Lesson 25

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி ஆன்லைன் வாசி யோகா வகுப்பு .
மாணவர் தகுதி : இயமம், நியமம் , மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்

பிரத்தியாகாரம்

அறவழி வாழ்கை முறைகளையும், தேகத்தில் மூச்சுக் காற்று இயக்கத்தையும், இயம, நியம ஆசன, பிராணாயாம ஆகிய நான்கு அங்கங்களை வாசி யோகத்தில் படித்தோம்

இதுவரை மூலாதாரத்தில் மனதை நிறுத்தி வாசி உருவாக்கி வாசி பிராணயாமம் செய்வதை அறிந்துகொண்டோம். வாசிஎன்னும் மாயக்குதிரையை நமது சுவாச நெறிகளால் சுவாசக்காற்றால் உருவாக்கியுள்ளோம்.. இந்த மாயக்குதிரை வெப்பத்துடன் சேர்ந்து காற்றும் வெப்பமாக அல்லது வெப்பக் காற்றாக உடலுக்குள் மாறும் . அதன்பின் சக்தி அலையாக அல்லது குண்டலினியாக மாறும் . அதன் பின் வாலை என்ற ஒளியலையாக மாறும். வாசி என்ற குதிரையை மனம் குவித்தலால் இயக்கி நம் உடலுள் பயணிதது பூரணம் என்ற இறை ஒளியை உள்ளே பார்த்து அளப்பரிய சக்தி பெறுதல் மற்றும் காய சித்தி பெறுதல் ஆகியவை வாசியோகம். மற்றும் சிவயோகம் ஆகும்

வாசியை மனதுடன் இணைத்துப்  பரவெளியில் நிராதார. தளங்களில் நிறுத்திச் செய்யும் யோகம் மௌன யோகம்.
இது பரவெளியில் இருக்கும் இறைவனை ஒளியாகக்  கண்டு இறைவனுடன் இணைதல் . .
இங்கு வாசியின் உதவியுடன் நம்முள் பயணிக்கும் வித்தையை படிக்கப் போகிறோம். நம்முள் பயணிக்கும் பாதையில் முதல்நிலை பிரத்தியாகாரம் ,

இரண்டாம் நிலை தாரணை 

மூன்றாம் நிலை தியானம் 

நான்காம் நிலை சமாதி ..

வாசி யோகத்தில் இவை முறையே ஐந்தாம் அங்கம் ஆறாம் அங்கம் ஏழாம் அங்கம் மற்றும் எட்டாம் அங்கம் ஆகும் . . . .
வாசி யோகம் என்ற அஷ்டாங்க யோகத்தில் ஐந்தாம் அங்கம் ஆகிய பிரத்யாகாரம் பற்றி பார்ப்போம். நம்முள் பயணிப்போம்

 
ஒருக்கால் உபாதியை ஒன்சோதி தன்னைப் 
பிர்த்துணர்.வந்த உபாதிப் பிரிவை 
கரைத்துனர் உன்னால் கரைதல் உள்நோக்கள் 
பிரத்தியாகாரப் பெருமையா தாமே
 

திருமந்திரம் பாடல் 585 

உரைத்துமே சொல்லுகிறேன் பிரத்தியாகார
முன்மையார் வாசினையின் வழியிற் சென்று 
மிரைத்துமே நடத்துவிக்கு மிந்திரியந்தானும் 
மிகைமையா மனத்தை மெல்ல முயற்சியாக்கி 
விரைத்துமே திரியிறதை திரிய வொட்டாமல் 
வெட்டியதை மறைகிறதே பிரத்தியாகாரம்
 

போகர் 1000 பாடல் 317 

பிரானாயமத்தில் வாசி 32 : 64 : 16 உருவாக்கியபின் . கண்களை மூடி அமரவேண்டும் . வெளிப்புறச்  சத்தங்களை காதுsiddharyogam கேட்காமல் உதாசீனம் செய்யவேண்டும். வாய் பேசாமல் நாவு சுவைக்காமல் இருக்க வேண்டும். மூச்சு நுகராமல், உதாசீனம் செய்யவேண்டும் மூச்சு, சீராக ஆழ்ந்து இயங்கவேண்டும் . உடல் புற உணர்வை உதாசீனம் செய்ய வேண்டும் .
மனதை ஒருமுகப்படுத்தவேண்டும் . இதுவே இந்திரியங்களை புறவெளிச்  செல்லாமால் தடுத்தல் . பின்பு மனதைக்  குவித்து நமக்குள் மனக்கண்ணால் பார்க்க வேண்டும்
அப்படிப்  பார்க்கும் போது நமது தேகம் கரைந்து மனதுடன் ஒன்றும் .உணர்வு ஏற்படும் . கண்.,காது , மூக்கு வாய் உடல்ஆகியவைகளின் செயல்பாட்டை உள்ளே திருப்பி உள்ளே நடப்பதை அறியவேண்டும்
இதுவே பிரத்யாகாரம் முதல் படி . . பிரத்தியா காரத்தில் ஆறு வகை உண்டு நமக்கு உள்ளே பார்க்கவேண்டியவைகள் இவைகள். அதை அகத்தியர் சொல்கிறார்.

