Vasiyoga Overview 10

கடவுள் -மனிதன் - முக்தி (பகுதி 5)

இறந்தபின் மறு பிறவி பல பெற்று முக்தி என்றும் ; மறுபிறவி இல்லாமல் உயிர் தெழுந்து நியாய தீர்ப்பின்படி முக்தி என்றும் மதங்கள் சொல்கின்றன .

முக்திபற்றி . சித்தர் கொள்கை புரட்சி தன்மை கொண்ட்து..
மறு பிறவி கொள்கையை கடுமயாக சாடுகிறார்கள் சிதர்கள். இறந்தபின் முக்தி இல்லை . செத்தபின்பு சொர்கம் இல்ல்லை மறுபிறவி இல்லை முக்தி இல்லை. . உயிர் உள்ளபோது தான் முக்தி கிடைக்கும் என்கிறார்கள் சித்தர்கள்.
மறு பிறவி இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

மற்றியே பிறப்போம் என்று - பொய் பிரட்டு
வாய் சமத்து சஸ்திரம் சொல் மடயர்களே 

திருவள்ளுவர் ஞானவெட்டி பாடல் 48

பாவபுண்ணியம் யென்று வாய் சமத்தாய் பேசி சாஸ்திரங்க்களை சொல்லி மறுபிறவி பிறப்போம் என்று பொய்யும் பிறட்டும் சொபவர்கள் மடயர்கள்.
முக்தி பற்றி காகபுசுண்டர் சொல்வதை காண்போம் . 
முக்தி என்றால் என்ன? முக்தி ஏன் பெறவேண்டும்? அதன் பயன் என்ன?

முக்தி யென்ன தெய்வமதைக் காணல் கூடல் 
மோகித்துக் கூடியுற வாடித்தானே
கேழுவோய் முத்தி யென்ன செத்த பின்னோ
கிறுக்கர் சொல்வார் செத்தது போல் சொல்லுவாரே 
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 389


முக்த்தி என்பது இறைவன் மீது மோகம் கொண்டு இறைவனை காணல் அவனுடன் உறவாடல் மற்றும் அவனோடு ஒன்றுதல்... அனைவரும் கேளுங்கள் முக்தி என்பது செத்த பின்பு கிடைக்காது. பைத்தியகாரர்கள் தான் செத்தபின்பு பாவ புண்ணித்திற்கு ஏற்ப பிறவியும் அல்லது முக்தியும் கிடைக்கும் என்பார்கள்.

மரணம் பற்றி சித்தர் கொள்கை 
உடலை விட்டு உயிர் பிரிதல் மரணம் என்பது சாமானியர் கருத்து. 
மரணத்தை பற்றி உண்மை அறிய உடல் உயிர் . ஆன்மா பற்றி அறியவேண்டும்
மரணம் பற்றி சித்தர் கொள்கை அறிவதற்குமுன் ,
மனிதன் யார்? நான்யார்? என்று அறிய வேண்டும் .

கடவுள் ஒருவர் வுண்டு . கடவுளின் சுயம் என்ற தன்மையால் தன்னை தாணே பிரபஞ்சமாக பிறப்பித்துக்கொண்டார் .. இந்த பிரபஞ்சம் மற்றும் அதில் .மனிதன் கடவுளின் ஒரு அம்சம். 
இறைசக்தியின் ஒரு அம்சமாக பரிணாம வளர்ச்சியில் தொண்நூற்று ஆறு தத்துவங்களாக உடல் உயிர் ஆன்மாவால் உருவாக்கப்பட்டவன் மனிதன் அல்லது நான்

மனிதன் யார்? நான்யார்?
உடல்+உயிர் +. ஆன்மா = மனிதன் =நான் 
தன்னுள் இருக்கும் ஆன்மாவை அறிய கூடியவன் மனிதன் . தன்னுள் இருக்கும் ஆன்மாவை அறிய முடியாதவை பிற உயிர்கள்.

