vasiyogam Overview 9

கடவுள் -மனிதன் - முக்தி (பகுதி 4)

மரணத்தையும், மரணத்தைக் கடப்பதையும், சென்ற பதிவில் பார்த்தோம் . மரணித்தபின் நடப்பது பற்றியும் , மரணத்திற்கும் முக்திக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் பார்ப்போம். .

1. மரணம் மற்றும் முக்தி பற்றிய கொள்கைகள்

1.1. நாத்தீகர் கோட்பாடு:
கடவுள் என்று ஒன்று இல்லை . இயற்கை சக்தி மனிதனை உருவாக்கியது . மரணம் என்பது உடலை விட்டு உயிர் பிரிவது . மரணம் மனிதன் அடையும் கடைசி நிலை . ஆன்மா மற்றும் முக்தி என்று இல்லை.

1.2. வேதாந்திகளின் கொள்கை / கர்மா கொள்கை
இறைவனால், ரிசிகள், முனிவர்கள் மூலம் சொல்லப்பட்டவை இந்திய வேதங்கள். ஆதியில் பலவிதமாக ஒரே தொகுப்பாக இருந்தது. வேதங்கள் இறைவனால் சொல்லப்பட்டு, ஆதிகிரந்தம் என்ற மொழியில் எழுதப்பட்டது.இது உருவாகிய காலம் அறிய முடியாது. அக்காலத்தில் அரசர்கள், மனு என்று பதவி பெற்றனர். அறத்தையும் நீதியையும் ஆன்மீகத்தையும் சொல்லும் அதிகாரம் வேத வியாசர் என்ற பதவியைச் சார்ந்தது .

இவ்விதம் 28 ஆவது வேத வியாசராக பதவி ஏற்றவர் க்ரிஷ்ணதுவைபாயனர் . இன்று வேதவியாசர் என்று அறியப்படுபவர் . இவர்தான் வேதங்களை ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்று நான்காகப் பிரித்தவர்.புராணங்களை 18 ஆக தொகுத்தவர் . மகாபாரதம் எழுதி, அதில் கீதை சொன்னவர்.. நான்கு வேதங்களிலும் மந்திரம்(துதி) , ஆரன்யகம் ( வித்யை), உபனிசத் (இறைஞானம்) ஆகிய பகுதிகள் உண்டு. இவை சமஸ்கிருதமொழியில் எழுதப்பட்டவைகள். நம்பிக்கையின் அடிப்படையில் அனுபவ வாயிலாகச் சொல்லபட்ட ஆன்மீகக் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்கள் வேதாந்திகள்.

வித்யையும் வாசி யோகமும்

வேதங்களில் காயத்ரி வித்யை, சித்தவித்யை , புருஷவித்யை, பஞ்ச அக்னி வித்யை ஆகியவை உட்பட சுமார் 35 வித்யைகள் உள்ளன . பெரும்பாலானவைகள் மனிதன் முக்தி அடையும் வழிகளைச் சொல்கின்றன.
வித்யைகள் இறந்தபின் அடையும் நிலைகளையும் முக்தி பற்றியும் பேசுகின்றன. வாசி யோகம் இறப்பில்லா முக்தி பற்றிச் சொல்கிறது. வித்யைகள் தமிழ்ச் சித்தர்களின் வாசியோகப் பாதை இல்லை . சிலர்வித்யைகளையும் வாசி யோகத்தையும் குழப்பி, தானும் கெட்டு பிறரையும் குழப்புகிறார்கள்.. இவர்கள் வித்யையின் பலனையும் வாசியோகப் பலனையும் இழக்கிறார்கள்..

