Vasiyoga at home

வணக்கம் , நல்வரவு . இந்தபதிவு சித்தர் கல்வி ஆன்லைண் வகுப்ப்பு. கட்டணம் இல்லாத சித்தர் பணி. மாணவர் தகுதி : இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடை பிடித்தல் அவசியம். . 
வழி காட்டி தகுதி .; கட்டணம் இல்லா வழி காட்டியாக சித்தர் பணி செய்ய யோகி. வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி இசைந்துள்ளேன் 


வாசி என்றால் என்ன ? வாசி யோகம் என்பது எது ? சிவயோகம் என்பது என்ன ?


பிரபஞ்ச வெளியில் இருப்பது காற்று 

.அது உடலுக்கு உள் வந்தால் மூச்சு .
மூச்சை நெறிபடுத்தினால் மூச்சு பயிற்சி அல்லது பிராணாயமம் . உரிய கால கணக்கோடு மூச்சை நெறிபடுத்தினால் உருவாவது வாசி.

வாசியை பிரானாயாமமாக செய்வது அடிப்படை வாசி யோகம் அல்லது வாசி பிராணாயமம் . 

வாசியை ஆதார தளங்களில் நிறுத்தி உரிய முறைப்படி siddharyogam.comஅஷ்டாங்க யோகம்மாக செய்வது வாசியோகம் அல்லது வாசிதவம் .. 
வாசி யோகத்துடன் கல்ப மருந்துகள் உட்கொண்டு, கடும் பததியம் இருந்து பத்து ஆண்டுகள் செய்வது சிவயோகம் . சித்தர் நிலை அடைய செய்யும் கடைசி தவம் 

பத்தியம் : பெண் அல்லது ஆண் , புளி, உப்பு , போதை பொருள் , மாமிசம் , மீன் தள்ள வேண்டும் . ஒருநேரம் உணவு உட்கொள்ளவேண்டும். 

இதன்படி கடும் தவம் செய்பவர் சித்தர் நிலை அடைவார்கள். அஷ்டமா சித்தி பெற்று, அழியாஉடல் பெறுவார் .. இறைவனை காண்பார்கள் . பேரின்பநிலை கிடைக்கும் . 
இத்தகைய சித்தா இறைவனுடன் சேர்ந்து தானே இறைவன் ஆவது ஞான நிலை . ஞான நிலை பெற்றவரே ஞானி ., முனி , ரிஷி , பிரம்ம ரிஷி . 

இந்த படித்தரத்தில் நீங்கள் அடையும் நிலையை பொருத்து கட்டாயமாக பலன் உண்டு . . 
பயிற்சியை இடையில் விட்டு விட்டு பிறகு விட்ட இடத்தில் இருந்து தொடரலாம் 
இதைதான் விட்டகுறை தொட்ட குறை என்பார்கள் .


யார் வாசியோகம் செய்வது ?.:.
வாசி யோகா பிரனாயாமம்வரை யாரும் பயிற்சி செய்யலாம் . . உலக வாழ்க்கை வெற்றி பெறும். அனைத்து செல்வமும் கிடைக்கும் .. உடல் உறுதி பெறும். குறைவு இல்லா இன்பம் கிடைக்கும் யாரும் எளிதில் வெல்ல முடியாது
. .
உயர்நிலை வசியோகமான சிவயோகம் செய்வதற்கு முன் திருமணம் செய்து உலக வழ்வில் பெற வேண்டிய புத்திர செல்வங்கள் பெற்று முடித்து . நாம் செய்யவேண்டிய உலக கடமையை செய்து முடித்து நாற்பது வயதிற்கு மேல் அறுபது வயதிற்குள் செய்வது சிறப்பு . siddharyogam.comஎழுபது வயதுவரை கடும் முயற்சி யுடன் செய்யமுடியும் . அதன் பின் என்பது வயது வரை செய்தால் நூறுவரை ஆயுள் . . என்பதிற்கு பின் பயன் இல்லை .
நாற்பது வயதிற்கு முன் சிவயோகம் செய்தால் தவறு என்ன ?
சிறுவயதி வாசிதவம் , மற்றும் சிவயோகம் செய்தவர் நீண்டநாள் வாழ முடியாது . திரு ஞான சம்பந்தர் , ஆதி சங்கரர் வள்ளலார், விவேகானந்தர் ஆகிய ஞானிகள் இளம் வயதில்பரு உடலை இழந்தார்கள் .. 
இன்றைய ஆய்வு சொல்வது ; வாசிதவம் அல்லது அதற்க்கு ஒப்பான பயிற்சி இளம் வயதில் செய்தால், அவர்களின் விந்து அணுக்கள் குறைபாடு ஏற்பட்டு உள்ளது . இதனால் மட்டுத்தன்மை  அல்லது குறை பாடு உள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு ..