மறுபிறவி உண்டா?

சித்தர்களைப் புரிந்துகொள்ள சித்தர்களின் தத்துவங்களை அறிதல் உதவும். சித்தர்நிலை செல்லும் பாதை சரியை என்ற இறைவணக்கம்,கோவில்குளம் செல்லல் என்பது முதல் படி. கிரியை என்ற மந்திரம் சொல்லல், யாகம் செய்தல் இரண்டாம் படி. இவை பக்தி யோகம் சார்ந்தவை. அனுபவ அடிப்படையில் நம்பிக்கையின் அடிப்படையில் கடைபிடிக்கும் வேதாந்த மார்க்கம் இது கால தேச வர்த்தமானத்திற்கு உட்பட்டது.


இந்த இரண்டு படித்தரத்தை கடந்தபின் வருவது சித்தாந்தம் என்ற யோக மார்க்கம். இது அறிவியல் அடிப்படை கொண்டது. இது காயசித்தி யோகசித்தி வேதை சித்தி ஞான சித்தி என்ற நான்கு நிலை கொண்டது.

இது பிரபஞ்ச உண்மை நிலை சொல்வது. ஒன்பதாம் அறிவுநிலை உள்ளவரே யோகா மார்க்கம் செல்லத் தகுதியானவர்.நடுநிலையுடன் ஆராய்ந்து உண்மைஅறியும் தன்மை வேண்டும். 
எல்லா அறிவு நிலையில் உள்ளவர்களும் பயன்பெற சித்தர்கள் தங்கள் தத்துவங்களை இந்த இரண்டு பாதைகளிலும் தத்துவங்களைச் சொல்லி உள்ளார்கள் ..
இந்த தொடர் பதிவில்,யோகமார்க்கத் தத்துவங்களைச் சொல்ல உள்ளேன். இந்த பதிவில் பலரும் பல காலமாக கேட்கும் அடிப்படைக் கேள்விகளுக்குச் சித்தர் கருத்தைச் சொல்கிறேன். 


மறுபிறவி உண்டா?” 
இதற்குச் சித்தர்கள் சொல்லும் பதில்களைப் பார்ப்போம். 
அதற்கு முன் உயிர், உடல் இவை இரண்டும் இயங்கும் நிலை பற்றிப்  பார்ப்போம். 
பிரபஞ்சம் உருவாகும் முன் இருந்த இறைவன் ஓம் என்ற பெருவெடிப்பாகத்  தன்னைத் தான் பிறப்பித்துக்கொண்டான். அப்பொழுது அகார, உகார, மகார, நாத, விந்து என்ற பஞ்ச வித்துக்கள் தோன்றின. இவையே பஞ்ச பூதங்களாகின.இதில் அகார , உகார என்பவை சட நிலை உடையவை நாத விந்து என்பவை உயிர் ஆற்றல் சார்ந்தவை. அகார உகார சேர்க்கையால் சடம் என்ற பிரபஞ்சமும், பல்வகை உடல்களும் தோன்றின. அதன் தன்மைக்கு ஏற்ப உயிர் உடலுடன் சேர்ந்தது.இவை நால் வகை யோனிகளில், எழுவகைப் பிறப்பாயின. இதில் மனிதன் இறைவனின் மாறுபட்ட பதிப்பாக 96 தத்துவங்களுடன் உருவானான். இதில் ஒன்பதாம் நிலை அறிவு பெற்றவனே யோகபாதைக்குத் தகுதியானவன். 