உடல் 
உடல் சடபொருட்களால் ஆனது. சடப்பொருட்கள் அகாரம் , உகாரம் மகாரம் என்ற நிலையில் பிரபன்ச்சத்தில் உள்ளது . இன்றைய அறிவியல் டிஎன்ஏ. ஆர்என்ஏ யை கொண்டு ஒரு பாக்டிரியவை செய்தது அதனுடன் உயிர் உள்ள பாக்டீரியாவை இணைத்தது . செயற்கையான  பாக்டீரியாவின் உடலுக்குள் உயிர் புகுந்தது செயற்கை உடல் உயிர் பெற்றது , ஆனால் உயிர் உள்ள பாக்டீரியா உயிரை இழ்ந்த்து . உடலை செய்யமுடியும் . இந்த புதுவகை பாக்டேரியவிற்கு sinthiya என்று பெயரிட்டனர் . 
( VenteCriag Venter --Synthia )எனவே .உடலே உயிரையும் ஆன்மாவையும் தாங்கி நிற்கிறது .


உயிர்
உயிர் என்பது உயிர்சக்தி அல்லது உயிர் ஆற்றல் . இது மின்சக்தி போன்று உள்ளது . உயிர்சக்தி பிரபன்ச்சத்தில் நாத விந்து என்ற அணு திரளாக உள்ளது . மேலேசொன்ன அறிவியல் பரிசோதணை, உயிர் ஆற்றல் வடிவானது மேலும் உயிர் ஒரு உடலில் இருந்து வேறு உடலுக்கு செல்லும் என்று நிரூபித்து உள்ளது

ஆன்மா

உடல் உயிரும் பூரணமும் மூன்றும் மொன்றும் 
அகத்தியர் ஞான சுருக்கம் 16 பாடல் 11

உடல் உயிர் பூரனம் என்ற இறை சக்தி மூன்றும் ஒன்றி உயிரிணங்கள் உருவாகின. 

அல்லு கின்ற ஆன்மாவே ஒணறே தெய்வம்
அவனியிலெ தெய்வமும்தான் னையா யில்லை
தள்ளுகிற கருவிகளை தள்ளினாக்கால் 
தானவனை தனக்குள்ளெ அறியலாமே
சுப்பிரமணியர் ஞானம் 200 பாடல் 72

நம்முள் இருக்கும் ஆன்மாதான் தெய்வம். வேறு தெய்வம் இல்லை . 96 தத்துவங்க்கலால் ஆன மனிதன் தத்துவங்களை வாசியோகத்தால் கடந்தால் இறைவனை உன்னுள் அறிய முடியும்.

உயிரகத்தில் நின்றிடும் முடம்பெடுப்ப தற்க்குமுன் 
உயிரகாரமாயிடும் முடலுகாரம் மாயிடும்
உயிரை முடம்பையும் மொன்றுவிப்பத ச்சிவம்
சிவ வாக்கியம் 1000 பாடல் 352

உயிரினம் உருவாகும் முன் உயிர் அகாரம் யென்ற உயிர் சக்தியாக இருந்த்து உடல் அகாரம் என்ற உயிரை எற்கும் சடமாகும் ,. இரண்டையும் இணைப்பது இறைவனாகிய சிவமாகும் அதுவே ஆன்மா.

இதை ஆன்மாவை இறைவன் என்கிறது அதர்வண வேதம் .”அயமாத்மா ப்ரஹ்மா” இந்த ஆன்மா பிரபஞ்சத்தில் பரமாத்மாவாக இயங்குகிறது . மனிதனுள் ஜீவாத்மாவாக செயல்படுகிறது . இறைவன் மனிதனுள் ஒளிவடிவாக ஆனந்தமய கோசத்தில் உள்ளான் ஆன்மா ஒளிவடிவானது .. மனிதனுள் இயங்கும் ஜீவாத்மா பரமாத்வாவுடன் சேர்வது முக்தி. முக்த்தர்கள் அல்லது காயசித்தி பெற்ற சித்தர்கள் இறைவனுடன் ஒன்றி ஒளிவடிவு பெறுகிறார்கள் . அல்லது ஆன்ம சொரூபம் அடைகிறனர் . இது சித்தர்கள் கருத்து.

