Lesson 11

நல்வரவு இது கட்டணம் இல்லா சித்தர் பணி. ஆன் லைன் வகுப்பு. 

மாணவர் தகுதி: இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

வாசி யோகத்தால் இறைவனைக் காண முடியுமா ? வாசி எங்கே உருவாகிறது ? எப்படி உருவாகிறது ? எப்படி இருக்கிறது ?எவ்விதம் பயணிக்கிறது ? அதனால் பயன் என்ன ?

சென்ற பாடத்தில் வாசியோக பிராணாயாமத்தில் ஐந்து நிலைகள் உள்ளது. வாசியோகத்தின் பிரதான மந்திரம் ஓம். அதை உச்சரிக்கும் முறை பார்த்தோம் . இப்பாடத்தில் மேலே சொன்ன கேள்விகளுக்குப் பதில் பார்ப்போம்.

 
காணவே ஓங்காரம் பிரதானம் தான்
கருவான ஆதார மூல பீடம்
தோணவே மூலம்மென்ற ஆதாரத்தில்
துலங்கி நின்ற ஆவியட வாசியாச்சு
பேணவே ஆவிஎன்ற வாசிஎறி
பெருகி நின்ற ஆதாரம் கடந்தபபாலே
பூணவே ரவி மதியில் சுடரில் சென்று
புத்தியுடன் பூரணமாய் தீபம் பாரே
------------------------------அகத்தியர் அந்தரங்க தீட்சை விதி பாடல் 32


கூறவே மூலத்தில் வாசி கொண்டு
கோழி முட்டை போலிருக்கும் முக்கோணத்தில்
மாறவே இடை பின்னாய் இரண்டும் ஓடும்
மற்றொன்று சுழிமுனைதான் மகிழ்ந்து கேளே
------------அகத்தியர் அந்தரங்க தீட்சை விதி பாடல் 353

வாசியோகத்தின் பிரதான மந்திரம் ஓம். இந்தமந்திரம் மூலாதாரத்தின் பீஜ மந்திரம். இந்த ஓம்  என்ற மந்திரத்தை மூலாதாரத்தில் உச்சரித்து வாசி உருவாக்க வேண்டும். மூலாதாரம் என்ற இடம் மலவாய்க்கும் குறிக்கும் நடுவே முதுகுத் தண்டின் அடியில் உள்ள இடம். இது ஆறு ஆதாரதளங்களில் அடியில் இருப்பது. எனவே அடி மூலம் என்ற பெயர் உண்டு . ஆதார தளம் பற்றி விரிவாக வரும் பதிவில் பார்ப்போம்.
எனவே வாசி மூலாதாரத்தில் உருவாகிறது. அது ஆவியாக இருக்கிறது. ஆவி என்பது காற்றும் வெப்பமும் சேர்ந்தது. அதனுடன் இணைந்த நுண்துகள்களாக  நாதசக்தி அல்லது விந்துசக்தி கலந்து உள்ளது.
ஆரம்பத்தில் இது குண்டலினியாக உள்ளது. சரியான கால நிர்ணயத்துடன் நெறிப்படுத்தி பிரானாயாமம் செய்து வாசியை உருவாக்குவதால் குண்டலினி வாசியாக மாறும்.
எனவே வாசி  உருவாக்குவதால் குண்டலினி  வாசியாக மாறும். இந்த வாசி மூலாதாரத்தில் தார கலை என்ற சுடர் கலை உருவாக்கும். மூலாதாரத்தில் இயற்கையாக உள்ளது. இடகலை அல்லது சந்திரகலை மற்றும் பிங்கலை என்ற சூரியகலையுடன் இந்த தாரைகலை  என்ற சுடர்கலை சேர்ந்து சக்தி சமநிலை உருவாக்கும். சக்தி சமநிலை பற்றி சென்ற பாடத்திலும் அதன் விளக்கத்திலும் பார்த்தோம். சக்தி சமநிலையால் உடல் அழியா நிலை பெறும்.
மூலாதாரத்தில் உருவான இந்த வாசி, சுழிமுனை என்ற சுடர்கலை நாடி உருவாக்கும். அதன் மூலம் சூரியகலை சந்திரகலையுடன் சேர்ந்து, மூலாதாரத்தில் இருந்து சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி,ஆக்ஞா  ஆகிய தளங்களுக்கு வாசி யோக முறைகளால் ஏறும். சூரியகலையும் சந்திரகலையும் பிணைந்திருக்கும். siddharyogam.comஇது பாம்புகள் இணை சேர்வது போல் பிணைந்து இருக்கும். எனவே சூரியகலையும் சந்திர கலையும் இணை சேர்ந்த பாம்பு போல் உருவகப்படுத்தி படம் வரைவார்கள். இரண்டின் நடுவில் சுழிமுனை நாடியில் வாசியாக மாறிய குண்டலினி அல்லது வாசி மேலே ஏறும்.
இம்மூன்று கலையும் அதாவது சூரிய கலை (எதிர்மறை ) 12 + தாரைகலை என்ற சுடர் கலை 4(எதிர்மறை சக்தி) .இரண்டும் சேர்ந்து 16 எதிர் மறை சக்தி உருவாக்கும்.  சந்திரகலை 16 நேர்மறை சக்தி கொண்டது . 16. நேர்மறை சக்தியும் 16 எதிர்மறை சக்தியும் சேர்ந்து அதாவது சூரியன், சுடர் என்ற தாரை, சந்திரன் ஆகியவை சேர்ந்து 32 கலை கொண்ட பூரணம் என்ற ஒளியாகத் தோன்றும். அதாவது பிரபஞ்ச இறைச் சக்தி, வாசியோகத்தின்படி உடலுள் ஒளியாகத் தோன்றும் . இந்தப் பூரணம் என்ற இறைவனை வாசியோகம் செய்து பாருங்கள்.


