பாடம் 27

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி . ஆன் லைன் வாசி யோகா வகுப்பு . 
மாணவர் தகுதி : இயமம்நியமம் , மனித நேயமும் அன்பும் கடைப்பிடித்தல் அவசியம்
தியானம் (Meditation ) என்ற தலைப்பில் ஆங்கில வலைதளத்தில் 12 கோடி பதிவுகள் உள்ளன . தியானம் சொல்லிதரும் ஆயிரக்கணக்கான தியான முறைகள் , ஆயிரகணக்கான விளக்கங்கள் உள்ளன.

காரணம் தியானம் என்ற சொல் பணம் கொட்டும் வார்த்தையாக பயன் படுகிறது .
இன்றைய உலகில் மன அழுத்தம்(ஸ்டரெஸ் ) அல்லது மனச்சோர்வு(டென்சன்) எனும் நிலை சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசுரனாக உள்ளது .. இதற்குத் தீர்வு தியானம் என்று பல ஆராய்ச்சிகளுக்குப் பின் அமெரிக்காவின் தேசிய ஆரோக்கிய கழகம் ( என் ஐ கெச். ) தெரிவித்தது . யோகா அல்லது தியானம் ரிலாக்ஸ் தருகிறது . இதனால் செயல் திறன் கூடுகிறது . எனவே பன்னாட்டு நிறுவனங்கள் யோகாவைத் தனது அலுவலர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள் 
மேலும் தீர்க்கப் பட முடியாத மற்றும் சாவைத் தரும் நோய்களில் தியானம் மனவலிமையைத் தருகிறது . அதனால் நோய் எதிர்ப்புத் திறன் கூடுகிறது .நோயின் தீவீரம் குறைகிறது . ஆயுள் கூடுகிறது என்ற உண்மையைத் தெரிவித்தது .. அதன் பின் பல நட்சத்திர மருத்துவ மனைகள் யோகாவை குறிப்பாகத் தியானத்தை ஒரு மருத்துவ முறையாக கடைப் பிடிக்கின்றன . 

.
தியானம் பொதுவாக இரண்டு வகைப்படும் . 
ஒன்று பக்தி வழி தியானம் . மற்றது யோகவழி தியானம் . 

பக்தி வழி தியானத்தில் கண்ணை மூடி மனதை ஒருமைப் படுத்தி ,தான் வணங்கும் தெய்வத்தைக் குறித்து தியானித்தல் . தியானத்தில் ,அத்தெய்வதின் அருளையும் மற்றும் தான் விரும்புவதை பெறுவதும் அடங்கும் .. இதில் மனம் ஒருமைப்பட வைக்க அல்லது மனதை அறிய தனக்குள் பயணிக்கும் தொழில் நுட்பமோ கருத்தில் 
கொள்ளப்படுவது இல்லை .முறைப்படி சொல்லபடுவதும் இல்லை . இம்முறையில் அனுமானங்களும் அனுபவங்களும் சொல்லப்படுகிறது ..முக்தி என்பது மரணத்துக்கு பின் மீண்டும் பிறவாமல் இறைவனின் இடத்தில் இருப்பது . அல்லது நியாய தீர்ப்பின் படி சுவர்க்கம் (சுவனம்) என்ற இன்பநிலை செல்வது அல்லது தனது செயலுக்கு ஏற்ப நரகம் என்ற துன்பநிலை செல்வது . 
இம்முறை தியானத்தில் பெரும் பாலோர் சொல்வது மனம் ஒருமைப் படுவது இல்லை என்பதே .
தியானம் என்பது நமது செயலை நாம் தனியாக சாட்சியாக இருந்து கவனித்தல் . இது போன்று பல கருத்துகள் கூறப்படுகின்றன . 


யோகவழி தியானம் 
இதில் உடலும் மனமும் இணைக்கப்படுகிறது . அதன் பின் உடலுக்குள்ளும் , மனதிற்குள்ளும் பயணித்து நம்முள் இருக்கும் இறைவனைக் காணல் . அவருடன் சேருதல் அவருடன் ஒன்றுதல் . . இதனால் அமிர்தம் சுரக்கப்பெற்று .அழியா உடல் பெற்று பேரின்ப நிலை அடைதல் முக்தி . இதற்கான தொழில் நுட்பம் சொல்வது சித்தர் கல்வி . 
யோகா வழி தியானத்தை அறிவதற்கு முன் நம்மை பற்றி சில உண்மைகளை அறிதல் அவசியம் 
இறைவன் நம்முள் எங்கு இருக்கிறான் ?. 
இறைவன் தன்னை மறைத்து 96 தத்துவங்களாக, மனிதனாக இருக்கிறான் . இதில் 5 கோசங்கள் அல்லது அடுக்குகள் இதில் அடங்கும். அவை ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன 


