பாடம் 3

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி. 

வாசியோகம் ஆரம்பிக்கும் முன் சில தயாரிப்புகள் வேண்டும்.அதற்கு வாசியுடன் தொடர்புடைய காரணிகள் பார்ப்போம்.

இந்த உடலை அழிப்பவை:

1) சென்னியில் இருக்கும் பித்தநீர்.

2)இடுப்பில் இருக்கும் வாத நீர்.

3)நாக்கு,தொண்டை,முதுகுத்தண்டு,பேச்சை குளிரவைக்கும் சிலேத்துமம்.

இம்மூன்றும் சமமாய் இருந்தால் உடல் அழியாது.அதற்கு உயிர்ச் சக்தி பெறவேண்டும்.அதற்கு வாசி யோகம் செய். வாசி யோகம் சித்தி அடைவதை தடுக்கும் மலத்தில் உள்ள பூச்சி. siddharyogam.comஎனவே அதை போக்க குடலை சுத்தி செய்யவேண்டும்.இதற்கு கடுக்காய் கற்பம் உண்ணவேண்டும்.இதற்கு தனிப்பதிவு செய்வேன்.

கோழை உடலின் சளிப்படலமாக உடல் முழுவதும் இருக்கும்.அதைப் போக்குவது கடினம்.இதற்கு சித்தர்கள் வழழை வாங்கல் என்ற ஒருமுறை சொல்லியுள்ளார்கள்.இதற்கு கரிசாலைகத்தாழை,கடுக்காய் கற்பம் பயன்படும். இதையும் தனிப் பதிவு செய்வேன்

 கோழையும் மலமும் கற்பத்தால் சுத்தி செய்யமுடியும்.

வாசியை தொடர்புடைய முக்கிய காரணி மனம். மனதைப் பற்றி அகத்தியர் சொன்னது .

 

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

 மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா

 மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா

 மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே ---அகத்தியர்

 சில மூட குருக்கள் இப்பாடலை காட்டி வாசியோகமும் மந்திரங்களும் செய்யவேண்டாம். மனம் செம்மையானால் போதும் என்பார்கள்.இப்பாடலில் உள்ள மறைப்பை அறியார்கள்.மனம் செம்மை ஆவது எப்படி என்றால் தியானம் செய்யுங்கள் என்பார்கள்.மனம் செம்மையானால் தான் தியானம் கைகூடும்.ஆக மனமும் செம்மை ஆகாது,தியானமும் கைகூடாது.இவர்கள் குழப்பவாதிகள்.

 சித்தர்கள் இந்த மறைப்பை வேறு இடத்தில் விடுவிக்கிறார்கள்.

சுழிமுனை திறந்தால் மனம் சுழியில்

 அகப்பட்ட துரும்பு போல் ஒடுங்கும் 

சுழிமுனை திறக்க வாசி யோகம் செய்ய வேண்டும்.அப்பொழுதுதான் மனம் செம்மைப்படும்.வாசி யோகம் செய்து மனதை செம்மைப்படுத்திய யோகியின் மூச்சு வாசியாக மாறிவிடும்.எனவே அவர் வாசி யோகம் செய்யவேண்டாம். அவர் சொல்லும் சொற்களே மந்திரம்.எனவே அவர் மந்திரங்கள் சொல்லவேண்டாம்.

எனவே வாசி யோகமும் மனமும் நெருங்கிய தொடர்புடையவை. ஆனால் மனதை நெறிப்படுத்தினால்தான் வாசி யோகமே செய்ய முடியும். வாசியோகம் செய்தால் தான் சுழிமுனை திறந்து,மனம் ஒடுங்கி, செம்மை ஆகும்.யோகம் சித்தி ஆகும்.யோகம் சித்தியானால் ஞானம் சித்தி ஆகும். இதுவே முக்தி.மனதை நெறிப் படுத்தல் எல்லாவற்றிற்கும் அடிப்படை.

மனதை நெறிப்படுத்த சித்தர்கள், ஹட யோகிகள் செய்முறை வகுத்தனர்.

 ஹட யோகிகள் த்ராடக என்ற செய்முறை (தீட்சை) கடை பிடித்தனர்.

 சித்தர்கள் சூரிய யோகம் சந்திர யோகம் அல்லது சூரிய சந்திர யோகம் என்ற செய்முறை வகுத்தனர்.

