About Siddhars 13

சித்தர்களில் பெண்பால் சித்தர்கள் அன்றும் உண்டு இன்றும் உண்டு . பெண்பாலாக இருந்தாலும் அவர்களையும் சித்தர் என்று அழைப்பது மரபு . சித்தர் நிலையில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை . 


பெண் சித்தர்கள் பற்றி சொல்கிறேன் . ஊர்வசி, கார்கி, லோபாமுத்திரை, அருந்ததி, நளாயினி ஔவ்வை, வாசுகி இன்னும் பலர் பெண் சித்தர்கள் . இவர்களில் இல்வாழ்கை நடத்தியவர்களை பதி விரதை என்று சில ஆன்மீக வாதிகள் மறைக்கிறார்கள் . இதனால் இவர்களின் சித்த தன்மை பேசபடாமல் உள்ளது. 


இவர்களின் சித்ததன்மையை ஆண் சித்தர்கள் பாராட்டி எடுத்து காட்டாக சொல்லி உள்ளார்கள் . அப்படி
நாளாயினி பற்றி காகபுசுண்டர் புகழ்ந்ததை படித்தேன். நளாயினி பற்றி மேலும் சொல்ல வேண்டிக்கொண்டு இரவு தூங்கினேன் . காலையில் சதுரகிரி தல புராணத்தில் நளாயினி பற்றிய வரலாறு காலங்கி நாதர் சொன்னது எனக்கு கைமேல் கிடைத்தது . அதை சொல்கிறேன. 

அவந்தி தேசத்து அரசரின் மகள் நளாயினி .எந்த நிலையிலும் கணவனை பிரியமாட்டேன் என்ற சங்கல்பம் பூண்டவர் மௌத்கல்யர் என்ற மகரிஷி அஷ்ட சித்தி பெற்றவர் வயதானவர் . நளாயினியின் நற்குணங்களை அறிந்து அவரை மனம் முடித்து அவரை சோதிக்க விரும்பினார். 
அழகிய வாலிப உருஎடுத்து நளாயினியிடம் சென்று மனம் முடிக்க விருப்பம் கேட்டார் . நளாயினியும் ஒத்துக்கொண்டார் . . தன சுய உருவுடன் அரசரிடம் சென்று நளாயினியை மனம் முடித்து தர வேண்டினார் அவரது விருப்பத்தை நளாயினி ஏற்றுக்கொண்டதை சொல்லி. அதற்க்கு அடையாளமாக நளாயினி கொடுத்த மோதிரத்தை காட்டினார்.அரசரும் இருவரின் விருப்புக்கு இணங்க மனம் முடித்து கொடுத்தார். 

சோதனை1

இரவில் தன சுய கிழ உருவுடன் இருந்தார். நளாயினி வெறுப்பார் என்று நினைத்தார் .ஆனால் நளாயினி வெறுக்க வில்லை.

சோதனை 2 

சிலநாட்கள் சென்றன . தன உடலை குஷ்ட ரோகிபோல் மாற்றினார் . அப்படியும் வெறுப்பாள் என்று நினைத்தார் நடக்கவில்லை.

சோதனை 3 

வெளி உலகை பார்க்க வெளியே செல்லவேண்டும் என்றார்.  நளாயினி அவரை கூடையில் வைத்து தலையில் சுமந்து அவர் விரும்பிய இடங்களுக்கு எடுத்து சென்றார் .

சோதனை 4

அந்த வழிகளில் ஒரு அழகிய தாசி வீடு இருந்தது. அங்கு இருந்த தாசி ,தனக்கு தேவையான பொருள் இருந்தால் தனக்கு இந்த கீழ்நிலைவராது என்று வருந்தினார் அதை பார்த்த மௌத்கல்யர் அவருக்கு தேவையான பொருளை கொடுத்து அவரை கீழ்நிலையில் இருந்து மீட்க விரும்பினார்.

