Lesson 7

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

வாசியோக எட்டு அங்கங்களில்; இயமம், நியமம், ஆசனம் என்ற மூன்று பார்த்தோம். வாசி நிற்பதற்கு முன்தயாரிப்பாக,மனதையும் உடலையும் சுத்தி செய்ய வேண்டும். மனதை குவியச் செய்யவும் பிரபஞ்ச உயிர்சக்தி பெறவும் திராடக , சூரிய யோகம், சந்திர யோகம் மற்றும் சூரிய வணக்கம் ஆகியவை பார்த்தோம்.. பிராணயாமத்தில் பூரக, ரேசக,கும்பகம் பார்த்தோம்.அதில் அமரும் ஆசனம் பார்த்தோம்.

இனி உடலை சுத்திசெய்யும் முறை பார்ப்போம். உடல் என்பது மூன்று தேகங்கள் கொண்டது.அவை
1.
ஸ்தூல என்ற பரு உடல். தலை,கை, கால், நெஞ்சு, நுரையீரல், இதயம், இரைப்பை குடல் ஈரல் போன்ற அங்கங்களால் ஆனது பரு உடல்.
2.
சூட்சமம் என்ற நுண் உடல்: இரத்தம், காற்று, வெப்பம், மின்சக்தி, காந்தசக்தி,உயிர்ச்சக்தி ஆகியவைகளின் நாடிகள் ஓட்டம், அங்கங்களின் செல்கள் முதலியவை நுண் உடலில் அடங்கும்.
3.
காரண தேகம் என்ற விஷ்ட தேகம்: ஸ்தூல சூட்சமம் தேகம் பெற அடிப்படையானது. இன்றைய அறிவியல் இதை gene ஜீன் உடல் என்கிறது

இந்த மூன்று உடலையும் சுத்தம் செய்து வாசியை நிறுத்த வேண்டும். அதற்கு உபாயம் கொங்கணர் சொல்கிறார்.

இரண்டாக இருந்ததப்பா . வாசி தாணு
மேர்த்துடனே ஒன்றாச்சு அதுவும் போச்சு
பந்தாக பழகிற்தற் கிதுவே மார்க்கம்
பார்க்கையிலே கற்பமுண்டு பாரு பாரு
-------கொங்கணர் மூவாயிரம் முதல் காண்டம் பாடல் 201

வாசி என்ற மூச்சு காற்று இடது நாசி ஓட்டமாக இடைகலை என்றும்
வலதுபுற ஓட்டமாக  பிங்கலை என்றும் இரண்டாக ஓடும். அதை வலது நாசியில் உள்ளே இழுத்து நிறுத்தி இடது நாசியில் வெளி இட்டு ஒன்றாக மாற்றப்பட்டது.பின்பு வாசி குண்டலினியாகி வாலை ஆகியது. இவ்விதமாக முறையாக வாசி யோகம் பழக வேண்டும். இவ்விதம் வாசி யோகம் பழகும் போது கற்பம் உண்டு வாசியோகம் பழக வேண்டும்.
கொங்கணர் விதிப்படி வாசி யோகம் பழகுவதை விரிவாக பிராணயாமம் என்ற நான்காம் அங்கத்தில் பார்ப்போம். அதற்கு முன் கற்பம் உண்ணுதல் என்பதைப் பார்ப்போம்,


கற்ப மருந்து  அல்லது கல்ப மருந்து எது ?
மருந்துகள் ஐந்து வகை உண்டு. அவை 


1.
துயர் நீக்கி: பரு உடலில் வரும் நோய் துயர். இது  நோயில் வேலை செய்து உடல் துன்பத்தைப் போக்கும்.சிலவகை காய்ச்சல், தலைவலி, இருமல், சிறு கட்டிகள் போன்றவைகளை நலமாக்கித்  துயர் நீக்கும்.

2,
பிணி நீக்கி:  சூக்கும உடலில் வரும் நோய்,பிணி. இது செல்களைப் பாதிக்கும். இதன் வெளிப்பாடு பரு உடலில் தெரியும். காச நோய், எயிட்ஸ், பால்வினை நோய்கள், மஞ்சக் காமாலை முதலியவைகளைக் குணப்படுத்தும். 


3.
கன்மம் நீக்கி:  இது காரண தேக பாதிப்பால் உருவாவது. ஜீன் குறைபாட்டால் உருவாகும் புற்று நோய், நீரழிவு,வலிப்பு,மரபுக் குறைபாடு ஆகியவை அடங்கும். இதைக் கர்மவினை என்பர். இவற்றைப் போக்குவது கன்ம நீக்கி முறை.
4.
நோய்தடுப்பு மருந்து:  நோய் வராமல் தடுப்பது. 


5.
கற்பமருந்து அல்லது கல்பங்கள்: இம்மருந்துகள் துயர், பிணி, கன்மம் ஆகியவற்றை போக்கும். கற்ப மருந்துகள் 108 என்று இறுதி செய்துள்ளார்கள் சித்தர்கள். எயிட்ஸ் பற்றியும், புற்றுநோய் பற்றியும்,அதை போக்கும் கல்ப மருந்துகள் பற்றியும் சொல்லி உள்ளார்கள்.
 
இன்றைய ஆங்கில மருத்துவ முறை கல்ப மருந்துகள் என்னும் விஞ்ஞானம் பற்றி அறியவில்லை.கன்ம நோய்களுக்குத் தீர்வும் காணவில்லை.

வாசி யோகத்திற்கும் கல்பங்களுக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம். siddharyogam.com
கல்பங்கள் செல்களில் தங்கியுள்ள விசங்களைப் போக்கி வெளியேற்றும்.இந்த விசங்கள் கழிவுகளாய் வெளியேற்றப்படும்.முக்கியமாக சளி, மலம்,மூத்திரமாக வெளியேற்றும்.இதனால் செல்கள் புதிப்பிக்கப்படும். செல்களுக்கு உள்ளேயும் செல்களுக்கு வெளியேயும் இடை வெளி உருவாகும். இதனால் உறுப்புகளின் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கும். இதனால் நுரை ஈரல்,உதர விதானம், மார்புக்கூடு ஆகியவை அதிகமாய் விரிவடையும். பிராணயாமம் செய்யும் பொழுது அல்லது சுவாசிக்கும் போது அதிக உயிர்சக்தி உடலுள் வரும். உடல் வலுப் பெறும்.உடல் இளமை அடையும்.

சித்தர்களின் 108 கற்பங்களில் முதன்மையானவை மூன்று. இந்த மும்மூர்த்திகளே வாசியை நிற்கச்செய்யும் கற்பங்கள். இவைகள் செல்களில் விசத்தைப் போக்கி அவற்றை சளியாக,மலமாக மூத்திரமாக வெளியேற்றும்.வாசி வலுப்பெற்று நிற்கும்.siddharyogam.com
1.
கரிசாலை என்ற கரிசலாங்கண்ணி என்ற கரிப்பபான் என்ற வெள்ளை பூ பூக்கும் கரிசாலை.
2.
கற்றாழை என்ற சோற்று கற்றாழை .
3 .
கடுக்காய் என்ற அமிர்த கடுக்காய்

இவை மூன்றும் நம்மில் பலருக்கு தெரியும், ஆனால் இவற்றை கல்பமாக பயன் படுத்தும் தொழில்நுட்பமே சித்தர்கள் அறிவியல்.இவற்றை விரிவாக வரும் பாடத்தில் பார்ப்போம்.