பாடம் 26

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி . ஆண் லைன் வாசி யோகா வகுப்பு .
மாணவர் தகுதி : இயமம், நியமம் , மனித நேயமும் அன்பும் கடை பிடித்தல் அவசியம்

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

வீட்டில் வாசி யோகம் பாடம் 26 தாரணை , தெய்வ தரிசனம் . ஆன்மதரிசனம், காய சித்தி, முடிகருத்தல்.
சென்ற பாடத்தில் நமது அந்தகரானங்கலான மனம் புத்தி , சித்தம் அகங்காரம் ஆகியவற்றை அறிவால் ஒரு நிலைபடுத்தவேண்டும்இதனால் நமது புலன்கள் ஐந்தையும்உள்முகமாக பார்க்க வேண்டும் .. இப்பாடி உள்முகமாகபிரத்தியாகாரம் செய்யவேண்டும் . என்பதை பார்த்தோம் . உள்முகமாக பர்த்தபின் என்ன செய்யவேண்டும் என்பதைசொல்வது அடுத்த அங்கம் தாரணை வாசி யோகத்தின்ஆறாவது அங்கம் தாரணை . இதில் நீங்கள் விரும்பியதெய்வத்தை பார்க்கலாம்.

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் 
பின்னம் வந்தனர்க் கென்ன பிரமாணம் 
முன்னூறுகோடி உறுகதி பேசிடில் 
என்ன மாயம் இடிகரை நிற்குமா ..

திரு மூலர் திருமந்திரம் பாடல்  596

அரித்த உடலை ஐம்பூதததில் வைத்து 
பொறுத்த ஐம்பூத சத்தாதியில் போந்து 
தெறித்த மனாதி சத்தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே

திரு மூலர் திருமந்திரம் பாடல் 597

முன்பு பிறந்தவர்கள் அனைவரும் இறந்து போனார்கள் . இனிபிறப்பவர் இறக்கமாட்டார் என்பதற்கு உத்திரவாதம் இல்லை . இறப்பை தடுக்க முன்னூறு கோடி siddharyogamவழிகளை பேசிபயன் இல்லை . பெருவெள்ளம சிறிது சிறிதாக அரித்துகரையை அழிக்கும் ..இடிந்து போகும் கரை போன்று உடல்அழியும் தன்மை கொண்டது . இந்த அழியும் உடலைவாசியோகம் தவிர்த்து பிற உபாயங்களால் காக்க முடியும்என்பது மாயம் போன்றது . பிற உபாயங்களால் அழியாமல்காக்க முடியாது.
ஐம் பூதங்களால் ஆனவன் மனிதன் , அரிக்கப்பட்டு அழியும்உடல் கொண்டவன் மனிதன் . அழியா உடல் பெறும் வழி இது . மனம் ,புத்தி, சித்தம் , அகங்காரம் ஆகிய மனதின்தொகுதிகளான அந்த காரணங்களை அறிவால் நெறி படுத்தி ஒருமுகப்படுத்து. ஒருமுக படுத்திய மனத்தால்ஐம்புலன்களையும் உள்முகமாக திருப்பி , உன்னுள் பார் .. அங்கு ஐம்பூதங்களை இயக்கும் சக்கரங்கள் ஆதாரதளங்களிளுண்டு . அவற்றை பார்.. தற்பரம் என்ற இறைவன்அங்கு உள்ளான் . அவன் பலவடிவுகள் உடையவன் . . நீவிரும்பும் வடிவினனாக அவனை பாவித்துக்கொள் . இதில்உயர்ந்தவடிவு ஒளிவடிவு . நீ பாவித்த அந்த தற்பரம் என்றஇறைவனுடன் நீ ஒன்றினால் தாரணை உருவாகும் .. இந்ததாரணை ஆறுவகையாகும்

விளங்கவே தாரனைதான் ஆறுங்கேளு 
விசையான பூத தாரனை தான்னொன்று
உளங்கனிந்த பிராண தாரணை தான்னொன்று
உத்தமனே கரண தாரனை தான்னொன்று
களங்கமில்லாத தெய்வதாரனைதான் னொன்று
கண்டறிந்த தத்துவ தாரனை தான்னொன்று 
இலங்க்வித்த பிரம்ம தாரனைதான் ஒன்று 
பெருமையுடன் தாரணியில் பிலமாய் நில்லே

அகத்தியர் பூரனகாவியம் 7 வது சருக்கம் பாடல் 50


தாரணை ஆறுவகை படும் . அவற்றை பார்ப்போம். 

1. பூத தாரணை

மண் , நீர்நெருப்பு , காற்று , மற்றும் ஆகாயம் ஆகியபூதங்களை ஒவவொன்றாக மூலாதாரத்தில் பாவித்து அவற்றைஅங்கு பார்த்தல்அதனுடன் ஒன்றுதல்இதுபோன்று சிலர்நவகிரகங்களையும் பார்பதுண்டு . வாசி உருவாக்காமல்இவ்விதம் பார்ப்பதை பஞ்ச பூத தவம் என்றும் , நக்கிரக தவம்என்றும் சில குரு மார்கள் சொல்லுவார்கள் .

2. பிராணதாரனை 
பிராணன் என்ற மூச்சு காற்று உடலுள் செல்வதையும் அதுசெயல்படும் விதத்தையும் உள் உணர்வால் பார்த்தல் . வாசிஉருவாக்காமல் இவ்விதம் பார்ப்பதை விபாசன என்று சிலகுருமார்கள் சொல்லுவார்கள்காக புண்டர் இதன்மேன்படுத்தப்பட்ட தாரனையாக வாசி தாரணை பற்றிசொல்கிறார் ..

வாசியோகமுறை இல்லாமல் உள்முகமாக பார்க்க சொல்லும்விபாசனா தியானம்முழுமை இல்லா பிராண தாரணை ) ,, பஞ்ச பூத தபஸ் அல்லது தியானம்நவக்கிரக தபஸ்முழுமைஇல்லா பூத தாரணை ) அல்லது தியானம் . இவை தாரணயின் . முழுமை அற்ற செயல் முறை .
.
வாசி தாரணை (பிராண தாரணை ) பற்றி காக புண்டர் சொல்வதை பார்ப்போம் .

மேலும் ஞானம் உருவாகும் இடம் மற்றும் ஆன்மா பற்றியும்சொல்கிறார். .அது மட்டும் இல்லை வாசி யோகத்தில் நரை முடிகறுப்பாவது எப்படிஎன்றும் சொல்கிறார் அதுவே காய சித்திஎன்கிறார் ..


தானென்ற ஞானமே பிரம்மரந்த்ரம் 
தானிருந்து பிறந்ததுவும் திரிகால வர்த்தம்.

வானென்ற திரிகாலம் ஆன்மா உச்சி 
மண்டையததின் மேலேற உச்சி கண்ணில் 
ஆணென்ற கன்னதுமே யோகத்தாலே 
அவயோகம் வாசி தாரனையினாலே . 
ஏனென்ற தாரனைதான் வாசி மூச்சாம் 
இவ்வாசி யுன்ட அண்ணம் செரிக்கும் போதே


காக புண்டர் பேரு நூல் காவியம் பாடல் 893


செரிக்கும் போது மலம் உருண்ட காற்றுதானே 
தீப்புகைபோல் புகைகிளம்பி மூலம் மேறும்
மரித்ததுவும் வந்தகலை வாசியாகி 
மாறாது கலை பிரிந்து மாறிக்கொள்ளும்
வெரித்துவந்த முனை மூக்குத தண்டு உச்சி 
விரைந்து வதில் பாய்வதுவும் ஆன்மாவாகும் 
முரித்துவதி லாடுகின்ற ஆன்மாதானும் 
முன் பிறந்த உடலுயிரும் எழும்பிற்றானே


காக புண்டர் பெரு நூல் காவியம் பாடல் 894


எலும்பென்ற முதுகு தண்டு எலும்பினூடே
இல்லை யூசி செலுத்துமது வாசல்போல 
எலும்பினுள் துவாரமது ஓடும் மார்க்கம்
இருக்கின்ற பாதைவழி பிரானனாகும் 
எலும்பினுள்ளே ஓடுகின்ற வாசி ஆன்மா
ஏறியது ஓடுவது முனை மூக்குதான் 
எலும்பிலே வாய்வான ஆன்மா வந்தால் 
இப்படியே புருவமத்தி ஏறும்பாரே 


