பாடம் 23

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி ஆன் லைன் வாசி யோகா வகுப்பு . 
மாணவர் தகுதி : இயமம்நியமம் , மனித நேயமும் அன்பும் கடைப்பிடித்தல் அவசியம்.

சகஸ்ராரம் அல்லது பிரம்ம ரந்திரம்

முந்தைய பதிவில் ஆக்ஞா தளம் பற்றி பார்த்தோம்மூலாதாரம்முதல் ஆக்ஞா வரை ஆறு தளங்களும் உடலுக்கு உள்ளேஇருப்பவை . . எனவே இவற்றை ஆதார தளம் என்றுஅழைக்கப்படும்சகஸ்ராரம் அல்லது பிரம்ம ரந்திரம் உடலுக்குவெளியே இருக்கிறது எனவே இதை நிராதார தளம் என்றுசொல்லப்படும் இந்தத்  தளமே நம்மையும் இப்பிரபஞ்சத்தையும்இணைப்பதுநம்மைச்  சுற்றி பிரபை என்ற ஒளி உருவைஏற்படுத்துகிறது . ஆங்கிலத்தில் aura ...... ஆரா என்று அழைக்கப்படுகிறது . 

நமது தியான நிலைக்கு ஏற்ப இந்த பிரபையின் நிறம்பட்டைஅகலம்  ஆகியவை மாறும் . இதை கிம்பர்லின் போடோ கிராப்என்ற முறையில் படம் பிடிக்க முடியும் . இதைப்  போன்றே நமதுமூளையில் ஏற்படும் அலை வரிசையை எலெக்ட்ரோஎன்செபிலோக்ராபி(Electroencephalography) என்றமுறையில் பதிவுசெய்ய முடியும் . 
எனவே சித்தர்கள் சொல்கிற ஆதார தளங்களும் சக்கரங்களும்இன்று அறிவியல் உத்திகொண்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது . . எனவே வாசி யோகா மகிமை அளவிடமுடியும் . siddharyogam.comயாரும் ஏமாற்ற முடியாது .. மேலும் ஒரு வாசியோகி முன் அமரும் போது அல்லது அவர் வாசி உருவாக்கும்போது அதன் தாக்கத்தை நீங்கள் உணர்கிறீர்கள்.. சிலர் விவரிக்கமுடியவில்லை என்கின்றனர் . இவை அவரின் பிரபையின் சக்தி .. .
சித்தர்கள் சகஸ்ரார தளம் பற்றி சொல்வதைப்  பார்ப்போம்.


தானான மனோன்மணியை தாண்டி அப்பால் 
தனித்ததோர் எட்டுவிரல் மேலேகேளு 
கோனான குருபதம்தான் கூட்டிப்பாரு
குறிப்பான இதழ்களோ மாயிரத்தெட்டு
ஆனான நாடு மையம் ஐங்கோணமாகும்
ஆகாரம உகாரமொடு மகாரமாகும் 
நானான நாதமொடு விந்து அஞ்சும் 
நலத்த வைங்கோனத்தில் நிற்கும் பாரே

---போகர் 1000 பாடல் 70 


பார்க்கவே உகாரமாய் நடுமையத்தில் 
பரிசுத்த வொளியாகி உதிக்கும் பாரு 
பார்க்கவே நிகாரத்த நிர்மலன்றன் வடிவாம் 
பார்த்ததொரு வாசினத்தான் அதற்குள் வைத்து 
நேர்க்கவே யோடாமல் நிறுத்திப்பாரு 
நிலையாத பிறவியறும் பூரணமுட்கொள்ளும் 
ஆர்க்கவே யடிவாழ வேதாந்தத்தி
யனாதிஎன்ற பொருலொருவர்க் கறியொன்னாதே

போகர் 1000 பாடல் 71 .

அமைவிடம் மற்றும் பயன்:
மனோன்மணியின் தளம் என்ற ஆக்ஞா தளத்தில் இருந்து எட்டுவிரல்கடை உயரத்தில் தலைக்கு மேல் நான்கு விரல் கடைஉயரத்தில் சகஸ்ராரா அல்லது பிரம்ம ரந்திரம் என்ற தளம்உள்ளது . ஆகையால் உடலுக்கு வெளியே உள்ளது . ஆயினும்உடலையும் பிரபஞ்சத்தையும் இணைக்கும் .
இதுவே siddharyogam.comபரிசுத்த வெளியின் ஆரம்ப நிராதாரதளம்உடலின் குற்றங்கள் இங்கு இல்லை . இறைவனின் வேதாந்தவடிவான அநாதி வடிவு இந்த தளம் . பூரணம் என்ற ஒளியாகியஅநாதி ஆகிய இறைவனை இங்கு தரிசிக்கலாம் .. 
வாசியோகத்தில் இறைவனை ஒளிவடிவில் இங்கு தரிசித்தால்பிறவி இல்லாமல் போய்விடும் . சமாதி நிலை அடையக்  கூடியதளம்பேரானந்த போதம் தரும் இடம் .
வாசி யோகத்தில் இந்தத்  தளத்திற்கு மேலே உள்ள முப்பாழ்சென்று அதைத்  தாண்டி பரவெளி செல்லும் யோகநிலை மௌனயோகம் 
இத்தளத்தில் இருந்து மீண்டும் கீழே உள்ள ஐந்து ஆதாரங்கள்இறங்கி மீண்டும் மூலாதாரம் அடைவது  பிடரி மார்க்கம்எனப்படும். . . 
உருவ அமைப்பு 
ஐந்து கோணம் உடைய நட்சத்திரம . அதைச்  சுற்றி ஆயிரத்துஎட்டு தாமரை இதழ்கள் உள்ளன . 
பூதங்கள் 
மண்நீர்நெருப்புகாற்று ,ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள்ஒடுங்கி உள்ள தளம்
வித்துகள்
அகாரஉகார,மகார ,நாதவிந்து ஆகிய பஞ்ச வித்துக்களின்ஒடுக்கம் இத்தளம் .
நிறம் -- தூய ஒளி
பீஜ மந்திரம் -- ஓம் 
அதி தேவதை -- பராபரன்பராபரை
தொழில்---படைத்தல் , காத்தல் , அழித்தல்மறைத்தல்அருளல்ஆகிய ஐந்தொழில்கள் செய்யும் இடம் . வாசி யோகத்தில்இந்தத்தளத்தில் இருந்து அருள் ஆசி வழங்கினால் அது சித்திக்கும் .

https://sites.google.com/a/siddharyogam.com/siddharyogam/yoga/yogapalagu/vasiyogam/lesson-23/sagasraram.jpg

https://sites.google.com/a/siddharyogam.com/siddharyogam/yoga/yogapalagu/vasiyogam/lesson-23/Electroencephalography.jpg

https://sites.google.com/a/siddharyogam.com/siddharyogam/yoga/yogapalagu/vasiyogam/lesson-23/agathiyar23.jpg