Lesson 17

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

சென்றபதிவில் இறைவன் 96 தத்துவமாக மனிதனாக மாறி உள்ளான் என்று பார்த்தோம். இந்த தத்துவங்களுள் ஆறு ஆதார தளங்கள் முக்கிய மானவை ஆறு ஆதார தளங்களே மூச்சுக் காற்றை இயக்கும் தளங்களாக உள்ளன. இதில் வெட்டாத ஆறு சக்கரங்ககள் இயங்குகின்றன. இந்தச் சக்கரங்களையும் அவற்றின் இயக்கங்களையும் சித்தர்கள் மனக்கண்ணால் பார்த்துப் பதிவு செய்து உள்ளனர். அதைப் பாடல்களாகச் சொல்லி உள்ளனர். இதன் அடிப்படையிலும் எனது அனுபவ அடிப்படையிலும் சிகரங்களின் அமைப்பை நான் யோகினி. Gabriele Sielmann அவர்களிடம் விவரித்தேன். யோகினி என்னிடம் ஆன்லைனில் வாசியோகம் பயின்றவர். வாலை ஒளி பார்த்தவர். பன்முக அறிவு கொண்டவர் . siddharyogam.comஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சிறந்த டாக்டர், ரெய்கி மாஸ்டர், பல நூல் களுக்கு ஆசிரியர் . மூன்று உயர் அறிவுசார்ந்த குழு நடத்துகிறார். சிறந்த அறிவுசார்ந்த .படைப்பாளி. உயர்ந்த ஓவியர். ஆதாரங்களைப் பற்றி நான் அனுபவித்ததையும் அறிந்ததையும் அவரின் அறிவைப் பயன் படுத்தி ஓவியமாக வரைந்து நமக்கு தந்துள்ளார். பலநாட்கள் இதற்குச் செலவு செய்தோம். இருவரின் பெயர் முதல் எழுத்துக்களும்  ஆதாரச் சக்ர ஓவியங்களில் RR R.G என்று குறிக்கப்பட்டு உள்ளது அவரின் சித்தர் பணியை நன்றியுடன் போற்றுவோம்.

 
மூலாதாரச் சக்கரம்: 
மூலாதாரம் இருக்குமிடம் . 
நாபிக்குக்  கீழே பன்னிரெண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர் 
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின் 
கூவிக் கொண்டீசன் குடி இருந்தானே
---------------திருமூலர் திருமந்திரம் பாடல் 579 


மூலத்திரு விரல் மேலுக்கு முன்னின்ற 
பாலித்த யோனிக் கிருவிரல் கீழநின்ற 
கோலித்த குண்டலி யுள்லெழுஞ் செஞ்சுடர் 
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே
-------------------திருமூலர் திருமந்திரம் பாடல் 580 


தொப்புளுக்கு நாள் விரல்கடை உள்ளேயும் அங்கு இருந்து 12 விரல் கடை பருமன் கீழேயும் உள்ள இடத்தில் மூலாதாரம் உள்ளது. மலத் துவாரத்திற்கு இரண்டு விரல்கடை மேல் உள்ளது. குறிக்கு இரண்டு விரற்கடை கீழ் உள்ளது.இங்கு குண்டலி உருவாகும். மூலாதாரத்தில் நின்று வாசியோகம் செய்வது அங்கு தாபிக்கும் மந்திரம் . ஓம் . . இதை அறிந்து செய்தால் உடலையும் உயிரையும் இணைக்கும் இறைவன் விரும்பி அங்கு குடியிருப்பான் . உயிர் நிலைத்து இருக்கும் . 


மேலைநிலத்திணன் வேதாக பெண் பிள்ளை 
மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தியை 
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க 
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே
 ----------திருமூலர் திருமந்திரம் பாடல் 590 


மூலாதாரத்தில் ஆண்களுக்கு ஆண்தன்மை கொண்ட உயிர்ச் சக்தி. இது எதிர்மறை உயிர்ச் சக்தி ( விந்து சக்தியாக உள்ளது). இதை மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தியை என்கிறார் திரு மூலர். அகாரம் என்கிறார் போகர். விந்து சக்தி குண்டலி வழி மேலே ஏறி மேலை நிலம் என்ற ஆக்ஞா சக்கரத்தில் உள்ள பெண் சக்தியான நாதசக்தியுடன் இணைந்தால், வாலை உருவாகி, அமிர்தம் சுரக்கும். அதனால் முதிர்ந்த வயதானவர் இளமை அடைவர். நந்தி என்ற சிவனின் மேல் சத்தியம். இது உண்மை.siddharyogam.com

 
மூலாதாரத்தை பார்க்கும் விதம் . அதன் அதி தேவதாக்கள்

 
காணவே ஓங்காரம் பிரதானம் தான்
கருவான ஆதார மூலபீடம்
 --------------------அகத்தியர் அந்தரங்க தீச்சா விதி பாடல்32 

பாரப்பா நயன வொளி சூச்சத்தலே 
பரிவான மூலமதில் ஆறு ஆதாரம்
 ----அகத்தியர் அந்தரங்க தீச்சா விதி பாடல் 24 

ஓசைஎன்ற சத்தம் உதித்து அடங்கும் வீட்டை 
உத்தமனே மனக்கன்னல் நித்தம் பாரே--அகத்தியர் அந்தரங்க தீச்சா விதி பாடல் 25 

