Lesson 8

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி. 

இன்றைய மருத்துவ அறிவியல் உடலைப் புதிப்பித்தல்( Theory of rejuvenation ) என்னும் கோட்பாட்டில் பெரும் பொருள் செலவு செய்கிறது. அதில் ஒருபகுதி செல்களில் உள்ள விஷத்தை போக்குதல் .( Removal of junk or toxin materials from the cells ). இதில் அவர்கள் siddharyogam.comவெற்றி பெறவில்லை.ஆனால் சித்தர்கள் செல்களில் உள்ள விஷத்தைப் போக்க மூன்று கல்ப மருந்துகளை கொண்டு ஒரு செய்முறை (procedure ) வகுத்துள்ளனர். அதன் பெயர் வழலை வாங்கல் ..

வழலைவாங்கல்:
சென்ற பாடத்தில் கல்பம் பற்றி சொன்னேன்.அதில் முக்கியமான மூன்று கல்பங்கள், கரிசாலை , கத்தாழை . இவற்றின் தயாரிப்பு , பிரயோகம் செயல்படும் விதம் ஆகியவை பார்ப்போம்.
இம்மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக பயன் siddharyogam.com படுத்தும் முறைக்கு வழலைவாங்கல் என்று பெயர்.இந்த முறையால் உடல் செல்களில் உள்ள விசம் கோழையாக, மலமாக,மூத்திரமாக வெளியேறும். இதுவே வாசி யோகத்தில் உடல் சுத்தி . இது பற்றி கொங்கணர் சொல்வதை பார்ப்போம்.
சுகமாக காயத்தில் வழலை வாங்கப
பேனப்பா ஆவின் நெய் படிகாலுக்குள் .
பேரான கையான்சார் அரைப்படிதான்
நானப்பா மெழுகுபதம் தன்னிலேதான்
நறுநெய்வடி கலசத்துட் சொலலகேளே
-------கொங்கணர் கற்பம் 100 பாடல் 57


வெல்லுகிறேன் என்ற மிளகு தானே
மீறாமல் லாரை களஞ்சி பொடித்துக்கொண்டு
செல்லும் பூவழலை பணவேடையும் கூட்டி
சிறப்பாக வடிகலசம் தான்னில் போடு.
-----------------------பாடல் 58


நாட்டமுடன் சுகழினையிலே மனதை நாட்டி
நலமாக மேலவாசல் கண்டத்து ஊதி
மாட்டடா பெரு விரலை நெய்யில் தோய்த்து
வலஞ்சுத்தி உள்ளேற்று வாசி ஊதி
கலட்டடா கருவழலை வழலை வாங்கு
----------------------பாடல் 59

தாங்கியபின் இகவேன்நீர் விட்டு விட்டு
சலக்கட்டை யுறிஞ்சி கொப்பளிப்பாய்
பாங்குடனே மண்டலந்தான் செய்யும்போது
படுபாவி கண்டநஞ்சு கொல்ல பார்க்கும்
ஓங்கியே கத்தலழன் சாருதன்னை
ஓகோகோ கருவிட்டு சொல்லகேளு
--------------------------------பாடல் 60


கேளப்ப தர்சனையும் மத்திமையும் கூட்டி
கேடியான தத்துவங்கள் தளர போட்டு
வாளப்பா பாவை போல் இருந்து கொண்டு
வாகாக கண்டத்தை வசைத்து வாட்டு
நாளப்பா தினந்தோறும் மிது போல்செய்து
நலமாக பின்னங்கே வழழை வாங்கே
-----------------------------பாடல் 61 


பேனுநீ இந்நீரில் கடுக்காய் மையை
பிதற்றாமல் கரைத்துடனே உள்ளே கொள்ளு .
வேணிநீ கொண்டபின்பு பர்ப்பமெல்லாம்
விறேசிக்க லச்சியத்தில் மேவி யூது
----------------------------------பாடல் 62


ஆட்டையிலே கண்ட நஞ்சு கூமுட்டை போல்
அப்பனே அகன்று ஆரோக்கியமாகும் .
-----------------------------பாடல் 64