இவற்றை சிருங்கேரி ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மகாஸ்வாமிகள் செய்தார்.விவேகானந்தர் செய்தார்.இதன் அடிப்படையில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியான மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் தத்துவத்தைப் பார்ப்போம். மனம் என்பது கண்டுகேட்டுஉண்டுஉயிர்த்த புலன்களின் தொகுப்பு. மனதைக் குவியச்செய்ய இந்த ஐந்து புலன்களையும் குவியச்செய்தால் மனம் குவியும்.மனம் நெறிப்படும். இதற்கான தொழில் நுட்பமே த்ராடகவும்சூரிய சந்திர யோகமும்.

 நான் சில ஆண்டுகள் இந்த இரண்டு பயிற்சிகள் செய்து வெற்றிகண்டேன். அப்பொழுது எனக்கு 27 வயது.இந்தவெற்றியால் என்னுடைய ஆவியை நான் காண முடிந்தது.

ஆரம்ப செய்முறை பயிற்சிகளைச் சொல்கிறேன்.

த்ராடக:

ஒரு சுவற்றில் உள்ள சுவாமிபடத்தில் சுவாமியின் கண்களை மட்டும் இமை கொட்டாமல் பாருங்கள். சிறிது நேரத்தில் கண்ணீர் வடியும்.அதன் பின் பழகப்பழக கண்ணீர் வரத்து நின்றுவிடும்.சிறிது சிறிதாக நேரத்தைக்கூட்டுங்கள். இரவில் சிறு பல்ப் லோ வோல்டேஜ்  எரியவைத்து அதை இமை கொட்டாமல் பார்த்துப் பழகுங்கள்.இதனால் மனம் குவியும்.விவேகானந்தர் siddharyogam.com தியானகூடத்தில் ஒரு இருட்டு அறையில் ஓம் என்ற குழல் விளக்கு எரியும் அதைப் பார்த்து தியானம் செய்வார்கள்.கண்கள் சோர்வு அடையாமல் சிறிது சிறிதாக நேரத்தை கூட்டி செய்யுங்கள்.

சூரிய யோகம்:

பங்குனி சித்திரை மாதத்தில் சூரியன் உதயமாகும் போது சூரியனைப் பாருங்கள். கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்ப்பது போல்.கண் கெடாது.பின்பு கண்ணை மூடி மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியில் சுவாசியுங்கள். அண்ணாக்கிற்கு மேல் மனதை நிறுத்தி பாருங்கள்.உள்ளுக்குள் ஒளி தெரியும்.

தயவு செய்து இதை உடனே செய்யாதீர்கள். த்ராடக செய்து சித்தி ஆன பின்பு சூரியனை நேரில் பாருங்கள்.

யோகா தொடக்கம்:

ஆரம்பத்தில் குளித்து மேல் ஆடை இல்லாமல் சூரியன் முன்பு நில்லுங்கள். ஓம் ந ம சி வ ய என்று 108முறை சொல்லுங்கள் அல்லது உங்கள் விருப்ப ஜெபம்மந்திரம் சொல்லுங்கள். சுமார் 7 முதல்  10நிமிடம் செய்தால் போதும்.

இந்த யோகம் சக்தி வாய்ந்தது. ஸ்ரீ ராமர் சூரிய யோகம் செய்து ஆதித்ய ஹிருதயம் என்ற மந்திரம் ஜெபித்து ராவணனை வென்றார்.சூரிய ஒளி தரும் வைட்டமின் D உணவில் இருந்து கால்சியத்தை பிரித்து உடலின் செல்களுக்கு கொடுக்கும்.கால்சியம் உடலை இளமையாக வைத்திருக்கும். சூரிய நாடியில் உயிர் சக்தி முழுமையாக பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும். ..

பின்பு வீட்டிற்குள் வந்து ஒரு கோரைப்பாய் அல்லது பருத்தித் துணிமேல் சம்மணம் இட்டு நிமிர்ந்துஉட்காருங்கள். உங்களால் எவ்வளவு மூச்சை இரண்டு நாசியிலும் இழுக்க முடியுமோ,அவ்வளவு இழுங்கள்.எவ்வளவு நேரம் நிறுத்த முடியுமோ நிறுத்துங்கள்.பின்பு வெளிவிடுங்கள்.இப்படி 7 முறை செய்யுங்கள். இப்படி 10 நாட்கள் செய்யுங்கள்.