Mukthi Part1

சிவம் என்றால் என்ன?

சிவம் என்பது உண்மையா ?

அப்படிஎன்றால் சிவத்துக்கும் உயிருக்கும்
என்ன தொடர்பு?


எமது முதல் கேள்வி.
பதில்

"ஒன்றவன்தானே இரண்டவன் இன்னருள். " திருமந்திரம் பாடல் 1
அந்த ஒன்றுதான் சிவம். 


பிரபஞ்சம்  உருவாவதற்குமுன் எது இருந்ததோ அது சிவம். அது இறைவன். அல்லா,பரமபிதா, கர்த்தர். . I. இந்த சிவம் ஓம் என்ற பெருவெடிப்பாக தன்னைதான்பிரபித்தது இந்த பேராற்றலை பிரபஞ்ச வாலை என்கிறார் போகர். இதை காயத்ரி என்கிறார்  விசுவாமித்திரர். . 
சிவம் என்ற பேராற்றல் ஆற்றல் வடிவான துகள்கள். அவை அகரா உகார நாத விந்து. இதுவே நமசிவாய. . இது சூட்சமசிவன்..


இது பஞ்சவித்து. இந்தபஞ்சவித்து வானத்து பஞ்ச பூதமானது .
இந்த பஞ்சபூதம் பிரபஞ்சமானது. இதுவே நால்வகை யோணியில் எழுவகைபிறப்பாக உயிர்களாக உருவானது . இவ்வுயிர்களில் மனிதன் 9 6 தத்துவங்கள் உடையவன். பிற உயிர்களில் தத்துவங்கள் குறைவு . மனிதனாகி இந்த 9 6 தத்துவங்கில் சிவம் என்ற இறைவன் ஒளிவடிவில் ஆனந்தமய கோசத்துள் ஒடுக்கமாக இருக்கிறான் .

இதே சிவம் ஓம் நமசிவய என 9 6 siddharyogam.comதத்துவங்களில் உள்ள ஆறு ஆதார தளங்களில் இருக்கிறான்.

ஆக சிவம் ஆற்றல் ஆகி, ஆற்றல் சிவனாகி பஞ்ச வித்தாகி ,பஞ்ச பூதமாகி உயிர்களாகியது. உயிர்களில் மனிதனாகியது. மனிதன் யோகாமுயற்சியால் சித்தனாகி இறைவனானான். அந்தமுதல் சித்தன் சிவன். அந்த சிவன் உலகிற்கு யோகமார்க்கம் சொன்னவன்.

மனிதன் தன்னுள் இருக்கும் ஒளிவடிவான இறைவனை தரிசித்து சித்தனாகி அவனுடன் ஒன்றுதல் முக்தி ..அல்லது தானே இறைவனாதல் முக்தி .. உன்னிலும் இறைவன் வேறொன்றும் இல்லை என்கிறார் நந்தி . இதுவே தத்வம் ஆசி என்ற மகா வாக்கியம் . . இதுவே நான் கடவுள் . ‘தான அவன் ஆனேன் “ “நான் சிவன் ஆனேன்” என்கிறார் திருமூலர்

“ இறைவன் மனிதன் ஆனான் மனிதன் இறைவன் ஆனான்” “ அண்டத்துள் உள்ளது பிண்டத்துள் என்ற இறை சுழற்ச்சி" 

உன்னுள் இருக்கும் இறைவனை ஒலிவடிவில் தரிக்க செய்யும் உபாயம் வாசி யோகம் என்ற அஷ்டாங்க யோகம் என்ற ராஜ யோகம்.