பாடம் 13

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

சென்ற பாடத்தில் வாசி உருவாக்கல் பார்த்தோம் . இரண்டு நாசிவழி சுவாசித்து மூலாதாரத்தில் வாசிஉருவாக்கல் பார்த்தோம் .. இனி வாசியைப் பயன்படுத்தி வாசி யோகம் செய்வதைக் கற்போம் இதற்குமுதலில் கலைமாறல் மற்றும் வஞ்சகம் செய்முறை பார்ப்போம்.

இதற்கும் முதலில் நாடிசுத்தி செய்யவேண்டும் . நாடிசுத்தி 
ஒரே நாசி வழி பூரகரேசக , கும்பகம் செய்தல் ..
வலது நாசிவழி அல்லது இடது நாசி வழி பூரகரேசக , கும்பகம் செய்தல்
வஞ்சகம் .

வலது நாசிவழி மூச்சுக் கரற்றை இழுத்து உள்ளே நிறுத்தி இடது நாசி வழியாக காலக்கணக்குடன்விடுவதுஇது சூரியகலை வாசி பிராணாயாமம்.. அது போன்று இடது நாசி வழி மூசசு கரற்றை இழுத்துஉள்ளே நிறுத்தி வலது நாசிவழி வெளிவிடல் . இது சந்திர கலை வாசி பிராணாயாமம்

கலைமாறல்  
வலது நாசிவழி அல்லது சூரியகலை வழி மூச்சுக் கரற்றை இழுத்து உள்ளே நிறுத்தி இடது நாசிவழியாக விடுவது . அதை தொடர்ந்து இடது நாசிவழி siddharyogam.comஅல்லது சந்திரகலை வழி மூச்சுக்காற்றை இழுத்து உள்ளே நிறுத்தி வலது நாசிவழி வெளிவிடல்
இவ்விதம் சூரியகலை வாசி பிராணாயாமத்தைத் தொடர்ந்து சந்திர கலைக்கு மாறுவது கலை மாறல் .
வாசி பிரணாயாமா செய்முறைச் சுருக்கம் 
இதுவரை செய்து பார்த்த வாசி பிராணா யாமத்தைத் தொகுத்து வரிசைப் படுத்துவோம் . 
இயமம் என்ற செய்ய கூடாததைத் தவிர்ப்போம் .
நியமம் என்ற செய்ய வேண்டியதைச் செய்வோம் 
உடல் சுத்தி செய்ய கரிசாலை , கத்தாழை , கடுக்காய்  கல்பம் செய்து வழலை வாங்குவோம் . மனஒருமைப்பாட்டிற்குத் திராடக , சூர்யயோகம் சந்திர யோகம் செய்வோம் .
3, 
காலை எழுந்தபின் நித்தியகடன் முடித்து சூரிய நமஸ்கார ஆசனமும் சூரிய யோகமும்செய்வோம் .
4. 
வாசிப்  பிராணா யாமம்

4.1  தடித்த பருத்தித் துணியை விரித்து அதன் மேல் அமர்ந்து வாசி பிராணாயாமம் செய்ய , சுகஆசனத்தில் அமர்வோம்.

4.2  ஓம் மந்திரம் உச்சரிப்போம்

4..3  இரண்டு நாசிகள் வழி , இடது நாசிவழி மற்றும் வலது நாசி வழி நாடி சுத்தி செய்வோம் .

4.4  இரண்டு நாசி வழி 2 : 4 : 1 என்றவிகிதத்தில் பூரகம் கும்பகம்ரேசகம் 
( 4 : 8: 2, 8:16 :4, 12 :24: 6.........32 : 64 : 16 
நொடிசெய்து வாசியைப்  பிராணாயாமம் செய்து உருவாக்கவேண்டும் இதுவே வாசி பிராணாயாமம்

4..5  வாசி உருவாக்கி வஞ்சகம் செய்வோம்

4.6. வாசிப் பிராணாயாமத்தில் கலை மாறல் செய்வோம்

இவை செய்து முடித்தால் வாசியோகத்தை மூலாதாரத்தில் செய்து குண்டலினி எழும்பும் நிலைஅடைவது . இது வாசி யோகா அடிப்படை நிலை siddharyogamவாசியுருவாக்கல் . இது வாசிப் பிராணாயாமம்இனி வாசி யோகா பிராணாயாமம் பற்றிப் படிப்போம்.

வாசி யோகப் பிராணா யாமம் 

பாரப்பா பிராணாயா மஞ்சுங் கேழு 
பதிவான ரேசக பூராக கும்பகம் 
நேரப்ப சவுபீசம் நிற்பீசம் தான் 
நிசமாக பிராணாயா மஞ்சும பாரு 
பேரப்ப பிராணாயா மஞ்சும பார்த்தால்
பெருகிநின்ற சிவயோகம் உறுதியாச்சு

                      ---அகத்தியர் பூரணகாவியம் பாடல்  47 
தங்கியதோர் சவபீசாம் மந்திரத்தில் லூடல்
விரைந்துமே நிற்பீசம் மந்த்திரத்தை விட்டு 
வெளியிலே பூரித்தல் மெதுவிலேதான்
 -----போகர் 1000 பாடல் 311 

பிராணாயாமம் என்பது ஐந்து உறுப்புகள் கொண்டது . அவை பூரக , ரேசககும்பக , சவபீசம , நிற்பீசமமாகும் . இந்த ஐந்து பிராணாயாமத்தையும் செய்து முடிக்க வேண்டும். அப்படிச் செய்து முடித்தால்அது சிவயோகம் செய்ய உறுதி கொடுக்கும் ..

சவபீசம் என்பது ஆறு ஆதார தளங்களிலும் மந்திர உச்சாடனம் செய்து பிராணயாமம் மூலாதாரத்தில்செய்தல் . நிற்பீசம் என்பது மந்திர உச்சாடனம் செய்வதுடன் ஆறு ஆதார நிலைகளிலும் வாசியைஉருவாக்கி பிராணாயாமம் செய்தல் . இவ்விதம் ஐந்து உறுப்பு பிராணாயாமம் செய்வது , வாசியோகம்இது வாசி யோகம் மட்டும் இல்லை இதுவே சிவயோகத்திற்கு உறுதியான அடிப்படையாகும்.siddharyogam.com 
சில குருமார்கள் சாதாரண பிராணயாமம் செய்யச் சொல்கிறார்கள் அதன் பின் ஆதார தளங்களில்மந்திர உச்சாடனம் மட்டும் செய்யச் சொல்கிறார்கள் . இது வாசி யோகம் ஆகாது . 
வாசி உருவாக்கிய பின் வாசியோகம் செய்வதற்கு முன்னால் உடல் உயிர்த் தத்துவங்கள் , ஆதாரதளங்கள் பற்றி அறியவேண்டும் . அவற்றை வரும் பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம.

நாசி துவாரங்களில் வாசி யோகம் பழகுதல்