பாடம் 15

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

ஆதாரதளங்கள் எப்படி உருவாகின 

சுவாசம் எப்படி ஏற்படுகிறது 

ஆதாரதளத்தில் நடைபெறும் சுவாசம் எத்தனை 

அதன் விரயம் எவ்வளவு என்று தெரிந்தால்,வாசி யோகம் செய்வது புரியும்.

மனிதர்கள் சுவாசம்,உதரவிதானம் சுருங்கி விரிவதாலும்மார்புக் கூடு கீழே இறங்கி மேலே ஏறுவதாலும்மார்பு மேலே உயர்ந்து,கீழே தாழ்வதாலும்,சுவாசம் ஏற்படுகிறது. இந்த இயக்கத்தின்பொழுது நுரையீரலில் அழுத்தம் வெளிக்காற்றின் அழுத்தத்தைவிட குறைந்தும்,அதிகரித்தும் இருப்பதால்காற்று உள்ளேயும்வெளியேயும் சென்று வருகிறது.மூச்சுக்காற்று அது இஷ்டம்போல் மனிதனை இயக்குகிறது. இந்தச் செயல்களை 28 காரணிகள் வழி GOYTEN MEDICAL PHISIOLOGY விவரிக்கிறது.அனால் இந்த இயக்கங்கள் எப்படி உருவாகின்றன என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை.

வாசியோகி உடல் அசையாமல் தான் விருப்பம்போல் மூச்சுக்காற்றை இயக்குகிறார்.                சித்திரன் போலே இருந்து வாசி பாரு” என்கிறார் காகபுசண்டர் பெருநூல் காவியம் பாடல் 73-இல். இது எப்படி சாத்தியம்இதைச் சித்தர்கள் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.

ஆதராங்கள்:

ஆணின் விந்துவும்,பெண்ணின் கருமுட்டையும் இணைந்து,எம்பிரியானிக் ஸ்டெம் செல்லை உருவாக்குகின்றன.இதைக் காகபுசண்டர் சிசுவின் குஞ்சு என்கிறார்.இதன்பின் தாயின் கருப்பையில் நஞ்சு உருவானது. அதன்மூலம் சிசுக்குஞ்சு வளர்ந்துsiddharyogam.com மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிபூரகம்,அனாகதம்,விசுக்திஆக்ஞா ஆகிய ஆறு தளங்களும்,வீணா தண்டு என்ற முதுகுத் தண்டும் உருவாகின.ஆறு ஆதாரதளங்களில் ஆறு சக்கரங்கள் உருவாகின.

இந்த ஆறு சக்கரங்களும் நஞ்சு மூலமும்,பனிக்குடநீர் மூலமும்பிரபஞ்ச சக்தியையும்,உடல் சக்தியையும் பெற்று,அனைத்து உறுப்புகளையும் உருவாக்கின.குழந்தை முழுவளர்ச்சி பெற்றது. தாயும் கருப்பையில் முழுவளர்ச்சி பெற்ற குழந்தையை, siddharyogam தாயின் வாயுக்கள் இயக்கம் வெளியே தள்ளியது. மேலும் குழந்தைக்குக் கொடுத்த பிரபஞ்ச சக்தியையும் உடல் சக்தியையும் நிறுத்தியது. தாயின் கருவில் இருந்த குழந்தையின் நுரையீரல் காலியாக,காற்று நிரப்பப்படாமல் இருந்தது. தலை வெளியே வந்தவுடன்,பிரபஞ்ச சக்தி குழந்தையின் நுரையீரலில் அழுத்த வேறுபாடு காரணமாக உள்ளே புகுந்தது.இந்த பிரபஞ்ச சக்தி ஆறு ஆதாரங்களால் கிரகிக்கப்பட்டு,உடல் சக்தி உருவானது.இதன்பின் சக்கரங்கள் சுவாசத்தை இயக்கத் தொடங்கின. குழந்தை வெளிக்காற்றைச் சுவாசித்து,உணவு உண்டு,ஆதார சக்கரங்களின் இயக்கத்தால்தாயின் உதவியோடு தானே வளர ஆரம்பித்தது.பின்பு வளர்ந்து,தானே செயல்படுகிறது.

இதை அகத்தியர் அந்தரங்க தீக்ஷை விதி பாடல் 20,21,28,மற்றும் 29 பாடல்களில் முன்பின்னாகச் சொல்லியுள்ளார்

தானென்ற சூச்சமட விந்து நாதம்
தனை அறிந்து நாதமுடன் விந்து சேர்ந்து
கோநென்ற குரு அருளால் அங்குதித்தும்
கொண்டெழுந்த மடபதியை என்ன சொல்வேன்
ஊண் என்ற மடபதிச்கு உறுதியான
உணமை யுளல அக்கினியும் வாய்வும் கூடி
தேனென்ற ஜீவாத்மா பரமாத்வாய்
சென்றிருந்து ஆதாரம் ஆனார் பாரே .

