வீட்டில் வாசியோகம் விளக்கம் - 3

பொறியாளர் தர்மலிங்கம் கோயம்புத்தூரை சேர்ந்த கட்டிடகலை நிபுணர் . வேதாத்திரிமகரிஷியின் அறிவு திருக்கோவில் நிர்மாணத்தில் இவருக்குப்  பெரும் பங்கு உண்டு . Bio-energy testing unit , Lecher Antenna ஆகிய கருவிகளை இயக்கி ஆய்வு செய்வதில் வல்லுனர் ... இந்தக் கருவிகள் மூலம் அவரின் உடலில் சில உறுப்புகளில் சக்தி குறைபாடு இருப்பதை அறிந்தார் . மேலும் அவரது உடலில் சக்தி சமநிலை இல்லாமல் உள்ளதையும் அறிந்தார்

அதைப்  போக்கிக்கொள்ளவும் உடல் உறுதிபெறவும் முயற்சிகள் செய்துள்ளார் . 
சித்தர்களின் வழி காட்டலில் இவரது நண்பர்siddharyogamsiddharyogam.com வலைத்தளம் பற்றிசொல்லியுள்ளார் . வலைத் தளத்தில் வீட்டில் வாசியோகம் பாடங்களைப்  படித்துள்ளார் . அவற்றை பிரின்ட் எடுத்து புத்தகமாக்கி உள்ளார்.பாடங்களில் சொன்ன அடிப்படை வாசியோகா பயிற்சி செய்துள்ளார் . கரிசாலை கத்தாழை கடுக்காய் கற்பங்கள் செய்து வழலைவாங்கி உள்ளார் . . இப்பொழுது அவரது உடலை Bioenergy testing unit , Lecher Antenna மூலம்பரிசோதித்ததில் முழுமையாக நலம் பெற்று உள்ளார் . 


இந்தச்  செய்தியை என்னிடம் சொல்வதற்காகவும் மேலும் வாசியோகப்  பயிற்சி பற்றி அறியவும்கடந்த ஞாயிற்றுக்  கிழமை  7 -1 2 -1 4 அன்று என்னைச்   சந்தித்தார் . Bioenergy testing unit , Lecher Antenna ஆகிய கருவிகளையும் எடுத்து வந்திருந்தார் அவற்றை உபயோகித்து சில ஆய்வுகள்செய்தோம் அவற்றைப்  பார்ப்போம் . 

கல்பங்கள் உண்டால் சளி பிடிப்பதாக சொன்னார் .. . அவரது நாடி பரிசோதித்து ஹோமியோபதிமருந்துகள் தேர்வு செய்யப்பட்டன . 
கல்பங்கள் அவரது உடலில் உள்ள சளியை வெளியேற்றுகிறது என்று சொன்னேன் . கல்பங்களைதொடர்ந்து உண்ண  அறிவுரை செய்தேன் .

https://sites.google.com/a/siddharyogam.com/siddharyogam/yoga/yogapalagu/vasiyogam/vasiyogam-explanation-3/lecher%20antenna.jpg

சோதனை 1
1.1 
கல்பங்கள் அவரது உடலில் சளியை வெளி ஏற்றி நன்மை பயக்கத்  தேவையா ?. இல்லைசளியை உருவாக்கி தீமை செய்கிறதா .? 
1.2 
தேர்வு செய்யப்பட்ட 6 ஹோமியோபதி மருந்துகள் அவருக்குத்  தேவையா ?
இந்த சோதனையில் , Lecher Antenna கருவி பயன்படுத்தப்பட்டது . 


