48 கலையும் சூரியசந்திர 24 கலை சக்தியும் சேர்ந்து 72 கலை சக்தி உற்பத்தி ஆகிறது . நமது உடலின் 96 தத்துவங்களுக்கு 9 6 கலை சக்தி தேவை.எனவே சக்தி குறைபாடு 9 6 -7 2 = 2 4 கலை .. இந்தசக்தி குறைபாடு தத்துவங்களை பலம் இழக்க செய்து தத்துவங்கலை சிதைகிறது . இதனால் உடல் அழிகிறது. 


அஷ்டாங்க யோகத்தில் துரிய தியான நிலையில் வாசியானது தாரகலை என்ற அக்கினி கலை உருவாக்கும் இது சுழுமுனை நாடி என்ற சக்தி ஓட்டத்தை உருவாக்கும் . இந்த அக்னிகலை அல்லது தாரகலை நான்கு எதிர்மறை சக்தியை பிரபஞ்சத்தில் இருந்து பெறும் . இந்த நான்கு எதிர்மறை அக்னிகலையும் 1 2 எதிர்மறை சூரியகலை சக்தியும் சேர்ந்து 1 6 எதிர்மறை கலை சக்தி ஆகும் . இவை 16 நேர்மறை சந்திர கலை யுடன் சேர்ந்து 32 சூரியசந்திரஅக்கினி கலை யாக மாறும் . இவை உடலில் 64 கலை சக்தியை உருவாக்கும . ஆகமொத்தம் 3 2 + 64 =9 6 கலை சக்தி உடல் பெற்று தத்துவங்கள் உயர்சக்தி பெறும். உடல் அழியாமல் இருக்கும் 
நமது உடல் சக்தியை தக்க வைக்கும் திறன் அதிகம் பெறும் . இதனால் முதுமை குறைந்து இளமை திரும்பும் .
..

மனிதனுக்கு இறைவன் கொடுத்த மாபெரும் வரம் துரிய நிலையும் துரியா அதீத நிலையும் . இந்த நிலைகளில் நாம் விழிப்பு உணர்வில் இழந்த சக்தியை விட மிக அதிக சக்தியை தொடர்ந்து பெறுகிறோம் . ஆகையால் தத்துவங்கள் செயல்பட போதிய சக்தி கிடைக்கிறது.எனவே மரணம் இல்லாமல் வாழ முடியும் .மேலும் அப்பூர்வ சக்திகள் அல்லது சித்திகள் பெறமுடியும் . எனவே சித்தர்கள் “ தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் எக்காலம் “ என பரிபாசையாய் பாடினார்கள் . தூங்காமல் தூங்கி என்ற துரிய மற்றும் துரியாதீத நிலைபெற்று அபரிமிதமான சக்தி பெற்று மரணம் அடையாதநிலை பெறுவதுடன் அபூர்வ சக்திகள் என்ற சித்திகள் பெறுவது எக்காலம் என்று சொன்னார்கள் .
.

மரணமில்லா பெருவாழ்வு பாதை

சித்தர்களும் சிவயோகிகளும் அஷ்டாங்க யோகபாதையில் ஜாக்கிரதா அவத்தையில் இருந்து பிரத்தியாகாரம் , தாரணை , தியானம் என்ற அங்கங்களுக்கு சென்று துரிய உணர்வு நிலை அடைகிறார்கள் . அதில் அளப்பரிய பிரபஞ்ச சக்தி பெறுகிறார்கள் . பின்பு விழிப்பு நிலைக்கு திரும்புகிறார்கள் ..இதனால் என்றும் இளமையுடம் மரணமில்லாமல் வாழ்கிறார்கள் சித்தர்கள் ...
தூங்காமல் துரியநிலை பெரியோரானார் அண்டர்கள் .

காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 663 

தூங்கி விழித்து.வாழ்பவர, சிறியோர் மரண மாவார் .. அண்டர் என்ற சித்தர்கள் தூங்காம துரிய நிலை சென்று சக்தி பெற்று மரணமில்லா வாழ்வு பெற்று பெரியவர் ஆனார்கள் என்கிறார் காகபுசுண்டர்

இதுவே காய சித்தி யோக சித்தி .. இதுt சரியை , கிரியை யோகம் ஞானம என்ற ஞானவழி என்கிறார் சுப்பிரமணியர். 


பிழைப் பார்க்கு ஞானவழி துறந்திட்டேனே

துறந்தவழி அடையாமற் பார்பாயாகில் 
துரியம் என்று வாசியிலே ஏறிபாரு 
மறந்தாலே பரமோட்ச்சம் இல்லையப்பா 
குறைந்தாக்கால் சரம் பிழைக்கும் குணங்கள் வேறாம்
குலைப்பிட்டு தலை புழுத்த நாய்போல் ஆவாய் 

சுபரமன்யர் ஞானம்12 பாடல். 8 &9 
மரணமடையாமல் இருப்பதற்கு மறைப்பு இல்லாமல் வழி சொல்கிறேன் . வாசி யோகம் செய்து, தியானத்தில் துரியம் என்ற உணர்வுநிலை அடை . வாசி யோகம் விடாமல் செய் . . இதை மறந்தால் மோட்சம் இல்லை . இதை விட்டுவிட்டால் கத்திக்கத்தி புழுத்த நாய் போல் மரணிப்பாய் .
இன்றைய அறிவியல் Electro Encephalo Gram . பயன்படுத்திய ஆய்வில் விழிப்புநிலையில் இருந்து beta அதீதவுணர்வு நிலை செல்லும் போது, காமா அலை வரிசை உருவாகிறது என்பதை உறுதி செய்கிறது . இந்த காமா அலை , ஆயுளை அதிகரிக்கிறது . பேரானந்தம் உருவாக்குகிறது . இதுவே சாகா பாதை .

இதுவரை காண்பதில் இணைந்துள்ள 25 தத்துவங்கள் பார்த்தோம் . இந்த தத்துவங்களை கொண்டு காண பயன்படும் கண்களை பார்ப்போம் . 
காகபுசுண்டர் சொல்வதை பார்ப்போம் .