Lesson 2

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி. 

வாசியோக சந்தேகமும் நிவர்த்தியும்:

வாசி யோகத்தில் பிரிவு உண்டா ?

வாசி யோகம் என்பதில் இரண்டு வகை உண்டு.

ஒன்று அடிப்படை வாசியோகம் அல்லது வாசியோகம்.

மற்ற ஒன்று வாசியை வலது இடமாக வாசித்தால் வரும் சிவயோகம். சிலர் இரண்டையும் குழப்பிக்கொள்கிறார்கள். சிவயோகம் யோகிகளுக்கு மட்டுமே. வாசியோகம் இல்லறத்தார்க்கும் செயல்படும்.

வாசி யோகம் யார் செய்யலாம் ?

வாசி யோகத்தில் பிராணாயாமம் என்பது நான்காம் அங்கம். இதில் வாசி உருவாக்கினால் அது வாசி பிராணாயாமம். இந்த வாசி பிராணாயமத்தில் மூலாதாரம் என்ற குதத்திற்கு மேல் இரண்டு விரல் அகலம் உயரே மனதைப் பதிய வைத்து வாசி யோகம் செய்தால் யாருக்கும் எந்த துன்பமும் வராது. எந்த வயதினரும் இதைச் செய்யலாம். இது மூச்சுக்காற்றை நெறிபடுத்துதல்

  இது அடிப்படை வாசி யோகம். அதுவாக கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் மூச்சுக் காற்றை நெறிப்படுத்தினால் உடல் உறுப்புகள் சிவந்து இளமையுடன் இருக்கும்.முடி கருமையாக இருக்கும். இறைவன் நம்மை விட்டு நீங்கிப் போகமாட்டான். அடிப்படை வாசி யோகத்துடன் மூலிகை கல்பங்கள் உண்ணலாம்.

சிவயோகம் என்பது முப்பு என்னும் சாகா மருந்து உண்டு உயர் நிலை வாசி யோகம். பத்து ஆண்டு செய்வது. இதற்கு குரு உதவியும்,பல கட்டுபாடுகளும் உண்டு. இது மரணத்துக்கு ஒப்பான துயரம் தரும்.முடிவில் அழியா தேகமும் முக்தியும் தரும்.இது யோகிகளுக்கு மட்டுமே. இதில் மூன்று தீட்சை மூன்று ஆண்டு முடித்தால் சித்தர் தகுதி தரும். நான் முடித்து உள்ளேன்.எனக்கு சித்தர்களே குரு.

 மூலதாரத்தில் கால கணக்கோடு வாசியோகம் செய்து,குண்டலினி உருவாக்கி, மூலாதாரம், சுவாதிஸ்டானம்,மணிபூரகம், அனாகதம், விசுக்தி ஆக்ஞா, ஆகிய ஆறு தளங்களில் வாசியோகம் செய்து, மேலே ஏற்றி, குண்டலினியையும் மேலே ஏற்றி,பிடரி வழியாக ஒவ்வொரு தளமாக கீழே இறக்கி மூலாதாரம் அடையவேண்டும்.அப்பொழுது இரண்டு நாசி துவாரத்தின் வழியாகவும் வாசி யோகம் செய்ய வேண்டும். இத்தகைய வாசி யோகம் செய்பவர் யாரும் இல்லை.அப்படி செய்தவர் எமனை எட்டி உதைக்கும் தகுதி படைத்தவர்.இது சித்தர்களும்,யோகசித்தி அடைந்தவர் மட்டுமே செய்ய முடியும். இதை தினமும் நான் செய்கிறேன்.இதுவே சிவயோகம். இதை கற்றுக்கொள்ள குரு வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர் செய்யலாம்.

 

அடிப்படை வாசி யோகம் செய்ய தீட்சை பெற வேண்டுமா ?