 
காணவே பிரத்தியாகாரந் தன்னை 
கருவாக ஆறையுமே சொல்லக்கேளு 
பூணவே சரீரமது பிரத்தியாகாரம் 
பொருந்தி நின்ற இந்திரியம் பிரத்யாகாரம் 
தோணவே பிராணம் பிரத்தியாகாரம் 
சுகமான கரணமே பிரத்யாகாரம் 
பேணவே காமியம்தான் பிரத்யாகாரம் 
பெருமையுள்ள சர்வசங்க பிரத்தியாகாரம் .

அகத்தியர் பூரண காவியம் பாடல் 49 

காரம் மென்ற பிரத்தியாகாரம் 
கருஅறிந்து ஆறுவகை நன்றாய் சொன்னேன் 
பரமென்று எண்ணாமல் பதிவை பார்த்தால் 
பலிக்குமட அஷ்டாங்க பதவி மைந்தா 
சாரம் மென்ற பூரணத்தை தியானம் பண்ணி 
சாங்கை யுடன் வாசியிலே சார்ந்து கொண்டு 
வீரம்மென்ற மனத்தோடு யோகம் பார்த்தால் 
வேதாந்த பதவியிலே விளங்கலாமே 

அகத்தியர் பூரண காவியம் பாடல் 50 


மன வைராக்கியமாக இறைவனைத் துதித்து வாசியில் சார்ந்து பிரத்தியாகாரம் ஆறுவகைகளைச்  செய். இதை அற்பம் என்று தள்ளாதே. அப்படிச்  செய்தால் அஷ்டங்கயோகி அல்லது வாசி யோகி என்ற பதவி கிடைக்கும் . மற்றும் வேதாந்தி என்ற பதவி கிடைக்கும் ஆறுவகையான பிரத்தியாகாரங்களை நன்றாகச்  சொல்லியுள்ளேன் செய்துபார் .


1.
சரிரம் பிரத்தியாகாரம்

மனதைப்  புற வெளியில் செல்லவிடாமல் உடலுக்குள்

செலுத்துதல் உடல் உறுப்புகளை உள்ளே மனக்கண்ணால் பார்த்தல்

2. இந்திரியம் பிரத்தியாகாரம் 

கண் , காது செவி, மூக்கு ,உடல்பரப்பு ஆகியவற்றால் பார்த்து , கேட்டு , சுவைத்து , நுகர்ந்து உணர்ந்து ,. அறியும் புலன்களை உடலுள் செலுத்தி உடல் இயக்கங்களை உள்ளே அறிதல்.

3 பிராணன் அல்லது பிராணம் பிரத்யாகாரம்

மூலாதாரத்தில் வாசியை இயக்கி அது எங்கு பயணிக்கிறது என்றும் அதன் siddharyogam.comஉணர்வுகளையும் இந்திரியங்களால் அறிதல் . . வாசி உருவாகும் போது பலவித ஓசைகள்  கேட்கும் . பலவித ஒளி உருவங்கள் தோன்றும் . பலவித வாசனைகள்  உணரப்படும் . மின்சாரம் பாய்ந்தது போன்று உணர்வு வரும் . இது போன்றவற்றை  உள்ளே அறிவது .

4.கரண பிரத்தியாகாரம் 

அந்த கரணங்கள் என்ற மனம் , புத்தி , சித்தம் , அகங்காரம் ஆகியவற்றை ஒருமுகப்படுத்தி அறிவு கொண்டு அந்தகரணங்களை  இயக்கி ஆறு சக்கரங்களை உள்முகமாகப் பார்த்தல் 

5. காமிய பிரத்தியாகாரம் .

சக்கரங்களின் செயல்களான படைத்தல் , காத்தல் அழித்தல் , மறைத்தல்,அருளல் ஆகிய, விரும்பிச்  செய்யும் செயல்களை உள்ளே  சக்கரங்களில் உணர்தல் .

6 . சர்வசங்க பிரத்தியாகாரம் 

மேற்சொன்ன ஐந்தையும்  ஒருங்கிணைத்து உள்முகமாக உணர்தல்
இவைகளைச்  செய்து பார்ப்பது மிகுந்த இன்பமானது .. உடனே எல்லாம் செய்து பார்க்காமல் ஒவவொன்றாகச்  செய்து பாருங்கள் . சிறிது காலம் பிடிக்கும் . . பொறுமையாய் செய்யுங்கள் . முடிந்தவரை செய்யுங்கள்
இறை அருள் பெறுக !!! தான் அவன் ஆகுக !!!