இப்பொழுது எழும் கேள்வி இறந்தவர் என்ன ஆவார் ?
இப்பிரபஞ்சத்தில் பலவகையில் பெறும் மின்சக்தி என்பது ஒரு விசிறியைச்  சுற்றவைக்கிறது அதுவே கம்புயூட்டரையும் இயக்குகிறது.அதன்பின் பிரபஞ்சத்தில் ஒன்றிவிடுகிறது.
அதுபோலவே,உயிர்சக்தி உடல் அதை ஏற்கும் தகுதி உள்ளவரையும், உடலையும் உயிரையும் இணைக்கும் சக்தி பலமாக இருக்கும் வரையும் மனிதனும் உயிர்களும் இயங்குகின்றன. இதில் உயிரை உடலில் இணைக்கும் சக்திக்கு தொடர்ந்து பிரபஞ்சத்தில் இருந்து உயிர்சக்தி தேவைப் படுகிறது.
உடல் உயிரை ஏற்கும் நிலை இல்லை என்றாலும், உயிரை உடலுடன் இணைக்கும் சக்தி குறைவுபட்டாலும். அல்லது பிரபஞ்ச உயிர் சக்தி கிடைக்காவிட்டாலும்,உடலியக்கம் நின்றுவிடும். இதுவே மரணம். 
மரணத்தின் முடிவில் உயிர்சக்தி நாத விந்தாக பிரபஞ்சம் சேரும். உடல் என்ற சடம் பஞ்சபூதமாகப் பிரிந்து அகார உகாரமாக பிரபஞ்சத்தில் சேரும். மீண்டும் இவை நால்வகை யோனி எழுவகைப் பிறப்பு எடுக்கும். இது உயிரின் சுழற்சி.

இந்தச் சுழற்சியை சித்தர்கள் பலபிறவிபெற்று மனிதப்பிறவி அடைந்ததாகச்  சொல்வார்கள். இந்தப் பிறவிச் சுழற்சியை நிறுத்தி, மரணம் அடையாமல் இருப்பது மரணமில்லாப் பெருவாழ்வு நிலை அல்லது கூடு உடையா நிலை அல்லது காயசித்தி என்று சித்தர்கள் சொல்லுவார்கள்.


இருந்திடும் தேகமெல்லாம் இறந்தபின் சிவமே ஆச்சு .
திருந்திட நந்தி திரும்பியும் பிறப்பாணப்பா 
பொருந்திடும் ஞானம் இன்றி போனவர் பிறப்பரேன்பார்
வருந்திடும் அறிவின்விதை மாயத்தை கானர் தானே 

சுப்ரமண்யர் சுத்த ஞானம் பாடல் 58

 
இறந்தபின் உயிர்கள் சிவன் என்ற இயற்கை என்ற பிரபஞ்சத்தைச் சேரும். மீண்டும் பிரபஞ்சம் என்ற நந்தி உயிர்களை உருவாக்கும். இது அறிவால் அறிந்த வித்தை. இந்த உண்மை ஞானம் இல்லாதவர் செத்தவர்கள் மறு பிறவி எடுப்பார்கள் என்று சொல்லுவார்கள் .

இதைத் திருமூலர் . 

iddharyogamsiddharyosiddhar.

உடம்பார் அழியில் உயிரால் அழிவர் 
திடம்பட மெய் ஞானம் சேரவும மாட்டார் 
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
 --திருமூலர் திருமந்திரம் பாடல் 724


உடம்பு அழிந்தால் உயிர் உடலை விட்டு நீங்கி பிரபஞ்சம் சேரும். எனவே உடம்பை அழியாமல் காக்கும் காய சித்தி முறை அறிந்து உயிரை உடலில் தக்கவைத்து ஞானம் பெற்றேன் என்கிறார். 
முப்பதும் முப்பதும் முப்பத்தரறுவரும் 
செப்ப மதிளுடை கோவிலுள் வாழ்பவர் 
செப்ப மதிளுடை கோவில சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஒட்டேடுத் தார்களே--

----திருமூலர் திருமந்திரம் பாடல் 154.. 

96 தத்துவங்களுடன் உடலில் குடிகொண்டு இருந்த உயிர்சக்தி உடல் சிதைந்தால் பிரபஞ்சம் சேரும்.

மறுபிறப்பு இல்லை என்பதைத் தெளிவாக,நேராக மறைப்பு இல்லாமல் சித்தர்கள் சொல்வதைப் பார்ப்போம். 


