About Siddhars 5

சித்தர்கள் பிரபஞ்சப் பயணம் தொடர்ச்சி 

திருமூலர் செய்த பிரபஞ்சப் பயண அனுபவம்


சென்ற பதிவில் வேற்றுகிரகத்து சித்தர்கள் ( அறிவியலார் ) சிவவழிபாடுசெய்து சிவன் எழுதிய லட்சம் பாடல்களைப் படிப்பதைப் பார்த்தார். திருமூலர் வாசி யோகம் செய்து , சிவன் எழுதிய ஏழு லட்சம் பாடல்களைக் குறுக்கி ஆயிரம் பாடல்களாகப் பாடி,அதை வேற்றுகிரக மனிதருக்குச் சொன்னார் . அவரது நூல் பற்றி மேலும் சொல்கிறார் பார்ப்போம் . இந்தத்தகவல்கள் சித்தர்கள் நூல்களில் சொல்லி உள்ளதைப் பற்றியதாகும் .

பேசாத நூலிலே பிறந்தமுறை சொல்லாய்
வாசாமல் சாரணை மருவிய கட்டிணம்
நேசக் குடாரியும் நிலைக்கும் திராவக
மாசா பரிகுரு வகண்ட செந்தூரமே..


திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல 367


அகண்டகளங்கம் அடவாம் சலனங்கள்
நிகண்டான சத்துகள் நேர்பல செம்புகள்
பகண்டகுளிகைகள் பார்க்கில் ஜெய நீரும்
தகண்ட திராவகந்தான் இனிக்கூட்டமே


திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல 368

கூட்டமா மூலிக குறையா யுதங்கள்
நீட்டிய வஸ்து நிலையி பதினேழு
மாட்டியே சொன்னேன் ஆயிரத்துள்ளேநான்
பாட்டியேழ் லட்சம்மும் பாங்கை பிழிந்தென்னே


திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல 369

ஒண்ணாப பிழிந்த நூல் உத்தமாயோ மூலர்
கண்ணாரக் கண்டால் கவலை அகன்றிடும்
வண்ணான் உரைத்தது மாக்கி யேழுலட்சம்
எண்ணாயிர மீதில் அஞ்சாகச சொன்னேனே


திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல 370

சொன்னேனே மூவாயிரம் சுருக்கு ஆயிரம்
முன்னே என்நந்திதான் முன்னூற்று முப்பதாய்
பண்ணேன்ன மூன்று பகர்ந்தெழு முறையாகத
தன்நேழு லட்சமும் சாதித்தேன் சித்தரே


திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல 371

சர்ற்றிய நூல்ஏழில் தப்பாதோ அங்கங்கள்
போற்றிய ஈசன் நூல் போகாதோ பொட்டென
நாற்றியே வாஞ்சி அல்லாஞ் சரிபாரு
வாரற்றியே நான் போறேன் வாருங்காண் சித்தரே


திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல 371

பொருள்

திருமூலர் வாசி யோகம் செய்து , சிவன் எழுதிய ஏழு லட்சம் பாடல்களைக் குறுக்கி ஆயிரம் பாடல்களாகப் பாடியதை வேற்றுகிரக சித்தர்கள் நம்பவில்லை . எனவே அவர்கள் திருமூலரிடம் ‘ நீங்கள் சுருக்கிய நூலில் எதையெல்லாம் சொல்லி உள்ளீர்கள் அவற்றைக் கூறுங்கள் “ என்றனர் .
திருமூலர் தனது நூலில் உள்ளவற்றைச் siddharyogam.comசொல்கிறார்:
‘ எனது நூலில் பிரபஞ்ச பயணம் செய்ய குளிகை செய்வதும், அதற்கு சாரனை ஏற்றுவதும் உள்ளது .மூலப்பொருள்களின் அணுத்தன்மையை மாற்றிக் கட்டி,நாங்கள் உருவாக்கும் தொழில் நுட்பங்கள் உள்ளன .
பொருள்களை மாற்றி அமைக்கும் குடோரி முறைகள் உள்ளன . பலவித திராவகங்கள் செய்முறைகள் உள்ளன . “
தங்கத்தை நீற்றி அதை குருமருந்தாக உருவாக்கும் முறை சொல்லப்பட்டு உள்ளது . பலவித செந்தூரங்கள் செய்யும் வழி விரிவாக உள்ளது .. பலபொருள்களைச் சேர்த்து உருவாக்கும் களங்குகள் செய்முறை உள்ளது .

.ஒன்றில் இருந்து மற்றொன்றை உருவாக்கும சலனங்கள் தந்துள்ளேன் . ஒரு பொருளை பல சொற்களால் அழைக்கும் நிகண்டும் உள்ளது . .

பொருட்களில் இருந்து சத்துகள் பிரித்து எடுக்கும் விதம் கூறியுள்ளேன் . பலவித செய நீர்கள் செய்வது பற்றி எழுதப்பட்டு இருக்கிறது. பலவித செம்புகள் செய்முறை இருக்கிறது.. பலவகை கற்ப மூலிகைகள் பற்றி செய்தி உள்ளது.

சிவன் சொன்ன எழு லட்சம் பாடல்களிள் உள்ளவற்றை பிழிந்து பதினேழு அங்கங்களாகப் பிரித்து, இவற்றைச் சொல்லி உள்ளேன் “ . .

இதை கேட்ட வேற்று உலக சித்தர்கள் “ நீங்கள் சொல்வது உண்மை என்றால் திருமூலரே ! அந்த நூலை எங்கள் கண்களில் பார்த்தால்தான் கவலை தீரும் “ என்றனர்.அதற்கு திருமூலர் ‘ சிவன் ஆக்கிய ஏழுலட்சம் பாடல்களை எட்டாயிரம் பாடல்களாகக் siddharyogam.comகுறுக்கினேன் . அதைச் சுருக்கி ஐந்தாயிரமாகச் சொன்னேன் .. அதை இன்னும் சுருக்கி மூவாயிரமாகக் கூறினேன் . .அதையும் சுருக்கி ஆயிரம் பாடல்களாகத் திருமூலர் 1000 என்ற நூல் செய்தேன். இது எனது சாதனை ..

ஆனால் என்னுடைய குரு நந்தி என்ற சிவனோ முன்னூற்று முப்பது பாடல்களாகப் பாடி உள்ளார் . “
இதைக் கேட்ட வேற்று கிரக சித்தர்கள் சந்தேகத்துடன் கேட்டனர்
‘ ஈசன் நூலில் சொன்ன அனைத்து பகுதியும் குறை இல்லாமல் உள்ளதா ? ஈசன் நூலுக்கு இணையானதா?”

திருமூலர் ‘ என்னுடன் வாருங்கள் சித்தர்களே எனது நூலைத் தருகிறேன் . அதைச் சிவனின் நூலுடன் ஒத்து உள்ளதா என்று ஆராய்ந்து சரி பாருங்கள் “ என்று கூறிவிட்டு அந்த அண்டத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

திருமூலர் எழுதிய எட்டாயிரம் ஆகிய நூல்கள் கிடைக்கவில்லை. இந்தநூல் அரங்கேற்றம் செய்தது பற்றி அகத்தியர் குறிப்பிட்டு உள்ளார் . நம்மிடையே கிடைக்கும் நூல் திருமூலர் திருமந்திரம் என்ற மூலர் மூவாயிரமும், ஆயிரமும் மட்டுமே
. திரு மூலரின் பிரபஞ்ச பயணம் தொடரும்..... . .