Lesson 22


மனித உடலை அடக்கம் செய்யும் முறைகள் சமாதி எனப்படும் என்று சாதாரணமாக அறிவோம் 
சித்தர் கல்வியில் சம + ஆதி = சமாதி . . .
இறைவனுக்குச் சமமாதல் என்பதே சமாதி

சமாதி பொதுவாக மூன்று வகைப்படும் 

  1. மனிதர்கள் இறந்தபின் உடலை நேரடியாக மண்ணில் புதைத்து அல்லது பேழைகளில் வைத்து கல்லறையில் வைப்பது சமாதி. 
  2. மீண்டும் பிறவாமல் முக்தி அடைய உயிரை தானே அடக்கி தானே உருவாக்கிய கல்லறையில் சமாதி அடைதல் . இதற்கு ஜீவசமாதி என்று பெயர் .
  3. உயிருடனும் உடலுடனும் இறைவனுக்கு சமமாக இருந்து பேரின்பம் அடைதல் அல்லது முக்தி அடைதல் . அஷ்டாங்க யோகாவில் எட்டாம் நிலையில் அடையும் யோகா சமாதி . இதன்படி கிடைக்கும்முக்திக்கு இருத்தி முக்தி என்று பெயர்.

இந்தியாவில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் வரும் முன்பிருந்து மூன்று வகை சமாதிகள் கடைப் பிடிக்கப்பட்டன..
அவைகள் 

  1. நில சமாதி நிலத்திற்கு உள் அல்லது மேல் அடக்கம் செய்தல் 
  2. நீரில் சமாதி . நீரில் அடக்கம் செய்தல் . .
  3. நெருப்பில் சமாதி. நெருப்பில் எரியுட்டி சாம்பல் ஆக்கி நீரில் கரைத்தல் .
1.1 இறந்தபின் செய்யப்படும் சமாதிகள்
1.1 நில சமாதி நிலத்திற்கு உள் அல்லது மேல் அடக்கம் செய்தல்
                  எளிய முறையில் உடலை மண்ணில் புதைக்கப்படும் சமாதிகள் பெரும்பான்மை உண்டு. இதில் இறந்தபின்பு அவரவர் பாவ புண்ணிய செயலுக்கு ஏற்ப மோட்சம் அல்லது நரகம் செல்வார் என்பது பலரின் நம்பிக்கை.ஆகையால் அவரின் உடலைப் பேழையில் வைத்து கல்லறை கட்டி அடக்கம்செய்கின்றனர் .
. 
இறந்து போனவர் மீண்டும் உயிர் பெறுவார் அல்லது மேல் உலகம் செல்வார் எனவே அவரது உடலைக் கெடாமல் பாதுக்காக வேண்டும் என்பது ஒருவகை நம்பிக்கை . ஆகையால் எகிப்தில் உடலைப்பதப்படுத்தி பெரும் சமாதிகளாக பிரமிடுகள் கட்டப்பட்டன ..

அன்பின் மிகுதியால் தனது மனைவியின் உடலுக்கு இஸ்லாம் முறைப்படி கட்டப்பட்ட சமாதிதான் தாஜ் மஹால் . இது போன்று பல சமாதிகள் உள்ளன இன்றும் பல புகழ் பெற்ற தலைவர்களுக்கும் ஆன்மீகப்பெரியவர்களுக்கும் நினைவிடங்கள் கட்டப்படுகின்றன . இது பூமி அல்லது நில சமாதி . 

சில பழங் குடியினர் மலைகளின் உச்சிக்கு உடலை எடுத்துச் சென்று வெட்ட வெளியில் வைத்து விடுகின்றனர் ... சிலர் உடலைப் பாறைகளில் கிடத்தி பறவைகள் உண்ணச் செய்கின்றனர் ..

