About Siddhar Part 1

சித்தர்கள் இந்த பிரபஞ்ச குடிமகன்கள்.  அக்காலத்திய அறிவியலார் .  அன்பின் அடிப்படையில் இன்பமாக  வாழும் மகத்தான நெறிமுறைகளை  மனித இனத்துக்கு வகுத்துக்  கொடுத்தவர்கள் . மனித பிறவியின் குறிக்கோளைச்  சொல்லி அதை அடையும் முறையையும் சொன்னவர்கள் .. மனிதன் இந்த உலகில்  இரண்டு வகை இன்பம் பெறவேண்டும் .  ஒன்று  உலக வாழ்வில் பெரும் சிற்றின்பம் . மற்ற ஒன்று இறைவனை தன்னுள் கண்டு siddharyogam.comஅடையும் பேரின்பம்  . இரண்டு இன்பங்களையும்  பெறும் அறிவியல் தொழில் நுட்பம் சொன்னார்கள் .

அந்த வழிமுறைகளில் வெற்றி பெறுவதைச்  சித்தி என்றார்கள் . அவ்விதம் வெற்றி பெற்றவரைச்  சித்தர் என்றார்கள் .  இந்த வழிமுறைகளைக்   கற்றுக் கொடுக்கும் கல்வியைச்  சித்தர் கல்வி என்றார்கள் .இந்த கல்வியைச்  சொல்லி கொடுப்பவர் யோக குரு அல்லது ஞானகுரு என்றனர் ,
இந்த சித்தர்கள் அறிவியல் நிகழ்வாகச்  செய்ததை  அமானுஷ்ய சக்தி என்றும்  அற்புதங்கள் என்றும் சாதாரண மனிதர்கள் நினைத்தனர் .

மனிதன் சிற்றின்பமும் பேரின்பமும் பெற அடையவேண்டிய சித்திகள் நான்கு .
1. காயசித்தி  = நோய்கள் நீங்கப்பெற்று, ஆரோக்கியமான ,இளமையான  நீண்ட ஆயுள் உள்ள மரணம் இல்லாத உடல் பெறுதல் .. இத்தகைய உடலே சிற்றின்பம மற்றும்  பேரின்பம்   அனுபவிக்கத்  தகுதி வாய்ந்தது .

2. வேதை சித்தி  =அறிவியல் முறையில் ஒரு பொருளை வேறு பொருளாக மதிப்பு மிக்கதாக மாற்றுதல் .  உலக ஆதாயம் பெறுதல் . தொழில்வெற்றி . பாசானங்களை மருந்தாக மாற்றுதல் . தீராத நோய்கள் தீர்த்து காய  சித்திக்கு உதவுதல். 

3. யோகசித்தி = (யோகா பற்றி  , முகப்பில்பார்க்க )  யோகா என்றால் இணைத்தல். இல்லறவாழ்வில் இணைந்து  உலக இன்பம் பெறுதல் ,  இறைவனுடன் இணைந்து பேரின்பம் பெறுதல் ஆகிய இரண்டுக்கும் அடிப்படையானது .  யோகசித்தி பெற்றால் யோகி.  siddharyogam.comயோகியே உயர்நிலை யோகம் செய்து  சித்தர் ஆவார் .   சித்தரே ஞான சித்தி பெறமுடியும் .

4.. ஞானசித்தி
இறைவனை தன்னுள் ஓளியாகக்  கண்டு இறைவனுடன் இணைதல் . அதில் கிடைக்கும் பேரின்பத்தை அனுபவித்தல். இதுவே முக்தி .  முக்தி பெற்ற சித்தர்கள் ஞானிகள் .

பேரின்பப்  பாதை :
நான்கு படிகளைக்  கொண்டது
சரியை = இறைவனை வணங்குதல் , போற்றுதல், பாடல் , வேண்டுதல் . பூஜை செய்தல் .
கிரியை = இறைவனை வேள்விகள்,  சடங்குகள் செய்து பூசித்தல்
யோகம்   =வாசியோகம் முதலிய வழிகளில்  இறைவனைத் தன்னுள் ஒளியாகக்  காணுதல்
ஞானம் = இறைவனைக்  கண்டு இறைவனுடன் ஒன்றுதல் .
சரியை கிரியை பக்தி மார்க்கம் . இதை பக்தி யோகம் என்று சொல்லுவார்கள் . ஆனால் இது யோகமார்க்கம் இல்லை . யோகமும் ஞானமும் யோக மார்க்கம் .  யோகா மார்க்கத்தில் சித்தி  அல்லது வெற்றி  பெற்றவர் சித்தர்கள் .   சித்தர்கள் செய்ததை அறிந்தால்  சித்தர்களை நன்கு புரிந்துகொள்ள  முடியும்