கோஷங்கள் அல்லது அடுக்குகள்


1. அன்னமய கோஷம் : இது அங்கங்களால் அமைந்த புறஉடல். இப்புற உடல் புற உலகை ஐந்து பொறிகளாலும் ஐந்து புலன்களாலும் அறிகிறது . 
2 . பிராணமய கோஷம் 
சக்தி சமநிலைச் செயல்கள் :
இதில் பிராணன் என்ற சக்தி சமநிலை ஓட்டம் அடங்கும் . இதற்கு அடிப்படையாக இருப்பவை 1) வெளியின் மாறுபாடு , 2) காற்று ஓட்டம் , 3) வெப்பவோட்டம் 4) நீரோட்டம் 5) .திடப்பொருள் ஓட்டம் அடங்கும் . இந்த ஐந்து ஓட்டங்களும் ஐந்து அசையங்கலாகும் . காற்றின் ஓட்டம் மற்றும் வெப்பவோட்டம் பத்து வாயுக்கள் பத்து நாடிகளில் செயல் படுகிறது . 

இவற்றின் செயல் பாட்டால் . 1)பிரபஞ்சத்தில் இருந்து பஞ்ச பூதங்கள் மூலம் ( காற்று நீர் உணவு வெப்பம் இதற்கான வெளி ) சக்தி பெறப்படுகிறது . 2) பஞ்ச பூதங்களைப் பயன்படுத்தி உடல் சக்தியை உருவாக்குகிறது .3) பின்பு உடலின் ஓவ்வொரு செல்லுக்கும் சக்தி கொண்டு செல்லப்படுகிறது . . 4) இந்த சக்தி உடலின் வளர் சிதை மாற்றத்திற்குப் பயன்படுகிறது 5)..இச்செயல் பாட்டில் உருவாகும் கழிவு வெளி ஏற்றப்படுகிறது 

இந்த ஐந்து சக்தி சமநிலை செயல்பாடுகளும் சரியாக நடந்தால் உடல் சக்தி சமநிலை பெறுகிறது . இதனால் உடல் அழியாமல் பாதுகாக்கப் படுகிறது .
இந்த இயகக்ங்கள் சரிவர நடை பெறுவதைச் சொல்வது முத்தோசங்கள் என்ற பித்த, வாத , கபம் ஆகும் .
ஆக இந்த முத்தோசங்கள் உடலின் சக்தி சமநிலை என்ற ஆரோக்கிய நிலையைச் சொல்கின்றன .
3. மனோமய கோஷம் : அன்ன மற்றும் பிராண ஆகிய இந்த இரண்டு கோசங்களில் பெறப்படும் அனுபவங்களின் தொகுப்பு சேகரிக்கப்பட்டு வைக்கப்படும் அடுக்கு மனோமய கோஷம் . 
இது நான்கு நிலைப்பாடாக அந்தகரணங்களாக உள்ளது. அவை 1). மனம் , 2) புத்தி , 3) சித்தம் 4) அகங்காரம் ஆகியவை . 
மனம் ஐந்து உணர்வுநிலைகள் கொண்டது . அவை அவஸ்தை என சொல்லப்படும் .. அவைகள் 1).சாக்கிரதா 2) சொப்பன 3) சுழுத்தி 4) துரியம் 5). துரிய அதீதம் ஆகியவை . 

4.) விஞ்ஞான மய கோஷம் .:: இருப்பதில் இருந்து இல்லாததை அதாவது மறைந்து இருப்பதை காணும் அடுக்கு விஞ்ஞான மயகோசம் . இதுவே மனிதனின் தனிச் சிறப்பு . நிதர்சனமாக இருக்கும் இப்பிரபஞ்சத்தையும் நம்முள் இருக்கும் அன்ன , பிராண, மனோ மய கோசங்கள் உதவியுடன் நம்முள் மறைந்து இருக்கும் இறைவனைக் காணுதல் அல்லது கண்டுபிடிக்கும் அடுக்கு விஞ்ஞான மயகோசம் . 