ன் மனைவி நளாயினியிடம் “பெண்ணே இந்த தாசியை மோகித்து உள்ளேன் அவளுடன் உறவு கொள்ள வேண்டும். ஆனால் என்னிடம் தாசிக்கி கொடுக்க பொண் இல்லை நீதான் எனக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். இப்பொழுதாகிலும் நளாயினி வெறுப்பார் என்று எதிர்பார்த்தார் . நளாயினி வெறுக்கவில்லை .. தனது தகப்பனாரிடம் செல்லவில்லை. 

சோதனை எதிர் கொள்தல்
தினமும் அதிகாலை எழுந்து தாசி வீடிற்கு சென்று வெளிப்புறம் தூய்மை செய்து வாசலுக்கு அழகிய கோலம் போட்டு வந்தார். இதை தினமும் பார்த்த தாசி மனம் மகிழ்ந்தார். யார் இதை செய்கிறார்கள் என அறிய அதிகாலை விழித்திருந்தார் . நளாயினி அதிகாலை வந்து தூய்மை செய்து கோலமிட்டதை பார்த்தார். நளாயினியிடம் . 
நான் சொல்லாமல் ஏன் இந்த வேலையை செய்கிறீர்கள் என்றார்
நளாயினி ”எனது கணவர் உங்களை மோகித்து உங்களுடன் உறவுகொள்ள ஆசையாக உள்ளார் .அவர் ஆசையை நிறைவேற்ற என்னிடம் பொருள் இல்லை . எனவே உங்களுக்கு பணிவிடை செய்கிறேன்” என்றார். இதை கேட்ட தாசி வியந்து நளாயினியின் கணவரான மௌத்கல்யர்ருடன் உறவு கொள்ள சம்மதித்து இரவு அழைத்து வர சொன்னார்.அதன்படி அன்று இரவில் மௌத்கல்யரை கூடையில் தூக்கி கொண்டு தாசி வீடிற்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார் நளாயினி.


தம்பனம் என்பது செயல்பட்டுககொண்டிருக்கும் ஒன்றை செயல் படாமல் அப்படியே நிறுத்திவிடுதல் சித்தர்களின் அஷ்டகர்ம சித்தி என்பதில் தம்பனம் ஒரு சித்தி . உடலில் இயங்கும் தசவாயுக்களை கட்டி செயல் படாமல் செய்தால் உடல் பூமியை விட்டு உயரேசெல்லும் . இது வாயு தம்பனம். மாண்டல்ய மகரிஷி என்பவர் வாயு தம்பனம் என்ற முறையில் பூமியை விட்டு மேலே எழும்பி இருந்து நளாயினி செல்லும் பாதையில் தவம் செய்துகொண்டு இருந்தார். நளாயினி இவரை கடந்து செல்லும்போது நளாயினி தலையில் இருந்த கூடை பூமியை விட்டு உயரே தவம் செயிது கொண்டு இருந்த மாண்டல்ய மகரிஷியை இடித்தது. அதனால் அவர் தவம் கலைந்தது . கோபம் கொண்ட மாண்டல்ய மகரிஷி நளாயினியை பார்த்து “ இந்த இரவு விடிவதற்குள் உன்மாங்கல்யம் அறுபடும் “ என்று சாபம் கொடுத்தார்.