இன்றும் அமெரிக்காவில் அவரின் பொருளாதார நிலைக்கு ஏற்ப 80 ஆயிரம் டாலர் செலவு செய்து உடலைப் பதப்படுத்தி பாதுகாக்கும் வழக்கம் சிலரிடம் உண்டு. பிற்காலத்தில் இவரின் உடலை உயிர்ப்பிக்கும்தொழில் நுட்பம் வரும் என்ற நம்பிக்கை . இதற்கு. cryogenic body preservation என்ற தொழில்நுட்பம் பயன்படுகிறது.

கிறிஸ்தவ பாதிரியாரின் உடல் கோவாவில் சர்ச்சில் பாதுகாக்க படுகிறது .இவை பூமிக்கு மேல் சமாதி.


1.2. நீரில் சமாதி . நீரில் அடக்கம் செய்தல். சல சமாதி

இறந்த உடல் பிற உயிர்களுக்கு உயிர்வாழப் பயன்படும் என்று மீன்களுக்கும் நீர்வாழ் உயிர்களுக்கும் உணவாக்கும் முறைகளும் உண்டு.. இறந்தவர் உடலை நதி அல்லது கடலில் அடக்கம் செய்வது உண்டு . . 
கங்கையில் உடலை சமாதி செய்தால் . மீன்களும் முதலைகளும் உடலை உண்ணும் . உடலுக்கு சொந்தக்காரர் மோட்சம் செல்வார் என்பது நம்பிக்கை . இதை சல சமாதி என்பார்கள்

இறந்தவர் உடலை எரித்து அந்தச் சாம்பலை புனித தீர்த்தங்களில் கரைத்தால் மோட்சம் என்ற நம்பிக்கை . ஆகையால் கங்கை(காசி) அல்லது புண்ணிய நதிகள் மற்றும் கடல்( ராமேஸ்வரம்) ஆகிய இடங்களில்எரிக்கப்பட்ட உடலின் அஸ்தி கரைக்கப்படுகிறது. இது அக்கினி சமாதி .
இத்தகைய சமாதிகள் அவர் அவர் மத ,கலாசார , நம்பிக்கை மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்ப .செய்யப்படுகிறது 
.

2. ஜீவ சமாதி 

மீண்டும் பிறவாமல் முக்தி அடைய உயிரைத் தானே அடக்கி சமாதி அடைதல் . இதற்கு ஜீவசமாதி என்று பெயர்

.
2.1.
 திரும்பி வராமல் உயிருடன் அடங்கும் முறைகள் ஜீவ சமாதி.. 
ஆன்மீக குரு தனது பிறவியின் கடமைகள் முடிந்தபின் தனது உலகப் பயணத்தை முடித்து கொள்வது. தான் சமாதி செல்வதை உலகிற்கு சொல்லி அவர் மீது பற்றுக்கொண்ட அனைவருக்கும் செய்திதெரிவிப்பார்.. தனது சமாதியை கட்டி வைத்து ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அதனுள் அமர்ந்து கற்பூரம் வீபூதி முதலிய பொருட்களால் உடலை மூடி அதன் மேல் கருங்கல் பலகையால்மூடிவிடுதல் . இத்தகைய ஜீவ சமாதி அடைந்தவர் ராகவேந்த்திரர் மற்றும் பலர் . . 


2.2 மூடப்பட்ட சமாதியில் இருந்து திரும்பி உயிருடன் எழுந்துவரும் சித்தயோக சமாதி . 
அஷ்டமா சித்தி அடைத்து முக்திஆன சித்தர்கள் பல் சித்து விளையாடல் செய்து உலகிற்கு பல நன்மைகள் செய்வார்கள் . இவர்களின் செயல் முடிவடைந்தது என்று அவர்கள் உணர்ந்தால் சித்த யோக சமாதிக்குசெல்வார்கள் . இதற்கு என்று தனிப்பட்ட சமாதி அறை கட்டுவார்கள். தான் சமாதி செல்லும் நாளை குறிப்பிட்டும், தான் சமாதியில் இருந்து திரும்பிவரும் நாளையும் குறிப்பிட்டும் பிற சித்தர்களுக்கும்சீடர்களுக்கும் சொல்லி அனுப்புவார்கள் . 
சமாதிசெல்லும் நாளில் அனைவர் முன்பாகச் சமாதிக்குள் செல்வார்கள் . பின்பு முறைப்படி கற் பலகையால் முறைப்படி மூடி விடுவாரகள். சமாதி சென்ற சித்தர் அவர் குறிப்பிட்ட நாளில் கற் பலகையைவிலக்கிக்கொண்டு மேலே வருவார் 
.
 