5 . ஆனந்தமயகோசம் . இருப்பதில் இருந்து இல்லாததைக் கண்டு பிடித்தபின் கிடைக்கும் உணர்வு இன்பம் என்ற ஆனந்தம் . ஆனந்தம் என்பது செயல்களால் பெறப்படும் இன்புணர்வு . . புலன்களால் கிடைக்கும் இன்ப உணர்வு சிற்றின்பம் . . புலன்களை கடந்து அதாவது அன்ன, பிராண, மன, விஞ்ஞான மய கோசங்களைக் கடந்து இறைவன் இருக்கும் ஆனந்த மய கோசத்தை அடைதல் பேரின்பம் .. இந்த பேரின்பம் இருக்கும் அதாவது இறைவன் இருக்கும் அடுக்கு ஆனந்தமய கோஷம். பிராணன் என்ற இறைவன் நம்முள் ஆனந்த மய கோசத்தில் ஒளிவடிவில் நான்கு அடுக்குகளால் மூடப்பட்டு உள்ளான் . 

தியானம் என்பது என்ன ?
நம்முள் இருக்கும் அன்ன, பிராண, மன, விஞ்ஞான ஆகிய நான்கு அடுக்குகளைக் கடந்து ஐந்தாம் அடுக்கான ஆனந்த மய கோசத்தை அடைவது தியானம் . பிரத்தியாகாரத்திலும் தாரனணயிலும் நாம் பாவித்த இறைவனை உண்மையாகக் காணல் தியானம் . இது மனதின் ஐந்து உணர்வு நிலைகளிலும் கைகூடும் . அதில் துரிய நிலையில் கைகூடும் தியானம் துரிய தியானம் . ( துரிய தியான பதிவு பார்க்க ) இந்த நிலையில் சித்தர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் . அஷ்டமா சித்தி கைகூடும் . அரிய 64 சக்திகள் அல்லது சித்திகள் பெற முடியும் . . . 


தியானநிலை அடைவது எப்படி ?
அஷ்டாங்க வழியில் இயம நியமங்கள் படி அறவழி வாழ வேண்டும் . ஆசன பிராணாயாம முறைகளால் அன்னமய கோஷம் என்ற பரு உடலையும் மனதையும் நெறிப்படுத்தி சுத்தி செய்ய வேண்டும் இதன் பின் பிராணயாமத்தில் வாசி உருவாக்க வேண்டும் .. வாசி என்ற வாகனத்தை பயன்படுத்தி, பிராணமய கோசத்தை அறிந்து அதன் செயல் பாட்டை அறிந்து கடக்க வேண்டும் .

வாசியின் உதவியால் பிராணமய கோசத்தை கடந்து மனோமய கோசத்துள் நுழைய வேண்டும் . அன்னமய கோசமும் பிராணமய கோசமும் பரு உடல் சார்ந்தவை . ஐந்து பொறிகளும் புலன்களும் உள் முகமாகத் திருப்பவேண்டும் . அப்பொழுதுதான் மனோமய கோஷம் வந்து அடைவோம் . இதற்கு வாசியைப் பயன்படுத்தி பிரத்தியாகாரம் நிலை அடையவேண்டும் .. அப்பொழுது மனமய கோசமும் , அதன் தொகுப்பான அந்தகரணங்கள் வசப்படும்.
அந்தகரணங்கள் வசப்பட்டால் தாரணை நிலை உருவாகும் . அதனால் விஞ்ஞானமய கோஷம் புலப்படும் . இதற்கு வாசியும் தாரனணயும் பயன் படும் .குறிப்பாக வாசி தாரணை பயன்படும் . வாசி தாரனணயால் பரு வுடல் வலுப்பெறும் . நரைத்த முடி கறுப்பாகும் . அதாவது உடல் இளமை பெறும் . இவ்விதம் நரைமுடி கருத்தது என்ற செய்தியை தெரிவித்த அன்பர் கனகராஜ் பற்றி தனியே சொல்கிறேன் 
.
வாசி உதவியால் வாசி தாரணை கை கூடினால் விஞ்ஞான மய கோசத்தை கடந்து ஆனந்த மய கோஷம் வந்து சேர்வோம் .. ஆனந்த மய கோசத்தில் இறைவன் நம்முள் இருக்கிறான் . இறைவன் வாழும் ஆனந்தமய கோசத்தின் கதவைத் திறந்து நம்முள் வாழும் இறைவனைத் தரிசித்தல் தியானம்

