பகுதி 13 (உயர்நிலை வாசி யோகம்)

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

அகத்திய மகரிஷி அருளிய ஞானம் 30 கருத்து உரையுடன் !!! பகுதி 13 (உயர்நிலை வாசி யோகம்)
கோடியில் ஒருவர் ஞாநி ஆவர்!!. அது நீங்களா? அகத்தியர் செய்த வாசியோகம் அறியவேண்டுமா? சித்த்ருடன் பேச வேண்டுமா ? தொடர்ந்து இந்த பதிவை படிங்க !!உள்வங்குங்க!!! கேள்வி கேளுங்க
சென்றபதிவில் மூலாதாரத்தில் வாசியோகம் செய்து ஆதார தம்பம் உருவாகுவதை பார்த்தோம் . இந்தபதிவ்ல் அதன் மேல் உள்ள பழ வெளி பற்றியும் அதநோலயும் சொல்கிறார் . மீண்டும் மூலாதாரம் பரியும் அதன் மேல் உள்ள தளங்களையும் சொல்கிறார் 

நாட்டப்பாபாழ்வெளியில் பசும்பொன்பச்சை
நாடியிடைபின்கலையுஞ் சுழியேசுத்து
வோட்டாப்நந்திகம்பத் தொளியைப்பாரு
ஓங்காரமுங்கொண்ட சிங்-வங் கென்று
ஈட்டப்பா-யம்-மம்-மென்றெண்ணி
யியங்குகின்றமூலத்தின் படியைநாட்டி
ஆட்டப்பாவைங்கோண மேலேவட்டம்
அதன்மேலேநாலிதழி னெழுத்தைமூட்டே
2
0

மூட்டியேவாசிவைத்து பிராணாயாமஞ்செய்ய
மூலகணபதியும் வல்லபையுஞ்சித்தி
சூட்டியேஅத்தயடி மூலங்கண்டாற்
சொல்வதென்னசகலசித்து மதின்மேற்பாரு
பூட்டியேபிருதிவப்பா சவாதிட்டானம்
பொன்னிறமாம்நாற்கோண மிதழாருக்கும்
தாச்டிகமாய்வரசித்து ஓம்-நம் மென்று
சாதகமாய்பிராணாயந் தாக்கநன்றே
21

நன்றானநான்முகனுஞ் சரஸ்வதிங்காணும்
நாடோறுஞ்சந்துச்டி நினைக்கலாகும்
நன்றானும்நடமெத்த வாலைபூசை
அந்திசந்திஉச்சியிலு மடைவாகச்செய்து
ஒன்றானபிரமநிறம் பொன்னதாகும்
ஓகொகோகுலையத்தோர் காணார்மான்பர்
மன்றானமணிபூரகம் பிறைபோல்நிற்கும்
விட்டத்தின்பத்திபத்திழ்தான் மாயனாமே 


பொருள் பாடல் 20 
மூலாதாரத்தில் இருந்து மேலே ஆறு ஆதார தளங்கள் ஏற இடகலை , பிங்கலை ஆகியவற்றை மாறிமாறி சுத்தி சுத்தி ஏறவேண்டும். ஆறாவது தல மாண சுழி முனையில் இருந்து பார்த்தல் நந்தி ஒளி என்ற அக்கினி கம்பம் தோன்றும் தோன்றும் ,. அதன் மேல் நிறாதார தளமான விந்து என்ற சகஸ்ரார தளத்தில் இருந்து பழக் வெளியை பார் . இதற்க்கு ஓம் என்ற மந்திரம் சொல் . வங் சிங் யம மம் என்று வாசி யோகத்தில் மந்திரம் சொல் .. அப்பொழுது பசும்பொன் நிறம் கலந்த பச்சை நிறம் தோன்றும் . 
மூலாதாரத்தில் பஞ்சபூதங்கள் ஒடுக்கமாக உள்ளது .இங்கு வல்லபை கணபதி குண்டலி ஆகியவை முக்கோணா சக்கரமாக உள்ளது அதை நான்கு பக்கம் கொண்ட சதுரம் சுற்றி யுள்ளது . நான்கு பக்கமும் நான்கு தாமரை இதழ் உள்ளது இதன் பீஜ மந்திர மாண ஓம் உச்சரி 
பொருள் பாடல் 21
இவ்விதம் மனதை மூலாதாரத்தில் நிறுத்தி வாசி பிராணயாமம் செய். மூலாதார தேவதைகளான வல்லபையும கணபதியும் அருள் தருவார்கள் . மூலாதாரம் சித்தி ஆகும். இவ்விதம் மூலாதாரம் சித்தி செய்தால் அனைத்து சித்திகளும் கிடைக்கும் . 
மூலாதாரத்திற்கு மேல் இருப்பது சுவாதிஷ்டானம் . இதன் தேவதைகள் சரஸ்வதியும் பிரம்மாவும் ஆவார்கள் . இத்தலம் பொன்னிறமாக உள்ளது இதன் சக்கரம் சதுரமானது. ஆறு தாமரை இதழ் கொண்டது . பஞ்ச பூதங்களில் பிருதிவி என்ற மண் ஆகும் . இங்கு ஓம் நம் என்று மந்திரம் உச்சரித்து வாசி பிராணாயாம் செய்வது சிறந்தது . ஓம் ந மா சி வா யா என்ற மந்திரத்தின் பிருதிவி பீஜம ந பிஞ்சி எழுத்து ம இரண்டும் நம் 
பாடல் 22 பொருள் .
இவ்விதம் வாசி பிராணாயாமம் செய்தால் சரஸ்வதியும் பிரம்மாவும தோன்றி வரம் அருள்வார்கள் .பிரம்மா வின் நிறம் பொன் நிறம் . ஆறு ஆதார தளங்களில் நின்று வாசிபிரானாயாமம் செய்வதன் பெயர் வாழை பூஜை . சித்தர்கள் செய்யும் பூஜை . இப்பூஜையை காலை மதியம் இரவு என மூன்று நேரங்களும் முறைப்படி செய் .. இதனால் பேரின்பம் நிலைக்கும் .இதை உலகமக்கள் அறிய மாட்டார்கள் .
இதன் மேல் இருக்கும் தளம் மனி பூரகம் . இதன் சக்ரம் வட்டமானது அதனுள் பிறை சந்திரன் உள்ளது .
இது பத்து இதழ் கொண்டது . இது மாயன் என்ற விஷ்ணு மற்றும் லக்ஷ்மியின் தலமாகும்.

இறை அருள் பெறுக !!! தான் அவன் ஆகுக !!!
Comments