இறைவன் பரவெளியில் தொம்பதம் ( தொம்பரம் = பரம ஆத்மா = பரமாத்மா ) ஆக உள்ளான் . அந்த இறைவன் பிரபஞ்சத்தில் ஒரு அங்கமாக உள்ள மனிதனுள் தம்பதம் (தற்பரம்= ஜீவஆத்மா ). மனிதனுக்கும் இறைவனுக்கும் நடுவே இருப்பது பிரபஞ்ச தடையான மனிதனின் 96 தத்துவங்கள். வாசியோகத்தால் இந்த 96 தத்துவங்களை கடந்து இறைவனுடன் ஒன்றுவது அசிபதம் . தொம்பதம் தம்பதம் அசிபதம் ஆகிய மூன்றையும் இணைப்பது வாசி என்ற வாசி யோகம் . .

மரணத்துக்குபின் நடப்பது என்ன? சித்தர்களின் கருத்து


மரணம் என்பது உடல்ஆனது உயிர் ஆற்றலை தன்னுள் தக்கவைக்கும் தன்மையை இழப்பதாகும். மரணத்துக்குப்பின் மறுபிறவி இல்லை. செத்தபின் முக்தி இல்லை 
மரணித்தபின் உயிர் பிரபஞ்சத்தில் கலந்து விடுகிறது. ஆன்மா இறைசக்தியில் கலந்துவிடுகிறது. இதனால் அதேமனிதன் மீண்டும் முந்தைய பதிவுகளுடன் மறுபிறவி எடுப்பது இல்லை இறை சக்திக்கு எதிராண சாத்தானும் இல்லை, பேய்.,பிசாசு இல்லை .. 
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 

திடம்பட மெய்ஞானம் சேரவும்மாட்டர் ” என்றார் திருமூலர் .


சித்தர்களின் முக்திவழி

மரணம் ஆகாமல் முக்தி பெறுவது சித்தர் கொள்கை . 

சித்தர்களின் முக்தியால் கிடைக்க பெறுவது. மரணம் அடையாமல் . இறைவன் இருக்குமிடம் செல்வது.. இறைவனை சேர்வது இறைவனாக மாறுவது .,மீண்டும் பிறவாமல் இருப்பது . நிலைத்த பேரின்பம் பெறுவது. இவை அறிவியல் அடிப்படையில் அமைந்தது .

இக்கொள்கைகள் நடை முறை சத்தியமா? 
மரணமாகாமல் இருக்க காய சித்தி சொன்னார்கள் . .உயிருடன் கிடைக்கும் முக்தியை நான்குவகையாக பிரித்தார்கள் . அதை அடையும் வழி முறைகள் சொன்னார்கள் .

காய சித்தி
காயசித்தி காரசார மிரன்டினால் 
மாயசித்தி வலுத்திடும் வாசிதான் 
தூயகற்ப சுகாதீத மானதால்
காயகற்பம் கண சித்தியாகுமே
திருவள்ளுவர் நவரத்தின சிந்தாமணி . பாடல் 11


வாசியோகம் செய்து காரம் சாரம் என்னும் கற்பதை உன்னல் சிவயோகம் .இதுகாய கற்ப முறை யாகும் . இதை பத்து ஆண்டுகள் பத்தியத்துடன் செய்வது தசதீச்சை . இந்த தசதீச்சை செய்தால் காய சிததி கிடைக்கும் . மாய சிததி என்னும் அஷ்டமா சித்தி என்னும் அமானுஷ்ய சக்தி கிடைக்கும் . சுகாதீதம் என்ற பேரின்பம முக்தி கிடைக்கும் .

சித்தர்கள் முக்தியின்படித்தரம்

சித்தர்களின் ஆன்மீகபாதையில் முக்தியடைய நான்கு படிதரம் . உண்டு . அவை சரியை கிரியை யோகம் ஞனம். இதில் சரியையும் கிரியையும் பக்தி மார்க்கம் அல்லது பக்தி வழியில் இறைவனை தேடல். . 
பக்தி வழியில் இறைவனின் உனண்மைதன்மை அறிய போதுமானது இல்லை என்று உணரும் போது யோகம் ஞானம் யென்ற யோகவழி தோன்றும் .

இயம்பியதோ ரேதேன்றால் சரியை கிரியை 
யிதுரெண்டு மின்னமொரு ரெண்டுகேளு
ஒயாம்பினதோர் சதாயோகம் பரமெய்ஞானம்
உரைத்தவிதி நால்வருக்கும் பொதுவாய் சொன்னார் 
செயம்பினதோர் குறுகையிலே பதவி கேளு
சாலோக சாமீப சாரூபந்தான் 
சயம்பினதோர் சாயுச்ய பதவி நாலு
சாற்றினா ரீசனவன் போற்றினேனே
அகத்தியர் ஞான காவியம் பாடல் 4


தெளிந்த நற்சரியை தன்னில்சென்று சாலோகம் பெறும் 
தெளிந்த நற்கிரிகை பூசை சேறலாம் சாமீபமே
தெளிந்தனல் யோகந் தன்னில் சேரலாம் சாரூபந் 
தெளிந்த ஞானம்நானங்கிலும் சேரலாம் சாயுச்யமெ
சிவ வாக்கியம்1000 பாடல் 565


பக்தி மார்க்கம்= சரியை மற்றும் கிரியை


சரியை = அறவழி பொருள் ஈட்டல், அன்பான இல்வாழ்க்கை , இறைவன்னிடம் பக்தி , கோவில் , குளம் செல்லல் யாத்திரை போதல் வணங்குதல் ஆகியவை செய்பவர் சரியையோன் . இவர்கள் இறைவனை பல ரூபங்களிள் வணங்குவார்கள். சிலர் சித்தர்கள் குல தேவதைகளை வணங்க்குவார்கள். .
சரியையோர் உலகம் முழுவதிலும் கோடிக் கணக்கானோர் இருப்பார்கள் . இதில் இறைவனை நம்பி இறைவனை பல உருவங்க்களிள் இஷ்ட தெய்வமாக , குல தெய்வமாக , சித்தர்களாக வணங்க்குபவர்கள் உண்டு இதில் உண்மையாக பக்தி கொண்டு நேசித்து வெற்றி பெறுவோர் அடையும் முக்தி “ சாலோகம் “ அதாவது இவர்கள் உயிருடன் இருக்கும் போதே இறைவன் இருக்கும் இடம் செல்வார்கள் . அல்லது இறைவன் அவர்களிடம் வருவான். 
சித்தர்களை வணங்குபவர்களுக்கு கிடைப்பதை காக புசுண்டர் சொல்கிறார். 

கயிலாசம் மென்னவென்றால் திதியும் சிருஷ்டி
களறு கிறோம் சம்மாரம் மூன்றும் தானெ 
பயிலாக நம்மிட்த்தில் ஞானக்கண்ணில் 
பார் இந்த மூன்று சித்தி நம்மில் உண்டு
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 பாடல் 611
அஞ்சுமே நல்லவர்க்கும் ஞாயத்தோர்கும்
கடிதங்கள் பேசாமே வரமே ஈவோம்
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 பாடல் 610
சாபம் போல் வரமுண்டு கேட்டால் ஈவோம்
தாரித்ரம் நம்மிட்த்தே இல்லை இல்லை 
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 பாடல்612

படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று தொழில்களும் சித்தர் ஒருவரே செய்வார் .கைலாயம் என்ற முக்தி சிதர்களிடம் உள்ளது., நல்லவர்களுக்கும் அறவழியில் வாழ்பவர் களுக்கும் வரமாக தருவோம். தீயவர்களூக்கு சாபம் கொடுப்போம் . சித்தர்களை சார்பவர்களுக்கு தரித்திரம் இல்லை. சித்தர்கள் இறைவன் இருக்கும் இட்த்தை அடயாலம் காட்டுபவர்கள் சென்று அடைவது அவர் அவர் செயல் திறன், இது சாலோக முக்தி அல்லாது கைலாய அல்லாது வைகுண்ட பதவி அல்லது சொர்க்கம் அல்லது சுவனம் .. . 
சித்தர்களுக்கு சித்தராய் திருமூர்திகளும் ஒன்றாக மூர்த்தியாய் அவதாரம் செய்த அய்யா வைகுண்டர் அகில திரட்டு என்ற ஆகமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது . 
மும்மூர்த்தி யெல்லாம் ஒறு மூர்த்தியாயிருக்கும் 
வைகுண்ட பொம்மான்
நேறோரை காத்து நிசமாகவெ எழுப்பி 
ஏறாரை கொன்று ஏழ்ந்ரகத்தும் பூத்தி

...........................
வாகாக நல்ல வரிசை மிக கொடுத்து
ஆண் பெண் நுடணே அதிக வழ்வும் கொடுத்து
காணக்காணா காட்சி மிக கொடுத்து 
செல்ல வைகுண்டர் சீமை அன்பத்தாறயும் 
அல்ல்ல் அகற்றி அரசாள்வார். 