நம்முள் வாழும் இறைவனைப் பல ரூபங்களிலும் ஐந்து உணர்வு நிலைகளிலும் தரிசிக்க முடியும் . இவ்விதம் துரிய நிலையில் தியானத்தில் சித்தர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் . இதை காக புசுண்டரும் கோரக்கரும் தெளிவாகச் சொல்லி உள்ளார்கள் . திருமூலரும் பிற சித்தர்களும் சிதம்பரத்தில் அம்மை அப்பரின் நடனம் கண்டனர் . அகத்தியர் சிவனின் திருமணத்தை கண்டு கழித்தார் .ஆயினும் இறைவனை ஒளியாக காண்பது பூரணம் . 
இதுவே அஷ்டாங்க யோகத்தின் ஏழாம் நிலை இந்தத் தொழில் நுட்பமே நாம் நம்முள் பயணிக்கும் வழி. பிற தியான முறைகள் நம்முள் பயணிக்கும் வழியைச் சொல்ல வில்லை 

.
தியானத்தை திருமூலர் சொல்கிறார் 

வருமாதி ஈரெட்டில் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன் போக மேவல 
உருவாய சக்தி பரதியானம் முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூரே 

திருமூலர் திருமந்திரம் பாடல் பாடல் 598 


ஒரு இடத்தில் பொருந்தி இருக்காத மனதின் தொகுதியான மனம் , புத்தி மற்றும் பொறிகளால் உருவான புலன்களை நெறிப்படுத்த வேண்டும் . வாசி உதவியால் உள்முகமாக பயணிக்கவேண்டும் . . இதற்கு வாசி உருவாக்கி சூரியகலை, 16 கலை சக்திகொண்ட சந்திரகலை ஆகியவற்றில் வாசி தாரணை நிலை கடத்தல் வேண்டும் . அப்பொழுது தானே தியானம் கைகூடும் . தியானத்தில் உருவங்களை காணல் பர தியானம் . உருவம் அற்ற ஒளி வெளி காண்பது சிவத்தியானம் . பர தியானம் பக்தி வழி சார்ந்தது . சிவத்தியானம் யோகவழி சார்ந்தது
.
தியானம் பற்றி சுப்பிரமணியர் சொல்கிறார்

எண்ணறிய தியானத்தில் இரண்டுன் டப்பா
எழில்சகுண நிற்குண மென்றதர்க்கு பேரு
நன்னு சகுணததுரு உடனிருக்கும் 
ஞானமா மூர்த்தியைதான் தியானம் செய்தல் 
அண்ணல் பரபிரம்மத்தை தியானம் செய்தல்
அரியதொரு நிற்குனத்திண் அழகிதாமே 
சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல் 29 எண்ணுவதற்கு அரிதானது தியானம் . அது இரண்டுவகைப்படும். ஞான மூர்த்தியை தாரணை செய்து தியானம் செய்தல் . உருவ தியானம் அல்லது சகுணதியானம். இது அழகானது . பரபிரம்மம் என்ற உருவம் அற்ற இறைவனை உருவம் இல்லாத ஒளி அல்லது வெளியாகத் தியானம் செய்தல் நிர்குண தியானம் இது அரிதான தியானம் 

தியானத்தின் வகைகளை அகத்தியர் சொல்கிறார் 
பிலமான தியானவகை பத்துங்க்கேளு
பேரான சடாதர தியானம் மொன்று 
குலமான தேகமட தியானம் மொன்று 
குவிந்து நின்ற மண்டலமாம் தியான மொன்று 
தளமான பிரம்மத்தின் தியானம் மொன்று
தயவான மாலினுட தியானம் மொன்று .
நலமான ருத்திரனார் தியான மொன்று 
தன்மையுள்ள மகேஸ்வரனார் தியானம் மொன்று .
அகத்தியர் பூரண காவியம் பாடல் 50 

ஒன்றான சதா சிவத்தின் தியானம் மொன்று 
ஒளிவான பிரணவத்தின் தியானம் மொன்று 
நன்றான நிராதார தியானம் பத்தும் 
நன்றாக அஷ்டாங்கம் நன்றாய் காத்தால் 
குன்றாது தேகமட தேவரூபாம் . 
குருவான மூலமடா அண்டம மேறு 
நின்ராடும் வாசியாட சுழினை கம்பம் 
நேரான சமாதியுட நிசத்தை பாரு .
அகத்தியர் பூரண காவியம் பாடல் 51 சக்திமிக்க பத்து வகைத் தியானங்களை சொல்கிறேன் கேள் 