சோதனை முடிவு 
1.1 
கரிசாலை கடுக்காய் கற்பங்கள் அவரது உடலில் உள்ள நச்சுக்  கழிவுகளை வெளியேற்றத் தேவை .. எனவே பாடத்தில் சொல்லியபடி சளி என்ற நச்சு வெளியேற்றப்  படுகிறது .. கற்பங்கள்சளியை உருவாக்கி தீமை செய்யவில்லை .
1,2 
தேர்வு செய்த 6 ஹோமியோபதி மருந்துகளில் 5 அவருக்கு தேவைப்  பட்டது . ஒன்று நடுநிலைவகித்தது .


சோதனை 2
நலமாக்குதலில் ஹோமியோபதி மருந்து சிறந்ததா ? கல்பங்கள் சிறந்ததா ?
, Lecher Antenna 
கருவி பயன்படுத்தப்பட்டது

சோதனை முடிவு 
கல்பங்கள் அதிக பலன் தரத்  தக்கவை . 

சோதனை 3
நான் கல்பங்கள் உண்டு வாசி யோகம் முடித்து பஸ்பங்களில் கல்பம் செய்து உண்டு சிவயோகம் 4 ஆம் ஆண்டு செய்து வருகிறேன் . இதில் விந்தில் siddharyogam.comவிளைந்த கோறை என்ற கோழைகாரண தேகத்தில் இருந்து வெளியேறி வருகிறது .
நண்பர் பொறியாளர் தர்மலிங்கம் தற்போது கல்பம் உண்ண  ஆரம்பித்து வாசியோகம் பயின்றுவருகிறார் ..
முந்தைய சோதனையில் நண்பர் பொறியாளர் தர்மலிங்கம் அவர்களுக்குச்  சளி ,ஸ்தூல தேகத்தில்இருந்தும்  சூக்கும தேகத்தில் இருந்தும் கழிவு வெளியேறுகிறது . ஆகையால் மூலிகைக்  கல்பங்கள்தேவை என அறியப்பட்டது .. 
எனக்கு இந்த மூலிகை கல்பங்கள் பயன்படுமா ? சிவ யோகத்திற்கு பஸ்ப கல்பங்கள் அல்லதுசுண்ணங்கள் தேவையா ?

சோதனை முடிவு 
எனக்குக்  கரிசாலை , கத்தாழை கடுக்காய் ஆகிய மூலிகை கல்பங்கள் தேவை இல்லை . காரணம்முன்பு வாசி யோகத்தில் கல்பம் உண்டு ஸ்தூல தேக சூக்குமதேக கழிவுகள் வெளியேற்றப்பட்டுவிட்டன காரண தேகக்  கழிவுகளை வெளியேற்ற மூலிகை கற்பங்களுக்குச்  சக்தி இல்லை . எனவே எனக்குப்  .பஸ்ப கல்பங்கள் தேவை.
இதை உறுதிசெய்ய மருந்துகளின் நலமாக்கும் திறன் சோதனை செய்யப்பட்டது
 .

சோதனை 4 
ஹோமியோபதி மருந்துகள் , மூலிகை கல்பங்கள் , பஸ்பகல்பங்கள் ஆகியவற்றின்நலமாக்கும் திறன் Lecher Antenna கருவி மூலம் சோதிக்கப்பட்டது .

சோதனை முடிவு
ஹோமியோ பதி மருந்துகளை விட மூலிகைக் கல்பங்கள் அதிக நலமாக்கும்  திறன்கொண்டவை.  மூலிகைக்  கல்பங்களைவிட பஸ்பகல்பங்கள் மிக அதிகத்  திறன் வாய்ந்தவை.. எனவே எனது நிலையில் பஸ்பங்களும் சுண்ணங்களும் மட்டுமே பயன் தரும் . 

மேற்கண்ட சோதனைகள் ஒரு பெரும் கேள்விக்கு விடை கொடுத்து உள்ளது . காயசித்திசெய்ய மூலிகை கல்பங்கள் உண்டு வாசியோகம் செய்தால் போதுமா ? இல்லை பஸ்பங்கள்சுண்ணங்கள் கல்பம் உண்டு சிவயோகம் செய்யவேண்டுமா? .