2.3
 திரும்பிவராத சித்தர் சமாதி . 
இவ்விதம் நிலசமாதி சென்று திரும்பிய சித்தர் மீண்டும் திரும்பிவராத சமாதி செல்வார் . இந்த நிலையில் உலகத்தவர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களை வழி நடத்தும் சித்தர்கள் துரிய தியான நிலையில்சமாதி இருப்பார்கள் . 
. .
எனவே சித்தர்களுக்கு இரண்டு சமாதியுண்டு
..
 
போகர் பழனியில் சமாதி சென்றார் . சமாதியில் இருந்து திரும்பிவந்து வேறு தேசம் சென்றுவிட்டார். அவர்மீண்டும் வருவார் என்று கோரக்கர் சந்திர ரேகை என்ற நூலில் சொல்லி உள்ளார் . 
கோரக்கார் நாகப்பட்டினம் புதுபட்டுவில் ( பொய்கை புத்தூர் )சமாதிசென்று துரிய தியான நிலையில் இருப்பதாகச் சந்திரரேகை நூலில் சொல்லி உள்ளார் 
.
 
திருமூலர் சிதம்பரத்தில் சமாதி சென்றார் . . . காலங்கி அவரிடம் தியான நிலையில் சித்தர் கல்வி கற்றார் ..
.
 
காக புசுண்டர் சமாதி செல்லவில்லை . பிரளய காலத்தில் காக வடிவு பெற்று வாழ்வதாகச் சொல்லி உள்ளார் . காகவடிவு என்பது பரிபாசை . பஞ்ச பட்சிகளில் காகம் என்பது. உகாரம்.. உகாரம் என்பது சக்தி .சக்திவடிவு என்பது ஒளி வடிவு . . .

. இராமதேவர் அரேபிய தேசம் சென்று யாகோப்பு என்று பெயரிடப்பட்டார் . அவர்களுக்குச் சித்தர் கலை சொல்லிக்கொடுத்து சீடர்களை உருவாக்கியபின் திரும்பிவரும் சித்தர் சமாதி சென்றார் . 30 ஆண்டுகள்சென்றபின் சமாதியில் இருந்து திரும்பி வந்தார் . அராபிய தேசத்தில் இருந்து மீண்டும் மதுரை அழகர் கோவில் வந்து தவம் செய்து திரும்பாத சமாதி சென்றார்,

2.4 சிலர் ஒளி உடலுக்குச் செல்கிறார்கள் .
.


3.
 சீவன் முக்தி யோகசமாதி மற்றும் இறுதி முக்தி .

3.1 சீவன் முக்தி 
.

சமாதியே சொல்லுகிறேன் வசிஷ்ட நாதா 
சந்ததிகள் லத்தனைக்கும் தெளிவதாக 
சமாதியே நீயானாய் வெகுநாள் யோகி
சாகும் நாள் தெரிந்தவரே சமாதிதன்னில் 
சமாதியே மண் மூடல் அறையாங்கல்லில்
தான் வைத்து மூடலல்ல ஒளியும்மல்ல
சமாதியே பிறர்காணா மறைவும்மல்ல 
தானிறந்து உயிர் விடலுமில்லை 
காகபுசுண்டர் பெருநூல் காவியம் . பாடல் 673

அல்ல வென்றால் சமாதிநிலை உயிராம்மூச்சில் 
அசைந்தாடும் சீவனுயிர் பிராணமூச்சு
சொல்லவென்றால் நூல் தோறும் சொல்லிவைத்தார் 
சுகமுடனே தானிருந்து எங்கிடாமல்
நில்லவல்ல பேர்களுமே மூச்சோடாமல் 
நிறுத்திடவும் தடுத்திடவும் உள்ளேதானே 
செல்லவல்ல பேர்களுமே சிவன் மால் போல 
தெந்தன மென்றாடலுமே உயிரின் சித்தே 
காகபுசுண்டர் பெருநூல் காவியம் . பாடல் 674

