யோகா என்றால் என்ன?

யோகா என்பது இணைதல் ,சேர்த்தல் , கூடல் என்று பொருள்படும் . அதிர்ஷ்டம் அல்லது சிறு முயற்சியில் பெரிய பலன் பெறல் என்று அர்த்தம் . உபாயம் என்று கூறுவார்கள் .
இன்று உலகம் முழுவதும் பலவித யோகா பின்பற்றப்படுகிறது . 
அவை 
  • பக்தியோகம் 
  • கர்மயோகம் 
  • ஹட யோகம் . 
அஷ்டாங்க யோகம் அல்லது வாசி யோகம் அல்லது குண்டலியோகம் அல்லது ராஜ யோகம் அல்லது கிரியா யோகம் அல்லது லய யோகம் . 
  • புத்தமத விபாசன 
  • ஜைனர்களின் யோகா 
  • சுபியிசம் 
  • சன்னி தியானம்
  • கிறிஸ்தவ தியானம் 
  • சீக்கியர் யோகமுறை . 
  • சக்கர தியானம்
இந்த யோகா முறைகளில் மதம் சாராது பிரபஞ்சம முழுவதும் மனித குலத்திற்கு நன்மை தரும் யோகா முறை தமிழ்ச் சித்தர்களின் அஷ்டா ங்க யோகம் என்ற வாசி யோகம் .
வாசியோகம் 
இறைவன் ஓம் என்ற பெருவெடிப்பாக வெடித்தான் . அப்பொழுது அகர , உகார , மகார, நாத, விந்து என்ற பஞ்ச வித்துகள் உருவாகின . அதில் மண் , நீர் , நெருப்பு , காற்று ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள் உருவானது . பஞ்ச பூதங்களால் இந்த பிரபஞ்சம் உருவானது. siddharyogam.comஅதில் நான்குவகை யோனி வழியாக ஏழு வகை உயிர் இனங்கள் தோன்றின . அதில் மனிதன் 96 தத்துவங்களுடன் இறைவனின் மாறுபட்ட உருவாக தோன்றினான். இவை அனைத்து இணைப்புகளால் உருவானது . இதை இது இறைவனின் யோக மாயை என்பார்கள் .
மனிதனாகப் பிறந்தவர், தன்னுள் இருக்கும் இறைவனை அறிந்து, மீண்டும் இறைவனோடு இணைதல் மனிதப்பிறவியின் முடிவு . இதுவே முக்தி , மோட்சம் , ஞானம் . இந்தத் தொழில் நுட்பத்தைச் சொல்லுவது அஷ்டாங்க யோகம் . இதன் பிற பெயர்கள் வாசியோகம் ,குண்டலினி யோகம் , ராஜா யோகம் . இதனைச் சிறிது மாற்றிச் செய்வது கிரியா யோகம் . வாசியோகத்தின் உயர் நிலை சிவயோகம் அல்லது சிவராஜ யோகம் அல்லது சிவத்தவம் . இதன் பகுதி மௌன யோகம் , சாக்கிய யோகம் அல்லது உயிரின் சித்து . 
அடிப்படை வாசியோகம் இந்த வலைத் தலத்தில்"யோகாபழகு" என்னும் பகுதியில் கட்டணம் இன்றி சொல்லிக் கொடுக்கப்படுகிறது
இந்த யோகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் : 
காயசித்தி என்ற இளமையுடன் வாழும் நீண்ட ஆயுள்.

நோய்கள் நீங்கப்பட்ட உடல் .siddharyogam.com
அளப்பரிய ஆற்றல் 
அமானுஷ்ய சக்திகள் . அஷ்டமா சிததிகள் 
தானே இறைவன் போல் படைத்தல் , காத்தல் , அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்கள் செய்தல் . 
உலகவாழ்வில் கிடைப்பது :
அனைத்து செல்வங்கள் பெறல் .
இல்லற வாழ்வில் வெற்றி 
தொழில் வெற்றி . 
மன அமைதி, மனஅழுத்தம் நீங்கல் 

முடிவு எடுக்கும் திறன் .
நீதி நிலைநாட்டல் 
அறிவுக் கூர்மை . 
உயர் ஞாபக சக்தி 
மக்களை ஈர்த்தல் 
செல்வாக்கு பெறல் 
முயற்சியில் வெற்றி 
எதிரியை வெல்லல்


வாசி யோகம் சார்ந்த பிற யோகம்

பரியங்க யோகம் = ஆணும் பெண்ணும் சேருதல் . 
சூரிய யோகம் = சூரியனுடன் சேர்ந்து சூரிய சக்தி பெறல் . 
சந்திர யோகம் = சந்திரனுடன் சேர்ந்து சந்திர சக்தி பெறல் . 

மௌனயோகம் =மனிதன் பிரபஞ்ச வெளியில் இருக்கும் இறைவனோடு இணைதல் 
சாக்கிய யோகம் = மூச்சுக் காற்றை வெளிவிடாமல், சுவாசத்தை தன்னுள் நிறுத்தி சமாதி நிலை அடைதல் . இதுவே உயிரின் சித்து .