இதைகேட்ட மௌத்கல்யர் தன் மரணத்தை நினைத்து திகைத்துவிட்டார். ஆயினும் நளாயினி தனது தவவலிமையால் “ சூரியனே உதிக்காமல் போக “ என சூரியனை தம்பனம் செய்துவிட்டார் . சூரிய உதிக்காமால் அப்படியே தம்பித்து இயங்காமல் நின்று விட்டார . 
நளாயினி தன் கணவரை தூக்கி கொண்டு தாசிவீடிற்கு சென்று இறக்கி வைத்தார். தாசி அவரை ஏற்றுக்கொண்டு அவரைமட்டும் வீட்டிற்குள் அழைத்து சென்றார் .. தாசியின் வீடு பொண் பொருளால் நிறைந்தது . அப்பொழுது தேவர்கள் அனைவரும் நளாயினியை தேடி தாசி வீட்டிற்கு வந்து நளாயினியிடம் அம்மா சூரியன் இயங்காததால் பஞ்சபூத இயக்கங்களும் பிரபஞ்ச இயக்கமும் நின்று போய்விட்டது ஆகையால் பிரபஞ்சம் அழியும் . . எனவே தங்களுடைய தம்பன சாபத்தை விலக்கிக்கொள்ள வேண்டுகிறோம் “ என கேட்டனர். “ என் கணவர் இறக்கவேண்டும் என்று மாண்டல்ய மகரிஷி கொடுத்த சாபத்தை நீக்க சொல்லுங்கள் . நான் எனது தம்பன சாபத்தை விழககிவிடுகிறேன் “ என்றார் நளாயினி.
இதன்படி மாண்டல்ய மகரிஷியின் சாபத்தை தேவர்கள் நீக்க செய்தனர் . நளாயினியும் சூரினை தம்பிக்க செய்ததை நீக்கினார்.  பிரஞ்சம் மீண்டும் இயங்கியது.


இதை கண்ட மௌத்கல்யர், வியந்து நளாயினியிடம் . வேண்டிய வரங்கள் தருகிறேன் என்றார் . நளாயினி “ தங்களுடைய மனைவியாக வாழ்கிறேன் அது போதும்” என்றார் மௌத்கல்யர் இளமை உருக்கொண்டு நீண்ட நாட்கள் நளாயினி உடன் இல்லறம் நடத்தினார்.


காகபுசுண்டர் வியந்த நளாயினி . 
பிரபஞ்ச யியக்கத்தை நிறுத்திய நளாயினியை, வஷிஸ்டர், அகத்தியர் 
திருமூலர் ஆகியோரின் வரிசையில் பதினெட்டு சித்தர்களுள் ஒருவராக வைத்துள்ளார் காகபுசுண்டர்.
சூதனே இன்னமொன்று சத்திரியர்க்குள் 
சூடாலை காலமதில் நளாயினிக்கே
வருந்தினார் சூரியரும் வந்தார் பின்னே 
வல்லபங்கள் இதுவல்லோ மரணமாகா

காகபுசுண்டர் பெருநூல் காவியம் பாடல்கள் 784 & 785


என்னை புகழும் வசிஷ்டரே இன்னும் ஒரு செய்தி, சத்திரிய அரசகுமாரி நளாயினி பற்றி சொல்கிறேன் .த
ன் கணவன் மரணமாவத்தை தடுக்க சூரியனை செயல் படாமல் இரவில் தம்பிக்க செய்தார் . இதனால் சூரியன் வருந்தினான்.. தனது கணவன் பெற்ற மரண சாபம் விழக்க பட்டதால் சூரியன் மீது தான் கொடுத்த தம்பனம் என்ற சாபத்தை திரும்பபெற்றார் அதனால் சூரியம் மீண்டும் உதித்தார் . இச்செயலே சிறந்த வல்லமை உள்ள சித்தி .


இன்றைய நிலை 
.இன்றும் தனது கணவனின் உயிர் காக்க போராடுபவர்கள் உள்ளனர் அவர்களின் போராட்டம் வெற்றி பெறுவதையும் கண்டு மகிழ்ந்து வருகிறேன் . அதே நேரம் சிறு சிறு தவறுகளுக்கு விவாக ரத்து பெற்று வருந்தும் வனிதையரை கண்டு வருந்துகிறேன் பெண்களை சோதித்த ஆண்கள் பட்ட பாட்டை பார்கிறேன் . துணைவியின் உயிர்காக்க போராடிய ஆண்களை கண்டு பெருமிதம் கொள்கிறேன் . 
மனித வாழ்வு ஒருமுறைதான். அதில் ஆணிற்காக பெண்ணும் பெண்ணிற்காக ஆணுமாக வாழும். ஆனந்த வாழ்க்கைதான் சராசரி மனித வாழ்வின் மோட்சம் முக்தி .இதைதான் ராமகிருஷ்ணரும் சாரதா தேவியாரும் நிரூபித்தார்கள் ..