அகத்தியர் அந்தரங்க தீஷை விதி பாடல் 20,


ஆச்சப்பா ஆதி பராபரந்தான் மைந்தா
அனுகிரகத்தால் உதித்த கணபதி வல்லபை மைந்தா

அகத்தியர் அந்தரங்க தீஷை விதி பாடல் 29


கிருபையுள்ள கணபதி வல்லபை மைந்தா
ஆளப்பா பிரம்மாவும் சரஸ்வதியும் ஆனார்
அதன் பிறகு திருமாலும் லடசுமியும்மானார்
மேலப்பா ருத்திரனும் ருத்திரியும் ஆனார்
மேன்மையுடன் மயேஸ்வரனும் மயேச்வரியும் ஆனார் .
காரப்பா சதாசிவனும் மனோன்மணியும் ஆனார்
காரண மெல்லாம் முடிந்து சக்தி சிவமும் மாச்சே .

அகத்தியர் அந்தரங்க தீஷை விதி பாடல் 28


பாரப்பா ஆதாரம் ஆறாதாரம்
பதிவான ஆதாரம் பரத்துக்குள்ளே
நேரப்ப அக்கினிதான் ஜிவத்மாவை
நிறைந்து நின்றது அதுதான் பரமாத்வாவாய்
பேரப்ப பெருகி நின்ற சடத்துக்குள்ளே
பிலமாக நின்று திரு விளையாட்டாடி .

அகத்தியர் அந்தரங்க தீஷை விதி பாடல் 21


ஆகவே ஆறு ஆதாரங்களும் அதில் உள்ள சக்கர இயக்கமும் மூச்சுக்காற்றை இயக்குகின்றன. இச்சக்கரங்களில் வாயு எனும் பிரபஞ்ச சக்தி பரமாத்மாவாக உள்ளது. (32 கலை=32 நொடி உள்ளே இழுக்கும் காற்று ).

இந்த பிரபஞ்ச சக்தியால் உடலில் வெப்பம் உருவாக்கப்படுகிறது.இது அக்னி (கும்பகம் 64 நொடி=அக்னி கலை 64 ). இந்த அக்னி ஜீவாத்மாவாக இயங்குகிறது.எனவே உடல் இயக்கங்கள் அனைத்து மூச்சு இயக்கம் உட்பட ஆதாரதளங்களும் அதில் உள்ள சக்கரங்களும் இயக்குகின்றன. இதுவே அனைத்து இயக்கத்துக்கும் காரணம்.

ஆதாரதளங்களில் சுவாச மற்றும் விரயக்கணக்கு :மூலாதாரம் -------------------------சுவாசம் 36௦௦  விரயம் 12௦௦  

சுவாதிஷ்டானம் -----------------சுவாசம் 3௦௦௦  விரயம் 1௦௦௦

மணிபூரகம் -------------------------சுவாசம் 3௦௦௦  விரயம் 1௦௦௦

அனாகதம்  ------------------------சுவாசன் 3௦௦௦  விரயம் 1௦௦௦

விசுக்தி ------------------------------சுவாசம் 3௦௦௦   விரயம் 1௦௦௦ 

ஆக்ஞா ------------------------------சுவாசம் 3௦௦௦   விரயம் 1௦௦௦                                    பிரம்மரந்தரம்(சகஸ்ராரம்)சுவாசம் 3௦௦௦   விரயம் 1௦௦௦ 


கணக்கு அகத்தியர் சொன்னது:

கேளப்பா மூலமதில் சுவாசன் தானும் இரு அறு நூறப்பா  

வாளப்பா பிரிதிவியில் ஆயிரமாம் பாரு      

வகையான அப்புவினில் இப்படியே நிற்கும்

ஆலப்ப அக்கினியில் அப்படியே நிற்கும் 

அரகரா மயே ஸ்வரத்தில் சுவாசமாயிரம்

காலப்ப சிவனிடமே சுவசமாயிரமாம் 

கருணை வளர் நாதாந்தம் தன்னில் காணே 

அகத்தியர் வர்த சௌமியம் பாடல் 855  


காணவே நாதாந் தட்சிணாமூர்த்தி 

கனிவான சுவாசமாயிரமாய் நிற்கும்

பேணியே கூட்டியொரு துரையை கேளு  

பெருகிநின்ற மூவேழு மறு நூறாச்சி  

தோணவே மூவேழு அறுநூறுதன்னில்

சுழன்று ஏழாயிரமும் இருநூறு போச்சு  

ஊனு பதினாலாயிரத்து நானூறு வாசம் 

உள்ளுரவாய் நின்றதட உகந்து பாரு 

அகத்தியர் வர்த சௌமியம் பாடல் 856 

 

இவ்விதம் ஒருநாளில் 216௦௦௦ சுவாசம் நடைபெறும். பயனுள்ளது 14400விரயம் 7200.siddharyogam.com

இவ்விதம் விரயமாகும் சுவாசத்தில் உள்ள பிராண சக்தியை அல்லது உயிர்ச் சக்தியை விரயம் ஆக்காமல் இருக்க,வாசி உருவாக்கிஆதாரதளங்களில் வாசி யோகம் செய்யவேண்டும். அப்பொழுது அமிர்தம் சுரக்கும். இந்த அமிர்தம் உடல் நோயைப் போக்கி இளமை தந்து வாழ்விக்கும்.

உகந்து நின்ற சுவாசவெளி பாழ் போகாமல் 

உத்தமனே தான் நிறுத்த வகையைக் கேளு

ஆறு தளங்கள் பற்றி விரிவாக வரும் பதிவில் பார்ப்போம்