பாடம் 10 சந்தேகம் விளக்கம்

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

அ+உ =ம அதாவது சூரியகலை + தாரை கலை = சந்திரகலை . . இது உயிர்சக்தி சமம் நிலை விளக்கவும் . 

நாம் நலமுடன் இயங்க பிரபஞ்சத்தில் இருந்து சக்தியை மூச்சு காற்று வழியாக பெறுகிறோம் . மற்றும் நம் உடலிலும் சக்தியை உற்பத்தி செய்கிறோம் . இந்த சக்தி தேவை மொத்தம் . 96 கலை அலகு... கலை என்பதது சித்தர்கள் சக்தியை அளவிட பயன் படும் அளகு . 

பிரபஞ்சத்தில் இருந்து பெறுவது 32 கலை Unitஅளவு சக்தி . இந்தசக்தியை பயன் படுத்தி உடல் 64 கலைகள் சக்தியை உற்பத்தி செய்கிறது .. அதாவது ஒரு பிரபஞ்சu கலை இரண்டு உடல் 
கலை உருவாக்கும் .

நமது இடது நாசி திறன் அல்லது சந்திர கலை அல்லது இடகலை.16 கலை சக்தி . வளது நாசி திறன் அல்லது பிங்ககலை 12. கலை சக்தி ஆக மொத்தம் 28 கலைகள் . பிரபஞ்ச சக்தியை பெற 4 கலை குறைபாடு உள்ளது மேலும் இதனால் உடலில் உற்பத்தி செய்யும் சக்தி 8கலை குறையும் ஆக மொத்தம் 12கலை சக்தி குறைபாடு எல்லோருக்கும் ஏற்படுகிறது 
இந்த சக்தி குறைபாடு செல்களின் இயக்கத்தை பாதித்து கழிவுகளை அகற்ற முடிவது இல்லை . புதிய செல்களை வேனடிய அளவு.. உற்பத்தி செய்ய முடிவது இல்லை 
இதனால் உடல் நலிவடைந்து மரணம் ஏற்படுகிறது .
இதை தவிர்க்கும் தொழில் நுட்பம் வாசியோகம் 
. . சநரகலை என்ற இடகலையும்யும் சூரியகலை என்ற பிங்கலைம் சமநிலை இல்லை . இரண்டின் வித்தியாசம் 4 கலைகள். இதனால் நோய் மூப்பு சாக்காடு என் ஏற்படுகிறது . வாசி யோகம் மூலம் தாரை கலை அல்லது தாராகலை உருவாகினால் அது 4 கலை கொண்டது ஆகும் . அதன் தன்மை சூரியனை போன்றது. எனவே சூரியகலை ! 2 உடன் தார கலை நான்கு சேர்ந்தால் 16கலை ஆகும் . இது சந்திரகலை16க்கு சமம் ஆகும் . இது தான் 

சூரியகலை(1 2 ) + தார கலை(4) = சந்திரகலை16
சூரியகலை= அ , தார கலை= உ , சந்திரகலை=ம 
அ=உ =ம 
12+4=16
இது சக்தி சமநிலை . இதனால் பிரபஞ்ச சக்தி 32 களையும் முழுமையாக பயன் படுத்தி உடல் 64 கலை சக்தி உற்பத்தி செய்யும் . உடல் அழியாது . 
இதுவே வாசியோகம் உடலையும் உயிரையும் வளர்க்கும் விதம் . இக்கருத்தை திமூலர் திரு மந்திரம் பாடல் 855மற்றும்856 ஆகியவற்றில் சொல்லி உள்ளார் . 

எட்டெட் டனலிண் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்கு சூல்கலை
கட்டப்பட்டுமீ ரெட் டா மதிகலை 
ஓட்டப்படா இவை ஒன்றோடொன் றாகவே 

பாடல் 855

எட்டெட்டும் ஈறாறும ஈரெட்டும் தீக்கதிர் 
சுட்டிட்ட சோமனில் தோன்றும் கலை என்ப 
கட்டப்படுந தார கைகலை கதிர்நாலுள
கட்டிட்ட தொன்னுரற்றோ டர்றுங் கலாதியே 

பாடல் 856

Sir, I read 10th lesson and tried tried chanting A + U + M, was able to feel vibration on head and throat, but was not able to feel on tip of spine.
உங்கள் பிறங்கை இடுப்பு முதுகு தண்டில் வையுங்கள் . நுனி நாவை நீட்டி மேல் அன்னத்தை தொடாமல் சிறிது வளைத்து கொள்ளுங்கள் . வாயை சிறிது திறந்து அ.......... என்று ஓசை தொடர்ந்து எழுப்புங்கள் . உங்கள் அ ஓசையென் அதிர்வு அலை உங்கள் பிறங் கையில் உணர்வீற்கை . . இதை பயிற்சி செய்து பார்க்கவும் .