சந்தேக விளக்கம்

கேள்வி
Arun Savib மிக்க நன்றி ஐயா, அப்படியென்றால் முந்தைய ஜென்ம கர்மா என்பதெல்லாம் கிடையாதா? அதற்கேற்பவே இந்தப் பிறவியில் நல்ல உடலோடோ இல்லை உடல் ஊனமாகவோ பிறவி இருக்கும் என்று நினைத்திருந்தேன் ஐயா. விளக்கவும்.

பதில்
உயர்பிறவியாக மாறி, மறுபடிப் பிறப்பதற்கு, எல்லாம் தெரிந்தவர் போல் சாஸ்திரம் என்ற பெயரில் பொய், புரட்டு சொல்லும் மடையர்கள் சொல்லைக் கேட்கிறீர்கள். அதன்படி நதிகளிலில் தீர்த்தமாடுகிறீர்கள். கோவில்,குளம் சென்று செப, தபம் செய்கிறீர்கள்.கூற்று எனும் மரணம் அடைந்த பின் மறுபிறவி இல்லை என்ற உண்மை அறியாத பாவிகளே! இந்தகைய பாடுபடுவதால் பயன் இல்லை.
திருவள்ளுவர் ஞான வெட்டியான் பாடல் 48.

96 தத்துவங்களுடன் உடலில் குடிகொண்டு இருந்த உயிர்சக்தி உடல் சிதைந்தால் பிரபஞ்சம் சேரும் ..

திருமூலர் திருமந்திரம் பாடல் 154.

உயிர் சுழற்சியை மீண்டும் படியுங்கள்.

பாவ புண்ணிய கணக்கு என்பது உண்மையில் உண்டா ?

பாவம், புண்ணியம் என்பது காலத்திற்கும் தேசத்திற்கும் மதம் , கலாச்சாரம் போன்ற சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறும். எனவே சித்தர்கள் இந்த வழியை ஏற்பதில்லை.

மனிதன் மடிந்தபின், அவன் ஆன்மா செல்லும் இடம் அறியாதவரகள், அவனின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுவர்க்கம் அடைந்து, சுகம் பெற்று மறுபிறவி எடுப்பான். இவ்விதம் ஏழு பிறப்பு எடுப்பான் என்று சொல்லுவார்கள் இப்படி மறுபிறப்பு பிறப்பார் என்பது பொய்.

ஆனால் மனித நேயமும் அன்பும் கொண்ட இயம நியமங்களை கடைப்பிடிக்கவேண்டும். அவ்விதம் கடைப்பிடிக்காதவருக்குத் தண்டனையும் கடைப்பிடிப்பவருக்கு மகிழ்வும் கிடைக்கும் .
இயம நியமம் என்பது வாசி யோகத்தின் முதல் இரண்டு அங்கம். வாசியோகப் பாடங்களில் சொல்லி உள்ளேன்.

ஒரு டிவி நிகழ்ச்சியில் விவாதத்தில் சொன்னது:
. ஓரளவு புகழ் பெற்ற நடிகர் .
" அய்யா எனக்குக் குறைபாடு உள்ள குழந்தை மற்றும் துன்பம் ஏன்?"
பட்டாச்சாரி பதில்
"இரவில் செய்த பாவத்திற்குப் பகலில் கூலி "

இங்கு பாவம் என்பது இயமம், நியமம் இல்லாத செயல்.

ஒருவர் ஒருபிறவியில் செய்த அறமும் கல்வியும் என்ற இயம நியமச் செயல்அவரது ஏழு தலைமுறைக்கும் போய்ச் சேரும். இது சித்தர் அறிவியல் கோட்பாடு. இன்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதுவே காரண தேகத் தொடர்பு. மரபணுத் தொடர்ச்சி..

ஆனால் அவரே ஏழு பிறப்புப் பிறந்து, உயர் பிறவி பெற்று முக்தி அடைவார் என்பது வேதாந்தக் கருத்து. நம்பிக்கை சார்ந்தது. இந்த நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்திச் சுரண்டல் செய்பவரையே சித்தர்கள் சாடுகிறார்கள்..