சித்தியா மிதுதானே சமாதியாகும்
சிவணானை மாலாணை சித்தி தானாம் 
முக்தியே இதுதானே சீவன்முக்த

காகபுசுண்டர் பெருநூல் காவியம் . பாடல் 675
பொருள் 
சித்தர்களில் காக புசுண்டருக்கு தனி இடம் உண்டு . பிரளய காலத்திலும் . இறவாமை என்ற நிலை பெற்றவர் . பல பிரம்மாகளைச் சந்தித்தவர் . 
காகபுசுண்டர் தனது சீடர் வசிஷ்டருககு சமாதியின் விவரங்கள் சொல்கிறார் 
 வசிஷ்டநாதா நமது சந்ததிகள் தெளிவு பெற சமாதி பற்றி விவரங்கள் சொல்கிறேன் .”
பலவித யோகசமாதியில் இருந்த யோகி தனது மரணத்தின் நேரத்தை அறிவார் . அவ்விதம் அறிந்தபின் தன்னை மண்ணால் மூடிக்கொள்வது சமாதி இல்லை அல்லது கல்லறை கட்டி அமர்வது சமாதி இல்லை.ஒளிவுடல் பெற்று பிறர் அறியாமல் மறைந்து போவதும் சமாதி இல்லை . 
தான் இறந்தபின் அடக்கம் செய்வதும் சமாதி இல்லை .

சமாதி பற்றி ஓவ்வொரு நூலிலும் பலவிதமாக சொல்லி வுள்ளாகள்
.
 இவையெல்லாம் சமாதி இல்லை என்றால் சமாதி என்பது எது என்று சொல்கிறேன் .. 
எதற்கும் விரும்பாத யோகி , வாசி யோகா சமாதியை இன்பமாக செய்து பழகியவர் மட்டுமே பிராண ஓட்டம் அல்லது உயிரின் சித்து என்ற சமாதி செய்ய முடியும் 
.
 உயிர் என்ற பிராணன் மூச்சுக் காற்றில் இருந்து அது அசைந்தாடும் விதம் அறியவேண்டும் . அந்தமூச்சுக் காற்று வெளியேயும் உள்ளேயும் ஓடவிடாமல் ( அதாவது பூரகம் ரேசகம் இல்லாமல் ) கும்பகம் மட்டும்செய்வது . இதன் படி மூச்சு காற்றாகிய பிராணனை கும்பகத்திலே உள்ளுக்குளே ஓவ்வொரு ஆதார தளத்திலும் ஏற்றி அங்கங்கே தடுத்து நிறுத்தி, மூலாதாரத்தில் இருந்து சுழி முனைக்கு ஏற்றி மீண்டும்பிடரிவழியாக மூலாதாரத்திற்கு இறக்கிச் சுழலச் செய்வது .. இதன் பெயர் பிராண ஓட்டம் . . இந்த பிராண ஓட்டம் நடத்துவது என்பதே சமாதி. இதைச் செய்பவர் சிவனுக்கும் பெருமாளுக்கும் ஒப்பாக சித்துவிளையாடுவார்கள் .. . இதுவே முக்தி . இது சீவன் முக்தி . அதாவது உயிருடன் முக்தி அடைதல் இது உயிரின் சித்து . .

