பாடம் 12

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

சென்ற பதிவில் வாசி எப்படி உருவாகிறது. இறைவனை ஒளிவடிவாய் எப்படிப் பார்ப்பது என்பதைப் பார்த்தோம். இந்தப் பதிவில் வாசியை எப்படி உருவாக்குவது,? வாசி குருயார்என்பது பற்றிச் சித்தர்கள் சொன்னதைப் பார்ப்போம். குறிப்பாக அகத்தியர் மற்றும் திருமூலரின் காலக் கணக்கை பார்ப்போம்.

வாறான பிராணாயம் வாசிகேளு                                                                                                                வகையான பூரகமே முப்பத்திரண்டு                                                                                                           ஆரன கும்பகமே அறுபத்திநாலு                                                                                                                  அட்வான ரேசகமே பதினாறப்பா  

கூரான மாத்திரையின் வகைகள்ளெல்லாம்                                                                                               குறிப்பாக அறிந்து கொள்ளு மாத்திரைசொல்வேன்                                                                               தாரான தலைசுத்தி நொடிப்பதப்பா                                                                                                      சமுசயங்கள் ஒன்றுமில்லை மாத்திரையுமொன்றே 

அகத்தியர் அந்தரங்க தீட்சை விதி பாடல் 346

சரியான பிராணாயாமவாசி என்றால் எது என்று சொல்கிறேன் கேள். மெதுவாக மூச்சு  32 மாத்திரை உள்ளே இழுப்பது (வகையான )பூரகம்.

மூச்சுக்காற்று உள்ளே நிறுத்தி, அதில் உள்ள உயிர்ச் சக்தியைக் கிரகிக்கத் தேவையான நேரம் (ஆறுதல் ) 64 மாத்திரை கும்பகம் எனப்படும். வெளியேற்றப்படும் காற்றின் காலம் 16 மாத்திரை ரேசகம் ஒரு மாத்திரை என்பது உச்சித்தலையை கையால் சுற்றி, நெற்றிமுன் பெருவிரல் மற்றும் நடுவிரலால் நொடிக்கும் நேரம். ஏறக்குறைய ஒரு செகண்ட்.siddharyogam.com

பிராணாயாமம் செய்யும் பொது மனதிற்குள் இன்று இரண்டு என எண்ணுவது நடைமுறைக்குச் சரியாக இருக்கும்.

எனவே அற வாசியையும் அதை உருவாக்குவதையும் தெளிவாக சொல்லி உள்ளார். காலக்கணக்கு 

32 :64 :16 வாசியை உருவாக்கும்

 பல நண்பர்கள் திருமூலரின் பாடல் 567- லைச் சொல்லி பிராணாயாம காலக்கணக்கு 16 :64:32 என்று பொருள் சொல்லி உள்ளார்கள். சிலர் இப்பாடலை விளக்கச் சொல்லி உள்ளார்கள்.

சித்தர் பாடல்கள் பல மறைப்பாகமுன்பின்னாக சொல்லப்பட்டு இருக்கும். ஒரு சொல்லுக்கு பலபொருள் இருக்கும். அறிவுடையோர், நெறியாளர் அறிய இவ்விதம் சொல்லப்பட்டு உள்ளது.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில் 

ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே --------------------------திருமந்திரம் பாடல் 568

மேலோட்டமாக வாமம் என்பதன் பொருள் பார்க்காமல், அதிரேசகம் என்பதை கவனிக்காமல் பலரும் தவறாகப் பொருள் சொல்கிறார்கள். இவை இப்பாடலின் மறைப்பு. மேலும் முன்பின்னாக சொல்லப்பட்டு உள்ளது.

 ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்” இந்தவரியில் மறைப்பு இல்லை.

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே இந்த வரியிலும் மறைப்பு இல்லை.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்  

வாமம் என்பதன் பொருள் எதிரிடை .

ஏறுதல் பூரகம்

 ஈரெட்டு என்பது எதிரிடை

ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்” என்பதைப்  பிரிப்போம்  

ஊறுதல் முப்பத்து ரெண்டு ----அதிரேசகம் .

பொருள் :

ஏறுதல் பூரகம்

ஈரெட்டு வாமத்தால்= 1 6 எதிரிடைஎன்பது = ஊறுதல் முப்பத் திரண்டு .ஏறுதல் பூரகம் ஊறுதல் முப்பத் திரண்டு. இதன் பொருள் . ஊர்வது போன்று மெதுவாக மூச்சு இழுப்பது 32 மாத்திரகொண்ட பூரகம் அதிரேசகம் ஈரெட்டு = விரைவாக வெளிவிடும் மூச்சு 16 மாத்திரை கொண்ட ரேசகம் .