.................
சாலோக சாமி சார்ந்திருக்கும் மின்நகரு
அகில திரட்டு பக்கம் 244 மற்றும் 255
நல்லவர்களை பாது காத்து அவர்களுக்கு வழமான இல் வாழ்கை தறுபவர் காண முடியாத அற்புதங்க்கள் செய்பவர்.. தீயவர்களை அழித்து நரகில் தள்ளுபவர். பக்த்தர்களூக்கு சாலோகம் என்றமுக்தி கொடுப்பவர் வைகுண்டர்.
 
கிரியை = அறவழி பொருள் ஈட்டல், அன்பான வாழ்க்கை , இறைவன்னிடம் பக்தி , கோவில் , குளம் செல்லல் யாத்திரை போதல் வணங்குதல் பூசைகள் செய்தல் ஆகிய காரியங்களுக்கு பிறருக்கு உதவி செய்பவன் . யாகங்கள் செய்தல் வேள்விகள் செய்தல் ஆகியவை செய்பவன் கிரியையோன் கிரியையில் இறைவனுடன் மனம் ஒன்றி வெற்றி பெற்றால் கிரியையோன் அடையும் முக்தி.

சாமீபம் “ இறைவனுக்கு வெகு அருகில் செல்வார்கள் அல்லது இறைவன் அவர்களுக்கு வெகு அருகில் இருப்பான் . இத்தகையோர் சில ஆயிரம் இருப்பார்கள்.
இவர்களுக்கும் சித்தர்கள் வழி காட்டுவார்கள் இவர்கள் வணங்கும் தெய்வங்க்களும் உதவும் . 
சரியையோன் கிரியையோன் பக்தர்களுள் தெளிந்தவர்கள். இவர்கள் தெய்வம் வேறு தான் வேறு யென்று கருதுபவர்கள். 
யோகம். 
பக்த்தருள் சிலர் இறைவனின் உண்மை தண்மை அறியு முற்படுவார்கள். அத்தகையோர் வந்து சேரும் வழி யோக மார்க்கம் . 
இவர்களை யோகத்தோன் என்கிறார் திருமூலர் . பலவித யோக மார்க்கங்கள் உண்டு எதை கடைப்பிடித்து ஞானம் பெற முடியும் என்ற கேள்விக்கு திருமூலர் வழி காட்டுவதை பார்ப்போம்.

அந்நெறி இன்நெறி என்னாதட் டாங்கத்
தந்நெறி சென்று சமாதியிலே நின்மின் 
நன்நெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்நெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே
திருமூலர் திருமந்திரம் பாடல் 551

ஞானம் அல்லது முக்தி  அடய பல நெறி முறைகள் உண்டு . அந்த நெறி முக்தி தறும் அல்லது இந்த நெறி முக்த்தி தரும் என்று ஊசலாட்டமாக இருக்காதீர்ர்கள் . அஷ்டாங்க நன்நெறியை பழகி அதில் சமாதி நிலை அடைபவர் ஞானமென்ற முக்தி பெற முடியும் . அஷ்டாங்க நன்நெறியை தவிர்த்து ஞானம் பெற வேறு போக்கு அல்லது வழி இல்லை . பிற நெறிகள் துன்பம் தறும் தவறான நெறிகள் அல்லது புன்நெறி ..

