பாடம் 10

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

பிராணாயாமம் = பிராண + அயனம் . பிராணன் என்ற உயிர் சக்தியின் .பயணம். .

பிராணாயாமம் = பிராண +நியமம் . சுவாசம் செய்யும் நெறி . . நெறிபடுத்தப்பட்ட சுவாசம் தான் பிராணாயாமம். இது பலவித யோகா முறைகளில் பலவிதமாகச் செய்யப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் ஹடயோக முறை பலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. ஹடயோக பிராணாயாமங்கள் பத்துவகைப்படும். அவைகள் சூரிய அனுலோம (பீடம்)சந்திர அனுலோமஉஜ்ஜயிசீதகாரி,சீததாலிபசஸ்திரிக்காகபாலபதிபிரமாரிமூர்ச்சபிளவினி
ஹட யோகத்தில் தவுத்தி நெட்டி,பஸ்தி ஆகிய கிரியைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்விதம் செய்யப்படும் ஹட யோகத்தால் ஞானம் பெற முடியாது. மேலும் பல் உடல் துன்பங்கள் ஏற்படும். எனவே இந்த ஹடயோக முறைகளைத் தள்ள வேண்டும் என்று அகத்தியர் வாத சௌமியம் பாடல் 927 இல் சொல்லி உள்ளார். 


பாரப்பா தன்மயத்தைஅறியாமல் தான் 
பக்க்தியுடன் அடயோகம் செய்வான் பாவி 
வீரப்ப மூச்சடக்கி செவி வாய மூடி 
வேகமுடன் பூரிக்கில் மேனிதன்னில் 
சாரப்ப மூலமதில் சொருகிக்கொண்டு
தலைவலிதது காதடைத்து முகமும் கோணி 
நேரப்பா கண் தெறித்து மதிகலங்கும் 
நேர்மை கேட்ட ஹட யோகம் தள்ளு தள்ளே----------------------------------பாடல் 927


அன்டா இதனாலே ஒன்றும் இல்லை 
ஆதி என்ற மௌனாதி யோகம் பாரே
 ------------------------------------------------பாடல் 928


சாதித்து வரும்போது மைந்தா மைந்தா 
தருகின்ற பீடை எல்லாம் தானேபோகும் 
பேதித்த தேகமது பிலமாய் நிற்கும் 
பிலமான வாசி சிவயோகம் தங்கும் .------------------------------------------------பாடல் 822 


பொருள் :
ஹட யோகத்தின் தன்மையை அறியாமல் அப்பாவிகள் பக்தியுடன்,. ஹட யோகம செய்கிறார்கள். அதன் தன்மை சொல்கிறேன். வேகமாக மூச்சை உள்ளே இழுத்து செய்யும் ஹடயோக பிராணாயாமத்தால் ( !6; 64;32 மற்றும் மேலே சொன்ன பிராணாயாம முறைகள் ) தலைவலிகாதடைப்பு,முகம் கோணி,கண் பிதுங்கி மனம் கலங்கும். (இவை அனைத்தும இரத்த அழுத்த நோய் குறி .. . இவ்விதம் இரத்த அழுத்த நோய் அடைந்தவரை நான் பார்த்து உள்ளேன் .) எனவே நேர்மை இல்லாத ஹடயோக முறை siddharyogam.com வேண்டாம் எனத் தள்ளிவிடு. இதனால் ஒருபயனும் இல்லை. எனவே மௌனயோகத்தின் அடிப்படையான வாசி யோகம் செய். வாசி யோகம் செய்து வரும்போது நம்மை பிடித்த வறுமைதுயரம்,தோல்வி,பயம்துக்கம்துன்பம் ஆகிய பீடைகள் தானே விலகிப்போகும். நோயுற்ற உடல் ஆரோக்கியமாக மாறி பலம் பெறும். இந்த வாசி யோகா பலத்தால் சிவயோகம் சித்தியாகும்.


ஹட யோகம் பற்றி ராம கிருஷ்ண பரமஹம்சர் கருத்தைப் பார்ப்போம். ஒரு ஹடயோகி ராம கிருஷ்ணரிடம் நான் கங்கை நதி நீர்மீது நடந்து நதியைக் கடந்தேன் “ என்றார். ராமகிருஷ்ணர் “ நான்கணா(25 பைசா ) சம்பாதித்தாய் “ என்றார் . நான்கணா கொடுத்தால் படகோட்டி கங்கையை கடந்து விட்டு விடுவார். ஹடயோக முறைகள் வித்தை காட்ட பயன் படும் ஞானம் அடையப் பயன்படாது என்றார்.
வாசி யோகப்  பிராணாயாமம்:
யாமம் : வெளியே உள்ளவாயுக்கள் காற்று. சுவாசிக்கபடும் காற்று பிராணன். நெறிப் படுத்திய சுவாசம் பிராணாயாமம். காலக்கணக்கோடு நெறிப்படுத்திய சுவாசம் வாசி. முறைப்படி ஆதார தளங்களில் மூச்சை நிறுத்தி வாசி உருவாக்குவது வாசியோகப் பிராணாயாமம்.

