Vasiyogam overview 2

பல அன்பர்கள் பல குருமார்களிடம் பலவித யோகமுறைகளை படித்துள்ளார்கள் . அந்தமுறைகளை பின்பற்றி வாசி யோகம் செய்யலாமா என்று என்னிடம் கேட்கிறார்கள் .மேலும் . அவற்றையும் வீடில்வாசியோக பாடங்களையும் குழப்பி கொள்கிறார்கள்
இவர்களுக்கு நான் மீண்டும் சொல்வது ஒன்றுதான்
வீட்டில் வாசி யோகம பாடங்கள் அனைத்தும் . சித்தர்கள் அகத்தியரும் , திரு மூலரும் , போகரும் , காக புசுண்டரும் பிற சித்தர்களும் செய்தவை . அவர்கள் சிவனிடமும் முருகனிடமும் கற்றவை
இதை நான் செய்து பார்த்தேன் . அதை உங்களுக்கு சொல்லி உள்ளேன் . பல அன்பர்கள் இதை செய்து பார்த்து வெற்றி பெற்று உள்ளார்கள் 
எனவே பாடங்களில் சொன்னதை செய்து பாருங்கள் அதில் உங்களின் சந்தேகம் கேளுங்கள்.பதில் சொல்கிறேன் . சில அன்பர்கள் 24 பாடங்களை படித்து அவை அனைத்தையும் உடனே செய்து பார்க்க முயற்சி செய்கிறார்கள் . இது தவறு . மேலும் அப்படி செய்யவும் முடியாது .

வாசி யோகம் என்பது வாழ்நாள் முழுவதும் பயன்தரும் பெரும் பொக்கிஷம் . எனவே படிப்படியாக பாடங்களில் சொன்னபடி செய்யுங்கள். பயன்பெறுங்கள் 
வாசி உருவாக்கி வெற்றி பெற்றவர்களின் செய்திகளை பார்ப்போம் . . 
அன்பர் சிவராம் பாண்டிசேரியை சேர்ந்த பொறியாளர். வாசி யோகம் ஆரம்பிக்கும் போது செய்யமுடியாது என்று சொன்னவர் . கடுமையான சொற்களால் விளக்கங்கள் சொல்லபட்டன . படிப்படியாக செய்து இன்று 3 2 ; 6 4 ;1 6 கால அளவிள வாசி உருவாக்கி உள்ளார் வாசி உருவாவதில் வெப்பமும் காற்று அழுத்தமும் உணர்ந்து உள்ளார் ... மேலும் ஒளியும் பார்த்துள்ளார். இவை பாடங்களில் சொன்னவை . இதை முன்பு சிங்கபூரில் வசிக்கும் அச்சுத் பாபு என்ற அன்பர் சொன்னதை இவர் உறுதி செய்கிறார் .
அவருக்கு வாழ்த்துக்கள். மேலும் பல படித்தரங்களில் வாசியோக வெற்றி பெற இறை அருள் புரிக . !!! . 
அவர் எனக்கு அனுப்பிய செய்தி


Shiva Ram
im failed in words

1.when i inhale breath deep breath goes to bottom of spine,

2.when do kumbam pressure poin occur in center of head !

3.when i realse air sense pressure poin in tip of nose

4. light in before eye

5.im doing 2times 32-64-16

is it im going crrt way sir ?
நல்லது . சரியாசெல்கிறது .

i can increase heat of backbone
முதுகி பகுதி
when increase the round of practise ?

wat is reason behind this

due this im nt wearing baniayn nowdays

all going wet

Veppamum kaarum thaan vaasi yoga adippadai .


long way to learn more and more.
வாசியோக பாடத்தில் சொன்ன திராடக பயிற்சியை அறியாமலே செய்து தன்னுள் தீபஒளிகண்டு வியந்துள்ளார் அன்பர் பிரசாத் தியாகராஜன் . அவரின் அனுபவம் திராடகாவில் சொல்லியது .
Prasath Thiyagarajan
அய்யா ஒரு அற்புதமான நிகழ்ச்சி ஒன்று இன்று என்னுள் நடந்தது அய்யா , அதை பற்றி தங்களிடம் கேட்க விரும்புகிறேன். அய்யா நான் அடிப்படை வாசியோகம் இன்னும் பயில ஆரம்பிக்கவில்லை அனால் தங்களது அணைத்து பதிவினையும் சேகரித்து அதன் படி நடக்கவேண்டும் என்று உறுதி கொண்டுள்ளேன்.

