பாடம் 22

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி ஆண் லைன் வாசி யோகா வகுப்பு.

மாணவர் தகுதி : இயமம், நியமம் , மனித நேயமும் அன்பும் கடை பிடித்தல் அவசியம்

விசுக்தி தலம் என்ற மகேஸ்வரன் தலம் பார்த்தோம் இப்பதிவில் சதாசிவத்தின் தலமாகிய ஆக்ஞா.தலமும் சக்கரமும் பார்ப்போம்.

ஊர்க்கமா மயேஸ்பரத்தின் பத்தியை விட்டு 
உயர்ந்தேறி பதினோரங் குலமேலேறே 

போகர் வயித்திய காவியம்௧௧௧௧ 1000 பாடல் 63

மேலேறி ரண்டு புருவமத்தியில் 
மிகையான அண்டம்போல் நிற்குமப்பா
வாலேறி வட்டமாம் வீடுபோலே
வளையமொன்று ரண்டிதழ்தான் ஷா ஷிரி வாகும் 
ஆளேறி அங்கென்ற அச்சரந்தான்டுவே
ஆகாச பூதமாம் பூத பீசம் 
மாலேறி மனோன்மணியும் சதாசிவனும் நிற்பார் 
மவத்தை தான் சாக்கிரத்தின் வீடுமாமே 

போகர் வயித்திய காவியம் 1o000 பாடல் 64

பூணவே வட்டமத்தின் நிறந்தான் சொல்வேன் 
புதுமை வெகுபுதுமையட ஆகாசந்தான் . 
அகத்தியர் வாத சௌமியம் . பாடல் 70 
விலங்ககின்ற தொழிலதுதான் காம குரோதம் 
வாடுமாம் லோபமொடு மோகமாகும் 
மதமான மாச்சரியத் தோடஞ்சாகும
நாடு தான் முகன் மாலுஞ் சிவன் மயேசன்
நலமாக காப்பார்கள் திகைத்து தானும் . 
தாடுசதா சிவன் றானுந் தளவாயாகும் 
தளவாயைக கண்டாக்கால் சகலமாமே 

போகர் வயித்திய காவியம் 1000 பாடல் 65

மூட்டியே தாயுனுட பதத்தை கண்டால் 
முஷ்கரமாய் மாயகைஎல்லாம் மொழிந்து போகும் 
நாட்டியே எட்டுடன் நாளும் கூட்டு 
நாதாந்த சித்தியெல்லாம் சனத்திலாகும்

மாட்டியே தமருக்குள் புகுதலாகும் .
மயிர் பாலம் நெருப்பாறு கடக்கலாகும் . 
நீட்டியே நிராதாரம் அறியலாகும் 
நிச்சயமாய் குறிகள் எல்லாம் அறியலாமே
 .
போகர் வயித்திய காவியம் 1000 பாடல் 6

நினைக்கவே ஐம்புலனும் மொடுனங்கிபோகும்
நோய் மூப்பு சாக்காடு நரை திரையும் போகும் 
கனைக்கவே காயசித்தி வாதசித்தியும் காணும் 
கண்ணிமைக்குள் போறஉயிர் கடுகி மீழும 
அணைக்கவே சாக்கிரத்தில் இருந்து கொண்டு 
ஆயியோடு அப்பனுந்தான் கூத்து பார்த்து 
தளைக்கவே சரியையோடு கிரியை யோகம் 
சார்ந்த தோர் ஞானமெல்லாம் தானானாரே
 
போகர் வயித்திய காவியம் 1000 பாடல் 69

போமப்பா சகலபிணி ரோகமெல்லாம் 
பூரனச்சந்திரனுட பிறப்பை கண்டால் 
காமப்பால் கானர்பால் கருணை தங்கும் 
கலையான வாசியது கடக்காதப்பா 
சொமப்பால் சொலிக்குமடா அந்தபாலை 
அந்தமுடன் நித்தியமும் கொண்டாயாகில் 
தாமப்பா தன்னிலையே தான் தானாகும் 
தானான ஆதார மூலம் பாரே 

போகர் வயித்திய காவியம் 1000 பாடல்
 70 


பொருள் :
அமைவிடம் .
மகேஸ்வரன் தலமாகிய விசுக்திக்கு மேல் பதினோரு அங்குலம் மேலேஉள்ள தலம் ஆக்ஞா என்ற சுழுமுனை . இது புருவ மதிக்கு உள்ளேம்அன்னாக்கிற்கு மேலேயும் இருக்கும் இடம்.

