பாடம் 20

நல்வரவு. இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன்லைன் வாசி யோகா வகுப்பு .
மாணவர் தகுதி : இயமம், நியமம் , மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

சென்ற பதிவில் மணிபூரக தளமும் சக்கரமும் பார்த்தோம் . இந்தப்பதிவில் அனாகதம் தளமும் சக்கரமும் பார்ப்போம்.

அறிவுக்கு மேலேறி எட்டங்குலத்துக்
கப்பால் நாகதத்தின் வீட்டை கேளு
முறிவுக்கு முக்கோனமாகி நிற்கு 
முதிர்வளயம் பனிரண்டு இதழுமாகும்
பிறிவுக்கு காகா கா காங  சா 
பேரான   ஞாடா டாவாகுமே
இறிவுக்கு இதழில் நிறகு மட்சரந்தான் 
ஏற்றுமாச்ஞ் சுழுத்தியதுக் கிருப்புமாகும் .

போகர் வைத்திய காவியம்1000 பாடல் 49 

ஆமென்ற சிகாரத்தின் நெழுத்து நடுவாகும் 
ஆண்மையாம் பூதமதுதேயு தானாம் 
தேனென்ற செம்மைநிற சிவப்புமாகும் 
தேயுவுட பீசமது நவ்வுமாகும்
ஒம் மென்ற ஒளிகோடி பானுவாகும்
ருத்ரணும் ருத்ரியும் நடுவே நிற்பார்
கோமென்ற அவருடைய குணமே தென்றால்
கொடும் பொசிப்புசோம்பலோடு பயமும்தூங்கே
 

போகர் வைத்திய காவியம்1000 பாடல் 50 


தூங்கவே எழுப்பி மெல்ல பெண்ணை சேர்க்கும் 
சுகமஞ்சும் சிவன்கைக்குள் தொழில் தானப்பா .
தாமென்று தியானித்து வாசியை நீவைத்து
தம்பித்து ஓம் ஆம்    சிவாயநமா வென்று
 .


போகர் வைத்திய காவியம்1000 பாடல் 50


ஒருசாமவேதத்தின் உறுப்புமாகும்
போகர் வைத்திய காவியம்1000 பாடல் 51 


மாலை கடந்து மகத்தான ருத்திரன் 
காலையுறத் தாக்கிக் கலங்காதே நோக்கிட்டு
சாலச் சிகாரத்தை தனக்குள் ரேசிக்க 
மேலை சிவப்போடு யவே விரிவெட்டு சித்தியே
 
திருமூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 346 


பொருள் :
அறிவால் உள்நோக்கிப்  பார்த்தால் திருமாலின் தளமாகிய மணிபூரகத்திற்கு மேல் எட்டு விரற்கடை மேல் உள்ள தளம் அனாகதம்இதன் சக்கர தன்மை பார்ப்போம்நிறம் அடர் சிவப்பு . இதன்அமைப்பு  நடுவே முக்கோணம்அதைச்  சுற்றி வட்டம்வட்டத்தைச்  சுற்றி 12 தாமரை இதழ்கள்.


இந்தத்  தளத்தின் உணர்வுநிலை என்ற அவத்தை சுழுத்தி ஆகும் . தளத்தின் அதி தேவதைகள் ருத்ரனும் ருத்திரியும் ஆவார்கள்இவர்களின் தொழில் அழித்தல ஆகும்...www.siddharyogam.com


பஞ்ச வித்துவில் மகாரமாகும் . பஞ்ச பூதங்களில் அக்கினி இதன்பூதமாகும்இதன் ஆற்றல் தன்மை 24 கலைகளாகும் . இங்குஒருநாளில் 3000 சுவாசம் நடை பெறும் . இத்தளம் உடலில்ஜடாக்கினி என்ற அமிலத்தை சுரக்கச் செய்து கடும் பசியைஉண்டாக்கும் .பயம் , தூக்கம் ,சோம்பல் உருவாகும்தூங்கியபின்பெண்ணைச்  சேர உணர்வுகளை உருவாககும்ஐம்புலன்இயக்கமாகிய கண்டுகேட்டு , உண்டு , உயிர்த்து உற்று அறியும்தன்மை இத்தளத்தைச்  சார்ந்ததுநாளமில்லாச்  சுரப்பிகளில்தயமுஸ் என்ற நோய் எதிர்ப்புச்  சுரப்பி செயல் படும் . வேதங்களில் சாமவேதமாகும்www.siddharyogam.com
மந்திரங்களில் பீஜமந்திரம்   சி   என்பதின் நடுவண் “சி “ ஆகும்
பஞ்சபூத மந்திரம் “ரம்” .
பன்னிரண்டு இதழ்களின் அட்சரம் 
காகா கா காங  சாச  ஞாடா டா வாகும் . இதழ்களின் மந்திரம்சில சித்தர்கள் மாறுபட்டுச்  சொல்கிறார்கள்.
புரியட்டம் என்ற எட்டு சூக்கும தளங்களில் உடலில் உள்ள மூன்றுதளங்களில் முதல் தளமாகும்இத்தளத்தில் மனதை நிறுத்தி வாசியோகம் செய் . இங்கு நோய்களை அழிக்கவும் , கெட்டகுணங்களை எண்ணங்களை அழிக்க வேண்டுதல் சிறப்பு ..

https://sites.google.com/a/siddharyogam.com/siddharyogam/yoga/yogapalagu/vasiyogam/lesson-20/anahatam.jpg