பாடலின் முழுப்பொருள்:

ஊர்வது போன்று மெதுவாக உள்ளே இழுக்கும் மூச்சு காற்று 32 மாத்திரை கொண்ட பூரகம். கழிவை அகற்ற(ஆறுதல் ) உள்ளே 64 மாத்திரை நிறுத்தப்படும் காற்று கும்பகம். விரைவாக வெளியேற்றப்படும் காற்று ரேசகம்( அதிரேசகம்) 16 நொடி கொண்டது. வலது நாசி வழி காற்றை உள்ளே இழுத்து இடது நாசி வழி வெளிவிடுவது வஞ்சகம். இடது நாசி வழி காற்றை உள்ளே இழுத்து, வலது நாசி வழி வெளி விடுவதும்  வஞ்சகம்.siddharyogam.com

செய்முறை:

அன்பு நண்பர்களே மேலே சொன்ன 32:64:16 வாசி பிராணாயாமத்தை உடனே முயற்சி செய்து பார்க்காதீர்கள். இதுபற்றிச் சித்தர்கள் சொல்வதைப் பார்ப்போம்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் 

காற்றை பிடிக்கும் காணக்கறி வாரில்லை 

காற்றை பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு 

கூற்றை உதைக்கும் குறி அதுவாமே .------திருமூலர் திருமந்திரம் பாடல் 571.

வாசி பிராணாயாமப்படி காற்றைக் காலக்கணக்குடன் பூரக,ரேசக கும்பகம் இரண்டு நாசி துவாரம் வழி செய்பவர் இல்லை. அப்படி ஒருவர் செய்தால் அவர் மரணத்தை எட்டி உதைத்துத் தள்ளுபவர். இதுதான் அவர்களை அறியும் வழி.

வாசியோக குரு யார் ?.

மூக்கில் கை வைக்காமல் வலது நாசியில் 32 வினாடி மூச்சை இழுத்து64 வினாடி உள்ளே நிறுத்தி இடது நாசியில் 16 வினாடி வெளியிடல் செய்பவரே யோகா குரு அல்லது வாசி குரு.

நீங்கள் செய்யவேண்டியதை அகத்தியர் சொல்கிறார்.

வாசிஎன்ற இடகலையில் பூரனம்தான் ரெண்டு

வரிசையுள்ள சுளினையுள்ளே கும்பகம்தான் நாலு 

தேசிஎன்ற பிங்கலையில் ரேசகம் தான் ஒன்று -------அகத்தியர் வாத சௌமியம் பாடல் 1.063

முந்தைய அத்தியாயச் செய்முறையில் நீங்கள் சிரமம் இல்லாமல் எவ்வளவு மூச்சை சிரமம் இல்லாமல் இழுத்து நிறுத்தி வெளிவிட முடியுமோ செய்து பார்க்கச் சொன்னேன். பலரும் செய்து வருகிறீர்கள்.     இனி அடுத்த படி:

நீங்கள் சிரமம் இல்லாமல் உள்ளே மூச்சை இழுக்கும் வரை ஒன்று இரண்டு என்று மனதுள் எண்ணுங்கள் இதுவே உங்கள் பூரக நேரம். சிரமம் இல்லாமல் மூச்சை உள்ளே நிறுத்தும் நேரத்தை ஒன்று இரண்டு என்று மனதுள் எண்ணுங்கள். இது உங்கள் கும்பக நேரம்.இதன் பின் நீங்கள் மூச்சை வெளிவிடும் நேரத்தை ஓன்று இரண்டு என்று மனதுள் கணக்கிட்டுக் குறியுங்கள். இது உங்கள் ரேசக நேரம். இது உங்கள்இயற்கை பிராண இயக்க உச்சம்.

அதன் பின் உங்கள் வாசி பிராணாயாமக் களத்தை வடிவமைப்போம் உங்கள் இயற்கை பிராணாயாமம் 9: 15:3 என்றால் அதை மாற்றி, 8 : 16 ;4 என்று நிர்ணயம் செய்து, இதன்படி முதலில் இரண்டு நாசி வழி செய்து பழகுங்கள். இதில் சிரமம் இல்லை என்றால் காலத்தைக் கூட்டுங்கள்.

உங்கள் அனுபவம் சொல்லுங்கள்.