வாசி யோகப் பிராணாயாமம்  ஐந்து நிலைகள் கொண்டது. அவைகள் 
1. பூரகம் = மூச்சுக் காற்றை உள்ளே இழுப்பது .
2.கும்பகம் = மூச்சுக் காற்றை உள்ளே நிறுத்தல் 
3.ரேசகம் = மூச்சுக் காற்றை வெளிவிடல் 
4. உட்பவிவித்தல் அல்லது கேவல கும்பகம் 
5.ஆதார தளங்களில் நிறுத்தி வாசி உருவாக்கல் .
இவற்றை விரிவாகப் பார்ப்போம் . திருமூலரின் கொள்கைகள் பார்ப்போம் 


உடம்பார் அழியில் உயிரார் அழிவர் 
திடம்பட மெய் ஞானம் சேரவும் மாட்டார் . 
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் 
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே 
-----------------------------------திருமந்திரம் பாடல் 724


புறப்பட்டு புக்குத் திரிகின்ற வாயுவை 
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில் 
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும் 
புறப்பட்டு போகாண புரிசடயோனே
 ------------------------------------------------திருமந்திரம் பாடல் 575


பொருள்: 
உடல் அழிந்தால் உயிர்பிரிந்து விடும் உயிரையும் உடலையும் இணைத்து வைக்கும் சக்தியானது புரிசடையோன் என்ற சிவன் என்ற உயிர் உடல் இணைப்பு சக்தி. உயிர் என்பது ஒருவகை சக்தி. உடல் சிதைவு அடைந்தால், உயிர்ச்சக்தி உடலை விட்டுப் பிரியும் . Dr. J. cRIAGCriag venter அவரது குழுவினருடன் ஒரு பாக்டிரியாவின் செயற்கை உடலை DNA  மற்றும்  RNA  மூலம் செய்து, அதில் உயிர் உள்ள பாக்டிரியாவை இணைத்தார். உயிர் உள்ள பாக்டிரியாவின் உயிர், செயற்கை உடலுக்கு வந்துவிட்டது.ஆனால் உயிர் உள்ள பாக்டிரியா இறந்தது. எனவே உயிர்ச்சக்தி உடலில் இருந்து பிரிந்து வேறு உடலுக்குச் சென்றது . எனவே உடல் சிதைவு ஏற்பட்டால் உயிர் பிரியும். . 
உடம்பை வளர்த்தல் என்பது உடலை கொழு கொழுவென வளர்ப்பது இல்லை 
40 வயதைத் தாண்டினால் உடல் செல்கள்உற்பத்தி ஆவதைவிட சிதையும் செல்கள் அதிகரிக்கும். இது வளர்சிதை மாற்றம். வயது ஆக ஆக சிதைவு அதிகரித்து உடல் அழியும். செல்கள் சிதையாமல் மற்றும் செல் உற்பத்தி அதிகமானால் உடல் இளமையாகும். மரணம் ஏற்படாது. இதுவே உடலை வளர்த்தல். 
இவ்விதம் உடலை வளர்க்கும் உபாயம் என்ற தொழில் நுட்பம் அறிந்தேன்.அதனால் உடம்பை வளர்த்து எனது உயிர்ச்சக்தியும் வளர்த்து,  இறவா நிலை பெற்றேன் .
உடம்பை வளர்க்கும் உபாயம் எது .
. . .
சுவாசக் காற்று அதன் விருப்பம் போல் இயங்கி உடலை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தி சிதைவை அதிகரிக்கிறது. அதனால் உடல் அழிகிறது. இதைத் தடுக்க இந்த சுவாசக் காற்றை நெறிப்படுத்தி உடலுள் இருக்கும் மாசுக்களை அகற்றி தூய்மைப் படுத்தவேண்டும். அவ்விதம் செய்தால் உடல் உறுப்புகள் சிவந்து இளமை ஆகும். நரைத்த முடியும் கருக்கும். உயிர் உடலைவிட்டு நீங்காது. 
பிராணாயாமத்தில் அடிப்படை மந்திரம் ஓம். இதை வாசி யோகத்தில் எப்படி உச்சரிப்பது என்பதைச் சொல்கிறேன். 
ஓம் = அ+உ+ம 
இடது நாசி சுவாசம் 16 கலை ஆற்றல்.=ம ( நேர்மறை )
வலது நாசி சுவாசம் 12 கலை ஆற்றல் = அ ( எதிர்மறை) 
வாசி உருவாக்கு தாரைகலை அல்லது அக்னிகலை 4 கலை ஆற்றல் =உ (எதிர் மறை)
அ+உ =ம அதாவது சூரியகலை + தாரை கலை = சந்திரகலை . . இது உயிர்சக்தி சமம் நிலை . இதுதான் . 
எனவே ஓம் உச்சரிக்க காலநிர்ணயம் 
அ = 12/ 2 =6 நொடி 
உ =4 /2=2 நொடி 
ம 16/2= 8 நொடி 
உங்கள் இடது கையை முதுகுத் தண்டு அடியில் வையுங்கள் அ........நொடி தொடர்ந்து சொல்லிப் பாருங்கள். உங்கள் கைகளில் முதுகுதண்டு அடியில் அதிர்வு தெரியும்.  உ என்பது நொடி சொல்லுங்கள். தொண்டையில் உணர்வீர்கள். ம ...... நொடி சொல்லுங்கள்.தலையுள் அதிர்வை உணர்வீர்கள். siddharyogam.com
இப்படி  அ...உ...ம ........= ஓம் என்று உச்சரித்துப் பாருங்கள். இந்த அதிர்வு அலை மூலாதார தளத்தில் இருந்து சுழிமுனை தளம் வரை பரவி ஆறு சக்கரங்களையும் ஊக்கப்படுத்தி, சக்தி சமநிலை உருவாக்கும். . உயிர்ச்சக்தி பெருகும்.
இதுவே வாசி யோகத்திற்கு அடிப்படை மந்திரம் . மூலாதாரத்தின் பீஜ மந்திரம்.இதைச் சொல்லிப் பழக வேண்டுகிறேன். 
கவலை,பதட்டம்மன அழுத்தம்கோபம் ஆகிய நிலையில் மற்றும் செயல் வெற்றிபெற,செயல் செய்வதற்கு முன் 27 முறை சொல்லுங்கள். இதன் மகிமை உணர்வீர்கள்.