Lesson 18

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

சென்ற பாடத்தில் ஆதார தளங்களின் அடிப்படையான மூலாதாரம் பற்றிப் பார்த்தோம். 25 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் மூலாதாரத்தில் இருந்து பிராணயாமம் செய்தால் போதும். 25 வயதிற்கு மேல் இருப்பவர்கள் வாசியுருவாக்கி பிறதளங்களில் நின்று வாசி யோகம் செய்யலாம். 
மூலாதார தளத்திற்கு மேலே உள்ள தளம் சுவாதிஷ்டானம். .அனைத்துச் சித்தர்களும் இதுபற்றிப் பாடி உள்ளார்கள். அவற்றுள் போகர் சிறப்பாகச் சொல்லி உள்ளதையும் அகத்தியர் மற்றும் திருமூலர் சொன்னதையும் பார்ப்போம்

.
துதிசெய் மூலத்தை தாண்டி அப்பால் 
துடியான நாலங் குலமே தாண்ட 
பதிசெய்த பிரம்மனுட வீடுமாகும்
பகர்ந்த சுவாதிஷ்டானம் மென்றுபேரு
அதிசெய நால்வட்டாக வலயஞ்சுத்தல்
ஆறிதழ் தானச்சரத்தை யறியகேழு 
பதிசெய்த பாமபுராமா யாக வந்தால்
பாங்கான நாடு பீசம் லங்நங் ஆமே
 -------------------------------போகர்  வைத்திய காவியம் 1000 பாடல்  35 

நகாரம்மென்ற எழுத்ததுவும் பிரமர்க்காகும்
லாஎன்ற எழுத்ததுவும் பிரிதிவி பீஜம்
வகாரம்மென்ற துரியத் திருப்பிடந்தான்
புகழ்கின்ற இருக்கான வேதமாகும்
அகாரம்மென்ற அன்னமாம் வாகனந்தான்
அதனுடைய நிறம்பொன் நிறமுமாகும்
மகாருகின்ற இவருடைய தொழிலின் கூறு
மயிரெலும்பு இறைச்சிதோல் நரம்போடன்சே
 -----------------போகர்  வைத்திய காவியம் 1000 பாடல்  36


அஞ்சான பொன்னிநிறம பிரம்மன் பக்கம் 
அடங்காத வாணி நிறப்பாள் ளறிந்துகொள்ளு
------------------போகர் வைத்திய காவியம் 1000 பாடல்  37

கேளடா நிலையறிந்து வாசிகொண்டு 
கீழ் மேலும் நன்றாக நின்றுபாரு 
சூலட நின்றநிலை பார்க்கும் போது
ஜோதிஒன்று தோன்றுமடா பிரம்ம சொரூபம் 
ஆளடா பிரம்மநிலை ரூபம் கண்டால் 
அடங்காத வாசியது அடங்கும் வீட்டில்
கானடா வாசியது அடங்கி நின்றால்
கண்ணடங்கா பூரானத்தை காணலாமே
-----------------------------அகத்தியர் வாத சௌமியம் பாடல் 59

கொண்ட இச்சக்கரம் கூத்தன் எழுத்தைந்து----------------------திருமூலர் திருமந்திரம் பாடல் 949 


நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும் 
--------------------------திருமூலர் திருமந்திரம் பாடல் 947


ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் 
ஆகின்ற ஐம்பத்தோர் எழுத்த்துள் நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் தானே .
------------------------------திருமூலர் திருமந்திரம் பாடல் 945 

சுவாதிஷ்டானம்.

இருப்பிடம் :
மூலாதாரத்தில் இருந்து அவரவர் கைவிரல் அளவில் நான்கு விரல் அளவு மேலே உள்ளது சுவாதிஷ்டானம்..

சக்கர அமைப்பு  
நாற்கோணம் என்ற சதுரம் .அதை சுற்றி வட்டம் . வட்டத்தை சுற்றி ஆறு தாமரை இதழ்கள். இதன் நிறம் பொன்நிறம் என்ற மஞ்சள்..
 
மந்திரம் 
ஆதார தளங்களில் கூத்தன் என்ற சிவன் பீஜ மந்திரம் ஐந்து எழுத்து மந்திரமான நமசிவயஉள்ளது . ஐந்து பூதங்களான மண் , நீர், நெருப்பு , காற்று , ஆகாயம் உள்ளன. அதன் நிறங்களும் உள்ளன. 
ஆறு ஆதாரதளங்களில் உள்ள மொத்த இதழ்கள் ஐம்பது. இதனுள் ஐம்பது எழுத்துக்கள் அடங்கும் . நிராதார தளமான சகஸ்ராரத்தில் ஓம் என்பது ஒரு எழுத்து உள்ளது. அதையும் சேர்த்து 51 எழுத்துக்களாக விரியும். அக்காலத்தில் தமிழுக்கு ஐம்பத்தியொன்று எழுத்துக்கள்  என்றும் கூறுவர். siddharyogam.com சமஸ்கிருதத்தில் 51 எழுத்துக்கள் என்றும் கூறுவர். 

இந்த 51 எழுத்துக்களும் ஐந்து எழுத்தில் அடக்கம். எனவே ஐந்து எழுத்து பீஜ மந்திரத்தையும் ஓம் உச்சரித்தல் சிறப்பு அல்லது போதும். 

சுவாதிஷ்டான  தளத்தின் பீஜ மந்திரம்  லங் அல்லது லம். அல்லது நங் அல்லது நம் 
இத்தளத்துள் இருப்பது உகாரம் என்ற பஞ்ச வித்து. இத்தலம் பிருதிவி என்ற மண்ணின் கூறு  siddharyogam.com பிருதிவியின் பீஜ மந்திரம் லா. இதை லங் என்றும் லம் என்றும் உச்சரிக்கலாம்.. சிவனின் பீஜமந்திரமானது நமசிவய “ . இந்த மந்திரத்தில் என்பது மண் பூதமாகும். நஇதை நங்என்றோ அல்லது நம்என்றோ உச்சரித்தல் வேண்டும் . 
இந்த தளத்தின் உணர்வு நிலை அல்லது அவத்தை துரியம்என்ற உணர்வுநிலை. ஒருவர் தியானம் செய்யும்பொழுது ஐந்துவகை அதிர்வு அலைகள் உருவாகின்றன என்று இன்றைய அறிவியல் சொல்கிறது. அதன்படி துரியம் என்ற நிலையில் உருவாவது காமா அதிர்வலை ஆகும் .

இத்தளத்தின் அதி தேவதைகள் பிரம்மாவும் சரஸ்வதியும் ஆவார்கள். இவர்களிடம் படைத்தல் என்ற குழந்தை வரம் வேண்டல் சிறப்பு. அறிவு ஆற்றல் பெறவும் பிற படைப்புகள்,நூல்கள் , திட்டங்கள் செய்வதற்க்கும் இந்தத் தளத்தில் வேண்டுதல் செய்யவேண்டும்.

Mooladharam