சோதி என்ற ஆதார மூலம் பார்த்து 
புத்தியுடன் அடிமூலம் தன்னில்நீயும் 
பதிவாக இன்பமதாய உருவே செய்தால்
சிட்தியுள்ள கணபதியும் வல்லபையும் மைந்தா
சிந்தைதனில் ஒளிவிளக்கை தரிசிப்பாயே
-அகத்தியர் அந்தரங்க தீச்சாவிதி பாடல் 26 

தரிசிப்பாய் தினந்தோறும் தியானம் பண்ணி .
தேர்கமுடன் மானசமை பூசை செய்தால் 
பக்தியுடன் சக சித்தும் கைகுல்லாமே------அகத்தியர் அந்தரங்க தீச்சா விதி பாடல் 27 


ஆறு ஆதாரங்களுக்கும் தலையாயது மூலாதாரம்.மூலாதாரத்தை அடிமூலம் என்பார்கள். மனக்கண்ணால் உள்முகமாய் மூலாதாரத்தைப் பார். இப்படி உள்முகமாய் பார்ப்பது. பிரத்தியாகாரம் எனப்படும். (பின்பு விரிவாகப் பார்ப்போம்). ஓசை உருவாவதும் ஒடுங்குவதும் ஓம் என்ற தலையாய மந்திரத்தில் மட்டும் தான். மனதை மூலாதாரத்தில் நிறுத்தி,. ஓம் என்னும் மந்திரத்தை உச்சாடனம் செய்து, வாசியோகம் செய்து, தியானம் செய் (தியானம் பற்றி பின்பு விரிவாகப் பாப்போம்). இப்படித் தினந்தோறும் siddharyogam தியானம் செய். அப்பொழுது மூலாதார அதி தேவதைகளான கணபதியும் வல்லபையும் தோன்றுவார்கள். ஆனால் அவர்களை ஒளிவடிவில் காண. உனக்கு சகல சித்துகளும் தருவார்கள்.
மூலாதாரத்தை போகர் விவரிக்கிறார்.siddharyogam.com

காணவே மூலமது அகண்டம் போல 
காரனமாய் திரிகோனமாக நிற்கும் 
பூணவே மூன்றின்மேல் வலயமாகும் 
புறம்பாக இதழ் அதுவும் நாழு மாகும்
காணவே காற்கமலைத்து அச்சரங்கள் 
நலமான வ ச ஷ ஸ வ வும் மாகும் 
மூணவே முக்கோணத்து உள்ளொளி ஓங்காரம் 
முயற்சியாய் அதற்குள்லே அகாரமாகும்----------.போகர் 7000 முதல் காண்டம் பாடல் 11


ஒடுங்கிய தோர் முனை ஒன்றில் சக்தி கதளிப்பூவாய் 
உகாரமை முகம் கீழ் க் குண்டலியம் சக்தி 
பெண்பாம்பு போல் சுருட்டி சீறிக்கொண்டு
அகாரமாய் சுழிமுனை வுடுருவி நிற்பாள்
துரியாதீதம் என்ற அவத்தை தானே ---------------போகர் 7000 முதல் காண்டம் பாடல் 12 

கூறவே மூலததில் வாசிகொண்டு 
கோழி முட்டை போலிருந்து முக்கோணத்தில் 
மாறவே இடை பின்னை இரண்டும் ஓடும் 
மற்றொன்று சுழிமுனைதான் மகிழ்ந்து கேளே 
அகத்தியர் அந்தரங்க தீச்சா விதி பாடல்353
ஓம் என்ற பிரணவமே மூல பீடம் 
------------------------அகத்தியர் பரி பூரணம் பாடல் 379 


மூலாதாரம் அகண்டம் என்ற பிரபஞ்சம் போன்றது. காரண தேகம் என்ற நிலையில் மூலாதாரச் சக்கரம் இயங்குகிறது. இதை மனக்கண் கொண்டு பார்க்க முடியும். .வெட்டப்படாத சக்கரம். முக்கோண வடிவு உடையது. 

ஒரு கோணத்தில் வல்லபை சக்தியும், இரண்டாம் கோணத்தில் கணபதியும், மூன்றாம் கோணத்தில் குண்டலி சக்தி பெண் பாம்புபோல் சுருண்டு சீறிக்கொண்டு உள்ளது. முக்கோணத்திற்கு உள்ளே ஓம் என்ற பிரணவம் உள்ளது. அதனுள் அகாரம் என்ற விந்து சக்தி உள்ளது.
முக்கோணத்தை சுற்றி வலையம் உள்ளது. அதற்கு வெளியே நான்கு தாமரை இதழ்கள் உள்ளன. 

இங்குள்ள குண்டலி சக்தி அகாரம் என்ற விந்து சக்தியை, சுழிமுனைக்கு பிற தளங்களை ஊடுருவி எடுத்துச் செல்ல தயாராக உள்ளது.
மூலாதாரத்தில் இடகலை பிங்கலை நாடிகள் பின்னிக்கொண்டு ஓடும். வாசி யோகம் செய்வதால் அதை ஊடுருவிக்கொண்டு சுழிமுனை நாடி உருவாகும். இதன் வழி குண்டலி சக்தி விந்து சக்தியை சுழிமுனைக்கு எடுத்துச் செல்லும். 

அகர , உகார , மகார நாத விந்து என்ற பஞ்ச வித்துக்கள் மற்றும் நிலம்,நீர், தீ ,காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒடுக்கம் மூலாதாரம்.
படைத்தல் ,காத்தல், அழித்தல் , மறைத்தல் அருளல் என்ற ஐந்து தொழில்கள் நடைபெறும் இடம்.
இதன் நிறம் மாணிக்கச் சிவப்பு .. . .
 

மூலாதாரம்