ஓம் என்றால் என்ன?

ஓம் என்பதற்கு வேதாந்த விளக்கங்கள் மற்றும் சித்தாந்த விளக்கங்கள் உண்டு .

வேதம்
முதலில் வேதாந்தம் , வேதம் என்பதை பார்ப்போம் .
இறைஅருள் பெற்றவர்களால் இறைவனிடம் நேராகவோ மறைமுகமாகவோ பெற்ற செய்திகள் வேதம் . இது அனுபவத்தை அடிப்படையாக கொண்டது . நிருபிக்க அவசியம் இல்லை . நபுவோர் நபுவர்கள் .
உதாரணமாக . மோசே தேவனிடம் பெற்ற பத்து கட்டளைகள் . இதுவும் பிரசெய்திகளும் பழைய ஏற்பாடு என்ற மறை நூல் ஆனது .. . அதன் பின் இயேசு தனது கருத்துகளை பதிவு செயதார் . அதில் முந்தய ஆதி ஆகமத்தில் சொல்லிய கருத்துகளையும் மாற்றினார் .. இது புதிய ஏற்பாடு .. அதன் பின் முகது அவர்கள் இறைவனிடம் குரான் பெற்றார் . இதுவும் வேதம் .

இது போன்று ரிஷிகளும் முனிவர்களும் பெற்றசெய்திகள் இந்தியாவில் ஆ தி வேதம் எண்ப்பட்டது . ஆதியில் வேதம் ஒன்றுதான் .. 28 எட்டாவது வேத வியாசர் கிருஷ்ணன துவ பர்னர் வேதங்களையும் புரானகளையும் வகை படுத்திநார்..

இது போன்று ஒவ்வொரு வருக்கும் ஒவ்வவொரு நம்பிக்கை ஒவ்வொரு வேதம் . அது அவரவர் நம்பிக்கை . அனுபவத்தை அடிப்படையாக கொண்ட கருத்துகள் வேதாந்தம் .மாற்று கருத்தை மதிக்க தெரிந்தவர் மனிதர் .

சித்தாந்தம்.
அனுபவ அடிப்படைகளை ஆராய்ந்து முடிவு செய்து சித்தபடுததியது சித்தாந்தம். சித்தாந்த வழி கடைபிடிப்பவர் சித்தர் கள் .

சித்தர் நூல்களகளின் பாடலுக்கு பொருள் எழுதுவது கடினம் காரணம்
. பரிபாசைஇல் உள்ளது


ஒருசொல் பலபொருள் ..
முன் பின்னாக உள்ளது
மறைப்பாக உள்ளது
மாறாட்டமாக உள்ளது
புராணமாக உள்ளது
தொக்குப்பு நூல் என்று உள்ளது
பழ்ம் தமிழ் சொற்களாக உள்ளது
சாபக்க்னல் உள்ளது..ஆகையால் பெரும்பாலோர் படிக்க முடிவது இல்லை.
ஆகையால் பலவித விழக்கண்களை . விருப்பப்படி சொல்லுவார்கள் . அவர்கள் கருத்து அவர்கள் விருப்பம்.
இந்த அடிப்படைஇல் எனது விளக்த்தை நிகண்டு அடிப்படைலயிலும் துரிய தியானத்தின் அடிப்படைலயிலும் ஓம் என்பதற்கு பொருள் சொல்கிறேன் ..
அகத்தியர் சொன்னது நூல்


அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 30

ஓம் என்ற பிரனவேமே ஆ தி வஸ்து .
உலகமேல்லந் தானிரைந்த யோம சக்தி
தான் என்ற சக்தியடா எவரும் தானாய்
சதா கோடி மந்திரத்திற்கு உயிராய் நின்று
ஆம் என்று ஆடினதும ஓங்காரம் தான்
அடிமுடியாய் நின்றதுவும் ஒம்காரந்தான்
நாமென்ற ஓங்காரம் தன்னிலேதான்
நாடிநின்ற எழுவகை பிறப்புமசே. .

