முருகன் பற்றி பகுதி 1

முருகாபோற்றி!!! முருகாபோற்றி!!! முருகாபோற்றி!!! 

குருவாய்வருவாய்!!! அருள்வாய் குகணே!!!! 

எனது குரு முருகன் அருள் ஆசியுடன் அவன் அனுமதி பெற்று இப்பதிவு செய்கிறேன்.


இன்றும் முருகனை குருவாய் வரவேண்டி மனது உருக பிரார்த்தித்தால் எனக்கு குருவாகவந்தது போல் உங்களுக்கும் குருவாக வந்து அருள்புரிவான் முருகன் .நம்புங்கள் நடத்திகாட்டுவான்

இதில் சந்தேகம் பல வரும் . கேள்விகள் பல எழும்நம்பிக்கைக்கு ஆதாரம் என்னமுருகன்கடவுளா ? சிவனின் மகனாமனிதனா ?முப்பாட்டனாமுருகன் இன்றும் வருவான் என்றால்அவன் எப்படி இருக்கிறான் ?எப்படிவருவான்?
இவை அனைத்திற்கும் விடை கான்போம்..


முருகனை நாமறிந்தவிதங்கள் 

முருகனை கடவுளாக காண்கிறார்கள் ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் . சிலர் அவதாரமாக பார்கிறார்கள்..செயர்கறிய செயல்களை செய்தவர்களை நமது கலாச்சாரம் கடவுளாகவும் அவதாரமாகவும் சித்தறிக்கிறது.. இவைகள் புராணங்ககளாகவும் ஆகம நூல்களாகவும் செய்யப்படுகிண்றன..இதன்படி கந்தபுராணாம் செய்யப்பட்டு அது பதினெட்டு புராணங்களில் ஒன்றாக உள்ளது. முருகனை அவதாரமாக சொல்கிறது அய்யா வைகுண்டர் செய்த அகிலதிரட்டு ஆகம நூல்.. பல முருக பக்தர்கள் இந்த நூல்களை ஆதாரமாக கொண்டு பலனூறு பக்தி இல்லக்கியங்கள் தமிழில் செய்துள்ளனர்

சித்தர்கள் முருகனை முதல் தமிழ் சித்தனாக காண்கிறார்கள். தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திற்கு முந்தய தமிழ் இலக்கண நூல் அகத்தியம். அதற்கும் முன்பு அகத்தியர் செய்த சித்தர்வழி சித்தர் இலக்கி நூல்களிள் முருகனிடம் தமிழும், சித்தர்கல்வியும் கற்றதாக பல நூல்களிழும் சொல்லியுள்ளார். அகத்தியர் முருகனை குருவாக கொண்டவர் அகத்தியரும் பல சித்தர்களும் முருகனை குருவாக கொண்டு பல ஆயிரம் நூல்கள் செய்துள்ளனர். இதற்கும் முன்பு முருகன் பல சித்தர் இலக்கியங்கள் செய்துள்ளார். முருகன் செய்த பல நூல்களில் செய்த பல லட்சம் பாடல்களில் வெகு சிலபாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. . முருகனை பற்றி பிற சித்தர்களும் குறிப்பாக சிவனுக்கும் முந்தய தமிழ் சித்தனான காகபுசுண்டர் கூறிய நூல்களிளும் பல செய்திகள் உள்ளன.

இந்த ஆதாரங்களை கொண்டும் இதன் அடிப்படையில் இன்றய அனுபவங்களை கொண்டும் முருகனை புரிந்து கொள்வோம்.