1.சட ஆதார தியானம் :
தாரணையில் நாம் விரும்பும் சித்தர் அல்லது இறைவன் உருவம் அல்லது தெய்வப்படம், ஆகியவற்றைக் கண்டு அவற்றை உண்மையாக உணர்தல் . அவற்றுடன் உரையாடல் . வேண்டுதல். .வரம் பெறல் . ஆகியவை . 
இவ்விதம் காலங்கி திரு மூலரிடம் கற்றார் . அகத்தியர் அந்தரங்க தீக்ஷ்சாவிதி என்ற நூலை சிவனிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார் . ராமகிருஷ்ணர் காளி, இயேசு , நபிகளுடன் உரையாடினார் . 1989 வரை வாழ்ந்த ஜகத்குரு சாரதா பீடம் சங்கராச் சாரியார் அபிநய வித்யா தீர்த்த மகா ஸ்வாமிகள் தியானத்தில் தேவியைத் தரிசித்து தேவியின் பாதங்களைத் தொட்டு வணங்கிதை யோகம் ஞானம் ஜிவன்வன் முக்தி என்ற நூல் சொல்கிறது . மேலும் சிவன் அவருக்கு உபதேசித்ததையும் சொல்கிறது 
இவ்விதமே நானும் சித்தர் கல்வி கற்றேன் . நீங்களும் செய்யமுடியும் . 


2.. தேக தியானம் 
ஒரு மனிதர் அல்லது ஞானியை தாரணை செய்து அவரைத் தியானம் செய்தால் அவர் உங்களின் சந்தேகங்கள் போக்குவார் வேண்டுதல்கள் நிறைவேற்றுவார் .. .. இதன்படி சிர்டி சாய் பாபா, புட்டபர்த்தி சாய் பாபா , சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் போன்றோர் தனது பக்தர்களுக்கு அருள் செய்தார்கள் . உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் உள்ள சிலர் நான் அவர்களுக்கு தோன்றி உதவுவதாக என்னிடமும் சொல்கிறார்கள் .. 
இது அவர் அவரின் யோகா சக்தியை பொறுததது .காமா அதிர்வலைகள் உருவாவதைச் சார்ந்தது. 

3 மண்டல தியானம்

குறிப்பிட்ட வரங்கள் பெற அல்லது காரிய சித்தி செய்ய உடலின் மண்டலங்கள் அல்லது சக்கரங்க ளில் மனதை நிறுத்தி அதற்குரிய தேவதை அல்லது சக்கரங்களில் தியானம் செய்தல் .
நமது உடல் மூன்று மண்டலங்களால் ஆனது . ஆசனவாய் முதல் தொப்புள் வரை அக்கினி மண்டலம் . தொப்புள் முதல் தொண்டை வரை சூரிய மண்டலம் அதற்குமேல் சந்திர மண்டலம் .
ஓவவொரு மண்டலத்திலும் மனதை நிறுத்தி தியானம் செய்தல் மண்டல தியானம் . இவை முறையே அக்கினிகலை அல்லது தாரைகலை , சூரியகலை சந்திர கலை தியானம் . இதை அடிப்படையாகக் கொண்டு இரண்டு நாசியில் சுவாசித்தும் , வலது நாசியில் சுவாசித்தும் மற்றும் இடது நாசியில் சுவாசித்தும் நாடி சுத்தி செய்கிறோம் . 


4. பிரம்மதியானம் :
பிரமன் சரஸ்வதி ஆதார தளமாகிய சுவாதிஷ்டானா சக்கரத்தில் மனதை நிறுத்தி தியானம் செய்தல் . குழந்தை வேண்டுபவர் , இல்வாழ்கை இன்பம் வேண்டுபவர் ,படைப்பாளி , கல்வி வேண்டுபவர் செய்யவேண்டிய தியானம் . படைக்கும் சக்திக்கும் , அறிவு பெறவும் இந்த தியானம் பயன் தரும் .. 


5 திருமால் அல்லது விஷ்ணு தியானம் : 
திருமால் மற்றும் லக்ஷ்மி தளமாகிய மணிபூரக சக்கரத்தில் மனதை வைத்து தியானம் செய்தல் . உடல் , உயிரை காக்கவும் அனைத்து செல்வங்கள் பெறவும் காக்கும் சக்தி பெறவும் இத்தியானம் பயன்தரும் . 


