Lesson 24

நல்வரவு. இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன்லைன் வாசி யோகா வகுப்பு. 
மாணவர் தகுதி : இயமம்நியமம் ஈகை மனித நேயமும் அன்பும் கடைப்பிடித்தல் அவசியம்.

(திருமூலர் திருமந்திரம் பாடல் 506 )

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

வாசியோக பந்தங்கள் முத்திரைகள் 

siddharyogam.com 

இதுவரை அடிப்படை வாசியோகத்தில் நான்காம் அங்கமாகிய பிராணாயாமத்தில் செய்யவேண்டியவைகளைப்  பார்த்தோம். ஆறு ஆதாரங்களையும் ஒரு நிராதாரத்தையும் பார்த்தோம். வாசியோகத்தில் பிராணாயாமம் செய்யும் போது கடைப்பிடிக்கவேண்டிய பந்தங்களையும் முத்திரைகளையும் பார்ப்போம் ..
பந்தங்கள் :
பந்தம் என்பது உடல் உறுப்புகளைக் கட்டுதல் என்று பொருள் .
முத்திரைகள் :
முத்திரைகள் என்பது ஒரு உறுப்பை அல்லது உறுப்புகளை இணைத்து உருவகப்படுத்தல்.
.
பரத நாட்டியத்திலும் முத்திரைகள் உண்டு. பலவித பந்தங்களும் முத்திரைகளும் பலவித யோகா முறைகளில் சொல்லப்பட்டு உள்ளன. சிலநூல்கள் பந்தங்களையும் முத்திரைகளையும் பிரித்துப் பார்ப்பது இல்லை. பந்தங்களையும் முத்திரைகளையும் சித்தர்களுடைய நூலும் ஹடயோக தீபிகை என்ற நூலும் கூறுகின்றன. ஆயினும் வாசியோகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பந்தங்களும் முத்திரைகளும் இங்கு பார்ப்போம் .

நவிலுமிந்த யோகம் வந்த பேர்களுந்தான்
கோணாது முத்திரையும் தரிக்கவேனும் 
குரு முனியே இதன் விபரம் கூறுவோமே

சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல் 32

 ஓமப்ப முத்திரைதான் னைததுண்டு
உகந்த மகாமுத்திரையும் நபோமுத்திரையும்
தாமப்பா உட்டியானச் சலந்த்தர முத்திரையும் 
சார்மூல பெந்தமுத்திரை தெரிந்தான் யோகி

சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல் 33

பொருள்
வாசி யோகம் செய்யும் போது முத்திரைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன் விபரங்களைச் சொல்கிறேன் அகத்தியனே  என்கிறார் சுப்பிரமணியர்.
முத்திரைகள் பலவிதம் உண்டு. அவற்றுள் வாசியோகத்தில் கடைப்பிடிக்க வேண்டியது ஐந்து உண்டு . . அவைகள்

1. மஹாமுத்திரை என்ற சின்முத்திரை

2. நபோமுத்திரை என்ற கேசரி முத்திரை

3. மூல பந்தம்

4. உட்டியானம்

5.சலந்தர முத்திரை 

சுப்பிரமணியர் பந்தங்களை முத்திரை என்று வகைப்படுத்துகிறார். 
1.
மகாமுத்திரை அல்லது சின்முத்திரை 
வாசி பிராணாயாமம் செய்ய சுக ஆசனத்தில் அமரவேண்டும் இடது புறங்கை மற்றும் வலது புறங்கை ஆகியவற்றை முறையே இடது தொடை மற்றும் வலது தொடைமீது வைக்கவும். பெரு விரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து வட்டம போன்ற உருவம் உருவாக்க வேண்டும். மீதம் உள்ள மூன்று விரல்களையும் வெளியே நீட்ட வேண்டும். இது மஹா முத்திரை. பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி உடல் முழுவதும் பரவச்  செய்யும். மனதை ஒருமுகப்படுத்தும், அறிவு பிரகாசமாகும்.ஞானம் பெற உதவும்.

2. நபோமுத்திரை என்ற கேசரி முத்திரை என்ற வியோம சக்கரம் .
சின்முத்திரை செய்தபின் செய்யவேண்டியது.