இத்தகைய முக்தி அடைந்தவர் இன்று உள்ளாரா? பார்க்க முடியுமா .? 
உள்ளார் . அவர் ராமானுஜர் . ஸ்ரீரங்கம் கோவிலில் வெளிப் பிரகாரத்தில் சுமார் 1000 ஆண்டுகளாக சீவன் முக்தராக அமர்ந்துள்ளார் . அவரைத் தரிசியுங்கள் .. இது உலக அதிசயம் . அவர் இந்த அறிவைப்பெற்றது காக புசுண்டரிடம் . 
புசுண்டரின் மாணவர் வசிஷ்டர் . வஷிச்டரின் பேரன் பராசரர்,வசிஷ்டரிடம் காய சித்தி கற்றார் . பராசரர் பிரம்ம சூத்திரம் என்ற நூல், உடல் அழியாமை பற்றி அல்லது காய சித்தி அல்லது மரணம் அற்ற தன்மைபற்றி பிரணவ சூத்திரம் என்ற நூல் எழுதினார் . . இந்த நூல் யாமுனாச்சாரியார் என்ற ராமானுஜரின் மானசீக குருவிடம் இருந்தது . இது பரிபாசையாக உள்ளது இதற்கு யாரும் பாஷ்யம் என்ற உரை எழுதமுடியவில்லை

. யாமுனாச்சாரியார் இந்த நூலை ராமாநுஜரிடம் கொடுத்து உரை எழுதப் பணித்து மரணித்தார் . இதன்படி ராமானுஜர் இதற்கு உரை எழுதினார் . காய சித்தி என்ற சித்தர் கல்விகற்று சித்தர் வழி நடந்து சித்தராகிஜீவன் முக்தராக இன்றும் நம்மிடம் இருக்கிறார் இந்தநூல் ஸ்ரீரங்கம் கோவிலில் இருக்க வாய்ப்பு உள்ளது .
3. .
 யோக சமாதி 
காரியமான உபாதியை தான்கடந்து 
தாரிய காரணம் ஏழுந்தான் பாலுற 
ஆரியகாரண மாய தவத்திடை 
தாரியால் தற்பரம் சேர்த்தல் சமாதியே .-- திருமூலர் திருமந்திரம் பாடல் 639


இறைவனை நம்மிடம் இருந்து பிரிக்கும் துன்பச்செயலுக்குக் காரணமாகிய காமம் , குரோதம் , மதம் , மாச்சர்யம் , ஆணவம் , மாயை , கன்மம் ஆகிய ஏழு காரணங்களைக் கடக்க வேண்டும் . ஆரிய காரணம்என்ற இறைவனைச் சேரவேண்டும் என்ற காரணத்திற்காக , இயமம், நியமம் , ஆசனம், பிராணாயாம், பிரத்தியாகாரம் ,தாரனண , தியானம் ஆகிய ஏழு தவங்களைச் செய்யவேண்டும் . . இவ்விதம் ஏழு தவநிலைகளைக் கடந்து தற்பரம் என்ற நம்முள் ஒளி வடிவாய் இருக்கும் இறைவனைச் சேர்தல் யோக சமாதி .

எப்பொழுது இறைவன் ஒளி வடிவாய் தோன்றுவான் என்பதை திரு மூலர் சொல்கிறார் . 
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிட்டில் 
சாந்தியி லான சமாதியில் கூடிடும் 
அந்தமில்லாத அறிவின் அரும் பொருள் 
சுந்தர சோதியும் தோன்றிடும் தானே . --திருமூலர் திருமந்திரம் பாடல்294

மனிதப் பிறப்பில் மூலாதாரத்தில் சூரியகலை 12 கலைச் சக்தியாக அல்லது விந்து சக்தியாக உள்ளது . இடகலையில் சந்திர கலை 16 கலைச் சக்தியாக உள்ளது. இரண்டும் சமநிலை பெறவில்லை .. வாசிஉருவாக்கி வாசி யோக பிராணாயாம் செய்தால் தாரைகலை என்ற விந்துசக்தி கொண்ட நான்கு கலை உருவாகும் . ஆக விந்துகலை 16 கலையாக இருக்கும் இம் மூன்றும் ஆறு ஆதாரப் புள்ளிகளைக் கடந்துமேரு என்ற சுழிமுனை அடையும் இம்மூன்றும் நாதம் விந்து என்ற சமமான சக்தியாக சக்தி சமநிலை உச்சம் பெறும