கந்தபுராணம் சுருக்கம்

முருகன் அவதாரம்
சூரபத்மன் என்ற அசுரன் சிவ தவம் செய்து பலவரங்கள் பெற்றான் . ஐந்து தலை கடவுள்களால் மரணம் நேரகூடாது என்றும் பெண்னிடம் பிறந்தவர்களால் மரனம் நேரக்கூடாது என்று வரம் பெற்றான் . அதன் பின் இந்திர லோகத்தை வென்றான். தேவர்களை சிறைபிடித்து அடிமை ஆக்கினான். இந்திரன் தப்பிச்சென்று சூரபத்மனை அழிக்க சிவதவம் செய்தான் . சிவன், இந்திரனுடய தவத்திற்கு இறங்கி ஆறு தலையுடன் தோன்றினார்.. அவரின் ஒவ்வொரு தலையில் இருந்து ஒரு சுடர் தோன்றியது. இந்த சுடர்களின் வீரியத்தால் சக்தியின் பாதங்களிலிருந்து வீரபாகு உட்பட ஒன்பது வீரர்கள் தோன்றினர் . சக்தியால் சுடர்களின் வெப்பத்தையும் வீரியத்தையும் தாங்க முடியவில்லை. எனவே சிவன் ஆறுசுடர்களையும் வாயு பகவானிடம் ஒப்படைத்தார் . வெப்பம் தாங்காத வாயு அக்கினி பகவானிடம் ஒப்படைத்தார் அக்கினி பகவனும் வெப்பம் தாங்காமல் கங்கையிடம் ஒப்படைத்தார் .கங்கையும் வெப்பம் தாங்காமல் சரவண பொய்கையில் கொண்டு சேர்த்தார்.

சரவண பொய்கையில் ஆறு குழந்தைகள் தோன்றின. விஷ்னு ஆறு குழந்தைகளையும் கார்த்திகை பெண்களிடம் கொடுத்து வளர்க்கச்சொன்னார். குழந்தைகள் சிறுவர்களாயினர். வளர்ந்த சிறுவர்களை கண்ட சக்தி அறுவரையும் ஒன்றாக அனைத்தார். . இதனால் ஒரு உடல் ஆறுதலை பண்ணிரண்டு கைகளை கொண்ட முருகண் அவதாரம் செய்தார். சரவண பொய்கையில் பிறந்ததால் சரவணன் என்றும், கார்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்திகேயன் என்றும, கங்க்கை கொண்டு சென்றதால் காங்கேயன் என்றும் பெயர் பெற்றார். பெண்னிடம் தோன்றாமல் ஆறு தலை கொண்ட அவதாரமாக முருகன் உருவானார்.

சுவாமிநாதன் சுவாமிமலை

முருகன் சிறுவனாக இருந்தபோது பார்வதியிடம் பரமசிவன் ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் சொன்னார். இதை சிறுவன் முருகன் கேட்டுக்கொண்டு இருந்தார். ஒருநாள் பிரம்மா சிவனைக்கானவந்தார். முருகன் அவரிடம் ”நீங்கள் யார் என்ன செய்கிறீர்கள் “என்று கேட்டார். “நான் பிரம்மா படைத்தல்” செய்கிறேன் என்றார். முருகன் “அப்படி என்றால் “ஓம்” என்ற மந்திர பொருள் சொல்லுங்கள் “ என்றார். பிரம்மா பொருள் தெரியாமல் விழித்தார். முருகன் பிரம்மாவை சிறையில் அடைத்து தாணே படைத்தல் செய்தார். சிவன் இதை அறிந்து முருகனிடம் “உனக்கு ஓம் பொருள் தெரியுமா” என்றார். முருகன் சிவனுக்கு ஓம் என்பதன் பொருள் சொன்னார்.. எனவே முருகன் சிவனுக்கு குரு ஆனார் . ஆகையால் சிவகுரு , பரமகுரு என்ற பெயர் பெற்றார் .மரபுபடி குரு அப்பா மகன் சீடன் . எனவே தகப்பன் சாமி என்ற பெயரும் வந்தது. அதனால் சுவாமிநாதன் என்று அழைக்கபட்டார். அதன் நினைவாக சுவாமி மலை என்ற படை வீடு அமைந்தது.

