சூக்குமமும் கடவுளும்

அவரவர் கடவுள் நிலை பற்றி உணர்ந்ததை அவரவருக்கு எப்படிப் புரிந்ததோ அதைப் பற்றிகூறுகின்றனர். அவற்றை நாம் அப்படியே ஏற்கவேண்டுமா?

சித்தர்கள் அனைவரும் அடிப்படையில் ஒன்றுபோல் சொல்கிறார்கள் . நான் சித்தர்கள் சொல்வதைச் சொல்கிறேன் . இது யோகா பாதை . முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் . உங்கள் அறிவுக்கு எது சரி என்று படுகிறது, அதைச் செய்யுங்கள் . . அதுவே உங்கள் படித்தரம் ..

நம் அறிவுக்குத்தெரிந்தவாறு இறைச் சக்தியை எல்லா உயிரினங்களும் ஏதாவதொரு வகையில் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்களாகிய நாமும் அந்த இறைச் சக்தியை அவரவர் தன்மைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம். நமக்குத் தெரியாத நம்மால் புரிந்துகொள்ளமுடியாத சூக்குமமான அந்த இறைச் சக்தியைப் பற்றி தெரிந்துகொள்வதினால் என்ன பயன்? நாம் தான் நம் தகுதிக்கேற்ப அந்த இறைச் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோமே! அந்த இறைச் சக்தி தன்னைப் பற்றி நமக்குத் தெரிவிக்கும்வரை நாம் காத்திருப்போமே. பிறர் கூறுவதை நாம் ஏன் ஏற்கவேண்டும் ?

"நம் அறிவுக்குத்தெரிந்தவாறு இறைச் சக்தியை எல்லா உயிரினங்களும் ஏதாவதொரு வகையில் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்களாகிய நாமும் அந்த இறைச் சக்தியை அவரவர் தன்மைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம்"
இது சத்தியமான உண்மை .
இறைவன் எல்லா உயிர்களிலும் தன்னை உணர்த்திக்கொண்டு இருக்கிறான் ..
உயிர் இனங்களில் மனிதன் மட்டுமே இறைவனை உணரவும் ஒளி வடிவில்பார்க்கவும் முடியும்

அதைக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்று அறியும் ஐந்து அறிவுடன் பகுத்துஅறியும் 6வது அறிவு , கற்றதால் கிடைக்கும் 7 ஆம் அறிவு அனுபவத்தால் வரும் 8 ஆம அறிவு ஆகியவற்றால் இறைவனைக் காண முடியாது உணரவும் முடியாது. . 9ஆம் அறிவால் ஆராயும் போது( விஞ்ஞானமய கோஷத்தால் இறைவனை உணர முடியும் . .
9 ஆம் அறிவு முடிவில் இறைவனைக் காணவும் அவனோடு இணையவும் தேவைப்படுவது 10 ஆம் அறிவு .இதை ஆனந்தமய கோஷத்தால் அடையமுடியும் ..
9 மற்றும் 10 ஆம் அறிவு முயன்று அல்லது குரு சொல்லிக்கொடுக்க வரும் .
வெறுமனே காத்திருப்பதால், சோம்பேறிக்கு ஒருநாளும் ஞானம் கிட்டா. உணர்த்திக்கொண்டு இருக்கும் இறைவனை உணரவோ , காணவோ முடியாது .
இறைவனோடு இணைந்து மரணமில்லா வாழ்வு பெறுவதே சித்தர்களின் குறிக்கோள் .
இதற்கு வாசி யோகமும், கற்பங்கள் செய்யவும், உண்ணவும் . பயிற்சியும் முயற்சியும் தேவை ...


மனிதர்களாகிய நாம் முதலில் அன்னமய சூக்கும உடல் அல்லது கோசத்தை உண்டாக்கி உடலெங்கும் பரவச் செய்யவேண்டும். அடுத்து இரண்டு வகையான பிராணமய கோசங்களை உண்டாக்கவேண்டும். அடுத்து, இரண்டு மனோமய கோசங்களை உண்டாக்க வேண்டும். அதற்கு அடுத்து விஞ்ஞானமய கோசத்தை உண்டாக்க வேண்டும். முடிவாக ஆனந்தமய கோசத்தை உண்டாக்கவேண்டும். ஆக ஏழு சூக்கும உடல்களை நாம் நமக்குச் சொந்தமாக்கவேண்டும். பிறகு அவைகளைப் பயன்படுத்தும் முறைகளையும் பயிலவேண்டும். இந்த உடல்களெல்லாமே உணர்பவை. இந்த உடல்களெல்லாம் பிறப்பிலேயே நம்மிடம் உள்ளதா. அல்லது வெளியிலிருந்து பெறப்படுபவையா?

காத்திருக்காமல் முயல வேண்டும் என்ற கருத்தை ஆதரித்ததற்கு நன்றி .
நம் உடலில் இயற்கையாக ஐந்து கோஷம்(உடல் )மட்டும் உண்டு . இவை 28 கலை பிரபஞ்ச சக்தி பெற்று 56 கலை சக்தி உடல் உருவாக்கி மொத்தம் 84 கலை சக்தி உடல் உருவாக்குகிறது . இதனால் உடல் 12 கலை சக்தியை விரயமாக்குகிறது .
நான் என்னும் 96 தத்துவங்களும் 96 கலை சக்தி அடைந்தால் மரணம் இல்லை .
.
பிரபஞ்சத்தில் இருந்து 32 கலை சக்தியைப் பெற்று, 64 கலை சக்தியை உடல் உற்பத்தி செய்து, 96 கலை சக்தி உருவாக்கவேண்டும்
எனவே வெளியே பிரபஞ்சத்தில் இருந்தும்.உள்ளே உடலில் இருந்தும் சக்தி தேவை. .உருவாக்கவேண்டும் . இதற்கு வாசியோகம செய்து கற்பங்கள் உண்ண வேண்டும் இதனால் விரயமாகும் 12 கலை சக்தி உடலில் சேரும் . மரணம் வராது. மற்றும் அதீத சக்தியும் இளமையும் நிலை பெறும் . . இதனால் சூக்குமத்தை அறியமுடியும் .
. .
சூக்குமம் என்பது புரியட்டம் என்ற எட்டு நிலை உடையது .. மற்றது சக்கர சூக்குமநிலை .இதில் சகஸ்ராரம் உடலுடன் கணக்கிடப்பட்டால் எழு .. சக்கர சூக்குமத்தில் உள்ளே 6. வெளியே ஒன்று. . இது வாசியோகம் செய்து சிவயோகம் செய்து உடலில் உள்ளே இருக்கும் இறைவனைக் காண்பது .

புரியாட்டம் என்னும் சூக்குமம் உடலில் உள்ளே மூன்றும் வெளியே 5-ம் ஆக மொத்தம் 8. இவற்றை இணைத்துப் பெறுவது மௌன யோகம் . இது உயர் நிலை சிவயோகம் . இது வெளியே இருக்கும் இறைவனைக் காண்பது. ஆகையால் சூக்குமம் உள்ளேயும் உண்டு வெளியேயும் உண்டு .. இறைவன் உள்ளேயும் உண்டு வெளியேயும் உண்டு . இரண்டையும் கண்டு, தான் அவன் ஆதல் மனிதன் இறை நிலை அடைதல் . இதை திருமூலர் நான் நந்தி ஆனேன் என்றார் .