யோகம் . / சதா யோகம் / வாசியோகம்/ அஷ்டாங்க யோகம் / அப்பியாச யோகம் / குண்டலி யோகம் = 
யோகமார்க்கம்
யோகி = சாலோகம்
யோகம் என்பது இறைவனோடு இணைதல் இயம, நியம, ஆசன, பிராணாயாம பிரத்தியாகார,தாரண, தியான சமாதி ஆகிய . எட்டுவகை நெறி முறைகளை கடை பிடித்து வெற்றிபெறுதல் யோக சித்தி. அடிப்படை வாசி யோகத்தில் முதலில் பெறுவது “சாலோகம்” என்ற இறைவன் இருக்கும் இடம் அடைதல்.. இது அடிப்படை வாசியோகம் ஆகும் . தன்னுள் இறைவன் இருப்பதை ஒளிவடிவில் காணல்

ஒளிகண்டோம் சதாகாலம் மைந்தா கேளு
அகத்தியர் வாத சௌமியம் பாடல் 1195


அஷ்டாங்க யோகத்தில் மேல் நிலை வாசியோகம் செய்து வாசி சித்தி அடைந்து பூரணம் என்ற இறைவனை நெருங்கி பார்த்து வெற்றி பெறுவோர் “ சாமீபம்” என்ற முக்தி அடைவார்கள்.

விழிகண்டோம் பராபரத்தின் விசாலம் கண்டோம்
சுழி கண்டோம் பூரணத்தின் சோதியாலே
அகத்தியர் சௌமிய சாகரம் பாடல் 1195


சித்தர் = சாரூப முக்தி
நாதவிந்து அல்லது கார சாரம் என்ற கற்பங்களும் 

பிறகற்பங்கள் உண்டு வாசி யோகம் செய்வது சிவா யோகம் வாசி யோகத்தில் மூன்றாம் நிலையான சிவயோகத்தில் மூண்று ஆண்டு முடித்தவர் பல சித்திகள் கைவர பட்டு அழியும் உடலுடன் இருக்கும் சித்தர்கள் . இறைவனை மிகவும் நெருங்கியவர்கள். .
சிவ யோகத்தில் பத்து ஆண்டுகள் . தச தீட்சை செய்து முழுமையாக சித்தர் நிலை அடைந்தவர் அடைவது “சாரூபம்” . பரு உடலுடன் அழியா உடல் பெற்று ( வஜ்ரதேகம் ) . இவர்கள் தன்னுள் இருக்கும் இறைவனுடன் ஒன்றியவர்கள் . இறைவனின் தன்மை பெற்று இறைவனின் செயல் ஆற்றும் தண்மை பெற்று மனித ரூபத்தில் இருப்பவர்கள் . இத்தகைய சித்தி பெற்றோர் . அறிதாக இருப்பார்கள். 
போச்சப்பா குறிகாட்ட வாசி யோகம் 
பூட்டுவதால் சிவயோக முக்தானாச்சு..
அகத்தியர் வாத சௌமியம் பாடல் 1197


ஞானம்/ பர ஞானம்= சாயுச்சிய முக்தி

பரஞானம் பெற்றோர் . மௌன யோகம் செய்து பர வெளியில் இருக்கும் இறைவனுடன் இணைந்தவர்கள். இறைவனைபற்றி, இறைவனாய் மாறியவர்கள் இவர்கள் ஒளியுடல் பெற்று அரூப மாணவர்கள் .. இறைவனை போல் அரூபமாகி இறைவனாக மாறியவர்கள் .

இத்தகையோர் பெறுவது சாயுச்சியம் என்ற முக்தி. இவர்கள் நாத விந்துவுடன் , கல்பங்கள் உண்டு , கமலினி மற்றும் சொரூபம் ஆகிய குளிகை செய்து அதன் மூலம் மௌன யோகம் சித்தி பெற்றவர்கள் . இவர்கள் சித்திகளில் உயர்வான கெவுணம் பாய்தல் என்ற பிரபஞ்சபயணம் செய்பவர்கள்

சாயுச்சியம் நன்றான பதவியடா சாயுச்சிய பதவி 
நாதாந்த பதவிஎன்ற அரூபமாச்சே 
அகத்தியர் வாத சௌமியம் பாடல் 1053
சொரூப முக்திக் கடையாளம் மேதென்றாக்கால் 
சுடர் போலே காணுமடா தூல தேகம் 
அரூபமுக்தி கிடம்மல்லோ பிரம்மா ஞானம் 
அபராட்ச்ச மென்று சொல்லும் சிரவணந்தான் 
ரோமரிசி ஞானம் 13 பாடல்12
தானவனை இருக்கவென்றால் வாசிவேணும் 
வால்மீகி ஞானம் 16 பாடல் 16