சோதனை முடிவு
வாசியோகம் செய்து மூலிகை கல்பம் உண்டால் தேக சுத்தி உருவாக்கி உடல் வலுபெற்று முழுஆயுள் 120  ஆண்டுகள் வரை வாழ முடியும் .siddharyogam.com வாசி யோகத்தில் துன்பங்கள் ஏற்படாதுவாசி யோகத்தை நடு வழியில் நிறுத்தினாலும் , செய்தவரைக்கும்  பலன் உண்டு.
காய சித்தி செய்ய பஸ்பசுண்ணங்கள்கல்பம்கள் உண்டு சிவயோகம் செய்யவேண்டும் . 
சிவயோகம் செய்யும் போது காரனதேக நோய்கள் வெளியேறும் அதன் துன்பம் மரணத்துக்குஒப்பானது . இதை அகத்தியர் , புலத்தியர் திருவள்ளுவர் மற்றும் பல சித்தர்கள் சொல்லிஉள்ளார்கள் . 


சொல்லக்கேள் மயக்கம் வரும் பேதிகாணும் 
சொற்பெரிய மனம் தாளா தப்பா 
அல்லல்லற்று மனம் தானும் தாளவேனும் 
அப்பனே அந்த கற்பங் கொண்டு 
எல்லையில்லா இவ்வளவும் அவஸ்தை என்றும் 
தெரிந்து கொள்வாய் உள்ளிருந்த நோய்களெல்லாம் 
உல்லாசமாகவே வெளி சுபாவம் காணும் .
உத்தமனே உடம் பெல்லாம் புன்ணாய் போமே

அகத்தியர் அந்தரங்க தீட்சை விதி பாடல் 1 8 4 


புகழுகிறேன் தன்னுடம்பு தன்னு தள்ள 
காணாது கண்டிடவும் கடினம் மெத்த 
கற்பமிது அற்ப்பமல்ல கடின வாழ்வு 

காகபுசுண்டர் பெருநூல்காவியம் பாடல் 867 

நோக்கியே பார்பவர்க்கு நோய்கள் வந்தால் 
நுனானி வைத்தியத்தால் லாகாவாக
நீங்காமல் தானிழுக்கும் நிறுத்தகூடா 
போகியே விட்டவர்கள் நோயே சார்வார் 
பொய் யோகமாகிவிடும் நிசங்காணாதே

காகபுசுண்டர் பெருநூல்காவியம் பாடல் 866 

கற்பம் அருந்தி சிவயோகம் செய்தால் மயக்கம் , பேதி ஏற்படும் . உடல் உறுப்புகள் வெந்துபுண்ணாகும் . உடலில் காரண தேகத்தில் உள்ளே மறைந்த நோய்கள் வெளியேறும் . உன்னுடம்புஉன் உடையது இல்லை ..அதனால் ஏற்படும் துன்பத்தால் மனம் தாளாது இந்தத்  துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு மனம் தளராமல் தாங்கிக்  கொள்ள வேண்டும் . இவையெல்லாம்தாங்கமுடியாத துன்பம் என்று தெரிந்துகொள்
நாம் காணாததைக்  காண்பதற்கு கற்பம் உண்டு சிவயோகம் செய்வது அற்பம் என்று எண்ணாதேஇது மிகவும் கடினமான வாழ்க்கை . தனது உள்ளே உள்ள ஒளிபார்த்து சிவ யோகம் செய்பவர்க்குநோய்கள் வந்தால் சாதாரண மருந்துகளாலும் மூலிகை கற்ப்பங்களாலும் தீர்க்க முடியாது . இதைஇந்த சோதனை உறுதி செய்தது . சிவ யோகத்தை நடு வழியில் நிறுத்த முடியாது . அப்படிநிறுத்தினால் காரண தேக நோய்களால் மருத்துவம் இன்றி மரணமடைவார். . 
நான் இந்த யோகா துன்பங்களை அனுபவிப்பதால் நான் யாருக்கும் சிவயோகம் சொல்வதுஇல்லை.
வாசி யோகத்தை சிவயோகம் என்று கருதி வாசியோகம் துன்பம் தரும் என்று பயந்து சிலர்வாசியோகம் செய்வது இல்லை . இது தவறான கருத்து
 .