மரணத்துக்குப்பின் மனிதனின் நிலைகள் குறித்து பல கருத்துகள் வேதங்களில் மற்றும் பிரம்மசூத்திரத்தில் சொல்லப்பட்டு உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
 
மரணித்தபின் உடலைவிட்டு உயிர் (ஆன்மா) பிரிந்து ,அதனால் உடல் அழிதல் என்பது மரணத்தில் ஒரு நிகழ்வு. உடல்மட்டும் அழியும் ..அதன் பின் ஜீவ ஆத்மா தனது முந்தைய பதிவுகளுடன் வேற்று உலகம் செல்லும்..மரணித்தபின் உடல் அற்ற மனிதன், தன் நல்வினை, தீவினைப் பயனுக்கு ஏற்ப, வழிபடும் முறைக்கும், சாதனைக்கும் ஏற்ப, பயணிக்க மூன்று பாதைகள் உண்டு. வழிபடும் முறைகளைப் பார்ப்போம்

பக்தி மார்க்கத்தில் இறைவழிபாடு மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. . அதன் தன்மைக்கு ஏற்ப முக்தி நிலை மாறுபடுகிறது .

1.1. பிரதமை அல்லது உருவ அல்லது சகுனபிரம்ம வழிபாடு
இறைவனுக்கு சிவன், கணபதி, முருகன், விஷ்ணு, சக்தி , மாதா, யேசு யென்று உருவம் கொடுத்து வணங்குவது.
1.2. பிரதீக அல்லது குறியீடு வழிபாடு
லிங்கம், சூலம்,சாலிகிராமம், எந்திரங்கள் , சிலுவை , காபா , பிறை ஆகியவற்றை வணங்குதல்.
1.3. உருவம் நாமம் இல்லாத நிற்குண பிரம்மத்தை வணங்குதல்.

நிற்குண வழிபாடு செய்து, முழுமைபெற்ற ஞானிகள் பரம்பொருளாகிய இறைவனை நேரடியாகச் சேருகிறார்கள்

பிரதமை அல்லது உருவ அல்லது சகுனபிரம்ம வழிபாடு,பிரதீக அல்லது குறியீடு வழிபாடு செய்பவர்களின் மரணத்திற்குப் பின், ஆன்மா செல்லும் மூன்று பாதைகள்

1. ஒளிப் பாதை/சுக்கில கதி/தேவயனம்/ அர்ச்சிராதி மார்க்கம்

பிரதமை, பிரதீக வழிபாடு செய்து, ஆன்மீக சாதனை செய்து, இறை அனுபூதி பெற்ற மஹான்கள் மற்றும் அறவழி வாழ்ந்தவர்கள் , இறந்தபின் அவர்களின் நாடி உச்சந்தலையைப் பிளந்து ஓளிப் பாதையை அடையும் .அங்கு ஆதிவஹிக தேவதைகள் அவர்களை அழைத்துக் கொண்டு, ஒளிப் பாதை வழியாக ,13 இடங்களைக் கடந்து இறைவன் வாழும் பிரம்ம லோகம் அடைவார்கள் .
அவர்கள் செல்லும் பாதைகள்
ஒளி(அர்ச்சி ).__பகல்(அஹ)__சுக்லபட்சம்__ உத்ராயணம்__ வருடம்(ஸம்வத்சரம்)...தேவலோகம்__வாயுலோகம்__சூரியன்__சந்திரன்__
மின்னல்__(வித்யுத்)__வருணன்__ இந்திர லோகம்__பிரஜாபதிலோகம்__ பிரம்ம லோகம் ஆகியவை . ஒளிப் பாதையில் செல்பவர் அடையும் இடம் பற்றி பிரம்ம ஸூத்திரம் சொல்கிறது.
கார்யம் பாதரி: அஸ்யகதி:உபபத்தே….. பிரம்ம சூத்திரம் 4:3.7