இருந்தாரே சடலம் விட்டு ஆத்மன்தனு 
மெழிளுடனே செல்லவகைவழி காணாமல் 
பொருந்தவே மறு பிறப்பு பிறப்பதையும் 
பேரின்ப சுகமதை யடைவதாயும் 
திருந்தவே எழுபிறப்பு பிறப்போமென்றுந
தேர்கமுடன் மூட மக்கள் சொல்வார் பாரு 
வருந்தவே துவும் பொய்யே யாகும் .
வளமான சடலமது அழியும் பாரே

 ------அகத்தியர் 12000 காண்டம் 5 பாடல் 666

 மனிதன் மடிந்தபின், அவன் ஆன்மா செல்லும் இடம் அறியாதவரகள், அவனின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுவர்க்கம் அடைந்து சுகம் பெற்று மறுபிறவி எடுப்பான். இவ்விதம் ஏழு பிறப்பு எடுப்பான் என்று சொல்லுவார்கள். இப்படி மறு பிறப்பு பிறப்பார் என்பது பொய். அவனது உடல் அழியும் என்பதே மெய். 


கறந்தபால் முளைபுகா கடைந்தவெண்ணெய் மோர் புகா
துடைந்து போன சங்கின் னோசை யுயிர்களும் முடல் புகா 
விழுந்தபூ உதிர்ந்த காய மீண்டும் போய் மரம் புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே.

சிவவாக்கியர் 1000 பாடல்166

பாலைக் கறந்த பின் அது மீண்டும் பசுவின் மடியில் போய்ச் சேராது. சங்கு ஒளி செய்தபின் அந்த ஓசை மீண்டும் சங்கில் சேராது. மரத்தை விட்டு விழுந்த பூவும் காயும் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளாது. அதுபோன்று இறந்தவர் மறுபிறப்பு பிறப்பதில்லை இல்லை இல்லையே.


தீர்த்தமாடிக் கொள்வீர் தெளிந்தவர் போல் 
செப தப சாஸ்திரங்கள் ஓதிக்கொவீர் 
யாத்திரை தீர்த்தங்களாடி நதிகள் தோறும் 
அலைந்து அலைந்து சுற்றி அலைகிறீர் 
மாற்றியே பிறப்போம் என்று பொய் பிரட்டு 
வாய்சமத்து சாஸ்திரஞ் சொல் மடையர்களே 
பாத்திரா பாத்திரம் அறியா பாவிகள்தான் 
பாடு பத்துங் கூற்று அறிய மாடுகள் தான் . 

திருவள்ளுவர் ஞான வெட்டியான் பாடல் 48

 
உயர்பிறவியாக மாறி மறுபடிப் பிறப்பதற்கு, எல்லாம் தெரிந்தவர் போல் சாஸ்திரம் என்ற பெயரில் பொய்புரட்டு சொலலும் மடையர்கள் சொல்லை கேட்கிறீர்கள். இந்தப் பிறவியில் செய்த பாவங்களைப் போக்க, யாத்திரை சென்று கங்கை முதலிய நதிகளில் தீர்த்தமாடுகிறீர்கள், செபங்களும் தவங்களும் செய்கிறீர்கள், கோவில் குளம் என்று அலைந்து திரிகிறீர்கள் .


கூற்று எனும் மரணம் அடைந்த பின் மறுபிறவி இல்லை என்ற உண்மை அறியாத பாவிகளே! இத்தகைய பாடுபடுவதால் பயன் இல்லை.


கேளுவோய் முக்திஎன்ன செத்த பின்ன 
கிறுக்கர் சொல்வார் செத்தது போல் சொல்லுவாரே .

காகபுசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 389


எத்தர் தான தெரியாமல் செத்தத பின்னே
எமநுலகம் சென்றபின்பு முக்தி என்பார் 

காகபுசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 394


செத்தபின்பு எமலோகம் செல்லுவார் என்றும், பாவ புண்ணியத்துக்கு ஏற்ப மீண்டும் பிறந்து புண்ணியம் செய்து முக்தி அடைவார் என்று கிறுக்கர்களும் , ஏமாற்றுபவர்களும் சொல்லுவார்கள்..