Lesson 5

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

அஷ்டாங்க யோகத்தில் நான்காம் அங்கம் பிராணாயமம். இந்த பிராணாயாமத்தில் வாசியை உருவாக்கினால்தான் அஷ்டாங்க யோகம் வெற்றி பெறும். அதுவே வாசி யோகம்.அதுபோல் வாசி யோகத்தில் 8 அங்கங்களை கடைப்பிடித்தால்தான் வாசி யோகம் வெற்றி பெறும்.இந்த 8 அங்கங்களையும் அவற்றை செய்முறைப் படுத்தவும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்வதைப் பார்ப்போம்.

அஷ்டாங்க யோகத்தின் 8 அங்கங்கள்:

1. இயமம் என்ற ....செய்யத் தகாதவை.

2 . நியமம் என்ற .....செய்ய வேண்டியவை.

3. ஆசனம்: யோகா ஆசனம். இவைகள் எண்ணிக்கையில் அடங்காதவை.

4.  பிராணாயாமம் என்ற சிறப்பான மூச்சுப் பயிற்சி.

5.  பிரத்தியாகாரம் என்ற உடலுள் பார்ப்பது.

6.  தாரணை என்ற பாவிக்கும் முறை.

7.  தியானம் என்பது மனதைக் குவித்து, ஒன்றின்மேல்,இறைவன்மேல் நிறுத்துதல்.

8. சமாதி என்ற இறைவனோடு ஒன்றுதல்

ஆகிய 8அங்கங்களும் வாசி யோகா அங்கங்கள்.

நமது வாழ்க்கை முறை மனதைப் பாதிக்கும்.அது மூச்சின் செயல்பாட்டைப் பாதிக்கும்.அது நமக்கு இன்ப உணர்வு அல்லது துன்ப உணர்வைத் தரும். மனம் மகிழ்வுடன் இருக்க,நமது வாழ்க்கை முறை முக்கிய பங்கு கொள்ளும். இதை அடிப்படையாகக் கொண்டது முதல் இரண்டு அங்கங்களான இயமமும் நியமமும் ஆகும்.இவற்றைத் தான் அனைத்து மதங்களும், இயக்கங்களும், பக்தி மார்க்கங்களும் சொல்கின்றன. திருமூலர் சொல்வதை பார்ப்போம்.

.

இயமம்.... என்ற செய்யக் கூடாதவை:

 உயிரைக் கொல்லாதவன்,பொய் சொல்லாதவன், களவு செய்யாதவன்,  நல்லவன்,அடக்கமுடயவன்,நீதி சொல்ல வல்லவன்,தனக்குக் கிடைத்ததை பிறர்க்கும் கொடுப்பவன்,பகிர்ந்து உண்பவன்,குற்றம் செய்யாதவன்,கள் முதலிய போதைப் பொருள் உண்ணாதவன்,வேசித்தனம்இல்லாதவன், இத்தகைய வாழ்க்கை வாழ்பவர் இயமத்தான்.இவரே என்குணன் என்ற இறைவனை அடைய தகுதி பெற்றவர்.இதுவே மனித தர்மம். மனித நேயம்.மனிதம். மனிதனின் கடமை.வேதங்களும் சாத்திரங்களும் சொல்பவை. இறைவன் இல்லை என்பவரும்,பக்திமான்களும் சொல்லுவது.

நியமம் என்ற...... செய்ய உகந்தவை:

1. இறை நம்பிக்கை. 2. அதில் மகிழ்ச்சி.3. தவம் செய்தல்.4. ஜெபம் செய்தல். 5. தம்மிடம் மிகுந்து உள்ளதை தானம் செய்தல். 6.இறைவனை அடைய விரதம் (சிவா விரதம்). 7. உண்மைகளை அறிய அறிவார்ந்தவர் சொல்வதைக் கேட்டல். 8. அகம் என்னும் உள்நோக்கல். 9.இறைவனைப் பூசித்தல் (சிவ பூசை). 10. அறிவு உடைய சொல் சொல்லுதல் ஆகிய பத்து செயல்களும் செய்பவர் நியமத்தார்.