இறை அனுபூதி பெற்ற மஹான்கள் இப்பாதைகளைக் கடந்து அவர்கள் வணங்கிய இறைவனின் உலகை (கைலாயம் , வைகுண்டம், ஸ்ரீபுரம், பரமண்டலம் , சுவனம்) அடைவார்கள். இந்த முக்தி, பக்தி யோகம்செய்பவர்களுக்குப் பொருந்தும் . இதன்படி சிவபக்தன் கைலாயம் செல்வார். வைணவர் வைகுண்டம் செல்வார். கிறிஸ்தவர்கள் பரமண்டலம் செல்வார்கள். இஸ்லாமியர் சுவனம் செல்வார்கள்.
ஒளிப் பாதையில் செல்பவர் மீண்டும் பிறப்பதில்லை . இவர்கள் செய்த தவத்திற்கு ஏற்ப, மஹா லோகம் ..ஜனலோகம்... தபலோகம்..., சத்ய லோகம் ஆகிய இடங்களுக்குச் செல்வார்கள். அங்கு அவர்கள் தவம் சித்தி பெற்று,பிரம்ம லோகம் அடைவார்கள்.
பிரம்ம லோகம் (இஷ்ட தேவதை சன்னித்யம்)அடைந்தவர் முக்தி பெறுகிறார்.. இதை “ முக்த்:ப்ரதிஜ்க்ஞானாத்” என்கிறது பிரம்ம சூத்திரம் 4::4.2. இது சாலோகம் என்ற பெயர் பெறும் . அவர்களின் தவ வலிமைக்கு ஏற்பஇறைவனின் அருகே இருப்பார்கள் . இது சாமீப முக்தியாகும் .பக்தர்கள் அடையும் முக்தி இவைகள்.

நிற்குண வழிபாடு செய்து, முழுமைபெற்ற ஞானிகள் உடம்பை விட்டபிறகு பரம்பொருளாகிய இறைவனை நேரடியாகச் சேருகிறார்கள் . “இஷ்ட தேவதையின் எல்லா குணங்களையும் பெற்று அனுபவிக்கிறார்கள். எனதுநிலை அடைந்தவர் படைப்பின் போது பிறப்பதில்லை. பிரளய காலத்தில் அழிவதில்லை”.(கீதை 14:2 )
இதை சாரூபம் முக்தி என்பார்கள். அத்வைதிகள் இதை சாயுச்யம் என்பார்கள்.


2. புகைப் பாதை /கிருஷ்ணகதி /பித்ருயானம் மற்றும் மறு பிறவி

மரணத்திற்குப் பின் புகைப் பாதை வழிசெல்லும் சாதாரண சராசரி மனிதர்கள்
மனிதன் செய்த, பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மோட்சம் அல்லது நரகம் செல்வார்கள். புகைப் பாதை மூன்று உலகங்கள் வழி செல்லும். . அவைகள்
பிதுர்லோகம், சொர்க்கலோகம், நரக லோகம்/எமலோகம் . மரணித்தவர் முதலில் செல்வது பிதுர் லோகம். மரணித்தவர்களின் வாரிசுகள் பிதுர்கர்மம் செய்தால், அந்த ஆன்மா சொர்க்கம் செல்லும் . இதற்கு அமாவாசைதர்ப்பனம் செய்வார்கள் . புனித தீர்த்தங்களில் திதி கொடுப்பார்கள்
சில ஆன்மாகள் சிலகாலம் நரகத்தில் இருந்த பின் மோட்சம் செல்வார்கள். அங்கு அவர்களின் பாவ புண்ணியம் கழிந்தபின் மீண்டும் உடல் எடுத்து பிறப்பார்கள் . மறு பிறவியில் அவர் அவர் பாவ புண்ணியங்களுக்குஏற்ப புழு முதல் ஞானிவரை பிறப்பார்கள் .. இவ்விதம் பல பிறவி எடுத்து ஞானம் பெற்று ஒளிப்பாதை வழியாக பரமாத்மாவிடம் செல்வார்கள் .
அகால மரணம் அடைந்தோர், பேய் பிசாசாக தனது ஆயுள் முடியும் மட்டும் அல்லது தனது எண்ணங்கள் நிறைவு பெறும் காலம் வரை இருப்பார்கள். அதன்பின் சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள் . . புகைப்பாதையில் செல்பவர்கள் மீண்டும் பிறப்பார்கள். பல பிறவிகள் எடுத்து நற்செயல் செய்து ஞானம் பெற்று ஒளிப் பாதையில் சென்று முத்தி பெறுவார்கள்

3. அதோ கதி/ இருள் பாதை/ கீழ்பாதை:

பாவிகள், கொடுமைக்காரர்கள் , தீயவர்கள் செல்லும் பாதை இருள் பாதை. இவர்கள் நேரே நரகம்/ எமலோகம் செல்வார்கள். நரகலோகத்தில் ஏழு நரகங்கள் உண்டு .அவைகள் ரௌரம்.மஹாரௌரம் வஹ்னி,வைதரனிகும்பீபாகம்,தாமசம், தீர்க தாமசம் ஆகியவைகள் சிறிய சித்ரவதையில் இருந்து கடுமை அதிகரிக்கும் இடங்கள் இவைகள். பாவத்தின் தன்மைக்கு ஏற்ப பாவிகள் தண்டிக்கப்படுவார்கள். இதற்கு எமன் தலைவன். ஒருவரின்பாவ புண்ணிய கணக்கு பதியப்பட்டு உள்ளது. . இதற்கு சித்திரகுப்தர் தலைவர் . ஒருவர் எந்த நரகம் செல்வது, எவ்வளவு காலம் தண்டனை என்பதை பாவத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்வார். பாவிகளைக் கொண்டு செல்லஎமதூதர்கள் வருவார்கள். அதோகதியில் செல்பவர்கள் மீண்டும் பிறப்பார்கள். பல பிறவிகள் எடுத்து நற் செயல் செய்து ஞானம் பெற்று ஒளி பாதை யில் சென்று முத்தி பெறுவார்கள்.

இவை இந்து வேதாந்திகள் கருத்து. இது கர்மா கொள்கை..


கிறிஸ்தவக் கொள்கை .

1.3. மரணம் என்பது பெரும் தூக்கம் .மறுபிறவி இல்லை. சுவர்க்கம், நரகம் உண்டு.
கடவுள் வேறு மனிதன் வேறு .கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தான். மனிதனின் மரணம் என்பது பெரும் நித்திரை போன்றது .. உலகம் அழியும் பொழுது அனைவரும் மீண்டும் உயிர்த்தெழுவார்கள் . அதன்பின்அவர் அவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, சொர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்வார்கள் . எனவே இறந்தபின் உடலைப் பேழையில் வைத்துப் புதைப்பார்கள். இறைவனுக்கு எதிராக சாத்தான் என்ற சக்தி உண்டு .அகால மரணமடைந்தோர் சாத்தானின் பிடியில் சிக்கி சுவர்க்கம் நரகம் செல்லாமல் பேய் பிசாசாக இருப்பார்கள். அதன்பின் பெரும் நித்திரைக்குச் செல்வார்கள். தங்கள் மதத்தில் சொன்ன கடவுளைமட்டும் வணங்கிபுண்ணியம் செய்து ( பரலோகம்/சுவனம்/சொர்க்கம்) செல்வது மனிதனின் பிறவி குறிக்கோள் ... பாவிகள் நரகம் செல்வார்கள். பாவம் செய்தவர்கள் சொர்க்கம் செல்ல உயிர் உள்ள போது பாவ மன்னிப்பு பெற வெண்டும். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே சொர்க்கம் செல்வார்கள் என்கிறது கிறிஸ்தவமதம். இந்த மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சிலர், சொர்க்க, நரகக் கோட்பாட்டை நம்புவதில்லை .அத்தகையோரை மறைந்துவாழும் நாத்திகர்கள் என்று சொல்லுவதுண்டு . நாம் அனைவரும் அன்னை என்று அன்புடன் அழைக்கும் செயின்ட் தெரேசா இத்தகைய கிரிப்டிக் அத்தீஸ்டாக அவர் சார்ந்த மதத்தினரால் மேலை நாட்டில் கருதப்பட்டார்..கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே சொர்கம் செல்வார்கள் என்கிறது கிறிஸ்தவ மதம்.

இஸ்லாமியர் கொள்கை இது போன்றதே. இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே சொர்க்கம் செல்வார்கள் என்கிறது இஸ்லாம் மதம். இவர்கள் முத்தி சாலோகம் போன்றது.. இவைகள் ஏறக்குறைய கர்மாகொள்கையில் ஒரு பகுதியாக உள்ளது . சித்தர்களின் முக்தி கொள்கை பற்றி வீட்டில் வாசியோகம் விளக்கம் ---10 பதிவில் பார்ப்போம் ..