6.ருத்திர தியானம் :
சிவனின் வடிவான ருத்ரன் ருத்திரி தளம் ஆகிய அனாகத தளத்தில் மனதை நிறுத்தி தியானம் செய்வது . எதிரிகளை வெல்வதற்கும் தீமைகளை அழிப்பதற்கும் , வியாதிகளை அழிப்பதற்கும் , அழிக்கும் சக்தி பெறவும் ருத்ர தியானம் பயன் படும். 


7. மகேஸ்வர தியானம் 
சிவனின் வடிவான மகேஸ்வரனும் மகேஸ்வரியும் இருக்கும் தளமான விசுக்தி சக்கரத்தில் மனதை வைத்து தியானம் செய்வது . மாற்றங்கள் செய்வதற்கும் , மாயாசக்தி ,மறைத்தல் சக்தி பெறுவதற்கும் இந்த தள தியானம் பயன் தரும் 


8. சதாசிவ தியானம்: 
சிவனின் மறுவடிவான சதாசிவம் மனோன்மணி தளமாகிய ஆக்ஞா சக்கரத்தில் மனதை வைத்து தியானிப்பது . தான் பெற்ற சக்திகளின் மூலம் பிறருக்கு உதவிசெய்ய இந்த தளம் பயன்படும் . அருளும் சக்தி பெற கருணை வடிவாக இறைநிலை பெற இறைவனை தரிசிக்க இந்த தள தியானம் பயன்படும் இத்தகையவர்களின் ஆரோ என்ற ஒளி பிரபை பல அடி தூரம் வியாபிக்கும் . எனவே ஞானிகள் அருகே இருந்தால் அவர்களின் கருணை மிக்க அதிர்வு அலை தரிசிப்பவரின் துன்பங்களைப் போக்கும் . 
எனவே எல்லை இல்லா கருணைமிக்க சித்தர்கள் நல்லவர்களின் தீர்க்க முடியாத வியாதிகளையும் , துன்பங்களையும் தீர்க்கிறார்கள் . சித்தர்களின் சமாதிகளில் அவர்களின் அதிர்வு அலை மக்களின் துன்பங்களைப் போக்குகிறது 

9., பிரணவ தியானம்: 
மூலாதாரத்தில் மனதைவைத்து . ஒளிவடிவாக , வெளியாக பிரணவம் என்ற ஓங்கார வடிவாக உருவம் அற்று இறைவனை தரிசிப்பது.. . இதுவே சிதம்பர ரகசியம் இறைவனோடு ஒன்றுவதற்கு இந்த தியானம் பயன்படும் . அனைத்து சித்திகளும் கைகூடும் 


10. நிராதார தியானம் 
உடலுக்கு உள் இயங்கும் சக்கரங்கள் செயல்படும் இடம் ஆதார தளங்கள் . உடலுக்கு வெளியே உச்சி தலைக்கு மேல் நான்கு விரற்கடை உயரத்தில் செயல் படும் சக்கரம் சஹஸ்ரார சக்கரம். இதில் மனம் வைத்து தியானிப்பது நிராதார சக்கரம் . . இறைவனை பரவெளியாக தரிசிப்பது . இந்தவெளியை நான்காக சித்தர்கள் பிரிக்கிறார்கள் . உள்பாழ் , வெளிபாழ், உள்வெளிபாழ் பரவெளி . இறைவனை பரவெளியாக தரிசிப்பது மௌன யோகம் . சிவ யோகிகளுக்கே நிராதார தியானம் மற்றும் மௌன யோகம் சித்திக்கும். 

தியானத்தில் மூளையில் ஏற்படும் மாற்றங்களை எலக்ரோ என்செப்லோக்ரம் இஇஜி (...) எனற கருவிகொண்டு ஆய்வு செய்தனர் . அதில் காமா அதிர்வலைகள் உருவானது. இந்த காமா அலைகள் அளப்பரிய சக்தி தருவதாக கண்டறிய பட்டது . மேலும் தியானத்தின் போது பினியல் கிளான்ட் மற்றும் கோனார்ட் கிளான்ட் செயல் பாடுகள் ஊக்குவிக்கப்படுகிறது அனைத்து நாளமில்லா சுரப்பிகளும் தூண்டப்படுகின்றன. இதனால் உடல் வலுப் பெறுகிறது .. யோகிகள் தியானத்தின் மூலம் தனது நாடித்துடிப்பை மிக குறைக்கவும் மீண்டும் சுய துடிப்புக்கு திரும்பவும் கொண்டுவர முடிகிறது... . . . . . 

                                        இறை அருள் பெறுக !!! தான் அவன் ஆகுக !!!