இன்று மாலை வழக்கம் போல் சாமி கும்பிட்டேன் அப்பொழுது எங்களது சாமி விளக்கினை பார்த்தவாரே எனது கண் இமைகளை மூடி வழக்கம் போல் பிராத்தனை செய்ய தொடங்கினேன்

திடீர் என மூடிய எனது கண் உள்ளே ஒரு தீப ஒளி தோன்றியது அது சுமார் ஒரு நிமிடம் வரை தெரிந்தது விளக்கின் தீப ஒளி போல் ஆடியது

என்னால் அது என்ன வென்று புரிந்து கொள்ள இயலவில்லை

தாங்கள் தங்களின் அனுபவத்தில் அது என்னவென்று எனக்கு வில்லாக முடியுமா அய்யா?

*
எனக்கு விளக்க முடியுமா அய்யா?
November 14th, 10:53pm
அது திராடக என்ற பயிற்சியில் கிடைக்கும் ஒளி. திராடக பயிற்சி படித்து பாருங்கள்


...............................................................................................................................................................
சிறிலங்காவை சேர்ந்தவர் சுமநேததிரன் தவா. சுற்றுப்புற சுழல் வல்லுநர் . சமீபத்தில் நடந்த சிறிலங்கா நிலசரிவுபற்றி ஆய்வு கட்டுரை வெளியிட்டவர்
தியானத்தில், அவரின் குருவின் உத்தரவுபடி அகத்தியர் ஞானம் 3 0 என்ற நூலுக்கு பொருள் தேடியுள்ளார் .. மூன்று ஆண்டுகளில் எட்டு பாடலுக்குமட்டும் பொருள் அறிந்து உள்ளார். மீதம் உள்ள பாடல்களுக்கு பொருள் தேடியுள்ளார் .

தமிழ்நாட்டை சேர்ந்த நான் சித்தர் அறிவியல் குழு கோப்பு பகுதியில் அகத்தியர் ஞானம் 3 0 நூலின் பாடல்களை பார்த்தேன் . அகத்தியர் அதில் எனக்கு கீழ்க்கண்ட கட்டளைகள் கொடுத்ததை பார்த்தேன் .
1.
கையாற மனமாற ஞானம் சொல்லு . சித்தர்களிடம் நான் கற்ற ஞானத்தை மற்றும் செய்து பார்த்த உண்மைகளை மறைக்காமல் மனமாறசொல் .
2.
மனமகிழ்ந்து ஆணவம் கொள்ள கூடாது
.
இதன்படி . அகத்தியர் ஞானம் 3 0 பாடல்களுக்கு பொருள் எழுதி சித்தர் அறிவியல் குழுவில் வெளியிட்டேன் .. வீட்டில் வாசியோகம் என்னும் ஞானத்தை கட்டணம் இல்லாத பாடமாக வெளியிட்டு வருகிறேன் .., இவற்றையும் சித்தர்களின் பிற செய்திகளையும் siddharyogamசேமிக்க siddharyogamsiddharyogam சித்தர்யோகம்.காம் siddharyogam.comஎன்ற வலை தலம் ஆரம்பித்தும் நிர்வகித்தும் , அன்பர் அச்சுயுத் பாபு சித்தர் பனி செய்கிறார் .. இந்த வலைதளத்தில் நூலக பகுதியில் அகத்தியர் ஞானம் 3 0 நூலுக்கு பாடலுடன் பொருளும் பதிவு ஏற்றம் செய்யப்பட்டது