காக புண்டர் பெரு நூல் காவியம் பாடல் 895


ஏறியே ஆதாரத் திடையில் சென்று 
இடை நடுவே நெட்டுவழி பாதை உச்சி
ஏறியே மண்டடைநாடு உச்சி நேராய் 
ஏறியந்த ஒட்டின்மேல் உச்சி தோலில்
ஏறிநின்று மண்டையெல்லாம் ரோமமாச்சு 
ஏறியே இறங்கியதால் மேல்கால் எல்லாம் 
இயல்ரோமம அங்கங்கே முளைத்து சேர்ந்தே 


காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 896


சேரவே காயசிததி ரோமந் தானும் 
சிரசிருந்த மயிர்வெள்ளை கருத்துபோகும் 
மாறவே சாரிரங்கள் வெகு காலந்தான்
மயிர்கருது உடல் பிலத்து உயிர்கட்டுண்டு
சேரவே இவ்வான்மா உச்சி ரோமம் 
சேர்ந்தேறி மயிர்மார்கத் துடர்ந்து பற்றி 
மிகநடக்கும் பிரகாயப் பிரவேசந்தான்


காக புண்டர் பெரு நூல் காவியம் பாடல் 897

வாசி உருவாக்கிவாசி யோகம செய்தால் தாரணைஉருவாகும்

இதனால் ஞானம் கிடைக்கும் . ஞானம் என்பது பிரம்மரந்திரம்என்ற சகஸ்ரார தளத்தில் உருவாகும் இங்கு கடந்த காலம்நிகழ்காலம் மற்றும் எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களில்நடை பெறும் நிகழ்வுகள் தெரியும் இது ஆன்மா உச்சி என்றுசொல்லப்படும் ..

பிராணன் உருவாதல்,பயணம் மற்றும் செயல் பாடு .

நாம் siddharyogam.comஉண்ணும் உணவு செரித்து மலம்வெளியேறும் . அதன் சத்து உயிர்சக்தியாகி வெப்பத்துடன்காற்றாகி ( அபாணன் ). மூலத்தில் ஏறும் . நாம் பிரபன்ச்சத்தில்பெற்ற உயர் சக்தி பிராணவாயு மூலம் மூலாதாரத்தில் அப்பனவாயுவை மரிக்கும் எனவே மூலாதாரத்தில் அப்பாணன் கிழேஇழுக்கும் . பிராணவாயு மேலே இழுக்கும . இந்த இயக்கம் உடல்சுருங்கி விரியும் இயக்கத்தை தரும்இது அடிப்படை பிராணஇயக்கம்

இதனால் நுரை ஈரல் சுருங்கி விரியும் பிற உறுப்புகளும்சுருங்கி விரியும் மற்றும் சுவாசம் ஏற்படும் மூலாதாரத்தில்உருவாகும் பிராண இயக்கம் . இதனால் இரத்தவோட்டம் வாயுவோட்டம் ஆகிய இயக்கங்கள் நடை பெறும்... இதனால்பிராணன் என்ற உயிர் உருவாகும் 
மூலாதாரத்தில்உருவான பிரான் முதுகுத்தண்டு வழியாகமேலே ஏறி மூக்கின் நுனிக்கு செல்லும் அங்கு சுவாசத்தின்கலை மாறலை செய்யும் . இந்த உயிரின் இயக்கம் ஆன்மா 
.

பிராணன் மூச்சு காற்றில் உள்ள உயிர் சக்தியை எடுத்துக்கொண்டு மூலாதாரத்தில் இருந்து ஆதார தலங்களின்ஊடேவளைந்து வளைந்து பிங்கலைவழி புருவ மத்தி என்றசுளுமுனைக்கு மேலே ஏறும். . அதுபோன்று இடகலைஇயக்கமும ஆதார தளங்களில் ஊடே வலைந்து சென்றுசக்தியை ஆங்காங்கே சக்கரங்களில் இருந்து உடல்உறுப்புகளுக்கு பிரித்து கொடுக்கும்இதனால் உயிர்சக்திஎலும்பின் உள்ளே உள்ள மச்சை வரை செல்லும் ..

