பாடம் 14

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

இதுவரை வாசிபிராணாயாமத்தின் நான்கு பகுதிகளைக் கொண்டு மூலாதாரத்தில்வாசியுருவாக்குவதைப் பார்த்தோம் . ஐந்தாம் நிலையான ஆதாரதளங்களில் வாசயுருவாக்குவதைப்படிப்பதற்கு முன் சில அடிப்படைகளை அறிந்து கொள்வோம்.

வாசி சக்தி சமநிலை :


கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே

 —திருமந்திரம் பாடல் 576  Energy balance

 
மனிதன் பிறக்கும் போது மூச்சு காற்று இரண்டு நாசித்  துவாரங்கள் வழி குடி புகுந்தது . அவைஇடகலை மற்றும் பிங்கலை என்ற சுவாசமாகும் . இரண்டிலும் சராசரி12 விரற்கடை (அவரவர்கைவிரலுக்குதூரம் உள்ள காற்று வரை உள்ளே இழுக்கும். அது போல் 12 விரற்கடை தூரம் வரைகாற்றை வெளிவிடும் . இவ்விதம் உள்ளே சென்ற காற்றில் உள்ள siddharyogam.comஉயிர்ச் சக்தி பிரபஞ்சசக்தி  8 விரற்கடை அளவு காற்றின் சக்திமட்டுமே கிரகிக்கப்படும். மீதம் வீணாகும் அளவு நான்குவிரற்கடை உயிர்ச் சக்தி .. இப்படி வீணாகும் நான்கு விரல்கடைச்  சக்தியை வாசியோகம் செய்துகிரகிக்க வைத்தால் உடல் அழியாது . அழியா உடல் பெற்று இறைநிலை அடைவார் . இது சித்தர்களின்சக்தி சமன் பாடு.  நீள அளவையில் விரற்கடை அளவில் ( single dimension= length ) சொல்லப்பட்டதுஅங்குலம் = விரற்கடை . 
இதை ஆற்றல் அளவான (energy unit ) கலை அளவில் திருமூலர் சொல்லி உள்ளார்நமது உடல்அழியாமல் இருக்க 96 கலை சக்தி வேண்டும். 32 கலை உயிர்ச் சக்தியை பிரபஞ்சத்தில் இருந்து பெறும். 64 கலை சக்தியை  அக்கினிகலை ) உடலுற்பத்தி செய்யும் . அதாவது ஒரு பிரபஞ்சகலை இரண்டுஉடல் கலை சக்தி உற்பத்தி செய்யும்ஆகமொத்தம் 96கலை சக்தி கிடைக்கும்siddharyogam.com உடல்அழியாது
ஆனால் பிறப்பில் இடகலை என்ற சந்திரகலை 16 கலை சக்தி கொண்டது . பிங்கலை என்ற சூரியகலை12 கலை சக்தி மட்டும் கொண்டதுபிரபஞ்ச சக்தியான 32 கலையில் உடல் 28 கலை மட்டும் கிரகிக்கும்இந்தநான்கு கலை வித்தியாசத்தால் பிரபஞ்ச சக்தியில் நான்கு கலை சக்தி கிரகிக்க முடியாமல்போகிறது . இதனால் உடல் 8 கலை சக்தி உருவாக்க முடிவதில்லை .. .சக்தி குறைபாட்டால் உடல் சிறிதுசிறிதாக கெட்டுப்  போகிறதுமரணம் நிகழ்கிறது
இதைத் தடுக்க வாசி யோகம் செய்து, 4 கலை சக்தி கொண்ட தாரைகலை உருவாக்கி (குண்டலினி ) குறைவுடன் பிறந்த மனிதன் 32 பிரபஞ்ச கலைகிரகிக்கும் குறை இல்லாத மனிதனாக மாறுகிறான்.இதனால் அழிவற்ற உடல் பெறுகிறான்.


எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட 
கட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை 
காட்டப்படும் மீரெட்ட மதிகலை
ஓட்டப் படாயிவை ஒன்றோடோன் றாகவே
 -----திருமந்திரம் பாடல் 855


எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும தீகதிர் 
சுட்டிட்ட சோமனின் தோன்றும் கலை என்ப 
காட்டப்படும் தார கைகதிர் நாளுல 
கட்டிட்ட தொண்நூற் றோடாறும கலாதியே
 -------திருமந்திரம் பாடல் 856