பகுதி 14 (உயர்நிலை வாசி யோகம்)

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

கோடியில் ஒருவர் ஞாநி ஆவர்!!. அது நீங்களா? அகத்தியர் செய்த வாசியோகம் அறியவேண்டுமா? சித்த்ருடன் பேச வேண்டுமா ? தொடர்ந்து இந்த பதிவை படிங்க !!உள்வங்குங்க!!! கேள்வி கேளுங்க

மாயனாம்பூரந்தான் மயங்குவாண்
ராமசீதாலட்;சுமியுமாலும் பாரு
ஆயனாம்பச்சைமா கமலமேனி
மாயனோடுஅரனைப்போற் காந்தியாகும்
தூயமாம்புரியவட்டம் வாசிதேசி
யுயிர்க்குசுகமாந்தி ஆலம்பொசிப்பாய்
ஞாயமாம் ஓம்-வம்-மம்-உமாவென்று
நாட்டமாம்பிராணாய வரிசையாமே 23

வாசித்துங்கெணசித்தும் வாலேசெய்தார்
பரிசையாய்நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
பத்திமுத்தியாய்மனதில் செபிக்கவேணும்
உரிசையாயியுணர்வுபற்று வதற்குமெலே
ருத்திரனார்முக்கோணவட்டமேலே
சுரிதையாய்ப்பனிரெண்டு யிதழேநிற்கும்
சத்துருத்திரிருத்திரனார் தன்னைக்கானே 24

தன்னைத்தான்காணவே அம்-உம்-ஊம்-ஆம்மென்று
சார்வாகவாசியொடு ரேசியாதே
உன்னைத்தானறிவிக்குஞ் சங்காரகர்த்தன்
வுருக்காட்டுமஞ்சுரிநாமம் பசுமைநீலம்
ஆன்னந்தான் அனாகதமாஞ் சுழித்தவீடு
வறிவானநினைவுக்குள் லிங்கம்பீடம்
பின்னைத்தானிதுவன்றி வேறேயுண்டோ
புரிதுசொல்லக்கூடாது சின்மயமாமென்றே 25

சின்மயத்தின்செயலறிவார் சித்தர்முத்தர்
தேசிகருமநவமுனிக ரிசிகளாகும்
டீபான்மயத்தின்செயலறிவார் வாதிசமுசாரி
விழிராசர்வசியமுதல் யோகிசித்தர்
மின்மயத்தின்விசுத்தியறு கோணம்நிறங்கறுப்ப
மேல்வட்டமீரெட்டு யிதழேயாகும்
துன்மயத்தின்ரோபவமா மகேசுவரனும்
மகேசுவரியானவம்பிகையின் ரூபங்களே 26

பொருள் பாடல்23
மனி பூரகத்தின் அதி தேவதைகள் ::: மாயன் , திருமால் , ராமன் ,ஆயன் , பச்சைமால் , என்றும் அழைக்கப்படும் விஷ்ணுவும் லக்ஷ்மி யும் ஆவார்கள். விஷ்ணு என்பவர் அரண் என்ற சிவன் போன்று ஒளி வீசுபவரும் தாமரை போண்று அழகானவரும் ஆவார் .
ஆலம் என்ற நஞ்சு என்ற முப்பு உண் ஓம் வம் மம் உம என்று மந்திரம் சொல் .அதன் பின் வாசி என்ற குதிரை மீது ஏறி வாசி பிராணாயாம் செய் . இது வாசி யோகம் செய்யும் வரிசை கிரமம் ஆகும் , மம் என்பது ந ம சி வா யா என்பதில் “ம” என்பது . இது நீரின் கூறு . இந்த யோகம் சிவயோகம் . .
பொருள் பாடல் 24
உள்ளுனர்வுடன் , பக்தியாக , முக்க்திபெறவேண்டும் என்று மனதை ஒருமை படுத்தி வாசி யோகத்தை செய் .
இவ்விதம் வாசி யோகம் செய்து கனமான சித்திகள் என்ற அஷ்டமா சித்திகளை சித்தர்கள் பெற்றார்கள். நினைத்த எல்லாம் நிறைவேறும். காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும் (சித்தி.யாகும் ) .

விஷ்ணுவின் தளத்திற்கு மேல் இருப்பது ருத்ரணார் தலம் என்ற அனாகதம் . இதன் சக்கர வடிவம்:: முக்கோணத்தை சுற்றிய வட்டம் . . வட்டத்தில் பன்னிரண்டு தாமரை இதழ்கள் சுற்றி உண்டு . இங்கு ருத்திரியும் ருத்திரனும் அதி தேவதைகள் . இத தலத்தில் வாசியோகம் செய்து ருத்ரியையும் ருத்ரனையும் தரிசனம் செய் .
பொருள் பாடல் 25
சங்காரம் என்னும் அழித்தல் செய்யும் கர்த்தாவாகிய ருத்திரனை காணவும் உன்னை நீ அறியவும் அம உம ஊம் ஆம் என்று மந்திரம் செபி . வாசியோகம் செய்.. இது லிங்க பீடம் . அறிவுமய மாக இருக்கும் அனாகதம் என்ற இறைவனின் இடம் . இறைவனுக்கு இதைவிட வேறு சிறந்த இடம் இல்லை. . இதன் நிறம் பசுமை கலந்த நீலம்.
பொருள் பாடல் 26
சின்மயம் என்ற அறிவு மயமான இறைவனின் செயல்களை சித்தர்களும் முக்த்தர்களும் அறிவார்கள் . தேசி என்ற ஒளி உடம்பு பெற்றவர்கள், வாதிகள் என்ற வேதை செய்பவர்கள் அறவழியில் இல் வழக்கை நடத்துபவர்களும் அறிவுமய மாண இறைவனை அறிவார்கள். பார்வையால் பிறரை தன்வசப்படுத்துபவர்கள் யோகிகளும் சித்தர்களும் அறிவுமயமான இறைவனை அறிவார்கள் .
அநாகத்த்திற்கு மேலே உள்ள ஆதாரம் விசுக்த்தி ஆகும் . ஒளிமயமான இறைவன் இருக்குமிடம் கருப்பு . இந்த சக்கரம் அறுகோணம் என்ற ஆறு முனை நச்சத்திரம். அதை சுற்றிய வட்டம். வடத்தை சுற்றிய பதினாறு தாமரை இதழ்கள் . இச்சக்கர நிறம் கருப்பு . மகேஸ்வரன் மற்றும் அம்பிகை மகேஸ்வரி ஆகியவர்கள் இத தலத்தின் அதி தேவதை கள்.

இறை அருள் பெறுக !!! தான் அவன் ஆகுக !!!
Comments