நாம்ப்பா நபோ முத்திரைதான் சொல்வோம் 
நாவை கபால மத்தி யதனில் லேற்றி 
தாமப்பா புருவமத்தி கண்ணை கொண்டு 
தான் பொருத்தி இருப்ப தோடின்னங் கேளே

சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல் 35


நாவின் நுனியை நடுவே விசிறிடில் 
சீவனும் அங்கே சிவனின் உறைவிடம் 
மேவிடும் முபத்து மூவரும் அங்கே  
சாவதும் இல்லை சதகோடி யூனே

திருமூலர் திருமந்திரம் .பாடல் 803 பொருள்

சின்முத்திரையில் அமர்ந்தபின் செய்வது . 
நாவின் நுனியை மடித்து, நாவின் அடிப்பகுதியை வாயின் மேல் அன்னத்தில் ஒன்றும்படி செய்ய வேண்டும். நாவை விசிறி வாய்வழி மூச்சு காற்று வெளியேவராமல் செய்ய வேண்டும் பற்கள் கடிக்காமல் கீழ் தாடை சிறிது கீழே இறக்கவேண்டும் . மனதை சுழிமுனையில் நாட்ட வேண்டும் . இது நபோ முத்திரை என்ற கேசரி முத்திரை என்ற வியோம சக்கரம். இதனால் மூலாதாரத்தில் உருவாகும் வாசி என்ற வெப்பமும் காற்றும் மேலே ஏறி பத்தாம், வாசல் திறக்க அழுத்தம் கொடுக்கும் . அங்கு சீவன் உள்ளான் சிவனும் உள்ளான் . முப்பத்தி முக்கோடி தேவர்களும் உள்ளார்கள் அவர்கள் காட்சி தருவார்கள் சீவன் என்ற உயிர் சக்தி வெளியேறாது சுழி முனையில் தங்கும். மரணம் ஏறபடாது. நூறுகோடி ஆண்டுகள் வாழ்வார்கள்.

3 மூலா பந்தம் அல்லது மூல பந்த முத்திரை 
கேசரி முத்திரை செய்தபின் மூல பந்தம் செய்ய வேண்டும். 


தானப்பா ஒழுகாது பிராண வாய்வும்.
தன்னை விட்டு புறம் போகா தன்மை கேளு 
வேணப்ப இறுகுதியும் குதத்தியக்கி 
மேலும் மல வாயிலையும் முன்னேவாங்கி 
தேனப்ப அபான வாயுவை மேலேற 
செய்தாற் பிரானவையும் மெதிர்த்து
மோனப்பா அபான வாயுவுடன் சம்பந்தம் 
முன்னாகில் மல ஜாலங்கள் அடைய தென்னே

சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல் 37

 

என்ன முதியோர் இளமைப் பருவமாவார் . 
இது மூல பெந்த முதிரையாம் என்பார் .
பின்னமில்ல பிராண வாயு மேளிழுக்க
பிசகாத அபானவாயு கிளிழுக்க
மன்னியதால் துனப வாதனையுறாமல் 
வல்ல நிஷ்டை புரிபவனே யோகி ஆவான்

சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல் 38


மல வாய் என்ற குதத்தின் இருபக்கமும் உள்ள மேல்தொடைப் பகுதியை நெருக்க வேண்டும். குதத்தை மேல் நோக்கி இழுத்து பிடிக்க வேண்டும் . இதுதான் மூலபந்தம். மூலாதாரத்தில் இந்த பந்தம் செய்யப்படுவதால் இதற்கு மூலபந்தம் என்று பெயர்.. பிராணாயாமம் செய்ய ஆரம்பிக்கும் போது இந்த பந்தம் செய்ய வேண்டும் .
மூலபந்தத்தின் இயக்கம்:

நமது உடலில் பத்துவித வாயுக்கள் இயங்குகின்றன. அவைகள் 1. பிராணன் 2. அபானன் 3.வியானன் 4.உதானன் 5. சமானன் 6. நாகன் 7. கூர்மன் 8. கிருகரன் 9. தேவதத்தன் 1 0 தனஞ்செயன் . இவற்றின் இயக்கங்கள் ஒன்பது வாயிலையும் மூடித் திறக்க உதவுகின்றன . இந்தவாயுக்கள் சமநிலையில் இருந்தால் உடல் அழியாது இளமையுடன் இருக்கும் . 
வாயு சமநிலை பற்றி இன்றைய அறிவியல் சொல்வதைப் பார்ப்போம். நமது உடலை காற்றுமண்டலம் அழுத்திக்கொண்டு உள்ளது . ஒரு சதுர சென்டி மீட்டரில் ஒருகிலோ படிக்கல்லை வைத்தால் தரும் அழுத்தம் அது .. அந்த அழுத்தத்தை நமது உடலில் உள்ள வாயுக்கள் எதிர் அழுத்தம் கொடுத்து நமத உடல் நசுங்காமல் நமக்கு துன்பம் தெரியாமல் காக்கின்றன . இதுவே நமக்கு ரத்த அழுத்தமாகத் தெரிகிறது வாயுக்களின் அழுத்தம் அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும் மாரடைப்பு ஏற்படும் . மரணம் ஏற்படும் . அல்லது வாத நீர் உருவாகி உடல் இயக்கத்தை முடக்கும் . வாயு முற்றினால் வாதம் என்பது சித்தர் கோட்பாடு . 
. . 
இன்றைய அறிவியல் உடல் கொடுக்கும் காற்று அழுத்தங்களை காஸ் pressureபிரசர் என்கிறது அதைப் பிரித்து ஆக்சிசன் பிரசர் , கார்பன்டை ஆக்சைட் பிரசர் மீதேன் பிரசர் என்று பேசுகிறது.ஆனால் அவைகளின் பாதைகளையும் இயக்கத்தையும் பேசவில்லை .சித்தர்கள் பத்து வாயுக்கள் உடலில் இயங்கும் பாதைகளைச்  சொல்லி உள்ளார்கள் அவற்றை வாசி யோகத்தில் முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தி, சமநிலைப்படுத்தி, நீடித்த ஆயுளும் இளமையும் பெறும் வித்தையைச் சொல்லி உள்ளார்கள்.