சோதனை 5 
சித்தர்களின் கோட்பாட்டின்படி ஓம் என்ற பெரு வெடிப்பில் இறைவன் பஞ்ச வித்தாக அகாரஉகாரமகார நாதவிந்தாக தன்னைத்தான் பிறப்பித்து கொண்டான் அகாரம் என்பது எதிர்மறை சடசக்தி. . உகாரம் என்பது நேர்மறை சட சக்தி ... இதில் நாதம் என்பது நேர்மறை உயிர்சக்திவிந்துஎன்பது எதிர் மறை உயிர் சக்திஅகாரமும் உகாரமும் சேர்ந்து மகாரம் என்ற உடலை உருவாக்கும் . இந்த உடலில் நாதமும் விந்தும் இணைந்து உயிர்களை உருவாக்கும் . 
நாதவிந்து என்பதை சக்திசிவம்காரசாரம்அண்டபிண்டம்அமுரி புளி , அகாரம் உகாரம் என்றுபரிபாசையில் சொல்லுவார்கள் இவை நேர்மறை உயிர் சக்தி மற்றும் எதிர் மறை உயிர் சக்தியைகுறிக்கும் பரிபாசைச்  சொல் தொடர்கள். . 
இன்று உயிர் அறிவியலில் முக்கிய பங்கு வகிப்பது ஸ்டெம் செல் தியரி . இது பலவித ஸ்டேன்செல்கள் பற்றிப்  பேசுகிறது . உயிர்களை உறுப்புகளில் இவை எங்கு உள்ளது என்றும் பேசுகிறது . ஸ்டெம் செல்களில் நேர்மறை எதிர்மறை உயிர்சக்தி உண்டு என்று பேசவில்லை . நேர்மறைஉயிர்சக்தி எதிர்மறை உயிர் சக்தி உள்ளது என்று சொன்னவர்கள் சித்தர்கள்சித்தர்களின் தொழில்நுட்பத்தின்படி நாதம் செய்யப்பட்டது,விந்து செய்யப் பட்டது . 
இந்த நாதமும் விந்துவும் , Lecher Antenna கருவிகொண்டு இதன் சக்தியும் அதன் நேர்மறைஎதிர்மறைத் தன்மையும் சோதிக்கப்பட்டன . 
இதன் சக்தி,பஸ்பங்களுக்கும் சுண்ணங்களுக்கும் சமமாக இருந்தது .நாதத்தின் வலிமை விந்துவின்வலிமைக்குச்  சமமாக இருந்தது . 
நாதம் வலது இடதாகச்  சுற்றியதுவிந்து இடது வலதாகச் சுற்றியது.அதாவது நாதம்  நேர்மறைஎன்றால் விந்து எதிர் மறைத் தன்மை கொண்டது 
ஆயினும் இரண்டும் சமவலிமை கொண்டவை.. உயிர்சக்திகளில் நேர்மறை சக்தி எதிர் மறை சக்திஉண்டு அது நாதம்  மற்றும் விந்துஇது சித்தர்கள் உலகிற்கு வழங்கிய உயிர்சக்தி கோட்பாடு ..

நாதமும் விந்துவும் சமஅளவு சேர்க்கப்பட்டு சோதிக்கப்பட்டது அப்பொழுது அது நடுத்தன்மைகொண்டதாக இருந்தது 
சோதனைகள் செய்து உதவிய பொறியாளர் தர்மலிங்கம் , கோயம்புத்தூர் அவர்களுக்கு நன்றி