சூரசம்ஹாரம் திருசெந்தூர்

தேவர்கள் சிவனிடம் சூரபத்மனிடம் இருந்து விடுதலை வேண்டி கதறினார்கள். முருகனைவைத்து சூரனை கொல்ல கெஞ்சினார்கள். முருகன் குமரபருவம். போரிட்டு அறியாதவன் . ஆகையால் சிவன் தயங்கினார். முருகன் சூரபத்மனிடம் போரிட தான் தயார் என்றதும் போர்செய்ய சிவன் அனுமதித்தார். இதை அறிந்த சக்தி தனது அனத்து சக்தியையும் திரட்டி அதை வேலாக்கி முருகனிடம் சக்திவேலை கொடுத்தார் மேலும் வீரபாகு ஆகிய ஒன்பது வீரசகோதரர்களையும் முருகனுக்கு துனையாக போருக்கு அனுப்பினார். அதனால் சக்தி வேல் என்று அழைத்தனர்.

தேவர்களின் படை திரட்டபட்டது படைத்தளபதியாக முருகன் பொறுப்பு ஏற்று போருக்கு புறப்பட்டு திருசெந்தூர் வந்து சேர்ந்தார் .மரபுப்படி தேவர்களை விடுவிக்க கோரி வீரபாகுவை தூதனாக சூரபத்மனிடம் தூது அனுப்பினார் சூர பத்மன் அதற்கு மறுத்ததுடன் போரிட்டு தேவர்களை மீட்டுகொள்ள அரைகூவல் விடுத்தான். போர் துவங்கியது. முதலில் கிரவுஞ்சமலை என்ற அரணை தூலாக்கினார் முருகன். பத்மாசூரன் தம்பி கஜமுகனையும் அவன் படைகளையும் அழித்தார். தொடர்ந்து போரிடவந்த சிங்கமுக அசுரனையும் கொன்றார் . பத்மாசூரன் பெரும்படையுடன் போருக்கு வந்தான் . சூரன் மீது சக்திவேலை செலுத்தினார் . சக்திவேல் சூரனை இரண்டாக பிளந்தது. . சூரன் வீழ்ந்தான் . ஆனால் முருகன் அவனை கொல்லவில்லை. இரண்டு துண்டில் ஒன்றை மயிலாக மாற்றிதனது வாகணமாக்கினார் அதனால் மயில் வாகணன் என்ற பெயர் பெற்றார் .மற்றதை சேவலாக்கி தனது கொடியாக்கினார் இதனால் சேவல் கொடியோன் என்றுஅழைப்பார்கள்.. பகைவர்க்கும் இறங்கும் கருணை மிக்கோன் முருகன் . சூரனை வென்றதால் வெற்றி வேல் என்றும் ஜெயந்தி நாதர் என்றும் போற்ற படுகிறார்.

தற்காலத்தில் நடந்த நிகழ்வு 

சில ஆண்டுகளுக்கு முன்பு திருசெந்தூர் முருகனுக்கு காணிக்கையாக சமர்ப்பித்த வைரவேல் மற்றும் செல்வங்களை கோவில் அறங்காவலர் திருடினார். இதை கண்டுபிடித்த கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அவர் மீது புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அறங்காவலர் நிர்வாக அதிகாரியை கொலை செய்தார். கோர்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இதை பத்திரிக்கைகள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டன. அறங்காவலர் தனது காரில் கோர்டில் இருந்து வந்து கொண்டிருந்தார். மயில்வாகனன் என்ற லாரி காரில் மோதியது. விபத்தில் அறங்காவலர் இறந்து போனார் இச்சம்பவம் முருகணே தண்டித்தார் என அதிசயமாக பேசப்பட்டது

முருகன் பற்றி 2ஆம் பாகம் தொடரும் 
இறை அருள் பெறுக !!!தான் அவன் ஆகுக!!!
Comments