சக்கர அமைப்பு . :
இது வட்ட வடிவ சக்கரம் இதன் இருபக்கத்திலும் இரண்டு தாமரைஇதழ்கள் உள்ளன . இதன் நிறம் ஆகாய நீலம் .
பஞ்சவித்துகளில் விந்து தத்துவமாக siddharyogam.com உள்ளது . இதன்உயிர்சக்தி நான்கு கலை ஆகும் . இதில் நடைபெறும் சுவாசம் நாள்ஒன்றுக்கு 3 0 0 0 
பஞ்ச பூதங்களில் ஆகாய பூதமாக இருக்கிறது .
இதன் அதி தேவதைகள் சதாசிவம் மற்றும் மனோன்மணி ஆவார்கள் . சதாசிவன் ஆறு ஆதார தலங்களின் தளபதி ஆவார் . .
அவத்தை என்ற உணர்வு நிலையில் சாக்கிருத உணர்வு நிலை உடையது .
இதன் தொழில் அருளல்
இத்தளத்தில் நடைபெறுவது காமம்குரோதம்,  லோபம்,  மோகம், மாச்சரியம் ஆகிய ஐந்து செயல்களாகும்.
இதன் சுரப்பிகள் பிடிடறி மற்றும் பினியல் ஆகும் . 


மந்திரங்கள் 
ஆகாய பீசமந்திரம் :ஹம்
சிவமந்திர எழுத்து .:;  
இதழ் எழுத்துகள் : : ஷா ஷிரி


ஆதார தளங்களில் முடி மூலம் என்ற மேல் மூலம் இந்த தளமாகும் 
விசுக்தி தளத்தில் siddharyogam.comகும்பகம் செய்து வாசியை மேலேஏற்றினால் பத்தாம் வாசல் திறக்கும் . வாசி சுழிமுனை அடையும் . இங்குமனதை நிறுத்தி வாசியோகம் செய்து பூரணம் என்ற வாலை என்றமனோன்மணி தாயை காண வேண்டும் இதற்க்கு எட்டுடன் நான்குசேர்க்க வேண்டும் .
மூலாதாரத்தில் ,வாசி யோகத்தில் தார கலை நான்கு உருவாக்கி அதன்பிரயோகத்தில் உடலுள் எட்டு கலை உருவாக்கி இரண்டு சேர்ந்து 12 கலை  உருவாக்கும்இதனால் சுழி முனை நாடி உருவாகும் அதன் வழிகுண்டலி மேலே ஏறும்.
.
அதனால் வாலை ஒளி உருவாகும் . இந்த வாலை ஒளி மூலாதாரம் முதல்சுழிமுனைவரை நீண்ட ஒளிபிழம்பை உருவாக்கும் . இந்த ஒளி பிழம்புநெருப்பு ஆறு எனப்படும் . இந்த நெருப்பு ஆறு மயிர் பாலம் என்ற இரண்டுபுருவ மததியை கடந்து சகஸ்ராரம் செல்லும்.siddharyogam.com
அங்கு இருந்து அமிர்தத்தை உருவாக்க தூண்டும் . 


இதனால் சுழிமுனை என்ற ஆக்ஞா தளத்தில் அமிர்தம் சுரக்கும் . இந்தஅமிர்தம் கீழிறங்கி உல்நாக்குக்குள் இருக்கும் துவாரம் வழிதொண்டைக்குள் விழும்மரணம் என்ற சாக்காடு அழியும் .


இதனால் நோய்கள் நீங்கும் . மூப்பு நீங்கும் . நரைத்து வெழுத்த முடிகறுப்பாகும் . திரை என்ற கண் மறைப்பு திரை அகலும் . ( காட்ராகட் ) சுறுக்கம் மறையும் .. ஐந்து புலன்களும் அடங்கும் . சுழிமுனை திறந்துமனம் ஒடுங்கும் . இது .. வாசி மேலே ஏறுவதால் நிராதார தலம் என்னும்சகஸ்ரர தலம் தெரியும் ..
சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கும் கைகூடும் . காயசித்தி வேதைசித்தி , யோகசித்தி , ஞான சித்தி ஆகிஅனைத்து சித்திகழும் கைகூடும் ..