பாடம் 16

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

சென்றபதிவில் ஆதார தளங்கள் தோன்றியதைப்  பார்த்தோம் இறைவன் யார் நான் யார் இறைவனுக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பு என்ன ஆகியவற்றைப் பார்ப்போம். அதில் ஆதாரங்களின் பங்கும் பார்ப்போம் 


ஒன்றவன் தானே இரண்டவன். இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குனர் தான்ஐந்து 
வென்றனன் ஆறு விரிந்த்தணன் ஏழும்பரச்
சென்றனன் தானிருந் தானுனர்ந் தெட்டே
------------திருமூலர் திருமந்திரம் பாடல் 1

 
இப்பிரபஞ்சம் உருவாகும் முன் எது அல்லது யார் இருந்தாரோ அவர் தான் கடவுள். இந்த நிலையில் இறைவன் ஒருவனே இருந்தான் ..
அவன் அருளால் அவன் தன்னைத் தான் பிறப்பித்து ஓம் என்ற பெரு வெடிப்பாக மாறினான். அதில் உயிர்ச்சக்தி துகள் பொருள்சக்தி துகள் என்ற இரண்டு தோன்றின. 
பொருள்சக்தி துகளில் எதிர்மறைச் சக்தி துகள் ( அகார ) நேர்மறை சக்தி துகள் ( உகார )என்ற இரண்டு உருவானது. இந்த அகாரமும் உகாரமும் சேர்ந்து உயிர் அற்ற பொருள் துகள் உருவானது . இது மகாரம் .
அ+உ = ம 
அதுவே அகார உகார மகார என்ற மூன்றாக பொருள்களாக நிலைத்தன . இவ்விதம் கோள்கள் மற்றும் உயிர் அற்ற பொருள்கள் தோன்றின இந்தநிலையில் அ உ மற்றும் . உயிர்ச்சக்தி துகள்களுடன் நான்காக உணரப்பட்டான் இறைவன். . 
உயிர்ச்சக்தியானது, நேர்மறை உயிர்ச்சக்திதுகள் (நாதம்), எதிர்மறை உயிர்ச்சக்தி துகள் (விந்து) என்று  இரண்டாகப் பிரிந்து நிலைத்தது. siddharyogam.com
ஆக இந்த ஐந்து அடிப்படைத் துகள்கள் அநாதம்விந்து என்பவை ஓம் என்பதன் விரிவு. இந்த அடிப்படை ஐந்து துகள்கள் பஞ்சவித்துக்கள் என்று அழைக்கப்பட்டன .
இந்த பஞ்ச வித்துக்களில் இருந்து நிலம்,நீர்,siddharyogam நெருப்புகாற்று,ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள் உருவாகின.சடப்பொருள்களில் இருந்து உடல் உருவானது . இந்த உடல் குறிப்பிட்டநிலையில் உயிர்ச்சக்தியை ஏற்றது. அதனால் உயிர் உருவானது. உயிர்கள் நான்கு வகை யோனிவழி எழுவகை பிறப்புக்களை உருவாக்கின. உயிர்களின் வளர்ச்சியில் பஞ்ச பூதங்கள் ஆறுஆதார தளம் கொண்ட முதுகுத் தண்டுவடம் உள்ள மனிதக் கருவை உருவாக்கியது. இந்தமனிதக் கரு தாயின் கருப்பையில் நஞ்சு மற்றும் பனிக்குடநீர் வழி பிரபஞ்சசக்தி 32 கலை மற்றும் உடல் சக்தி 64 கலை ஆகியவற்றைப் பெற்று 96 தத்துவம் உடைய குழந்தையாக நான் உருவாகிப் பிறந்தேன். பிறந்தபின் பிரபஞ்ச சக்தியை மூச்சுக் காற்று வழிப்பெற்று உடல் சக்தியை உணவு மூலம் பெற்று வாழ்கிறேன்.
ஆகையால் 
“ 
நான் என்பது 96 தத்துவங்களாக மாறிய இறைவனின் அம்சம்”.  என்னுள் இறைவன் ஒளி வடிவில் உள்ளான் . அதுவே பூரணம் . 
தன்னைத்தான் தான் அறிந்து பார்க்கும் போது 
தத்துவமாய் நின்றதொரு தொண்ணுற்றாறு. “ என்றார் அகத்தியர்

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும் 
செப்ப மதிளுடை கோவிலுள் வாழ்பவர் 
செப்ப மதிளுடை கோயில் சிதைந்தபின் 
ஒப்ப அனைவரும் ஒட்டெத் தார்களே . ------------திருமூலர் திருமந்திரம் பாடல் 154 ..