பாடல்களின் பொருள் மற்றும் வழலை வாங்கல் செய்முறை
கரிசாலை நெய்:
கரிசாலை என்ற வெள்ளை பூ பூக்கும் கரிப்பான் என்ற மூலிகை எங்கும் கிடைக்கும். நகர்ப்புறத்தில் கீரை விற்பவர்களே கொண்டுவந்து தருவார்கள். அதைக் கழுவி தண்ணீர் காய்ந்தபின், மிக்சியில் போட்டு அரைத்து விழுதை எடுக்கவேண்டும். அதை ஒரு துணி அல்லது வடிகட்டியில் வைத்து பிழிந்து சாறு எடுக்கவும். கரிசாலை சாறு ஒருபங்குடன் அரைப்பங்கு நெய் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும். சிறு தீயாக எரிக்கவும். சிறிது நேரத்தில் தண்ணீர்ச் சத்து வற்றி மெழுகு போல்வரும். முருகவிடக் கூடாது. 5கிராம் மிளகைத் தூள் செய்து இந்த கரிசாலை நெய்யில் சேர்த்து கிண்டி இறக்கவும். கரிசாலை நெய் பயன்பாட்டுக்குத் தயார் .
பயன்படுத்தும் முறை:
கரிசால நெய்யை கட்டை விரல் வெள்ளை பகுதியில் ரேகைக்கு மேல் உள்ள பகுதி முழுவதும் தடவவும் . வாயை நன்றாகத் திறக்கவும். கரிசாலை நெய் தடவிய கட்டை விரலை வாய்க்கு உள்ளே அண்ணாக்குக்கு  ( உள்நாக்கு ) மேல்பகுதிக்குக் கொண்டு செல்லவும்.
கரிசாலை நெய்யை அண்ணாக்கின் மேல்பகுதியில் தடவவும் . அங்கு கட்டை விரலால் அழுத்தி இடவலமாக(கையை ) சுற்றவும். ஒரு நிமிடம் சுற்றினால் போதும். தலை, தொண்டை,மார்பில் இருக்கும் விஷம் சளியாக கோழையாக கைவழியாக இறங்கும்.
இது வழவழப்பாக இருப்பதால் வழலை என்று பெயர். இது சங்கிலிபோல் நூலாகவும் வரும். சிலருக்கு உள்ளே உள்ள சளி வெளிவரும்.இப்படி வழலை வெளி வந்தபின், வாய் கொப்பளிக்கவும். வெது வெதுப்பான நீர் நல்லது. இது ஒரு சுற்று.  இவ்விதம் நான்கு சுற்று வழலை வாங்கவும். இதை சிவவாக்கியர் மூலாதாரத்தில் முளைக்கும் கோரையை தினம் நான்குகட்டு அறுத்து எடுக்கவேண்டும்.. இதனால் கிழவன் பாலனாவான் என்று மறை பொருளாகச் சொல்கிறார். இந்த நெய்யை ஒரு ரூபாய் வட்டம் அளவு சாப்பிட்டு நீர் அருந்தவும்.

கத்தாழை கற்பம்:
இவ்விதம் கரிசாலை கற்ப வழலை வாங்கும் போது வெளியான விஷம் மரணத்தை தரும் வல்லமை கொண்டது . அந்த விஷத்தை உடலில் தங்காமல் வெளியேற்ற வேண்டும். கத்தாழை கற்பம் விஷத்தை முறித்து மலமாகவும் மூத்திரமாகவும் வெளியேற்றும் . இது சித்தர் அறிவியல்.


செய்முறை:.
சோற்றுக் கத்தாழை மடலில் இரண்டு அங்குலம் தோல் சீவி, கத்தாழை சோற்றை எடுத்து அதில் ஒரு சிட்டிகை மிளகைச் சேர்க்கவும் நடுவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்த்துக் கொள்ளவும். அதன் வெள்ளைப்  பகுதியில் கத்தாழை மிளகு கூழ் தடவவும். வாயை நன்றாகத் திறக்கவும். இந்தக் கத்தாழை கூழ்தேய்த்த விரல்களை, தொண்டைக்குள் அடிப்பகுதிக்கு செலுத்தவும். கத்தாழங் கூழை தொண்டை அடிப்பகுதியில் தடவி விரல்களை (கையை )முன் பின்னாக அசைத்து நன்றாக தேய்க்கவும். மீதம் இருக்கும் கத்தாழை கூழைச் சாப்பிடவும் .


கடுக்காய் கற்பம்:
கத்தாழை முறித்த விசத்தையும் முறிக்காத விசத்தையும் கடுக்காய் முறித்து விறேசகம் என்ற வகையில் மலம், வாயு, குடல் சளி அனைத்தும்  கலங்கி வெளியேற்றும்.
செய்முறை:
கடுக்காய்க்குக் கொட்டையில் விஷம். அதைப் போக்க கடுக்காயை பாலில் வேகவைத்து எடுத்துக்  கொள்ளவும். அதை வெயிலில் காயவைக்கவும். விஷம் நீங்கிவிடும். இது சுத்தி செய்த கடுக்காய். இதை கொட்டையுடன் உடைத்து மிக்சியில் அரைத்துப் பொடிசெய்யவும். கடுக்காய் கற்பம் தயார் .
கத்தாழை உண்டபின் முக்கால் ஸ்பூன் கடுக்காய்த் தூளை ஒருடம்ளர் நீரில் கலந்து குடிக்கவும்

இவ்விதம் நாற்பது நாள் செய்யவேண்டும். அப்பொழுது மலம் வயிற்றை கலக்கி வெளியேறும். ஆகையால் கழிப்பறை அருகில் இருக்கும்படி பார்த்து கொள்வது நல்லது. விறேசகம் அதிகமானால் இளநீர் , நீர்த்த பால் நிறைய குடிக்கலாம். பால் சோறு சாப்பிடல் நல்லது. siddharyogam.com
இந்த மூன்று கற்பத்தை முடித்தால் உடல் புத்துணர்வு பெறும். வாசி நிற்கும். பல நோய்கள் நீங்கும். குறிப்பாக செல்கள் புதிப்பிக்கப்படும். ஆயுள் கூடும். இளமை பெருகும். இதுவே மூலத்தில் முளைத்து வரும் கோரையை அறுத்தல்.