விந்து சக்தியும் நாத சக்தியும் மேரு என்ற சுழிமுனையில் உச்சம் பெறும் .இணையும் அப்பொழுது சமாதிநிலை ஏற்பட்டு சமாதி கைகூடும். அப்பொழுது அறிவால் அறிய முடியாத அழகிய இறைசக்தி ஒளிவடிவில் தோன்றும் . இவ்விதம் இறைவன் ஒளிவடிவில் தோன்றும் சமாதி நிலைகள் ஐந்து என்று அகத்தியர் சொல்கிறார் அவைகளை விளக்குகிறார் காகபுசுண்டர் மாணவர் ரோம ரிஷி இந்த ஐந்து வித சமாதிநிலை கண்டவர்கள் . கருணை மிக்க தேவரிஷி என்ற முனிவர் என்ற நிலை அடைந்தவர்கள் .
,
 
பாரப்பா சமாதிவகை அஞ்சுங் கேளு
பதிவான தத்துவய சமாதி யொன்று
சாரப்பா சவ்விகற்ப சமாதி யொன்று
சார்வான நிருவிகற்ப சமாதி யொன்று
நேரப்பா சஞ்சார சமாதி யொன்று
நிலையான ஆரூட சமாதி யொன்று 
காரப்ப சமாதி அஞ்சும காத்தாயானால் 
கருணையுள்ள தேவரிசி முனியே யாவாய் 
அகத்தியர் பூரண காவியம் அஷ்டாங்க யோகம் பாடல் 53

சமாதியாம் சவ்விகற்ப சமாதிகேளு 
தனித்திடுதல் ரெண்டு வகை யதிலே யுண்டு 
சமாதியஞ் சத்தானு வித்தை யொன்று 
தரிப்பான திரவித்தை சமாதி யொன்று 
புமாதியஞ் சாத்தானு வித்தை மார்க்கம் .
புதியதொரு கைவல்ய சமாதிக்குந் தான் .
பமாதியாம் சத்தங்கள் சாட்சி ஓசை 
படுகிறது உன்மனதை பருவங் கேளே
உரோமரிசி பரிபாசை 300 பாடல் 45

பருவமருஞ் சத்தான வித்தை யொன்று 
படியான சவ்விகற்பம் மென்று பேரு
சருவமான தன்னை அனுசந்தானம் பன்னி 
சஞ்சரிக்கிற திரியானு வித்தை மார்க்கம் 
துருவமாம் திரிசானு வித்தை மார்க்கம் . 
சூச்சமா யந்த நிலைக்குள்ளே புக்கி 
மருவமாம சவ்விகற்ப சமாதியாகும்

மருவியதோர் சஞ்சாரித் திருக்கிற் பாரே
.
 உரோமரிசி பரிபாசை 300 பாடல் 46

பாரேநீ நிருவிகற்ப சமாதிகேளு 
பாங்கான தத்வலய சமாதி முத்தி 
தாறேநீ சத்தான வித்தை முத்தி 
தனைமறந்து தூக்கமது மயக்கம் போலே
வாறேநீ பிறர் சத்தம் காதிர் கேளா 
மருவியந்த பூரணத்தை லகித்து சித்தம் 
நீரேநீ சைதன்ய மாகிப்போனால் 
சமாதி என்ற நேர்மை ஆச்சு 
உரோமரிசி பரிபாசை 300 பாடல் 47

ஐந்துவகை சமாதி நிலைகளை மேற்சொன்ன பாடல்களில் சொல்கிறார்கள் அகத்தியரும் ரோமரிசியும் . அவற்றின் பொருள்களைப் பார்ப்போம் .. 
.