தச வாயுக்களில் பிராணவாயுவும் அபான வாயுவும் மூச்சின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுபவை. சாதாரணமாக பிராணவாயு மேலே எழும்பும்.மேல்நோக்கி இழுக்கும். அபானவாயு கீழே இறங்கும் கீழ்நோக்கி இழுக்கும் . இதனால் உடலில் உற்பத்தி ஆகும் சக்தி செயல்பாடும்,வெளியேறும் கழிவு செயல்பாடும் சரிவர நடை பெறாமல் உடல் கெடும். உடல் முதுமை அடையும்..வாசி யோகத்தில் மூலபந்தம் செய்யும் போது பிராணவாயுவும் அபானவாயுவும் சமநிலை பெறும். அதனால் பிரபஞ்ச சக்தியைப் பெறுவதிலும், கழிவுகள் வெளி ஏற்றுவதிலும் உடல் சீராக இயங்கும்.ஆகையால் உடல் பலத்துடன் இளமையாக இருக்கும்.. முதிர்ந்த வயதுடையவர் இளமை அடைவார்.இவ்விதம் வாசி யோகத்தில் மூலபந்தம் செய்து பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமநிலைபடுத்துபவர் யோகி ஆவார்கள் .
4. 
உட்டியானம்
மூலபந்தம் செய்தபின், உட்டியானம் முத்திரை செய்யவேண்டும். இதைச் சிலர் ஆசனம் என்பார்கள். பூரகத்திற்கு முன்பு அதாவது ரேசகத்திற்கு பின்பு செய்யவேண்டும். இது கேவல கும்பகமாக அமையும். மேலும் நுரை ஈரலில் தங்கியுள்ள காற்றைக் கூடியவரை வெளியேற்ற உதவும்.


இன்னங்கேள் முதுகு வயிற் ருந்திமேலே
இயம்பு பிரானை தரித்த லுட்டியானம்
இதனாலே வானில் சஞ்சாரம் செய்வான்

சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல் 36 
பொருள் . 
வயிற்றை கூடியவரை முதுகுக்கு பகுதியை ஒட்டச் செய்வதுஉட்டியானம் முத்திரை அல்லது பந்தம் அல்லது ஆசனம். இதை வாசி யோகா பிராணாயாமத்தில் செய்வதால் பிரபஞ்சத் தொடர்பு ஏற்படும்.

5 . சலந்தர முத்திரை அல்லது ஜலபந்தம்

பின்னமில்லா சலந்த்ற முத்திரையின் மார்க்கம் 
பேசுவாய் யதனாலும் நரம்பினாலும்
தன்மைலத்தை தானிருக்கி 
கிழேயுள்ள தணலினால மதியிருந் தமிர்தந்தானே 

சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல் 36 


பின் முதுகுத்தண்டை நேரே நிமிர்த்தி முகவாய்கட்டை என்ற நாடியை சிறிது கீழே தாழ்த்துதல் சலந்தர முத்திரை அல்லது ஜலபந்தம். இதனால் நரம்புகள் ஊக்கமடையும் .இறுகும் . மூலாதார காற்றும்,வெப்பமும் மேலே ஏறி வாலை உருவாக்கி அமிர்தம் பொழியச் செய்யும் .

வாசி யோகா பிராணாயாமத்தில் ஐந்து முத்திரைகளைக் கடைப்பிடித்து மூலாதார வெப்பத்தால் வாசி உருவாக்க வேண்டும் . அது குண்டலினியாகி வாலையாக வேண்டும் .. அது பத்தாம் வாசல் திறந்து அமிர்தம் பொழிய வேண்டும் . அமிர்தம் உண்டு நீங்கா இளமையுடன் சாகாநிலை அடைய வேண்டும் . 
இறை அருள் பெறுக!!! தானவன் ஆகுக!!!