முப்பது சக்தித் தத்துவம் முதற்கூறும் மற்றும் முப்பது சக்தித் தத்துவம் இரண்டாம் கூறும்  சேர்ந்து அறுபது சக்தித்  தத்துவங்கள் (இதைப் புறக்கருவி என்கிறார் அகத்தியர்). முப்பத்தியாறு சிவத்தத்துவங்கள் (இதை உட்கருவி என்கிறார் அகத்தியர்). ஆக மனிதன் என்பவன் 96 தத்துவங்கள் கொண்ட இறைவனின் அம்சமாக உயிர் வாழ்கிறான். இதில் உடல் சிதைந்தால் 96 தத்துவங்களும் பிரிந்து சென்றுவிடும்.siddharyogam.com
இந்த 96 தத்துவங்களும் ஆறு ஆதாரத்தில் ஒடுக்கம். ஆறு ஆதாரங்களும் பஞ்ச பூதங்களில் ஒடுக்கம். பஞ்சபூதங்கள் பஞ்ச வித்துக்களில் ஒடுக்கம். பஞ்ச வித்துக்கள் ஒளி மற்றும் ஒளிவடிவான ஓங்காரத்தில் ஒடுக்கம்.அது இறைவனை அடையும் வழி. மற்றும் உடல் அழியாமல் காக்கும் வழி.
ஆறு ஆதாரங்களை வாசி கொண்டு இணைத்தால் ஒளி வடிவில் இறைவனை நம்முள் காணலாம் ..

ஆறு தளங்களில் இறைவன் இருக்கிறான். இதை அகத்தியர் அமுதக் கலைஞானம் பாடல் 604-இல் சொல்லுகிறார்.


அஞ்செழுத்து அஞ்சு முகமானால் 
சுருக்கான ஆறுமுகம் என்றுகேட்டால் 
வெல்லுவேன் புலத்தியனே சொல்கேளு
வேடன்ய்ஹா சுருதிமுடி ஆருதலமாகும் 
நல்லுறவாம் ரேசக பூரகமும் நின்று
நன்மையுடன் வீற்றிருக்கும் கும்பகமேயாகும்

 
அஞ்சு எழுத்து என்ற நமசிவய” என்ற சிவன் பஞ்ச பூதங்களாக ஆறுதளத்துள் இருக்கிறார். இந்த ஆறுதளங்களே முருகனின் ஆறுமுகம் சட அட்சரம் என்ற சரவணபவ 
இறைவனைக் காண வாசி யோகத்தில் ஆறுதளங்களிலும் ரேசக பூரக கும்பகம் செய்யவேண்டும்.

ஆறுதளங்களில் வாசிப் பிராணாயமம் செய்வதை அறியும்முன், 96 தத்துவங்களில் முக்கியமான ஆறுதளங்களைப் பற்றி விரிவாக அறியவேண்டும்.மற்றும் ஐந்து அவத்தைகள் என்ற உணர்வு நிலைகள், தசவாயுக்கள், நாடிகள் அறிய வேண்டும். சிலர் ஆறு தளங்களில் வாசியோகப் பிராணாயாமம் செய்யாமல் வெறும் மந்திரங்களால் ஆறுதளம் செபித்தால்,சித்தி என்று சொல்கிறார்கள். இதைச் சக்கர தியானம் என்று சொல்கிறார்கள் சிலர் மந்திரமும் சொல்லாமல், வாசியும் செய்யாமல் நேரே ஆறுதளங்கள் கடந்து தியானம் செய்கிறேன் என்கிறார்கள். இது பலன் தராது. பலரும் இவ்விதம் செய்து துன்பப்பட்டு வாசியோகம் துயரம் தரும் என்று தவறாகச் சொல்கிறார்கள். இவை வாசி யோகம் இல்லை.
 
நமசிவய . . சரவணபவ மற்றும் 51 அட்சர இதழ் மந்திரங்கள் அல்லது பஞ்சபூத பீஜ மந்திரங்கள் ஆறுதளங்களில் செபிக்கப் படுகின்றன. இவை ஆறுதள  வாசிப் பிராணாயாமத்திற்கு உதவி செய்யும். 

வாசி உருவாக்கி,அதை ஆறுதளங்களில் நிறுத்தி வாசியோகம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் அண்டம் என்ற பிரபஞ்ச சக்தியும்.பிண்டம் என்ற உடல் சக்தியும் இணைந்து சாகாக் கலை என்ற தாரகலை உருவாக்கி குண்டலினி  உருவாக்கிவாலை என்ற ஒளி உருவாக்கி. அமிர்தம் சுரக்கச் செய்யும். இந்த அமிர்தம் காயசித்தி கொடுக்கும். வாசி அஷ்டமா சித்தியுடன் 64 சித்திகள் தரும். 
ஆறு ஆதாரங்களும்அவத்தைகளும் மந்திரங்களும் வரும் பதிவுகளில் பார்ப்போம்.