1. சவ்விகற்ப சமாதி
96
 தத்துவங்களும் ஒடுங்கப் பெற்று தன்னுள் ஒளி காணல் நிலையில் ஓசை கேட்டல். இதை சாத்தானு வித்தை என்றும் சொல்லுவார்கள் . இதை கைவல்ய சமாதி என்பாருண்டு. . திரிசானு வித்தைஅல்லது திரவிவித்தை என்பார்கள

2 சஞ்சார சமாதி 
96
 தத்துவங்களும் ஒடுங்கப் பெற்று தன்னுள் ஒளி காணல் நிலையான சவ்விகற்ப சமாதியின் மற்றொரு நிலை . . இதில் சாதகர் தன்னை அணுவாகப் பிரித்து சஞ்சாரம் செய்வார் . இதற்கு அனுசந்தானம்.என்றுபெயர் . இவ்விதம் பிரபஞ்சப் பயணம் செய்தவர்களுள் திருமூலரின் பிரபஞ்சப் பயணம் விரிவாக siddharyogam.com sidharசித்தர்யோகம். காம் siddharyogam.com வலைத்தளத்தில் சித்தர் பற்றியபகுதியில் உள்ளது . 
3.
 தத்துவய அல்லது தத்துவ சமாதி .
96
 தத்துவங்களும் ஒடுங்கப் பெற்று தன்னுள் ஒளி காணல் நிலையான சவ்விகற்ப சமாதியின் முதிர்ந்த நிலை . இதில் ஓசை அடங்கி விடும் மேற் சொன்ன மூன்று நிலை சமாதிகளில் தான் வேறு தெய்வம் என்றபூரணமாகிய ஒளி வேறு என்ற உணர்வு இருக்கும் இது துவைத நிலை .
. .
 
4 .
நிற்விகற்ப சமாதி.
மேற்சொன்ன மூன்று நிலை முதிர்ந்தபின், தன்னுள் 96 தத்துவங்களும் ஓசையும் ஒடுங்கும் . இந்த நிலையில் ஒளியாகிய பூரணத்துடன் தன்னை ஒளியாகா மாற்றி இணைந்துவிடல் . இந்த நிலை தூக்கம்போன்றதும் மயக்கம் போன்றதுமாகிய நிலை .. இது அத்வைத நிலை ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணைந்து இரண்டு அற்ற நிலை. அத்துவித நிலை . நான் சிவன் . தான் அவன் ஆதல் என்ற நிலை ..
இதில் நான்கு வகைகளைச் சொல்லுவார்கள் அவை 4. 1. லயம் , 4.2 விட்சேபம்4 .3 மனோராசியம் , 4.4 சுவாகம் . ஆகியவை 
4.1
 லயம் .
தத்துவ சமாதி முதிர்ந்து படிப்படியாக தான் வேறு தெய்வம் வேறு என்ற எண்ணம் மறைந்துவிடுதல் ஒலியுடன் தத்துவங்கள் ஒன்றிவிடல் .
4.2
 விட்சேபம். 
லயம் முதிர்ந்து ஒலியுடன் தத்துவங்கள் ஒன்றி சிறிது நேரம் உணர்வு அற்று தூங்கிய நிலை அடைந்து பிறகு விழித்தல் ..
4 3
 மனோராசியம் ,
விட்சேபம். நிலைகடந்து மனதின் தொகுப்பான அந்தகரணங்கள் மயக்க நிலை அடைவது . 
4.4
 சுவாகம்
மனோராசியம் நிலைகடந்து அந்தகரணங்களும் அறிவும் ஒளியுடன் இணைந்து தானே ஒளியாதல் . தத்துவங்கள் ஒளியில் கரைந்துவிடும் . 
தானே தற்பரம் என்ற தன்னுள் இருக்கும் இறைவனாக மாறல்.. ,


.

5 ஆரூட சமாதி.
மேற் சொன்ன நான்கு நிலைகளைக் கடந்தபின் , மௌன யோகத்தில் அல்லது சஞ்சார சமாதி நிலையில் முதிர்ந்து தானே அகண்டமான பிரபஞ்சமாக மாறிப்போதல் தானே தொம்பதம் என்ற இறைவனாகமாறுதல் .

இந்த ஐந்து சமாதி நிலைகள் கைகூடச் செய்தால் நீ தேவரிசி என்ற முனி நிலை அடைவாய் .
இறை அருள் பெறுக !!!தான் அவன் ஆகுக!!!

 

Comments