சித்தர்களின் வழிகாட்டல்படி , சுமநேததிரன் தவா, சித்தர்யோகம்.காம் வலைதளத்தில் அகத்தியர் ஞானம் 3 0 நூலுக்கு பொருள் கண்டு வியந்துள்ளார் . அதன்படி வீட்டில் வாசியோகம் பாடங்களை படித்து பயிற்சி செய்து வருகிறார்
அவரும் 3 2 : 6 4 :1 6 கால கணக்கில் வாசி உருவாக்கி உள்ளார்
அவருக்கு வாழ்த்துக்கள் . மேலும் வாசி யோகத்தில் பல வெற்றிக்கான இறை அருள் புரிக !!! 
அவரின் உரையாடல் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது .
Sumanethiran Thava 
ஐயா எனக்கு மிக வியப்பான ஒருவிடயம் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ வித்யா தீட்சையின் பின்னர் தியானத்தில் எனது குருவிடமிருந்து அகத்தியர் ஞானம் முப்பது என்ற நூல் வைத்தியரான எனது தாத்தாவிடம் இருந்த பழைய பிரதியில் உள்ளது என்றும், அவற்றை தியானித்து பொருள் அறியும் படியும் வந்துது, அதன்படி கடந்த மூன்று வருடங்களுக்குள் எட்டு பாடல்களுக்கு மேல் படிக்க முடியவில்லை

தாங்கள் அதற்கு உரை எழுதி உங்கள் தளத்தில் இணைத்துள்ளீர்கள்

சித்தர்கள் எப்படியெல்லாம் வழிகாட்டுகிறார்கள் என்று எண்ணும் போது சந்தோஷமாக இருக்கிறது,

தங்கள் வழிகாட்டலில் இவற்றை மேலும் குருநாதர் அருளில் ஆழமாக கற்க விரும்புகிறேன், தங்கள் ஆசிகளை வேண்டுகிறேன்.!
November 17th, 6:3
தற்போது 32: 64: 16 வாசி பிராணாயாமம் எட்டியுள்ளேன்
தொடர்ந்தும் வழலை வாங்கல் கட்டாயம் செய்ய வேண்டுமா?
40
நாள்கள் செய்வது நல்லது

இடையில் மூன்று நாட்கள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது, உடலுக்கு பாதிப்பாக எதுவும் தெரியவில்லை

அதனால் கடுக்காய் எடுக்காமல் விட்டு விட்டேன் .
வாயிற்று போக்கு நல்லது .

ஆம், வலி எதுவும் இல்லை, தாராளமாக வயிறு கழுவிக்கொண்டு சென்றது.
இதை பாடத்தில் சொல்லி உள்ளேன்
.

முடிவுகள் 
சித்தர்கள் 5 0 0 0 ஆண்டுகளுக்கு முன்பு செய்தவை இன்றும் செய்ய முடிகிறது என்பது நிரூபிக்க படுகிறது 
வெப்பமும் காற்றினால் வாசியும் குண்டலியும் உருவாகிறது என்பதும் நிருபிக்கபடுகிறது
சித்தர்கள் வழிகாட்டல் செய்கிறார்கள் என்பதும் நிருபிக்கபடுகிறது

வரும் பதிவில் கோயம் புத்தூரை சேர்ந்த கட்டிடகலை நிபுணர் , பொறியாளார் தர்மலிங்கம் அவர்கள் வீட்டில் வாசியோக பாடங்களில் சொல்லிய வற்றை அறிவியல் கருவிகள் கொண்டு ஆராயந்து பார்த்த முடிவுகளை பார்ப்போம்
சித்தர் அறிவியல் குழு முடக்கப்பட்டு உள்ளது எனவே எனது நண்பர்கள் எனதுபதிவுகளை எனது முகநூல் பக்கத்தில் பார்க்க வேண்டுகிறேன் .. மேலும் Siddharyogam.com வலைதளத்தில் 
இறை அருள் பெறுக !!!தான் அவன் ஆகுக .!!!


 —