வாசி பிராணாயாமத்தில் பூரகம் எப்படிச் செய்வது ?
பூரகம் என்பது மூச்சுக் காற்றை உள்ளே இழுப்பது. மூச்சை வேகமாக இழுக்கக் கூடாது என்று சென்ற பதிவில் பார்த்தோம். அதன் தீமைகளையும் பார்த்தோம் .
எனவே மூச்சுக்காற்றை மெதுவாக இழுக்கவேண்டும். ஏன் ? விடை காண , சுவாச உறுப்புகளையும், சுவாச நடப்பையும் பார்ப்போம்.

சுவாசத்தில் முக்கிய பங்கு வகிப்பது  நுரை ஈரல். இது வலது பக்கம் மூன்று அறைகளும்,  இடதுபக்கம் இரண்டு அறைகளும் கொண்டது. சராசரி ஆண்கள் நுரையீரல் 4 முதல் 4.5 லிட்டர்  கொள் அளவு கொண்டது. பெண்களுக்கு 3.5 முதல் 4 லிட்டர் கொள் அளவு கொண்டது. இதில் 1.5 லிட்டர் காற்று தங்கி இருக்கும். அதிகபட்சமாக 2 முதல் 3. லிட்டர் காற்று சுவாசிக்கப்படும். ஆனால் சாதாரண மனிதன் 0.5 லிட்டர் முதல் 1 லிட்டர் காற்று தான் சுவாசிக்கிறான். இதனால் 60  முதல் 70 ஆண்டு வாழ்கிறான்.
பிராணாயாம பயிற்சி மூலம் சுவாச அளவை 2 முதல் 3 லிட்டராகக் கூட்டினால் சக்தி அளவும் அதனால் ஆயுள் கூடும். 100 ஆண்டு வாழ்வது திண்ணம்.
.
வேகமாகக் காற்றை இழுத்தால், அடியில் இருக்கும் அறைகளுக்கு காற்று செல்லாமல், உராய்வு அதிகரித்து காற்றை உள்ளே தங்கவிடாமல் உடனே காற்று வெளியேறும். இதனால் அடியில் தங்கிய காற்று வெளியேறாது. கழிவுகளும் முழுமையாக வெளியேறாது .நோய்கள் உருவாகும். ஆயுள் குறையும்.
இந்த அளவைக் கூட்ட நுரையீரல் முழுவதும் காற்றை நிரப்பவேண்டும். அதற்கு மெதுவாக சுவாசித்து நுரை ஈரலின் ஐந்து அறைகளையும் நிரப்ப வேண்டும். இதற்கு போதியநேரம் மெதுவாக இழுத்து காற்றை நிரப்ப வேண்டும். எவ்வளவு நேரம் உள்ளே இழுக்க வேண்டும் .16 நொடியா,  32 நொடியா?  என்ற சந்தேகம் உள்ளது. siddharyogam.com
மூச்சுககாற்று இழுக்கும் அளவைக் கூட்ட நுரை ஈரலின் கொள் அளவைக்  கூட்ட முடியுமா ?
முடியும் என்கிறது அறிவியல். நிமிர்ந்து உட்காரும் போது. நுரையீரல் கொள்ளவு அதிகமாக உள்ளது. எனவே பிராணாயாமம்  செய்யும் போது நிமிர்ந்து உட்காருகிறோம். மேலும் பயிற்சிகளால் நுரையீரல் கொள்ளளவு  அதிகரித்து 6 முதல் 7 லிட்டர்வரை அதிகரிக்கும்.
ஆகவே  பிராணாயாமம் ஆரம்பத்தில் குறைந்தநேரம் மூச்சு இழுத்தவர்கள் பயிற்சியால் அதிக நேரம் மூச்சு இழுக்க முடிகிறது. மூச்சு அளவு அதிகரிக்கிறது. ஆரோக்கியம் வளர்கிறது. ஆயுள் கூடுகிறது.


