பாடம் 4

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

மனதை நெறிப்படுத்த த்ராடக மற்றும் சூரிய யோகம் செய்முறை பார்த்தோம்.

இந்த பதிவில் சந்திர யோகா செய்முறை பார்போம். . 

கேளப்ப பூரனச் சந்திரனை நோக்கி 
கெட்டியாய் நவமி முதல் தொட்டுபாரு
ஆலப்ப இடகலையிற் சுலழினை நோக்கி .
அண்டரண்ட தீ எல்லாம் மகன்று போகும்
மாள்ப்பா தீபத்தில் சுழினை நோக்கி 
மருவி அங்கே பார்க்கையிலே ஒளிதான் வீசும்
நாளப்ப அறுபதுநாள் இப்படியே பாரு 

அகத்தியர் பூஜா விதி பாடல் ௧௧௧ 

சந்திர யோகம் என்பது சந்திரனை கண் கொட்டாமல் பார்ப்பது . அமாவாசையில் இருந்து ஒன்பதாம் நாள் நவமி நாள் . அன்று இரவு சந்திரனை கண் கொட்டாமல் பாருங்கள் . முடிந்தவரை பாருங்கள் அதன் பின் கண்ணை மூடி அன்னகிற்கு மேல் உள்ள சுளழிமுனயில் உள்ளே பாருங்கள் . . உங்களுக்கு சந்திர ஒளி உள்ளே தெரியும் . siddharyogam.com

இவ்விதம் பெளர்ணமி அன்று வரை பாருங்கள் வலது நாசியை பெரு விரலால் அடைத்து இடது நாசிவழி சுவாசிக்கவும் . .. அப்பொழுது ஓம் ந மா சி வா ய அல்லது விருப்ப மந்திரம் ஓதலாம் . சக்கிரத அவஸ்தை என்ற நல்ல நினனைவுடன் இதை செய்யுங்கள் . siddharyogam.com
சூரிய யோகத்தையும் சந்திர யோகத்தையும் அறுபது நாள் செய்யுங்கள் .. 

இதன் தத்துவம் 
நமது இடது நாசி வழி செல்லும் மூச்சு சநதிர கலை . இது சந்திர யோகத்தால் பலப்படும் சந்திரனிடம் இருந்து வரும் உயிர் சக்தி முழுமையாக கிடைக்கும் . இந்த சூரிய சந்திர யோகங்களால் சூரிய சக்தியும் , சந்திர சக்தியும் வசப்படும் . . உடல்வலுவும் .,மனவலுவும் , ஓங்கும் . மனம் குவியும் . மிகுந்த சக்தி கிடைக்கும் . அறிவு சுடர்விடும் . 
நான் இந்த யோகத்தை சில ஆண்டுகள் செய்தேன் . இன்னும் அவ்வப்பொழுது பெளர்ணமி அன்று செய்கிறேன் . . செய்து பாருங்கள் அனுபவம் சொல்லுங்கள்
https://sites.google.com/a/siddharyogam.com/siddharyogam/yoga/yogapalagu/vasiyogam/lesson-4/chakras%20function.jpg