 இங்கு திரு மூலர் சிவன் என்று சொல்வது ஆதி சிவனாகிய இறைவனைத்தான். அவரது காலத்தில் ஏசு, அல்லா என்ற பெயர் இறைவனுக்கு இல்லை. இறைவனைச் சிவன் என்று சொல்லி உள்ளார். இறைவன் யார்,சிவன் யார் என்பதை திருமூலர் 50 பாடல்களில் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்.அன்பே சிவம்...

இறைவனை அறியவும், அடையவும் வாசியோகம் செய்யவும்.இயம நியம மற்றும் அன்பு அவசியம்.

செய்முறை:

முன் பதிவில் சூரியயோகம்,சந்திரயோகம், பிராணாயாம ஆரம்பம் ஆகியவை சொன்னேன்.வாசி யோகா அடிப்படை ஆரம்பிக்கும் முன் நீங்கள் உங்கள் மூச்சுக்காற்றின் தன்மையை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்யுங்கள்.

 மூச்சுப் பயிற்சி ஆரம்பிக்கும் முன்....

1. பாய் அல்லது கம்பளி விரித்து அதன் மேல் ஒரு பருத்தித் துணி விரியுங்கள் அல்லது கனமான ஜமுக்காளம் விரியுங்கள்.

2. காற்றோட்டமான அறை நல்லது. ஏசி அறை என்றால் எக்சாஸ்ட் மூலம் உள் காற்றை அகற்றியபின் பயிற்சிக்கு அமருதல் நல்லது.

3 ஊர்வன, பறப்பன, தொல்லை இல்லாமல் இருத்தல் நல்லது.

4.கூரைக்குக் கீழ் அமருதல் நல்லது.ஆரம்பகாலத்தில் வெட்ட வெளியில் அமர வேண்டாம்.

5. கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமருதல் வேண்டும்.

6.வெறும் வயிற்றில் பயிற்சி செய்தல் நலம்.தவிர்க்க முடியாவிட்டால் திரவம் அருந்தலாம்.

7. உணவு உண்டால் சுமார் 2 மணி கழித்து பயிற்சி செய்தல் வேண்டும்.

8. சம்மணம் கூட்டி நிமிர்ந்து உட்கார்ந்தால் போதும்.இது சுகாசனம். பயிற்சி உள்ளவர்கள் பத்ம ஆசனம் அல்லது வச்ரா ஆசனத்தில் அமரல் நன்று.கீழே உட்காரமுடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்து உட்காரலாம்.

9 பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து மற்ற மூன்று விரல்களையும் நீட்டி உள்ளங்கை வானை நோக்கி இருக்கும்படி இரண்டு முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ளுங்கள். இது சின் முத்திரை.

இதன் பின் மூச்சை கணக்கிடுகிறோம்.

1 மூச்சை உள்ளே இழுக்கும் போது siddharyogam.com மனதுள் ஒன்று,இரண்டு,என்று எண்ணுங்கள். உங்களால் சிரமம் இன்றி எவ்வளவு எண்ணமுடியும் என்பதை குறித்துக் கொள்ளுங்கள். மூன்று அல்லது நான்கு முறை செய்து அதன் சராசரியை குறித்தல் சிறப்பு.இதன் பெயர் பூரித்தல். இந்த எண்ணிக்கை பூரித்தல் நேரம்.

2. மூச்சை உள்ளே இழுத்தபின்,மூச்சை உள்ளே நிறுத்துங்கள்.அப்பொழுது மனதுள் ஒன்று,இரண்டு என்று எண்ணுங்கள்.சிரமம் வரும் வரை எண்ணுங்கள்.இது கும்பகம் என்பது.இந்த எண்ணிக்கை கும்பக நேரம்.

3 மூச்சை இழுத்து நிறுத்தியபின் சிரமம் வரும் போது வெளியே விடுங்கள். அப்படி வெளிவிடும் போது மனதுள்,ஒன்று இரண்டு என்று எண்ணுங்கள். இதன் பெயர் ரேசகம்.இந்த எண்ணிக்கை உங்கள் ரேசக நேரம்.

இவற்றைச் செய்து பார்த்து,நேரத்தை குறித்து வையுங்கள்.இது உங்கள் இன்றைய மூச்சுத் திறன்.