மாணவர் தகுதி : இயமம், நியமம் , மனித நேயமும் அன்பும் கடைப்பிடித்தல் அவசியம்.
சகஸ்ராரம் அல்லது பிரம்ம ரந்திரம் முந்தைய பதிவில் ஆக்ஞா தளம் பற்றி பார்த்தோம். மூலாதாரம் முதல் ஆக்ஞா வரை ஆறு தளங்களும் உடலுக்கு உள்ளே இருப்பவை . . எனவே இவற்றை ஆதார தளம் என்று அழைக்கப்படும். சகஸ்ராரம் அல்லது பிரம்ம ரந்திரம் உடலுக்கு வெளியே இருக்கிறது எனவே இதை நிராதார தளம் என்று சொல்லப்படும் இந்தத் தளமே நம்மையும் இப்பிரபஞ்சத்தையும் இணைப்பது. நம்மைச் சுற்றி பிரபை என்ற ஒளி உருவை ஏற்படுத்துகிறது . ஆங்கிலத்தில் aura ...... ஆரா என்று அழைக்கப் படுகிறது . நமது தியான நிலைக்கு ஏற்ப இந்த பிரபையின் நிறம், பட்டை, அகலம் ஆகியவை மாறும் . இதை கிம்பர்லின் போடோ கிராப் என்ற முறையில் படம் பிடிக்க முடியும் . இதைப் போன்றே நமது மூளையில் ஏற்படும் அலை வரிசையை எலெக்ட்ரோ என்செபிலோக்ராபி(Electroencephalography) என்றமுறையில் பதிவு செய்ய முடியும் .
---போகர் 1000 பாடல் 70
போகர் 1000 பாடல் 71 . அமைவிடம் மற்றும் பயன்: |