செய்முறை சொல்லி தருவதே தீட்சை.குரு என்பவருக்கு மாணவர் தட்சணை  தரவேண்டும்.குரு கற்று கொடுக்க வேண்டும்.இந்த வகுப்பில் நான் யாருக்கும் குரு இல்லை.வழி காட்டி. மாணவர் இயம நியமத்துடன் அன்புடன் இருப்பதே நான் கேட்கும் கட்டணம்.நான் வேறு கட்டணம் கேட்கவில்லை.நான் சொல்லித்தரும் செயல்முறைகளே தீட்சை. .விருப்பமுள்ளோர் சாங்கியம் வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி சித்தர் படம் siddharyogam.comவைத்து அல்லது சாமிபடம் வைத்து சித்தரிடம் வாசியோகம் கற்றுதர வேண்டி கொண்டு பயிற்சி ஆரம்பியுங்கள்.வாசி யோகம் சித்தர் சொத்து.என்னுடையது இல்லை.சித்தரிடம் வேண்டுங்கள்.

இல்லறத்தில் இருந்து கொண்டு வாசி யோகம் செய்யலாமா?

 நான் செய்யும் வாசி யோகமும், நீங்கள் செய்யும் வாசி யோகமும், வஷிஸ்டர், விசுவாமித்திரர், வியாச ரிஷி, சுகர்,கக்கியர்.கும்பநாதர் என்ற அகத்தியர்,தெற்கு பக்கத்து சித்தர்கள்களும் செய்தார்கள்.இந்த யோகத்தைச் செய்து கொண்டு இல்லறவாழ்விலும் சிறப்பாக வாழ்ந்தார்கள்.

இல்லறத்தில் இருந்தாலும் முக்தி தானே .

 

வாசி யோகம் செய்ய தியான மண்டபம், காடு,குகை போகவேண்டுமா ?

வேண்டாம்.வீடு போதும்.இந்த உடம்புக்குள் ஜோதி என்ற இறைவன் உண்டு. அவனை வீட்டில் இருந்து உடல் என்னும் கூட்டில் கண்டு முக்தி பெறலாம்.

வாசி யோகம் செய்தால் செல்வம் போய்விடுமா?

 இல்லை.அறவழியில் செல்வம் வரும்.வறுமை வராது.வந்த செல்வம் போகாது.

குரு தீட்சை கொடுத்தால் முக்தியும் சித்தியும் கிடைக்குமா ?

இல்லை.நீங்கள் தான் வாசியோகம் செய்து முக்தி அடையவேண்டும். சாஸ்திரங்கள் படித்தோ, குரு தீட்சை பெற்றோ,மந்திரங்கள் ஓதியோ முக்தி siddharyogam.com பெறமுடியாது.வாசி யோகம் செய்ய வேண்டும்.

இருபது வயதிற்கு கீழ் வாசி யோகம் செய்தவர் விரைவில் மரணம் அடைவாரா?

இருபது வயதிற்கு கீழ் சிவயோகம் செய்து முக்தி பெற்றவர் விரைவில் பரு உடல் இழப்பார்கள்.

ஐம்பது வயதிற்கு மேல் தான் வாசி யோகம் செய்ய வேண்டுமா?

கட்டாயம் இல்லை.எந்த வயதிலும் அடிப்படை வாசி யோகம் செய்யலாம். சிவயோகம் நாற்பது வயதிற்கு மேல் எண்பதுக்குள் செய்யலாம்.

உடற்பிணி இருப்பவர் வாசி யோகம் செய்யலாமா?

  முடிந்த வரை செய்யலாம்.முடியாவிட்டால் செய்யவேண்டாம்.

வாசியோகம் செய்ய பத்தியம் உண்டா?

இல்லை.சரிவிகித உணவு எதுவும் சாப்பிடலாம்.சிலருக்கு சர்க்கரை,உப்பு சத்து இருந்தால்,அதற்கான பத்தியம் காத்தல் நன்று.நாளடைவில் நோய் கட்டுப்படும்