பொருள்

ஓம் என்பது இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு இருந்த ஆதி வஸ்து . அதை நம் இறைவன் என்று சொல்லுகிறோம் .. அதன் உருவ வடிவமோ தெர்யாது ஆகையால் ஆதி வஸ்து என்றார் . இந்த உலகம் எல்லாம் நிறைந்து நின்ற இயங்கு சக்தி . நூறு கோடி மந்திரங்கலுக்கும் உயிர் . ஆம் என்றும் இதை சொல்லுவார்கள். ஓ என்பது ஓங்காரம் . அடி என்ற எல்லவற்றிற்கும் ஆதாரமாக விரிவு ஆக இருப்பது .. இதுவே ஒடுக்கம் என்ற முடிவாக இருப்பது . நகரம் என்ற
ஓங்காரமதில் ஏழுவகையான உயிர்கள் தோன்றின .

எப்படி ஓங்காரம் என்ற இறைவன் விரிவு அடைந்தான் என்பதை பார்போம் .

அகத்தியர் சொன்னது. நூல்


அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 29

அச்சப்ப ஆதி பராபரந்தான் மைந்தா
அணு கிரகத்தால் உதித்த கணபதி வல்லபை
மூச்சப்ப நிறைந்த சக்தி சிவமுமாகி
மூவுலகும் தானாகி முதலுமாகி
பேசப்ப நிறைந்த தொரு பஞ்ச பூதம்
பாச்சப்ப பஞ்சகர்தல் அஞ்சு பேரும்
பக்தி கொண்டு ஆதியிலே ஓம் என்றரே .
பொருள்
 

ஆதியில் ஓ என்ற ஓங்காரம் என்ற இறைவன் இப்ப்ரபச்சமான மூன்று உலகிலும் சக்தி சிவன் என்ற நேர்மறை சக்தி மற்றும் எதிர் மறை சக்தி யான உகர அகர மாக இரண்டாகவும் அவை இணைந்த மகர மகவும் இருக்கிரர்கள் .. அ+ உ= ம
அதன் பின் பஞ்ச கர்த்தாகள் என்ற
அகர , உகர,மகர , நாதா , விந்து என்ற
அடிப்படை வித்துகளாக 5 தாகஉள்ளார் . இந்த அடிப்படை வித்து வில் இருந்து பஞ்ச பூதம் உருவானது . பஞ்ச பூதத்தில் இருந்து பிறபஞ்சம் உருவானது . பஞ்ச வித்தாக நேர்மறை எதிர்மறை சக்தியாக மூல தரத்தில் கணபதி யாக வல்லபை யாக . இருப்பது ஒடுக்கமான ஒ என்ற ஓங்காரம் . ஓங்காரம் . = ஓ= இறைவன்
இறைவன் வடித்து சிதறி
அகர உகர என்ற எதிர் மறை சக்தி , நேர்மறை மறை சக்தியாக
இரண்டு ஆனான் . அவை இணைந்து
அ+உ = ம இதை 8 +2= 10 என்பார்கள் , இதை 5+ 3= 8 > ந, மா, சி, வ, யா =5, = சிவன் ( மந்திரம் ) ஐயும் , கிளியும் , சவ்வும் = 3 சக்தி மந்திரம் என்பார்கள் . மூன்று ஆனான் . நான்காக மாறினான் அ, உ, நாதா விந்து ஆகியவை நான்கு nilaikal
அ + உ+ நாதா+ விந்து + ம =உயிர்கள் . இது ஓம் என்றஓங்காரம் .
இன்று இது பிரபஞ்ச விரி கொள்ள்கை ( theory of expansion of universe) அ - உ-நாத- விந்து -ம குறுகி னால் மீண்டும் ஒங்கராமாகும்
இன்று இது கருங்குழி கொள்கை
( Black hole theory )