இந்த சுவாசத்தை கால கணக்குடன் நெறிபடுத்தினால் வாசிஉருவாகும்முதலில் வாசியால் அழுத்தப்படும் மூலாதாரம் , சுழிமுனை நாடியை உருவாக்கும்இது பத்தாவது நாடி.) மற்றும்தாரைகலை உருவாக்கும் . மூலாதாரத்தில் இருக்கும்வெப்பமும் காற்றும் குண்டலி உருவாக்கும் .. அழுத்தப்படும்குண்டைலி வாலை என்ற ஒளியாக மாறும்இந்த சுழிமுனைநாடி மூலாதாரத்தில் இருந்து நேரே இடகலை பிங்கலைபின்னலுக்கு நடுவே சென்று சுழிமுனை அடையும் . இதன் வழிகுண்டலி அல்லது வாலை பயணிக்கும் . இந்த வாசியின்ஓட்டத்தை உணர்ந்தால் வாசி தாரணை உருவாகும் ..
. . 
.
வலது நாசி சுவாசம் பிரபன்ச்ச சக்தியையும் உடல்உருவாக்கிய சக்தியையும் எடுத்து செல்லும்(12). இடது நாசிசுவாசம் சக்தியை பிரித்து கொடுக்கும்(16) . இரண்டுக்கும்இடையே உள்ள குறைபாடு 4 கலை சக்தியை தாரைகளைகொடுக்கும் siddharyogam

இந்த உயிர் சக்தி ஓட்டம் மூலாதாரத்தில் இருந்து ஒவொருதளமாக ஏறி சென்று சுழிமுனை அடையும் . அங்கிருந்து மேலேஏறி மண்டை ஓட்டின் துவாரங்கள் வழி மண்டை மேல் தோல்அடையும் . இந்த சக்தி மண்டை ஓட்டில் முடிகளை உருவாக்கிஅவற்றை கருப்பாக வைத்துள்ளன . இந்தசக்தி கிழே இறங்கிஉடல் முத்தும் பரவி உடலில் ரோமம்கலை உருவாக்கியது .. இந்த உயிர்சக்தி குறையும் போது நரை முடி மற்றும் வழுக்கைஏற்படுகிறது .. 
கற்பம் உண்டு வாசியோகம் செய்து தாரைகளை உருவாக்கிசக்தியை பெருக்க வேண்டும் . வாசியோக தாரணையில்மீண்டும் உயிர் சக்தி மண்டை ஒட்டு துவாரம் வழி முடிகளுக்குகொடுக்கும் ., மீண்டும் கிழே இறங்கி உடல் முழுது பரவும்நரைத்த முடி கருக்கும் . உடல் வலுவடையும் . இதைவஜ்ரதேகம் என்பார்கள் இதுவே காய சித்தி . 


3. 
கரண தாரணை 
மனம் ,புத்திசித்தம் , அகங்காரம் ஆகிய மனதின்தொகுதிகளான அந்த காரணங்களை அறிவால் நெறி படுத்திஒருமுக படுத்து . ஒருமுக படுத்திய மனத்தால்ஐம்புலன்களையும் உள்முகமாக திருபபி , உன்னுள் பார் .. அங்கு ஐம்பூதங்களை இயக்கும் சக்கரங்கள் ஆதாரதளங்களிளுண்டு . அவற்றை பார்தற்பரம் என்ற இறைவன்அங்கு உள்ளான் . அவன் பலவடிவுகள் உடையவன்அவனைபார்.


4. 
தெய்வதாரனை .
தற்பரம் என்ற இறைவன் பலவடிவுகள் உடையவன்கரணதாரனை உருவாக்கி அதில் நாம் விரும்பும் தெய்வுருவைபாவிக்க வேண்டும் . அவ்விதம் பாவனை செய்தால் நீங்கள்விரும்பும் தெய்வம் உங்களுக்கு புலப்படும் . . இந்த தாரணயில்நீங்கள் விரும்பும் சித்தரையும் காணலாம் . . இவ்விதம் ராமகிருஷ்ணர் காளிமுதல் இயேசு வரை தரிசித்தார் . 
5. 
தத்துவ தாரனை
இறைவன் 96 தத்துவங்களாக மனிதனாக மாறி இருக்கிறான் . . இந்த தத்துவக்கலை நம்முள் கண்டு அதனுடன் ஒன்றுவது ..


6  பிரம்மதாரனை
தன்னை இறைவனாக பாவித்து தன்னுள் பூரணமாகஒளிவடிவில் உள்ள இறைவனாய் காண்பது . அந்த ஒலிவடிவஇறைவனுடன் ஒன்றுவது . இது தான் அவன் ஆதலில் முதல்நிலை .
.
இறை அருள் பெறுக!!! தான் அவன் ஆகுக !!!

https://sites.google.com/a/siddharyogam.com/siddharyogam/yoga/yogapalagu/vasiyogam/lesson-26/agathiyar.jpg