Lesson 21

நல்வரவு. இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன்லைன் வாசி யோகா வகுப்பு .
மாணவர் தகுதி : இயமம், நியமம் , மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

சென்ற பதிவில் அனாகதம் தளம் பற்றிப்  பார்த்தோம். விசுக்தி தளம் மற்றும் சக்கரம் பற்றிப் .பார்ப்போம் .


எறியே பன்னிரண்ட.டங்குல மேதாண்டி
யேறமாம் விசுக்க்தி என்ற தலமதாகும்
மாறவே யறுகோண வளையமொன்று
மகத்துவமாம் பதினாறு இதழு மாகும் 
ஆறவே இதழுக்கு லச்சரந்தான் 
--- - 
வகாரமது வேறோ இல்லோ இல்லோ
துணையான --- oஒஓ ஒள அம ஆம்
 

போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 56 


அம்முதல் பதினாறு எழுத்துமிட்டு
அறுகோண நடுவேதான் வகாரம் நிற்கும் 
வாமுதலாய் மயேஸ்பரனும மயேஸ்பரியும் நிறபார் 
மகத்தான சொர்பனத்துக் கிருப்புமாகும் 
பூ முதலாய் பூதமது வாயுவாகும் 
புகழான பீசமது அங்கு மாகும் 
நாமுதலா யதர்வண வேதந் தானாகும் 
நல்ல மனமே வாகனமாய் நாடலாமே

போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 57


நாட்டமா யிவருடைய தொழிலினன் றாய்
நடத்தலோடு ஓட்டல் மயங்கி கிடத்தல்
நீட்டமாய் நிருத்தளோடு கலங்க்கா திருத்தல் 
நிலை யஞ்சின் விபரத்தை நிலைக்க கேளு
பூட்டமாய் பொசித்தளோடு ராகங்க்கேட்டல் 
பொங்கியே கோபஞ்சன்டை சுமயைதாங்கள் 
ஓட்டமா யோங்க்காரம் உன்னை கண்டால் 
உயர்வாயை திறந்திடுதல் உண்மை கானே

போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 58

குரமையாய் நாதமது கண்டத்திற் காணும்
குறிப்பன திரேதகையின் கூறறு தானே .
போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 61 
மார்க்கமாய் மந்திரத்தை யுண்ணி யுண்ணி 
வாசியை நீ மறவாமல் மருவி பூட்டி 
ஆர்க்கமாய் அங்கென்று கும்பித்து நிற்கில் 
ஆத்தாளும் உமையாரும் அகம் மகிழ்ந்து 
மார்க்கமாய் வாதத்தின் வழியுஞ் சொல்லி 
வரிசையோடு அதற்க்கு வழியும் சொல்வார்
.
போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 63 


உள்ளும் மகேசன் உருக்கும் பரத்தடி 
தெள்ளியே நோக்க சிறுபிள்ளை தானாவான் 
அல்லும் கனிபோலேஆகும் சிவயோகம் 
துல்லியவாசி துடியாது சித்தியே
.
திருமூலர் கருக்கிடை வைத்தியம் .பாடல் 348


பொருள் 
அநாகத தளத்தில் இருந்து மேலே 12 விரல்கடை ஏறினால் இருக்கும் இடம் விசுக்தி. ....siddharyogam.comsiddharyogam.com

விசுக்தி சக்கர வடிவ அமைப்பு

விசுக்தி தளம் அறுகோண வடிவானது . அதைச்  சுற்றி வட்டம் உள்ளது . அந்த வட்டத்தைச்  சுற்றி பதினாறு தாமரை இதழ்கள் உள்ளன.
விசுக்தியின் நிறம் கருமை
விசுக்தியின் பஞ்சவித்து நாதம்
விசுக்தியின் உயிர் சக்தி 10 கலை .
விசுக்தியின் பூதம்  வாயு 
விசுக்தியின் அதி தேவதைகள் மகேஸ்வரன் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் சக்கரத்தின் நடுவே நிற்பார்கள்
விசுக்தியின் அதி தேவதைகள் தொழில் திரதேயி என்ற மாயை . மற்றும் மறைத்தல் .siddharyogam.com

விசுக்தியின் அவத்தை என்ற உணர்வுநிலை சொப்பனம்.
விசுக்தியின் செயல் நிற்றல் , நடத்தல் , ஓடல் மயங்கல் கலங்காது இருத்தல் ஆகிய  ஐந்து. உணவின் சுவை அறிதல் , இசை ரசித்தல் , கோபம் கொள்ளுதல் , சண்டைஇடல், மனச்சுமைகளைத் தாங்குதல் ஆகிய செயல்களும் நடைபெறக்  காரணமாகும்

விசுக்தியின் பீஜ மந்திரம் 
சிவமந்திரமான சி வில்விசுக்தி சக்கரத்தின் நடுவே இருக்கும். வங் என்றும்  உச்சரிக்கலாம் .
இதன் பஞ்ச பூத பீஜமந்திரம் ...” யம்
இதன் பதினாறு இதழ்களின் அட்சரம் 
- - -- -- -o - ஒள- - -  
விசுக்தி தளத்தில் மனதை நிறுத்தி மறவாமல் மந்திரம் ஓது. வாசியோகம் செய் . அப்பொழுது பத்தாம் வாசலுக்கான வழி சுழிமுனை செல்ல,திறக்கும் . இந்தத்  தளத்தில் இருக்கும் உமையார் என்ற மகேஸ்வரன், ஆத்தாள் என்ற . மகேஸ்வரி மனம் மகிழ்ந்து வேதிகள் செய்வதற்கான மார்கத்தையும் , படிப்படியாக செய்யும் முறைகளையும் சொல்லித்  தருவார்கள் . விசுக்தியில் நின்று வாசி யோகம் செய்தால், பத்தாம் வாசல் திறந்து வாசியோகம் சித்தி ஆகும். விசுக்தியில் நின்று சிவயோகம் செய்தால் முதுமை மறைந்து இளமை அடைவார்கள் . இதனால் சிவயோகம் சித்தி ஆகும். இந்தத் தளத்தில் வாசி யோகம் செய்து வேதை சித்தி செய்ய வேண்டல் சிறப்பு . குழப்பமான நிலையில் உண்மைத்  தன்மை அறிய வேண்டுதல் சிறப்பு . மறைப்பையும் மாயையும் நீக்க வேண்டல் சிறப்பு .. . 

விசுக்தி தளம் மற்றும் சக்கரம்