Lesson 19

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி ஆண் லைன் வாசி யோகா வகுப்பு . 
மாணவர் தகுதி : இயமம், நியமம் , மனித நேயமும் அன்பும் கடை பிடித்தல் அவசியம்.

சென்றபதிவில் சுவாதிஷ்டானம் தளத்தையும் சக்கரத்தையும் பார்த்தோம். இந்தப் பதிவில் மணிபூரகம் தளத்தைப்  படிப்போம்.


மாலினுட வீடதுதான் நறுவிரல்லின் மேலே
மாசற்ற பிறைபோலே கோட்டையாகும் 
மாலினுட வளையம்போல் பத்திதழதான்
பத்தமு னச்சரத்தின் பயனைகேளு
தாலினுட ஜனகமா முனியின்தாகந்
தயங்காத நரபர்ப்பர் தண்மையாகும் 
ஆலினுட மங்நடுவில் பூதம் அப்பு .
அதன் பீசம் வங்கென்று அறியலாமே
 --------------------------போகர் வைத்திய காவியம் 1000 பாடல் 43 


அறிந்த மணிபூரகத்தின் வீடுமாகும்
அப்பனே துரியமது யிருப்பிடந்தான்
பிறிந்தேசர் வேதமுமாம் படிகவர்ணம்
பிரியாம லச்சரந்தான் வாமபாகம் 
கறித்தஅறு சுவையுமங்கே காணலாகும் 
கதித்த மச்சையோடு உதரமூளை 
வெறித்ததோர் விந்துவோடு அஞ்சுமாகும் 
மிக்கசங்கு சக்கரமும் கருடவாகணமே
 ----------------------------------போகர் வைத்திய காவியம் 1000 பாடல் 44 


கார்க்கஉரு செபித்தநாடு புருவமததில்
கண்ணுமன கண்ணாலே நன்றாய் பார்த்தல் 
மார்கமுடன் லட்ச்சுமியும் விஷ்ணுதேவர் 
மகத்தான பூரணசந்திரன் போல் மைந்தா
ஏற்கையுடன் இருதயத்தில் காணும்பாறு
இண்பமுள்ள தரிசனத்தை கண்டாயானால் 
தீர்கமுளல சிவயோக வாழ்வு பெற்று
செல்வபதியாய் இருப்பாய் தினமும் நோக்கே
-------------------------அகத்தியர் வாத சௌமியம் பாடல் 61 
பொருள் :

மணிபூரகம் அமைவிடம் :
சுவாதிஷ்டானம் தளத்தில்இருந்து ஆறு விரற்கடை உயரத்தில் மணிபூரகத் தளம் உள்ளது.
மணிபூரகச் சக்கர அமைப்பு : 
நடுவில் சதுரம். அதைச் சுற்றிச் சக்கரம் என்ற வட்டம்.சக்கரத்துள் மூன்றாம் பிறை வடிவில் கோட்டை. வட்டத்தைச் சுற்றி பத்து தாமரை இதழ்கள். 
பஞ்சவித்து---- மகாரம் .
பஞ்ச பூதம்---- நீர் என்ற அப்பு 
நிறம்-------------- ஸ்படிகம் அல்லது பளிங்கு வெண்மை 
அவத்தை------ துரியம்  
உடலில் செயல்படும் இடம்---,சதை, இரத்தம்,மச்சை, மூளை விந்து ஆகிய ஐந்து இடங்கள். அறு சுவை அறியும் தன்மை.

வேதம்---- யஜூர் வேதமாகும்
அதிதேவதைகள்----- திருமாலும் லக்ஷ்மியும் ஆவார்கள்.கருடனும் சக்கரத்தாழ்வரும் திருமாலுடன் இருப்பார்கள். 
பீஜ மந்திரம்----- இந்தத் தளத்தின் பூத மந்திரம் வங்
இந்தத்தள விஷ்ணு மந்திரங்கள்---- அரிநமோ நாராயண,  ஓம் நமோநாராயணாயா.www.siddharyogam.com..
.
 
இந்தத்தளத்தின் லக்ஷ்மி மந்திரம்-- ஸ்ரீயும் 
சிவ மந்திரம்--- ம. உச்சரிப்பு மங் அல்லது மம்
எந்த மந்திரம் சொன்னாலும் நன்று.ஆயினும் வாசி யோகா பிராணாயாமத்தில் ஸ்ரீயும் அல்லது மங் அல்லது மம்  ஆகிய அட்சரங்கள் சொல்லி வாசி உருவாக்கல் சிறப்பு. இவ்விதம் தினமும் வாசி யோகம் செய்..www.siddharyogam.com
இந்தத்தளத்தின் தொழில்--- காத்தல்
மணிபூரகம் தளத்தில் மனதை நிறுத்தி, ஸ்ரீயும் அல்லது மங் அல்லது மம்  என்ற அட்சரத்தைச் செபித்து வாசி உருவாக்கவேண்டும். தினமும் வாசி யோகம் செய். அங்கு மனக்கண்ணால் மணிபூரகத்தைப் பார்த்தால் அங்கு திருமாலும் லக்ஷ்மியும் தோன்றி அருள் செய்வார்கள். வெள்ளைநிற பூரணச் சந்திரன் போல் ஒளி தெரியும். . அனைத்துச் செல்வங்களும் பெற்று செல்வபதியாய் இன்பமான வாழ்க்கை பெறுவார்கள். சிவ யோக வாழ்வும் கிடைக்கும். அதாவது உடலும் உயிரும் காக்கப்படும்.நீண்ட ஆயுள் பெறுவார்கள். இதற்கான வேண்டுதல் இங்கு செய்யலாம்.

Swadhishtanam