 
உள்ளே நிறுத்துதல் கும்பகம் :
மேலும் உள்ளே இழுத்த காற்று அசுத்தத்தை மாற்றிக்கொள்ள  எவ்வளவு நேரம் பிடிக்கும்? சாதாரணமாக சுவாசிக்கும் பொது யாரும் காற்றை உள்ளே நிறுத்துவது இல்லை. பிராணாயாமத்தில் தான் உள்ளே நிறுத்துகிறோம். எனவே கழிவுகள் அதிகமாக வெளியேறும் . உடல் சுத்திபெறும். ஆயுள் கூடும். இதற்கு  64 நொடிகள் தேவை. இதில் நண்பர்களுக்குச் சந்தேகம் இல்லை


வெளிவிடல் ரேசகம் :

வெளிவிடும் மூச்சுக்கற்றின் நேரம் உள்ளே இழுக்கும் நேரத்தை விட அதிகமா குறைவா .? அல்லது வேகமாக வெளிவிட வேண்டுமா அல்லது மெதுவாக வெளிவிடவேண்டுமா ?
உள்ளே சென்ற மூச்சுக் காற்றுக் கழிவுகளை எடுத்து அசுத்தமாகிவிடும்.. எனவே அதை விரைவாக வெளியேற்றவேண்டும். அதாவது உள்ளே இழுத்த நேரத்தைவிட குறைந்தநேரத்தில் வெளி விடவேண்டும். அதிக பட்சம் சமமாக இருக்க முடியும். அதற்கும் அதிகம் இருந்தால் கழிவு வெளியேறாமல் நின்றுவிடும். உடல் கெடும். siddharyogam.com வெளியேற்றும் காற்றின் நேரம் 32 நொடியா  16 நொடியா என்றால் 16 நொடி என்பது அறிவு பூர்வமானது.
எனவே உள்ளே இழுக்கும் காற்றின் நேரம் 32 நொடி என்று முடிவு செய்யலாம்.
மூச்சு இழுக்கும் நேரம் 32 நொடி. நிறுத்தும் நேரம் 64 நொடி. வெளிவிடும் நேரம் 16 நொடி ஆகும். இது பற்றி சித்தர்கள் சொல்வதை வரும் பதிவில் பார்ப்போம்.


உட்பவித்தல் அல்லது கேவல கும்பகம்
நுரை ஈரலில் இருந்து தங்கியிருக்கும் காற்றை முழுமையாக வெளியேற்றியபின், நுரையீரல் காற்றை உள்ளே இழுக்காமல் இருக்கும் நிலை. இதற்கு நேரம் தேவையா, ஆம். ஏன் என்றால், வெளியேற்றபடாமல் உள்ளே தங்கிய காற்று கழிவுகளை பெற்றுகொள்ளும். இதற்கு அதிக நேரம் தேவை இல்லை. இதைக் குறித்து நேரத்தை சொல்லவில்லை.

மூசசுக் காற்றுக்கு காலக்கணக்கை நிர்ணயித்த சித்தர்களின் கணக்கு சரியா என்று ஆய்வுகள் நடத்தி அதைச் சொல்ல மருத்துவ விஞ்ஞானிகள் முன்வரவேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டு அனுபவத்தில் சரியாக உள்ளதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

ஆதார தளங்களில் வாசி உருவாக்கி வாசியோகம் செய்தல் .
இந்த காலக்கணக்குதான் வாசியா ? திருமூலரும் அகத்தியரும் பிற சித்தரும் வாசிகாலக்கணக்குப் பற்றி சொன்னது என்ன? என்பதை வரும் பதிவில் பார்ப்போம்..