சன்மார்க்கம்

திருமூலர் திருமந்திரம் படியுங்கள் .
இறைவனை பற்றி தெளிவாக முதல் 50 பாடலில் சொல்லி உள்ளார் கி.மு 2000 தில் பிதா சுதன் பரிசுத்த ஆவி பற்றியும் சொல்லி உள்ளார் . . நீங்கள் தான் சுதன் , நீங்கள் தான் கல்கி . அதை உங்களுள் காணுங்கள் .

மதங்களுக்கு இடையே சமரசம் தேடுகிறீர்கள் .
மதம் என்பதற்கு அப்பாற்பட்டவன் இறைவன் .. அவனை மத கூட்டுக்குள் அடைத்து சன்மார்க்கம் காண முடியாது . 

சன்மார்க்கம் என்பதை சொன்னவன் திரு மூலன் திருமந்திரத்தில் . . அதை வழி மொழிந்தவர் வள்ளலார் . . 
ஆபிரகாமிற்கு முன்பு இறைவன் இல்லையா ? அவன் எந்த மதம் ?
திரு மூலனுக்கு முன்பு இறைவன் இல்லையா ? அவன் எந்த மதம் ?
நபிகளுக்கு முன்பு இறைவன் இல்லையா ? அவன் எந்தமதம் .
அசலை விட்டுவிட்டு சன்மார்க்கம் தேடி பயன் இல்லை 

.
அவதாரம் என்பதும சுவர்க்கம் நரகம் என்பதும் புராண வேதாந்த கருத்துகள் நம்பிக்கை சார்ந்தது .. அதில் கல்கியும் உண்டு. நியாய தீர்ப்பு சொல்லும் நாளில் தேவன்வருவார். சொர்க்க நரகம் தருவார் என்பதும் உண்டு . இவையும் வேதாந்தமே நம்பிக்கை சார்ந்தது .

நம்பிக்கைகள் மதிக்க படும்வரை மத சன்மார்க்கம் நிலவும் . நம்பிக்கை குலைந்து என் தேவன் பெரியவன் நான் சொல்வதை நீ கேள் என்றால் வன்முறை வெடிக்கும். அதுவே இன்று நாம் பார்ப்பது .
நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு உண்மையான இறை சக்தியை அறிந்தால் பெரியவனும் இல்லை சிறியவனும் இல்லை . இதுவே உண்மை சன்மார்க்கம் .

மனிதனே கடவுள் என்று சித்தர் நந்தி சொன்னார் (நீயே சுதன்) 
.
ஆசசப்பா பரம் நீயே பாபரனும் நீயே 
சத்தமுடன் சாகரமும் நீயே
வாச்சப்பா சக்திசிவம் நீதான் ஆச்சு 
வளமான கோவில் குளம் சிவாலயமும் நீதானச்சு . 
நாச்சப்ப திசை வாய்வு உன்னிடத்தில் நிற்கும் 
நலமாக வகையார் பேச்சு மூச்சே
ஈச்சப்ப உணரறிவால் தேறிஏறு
மடையர்களே உன்னை விட்டால் ஈசன் வேறா 
நந்தீசர் சர்வகலை ஞானம் பாடல் 7
பொருள் நீயே பிரபன்ச்ச தோற்றத்திற்கு முன் இருந்த பரம் ஆனவன் . அதன் பின் இறைவன் தன்னைத்தான் பிரபன்ச்சமாக தோற்றுவித்தான் . இப்பிரபன்ச்சத்தில் அசையும் மற்றும் அசையாத பர அபரன் நீஆனாய் . நீயே சத்தம் என்ற பரவெளி . நீ சமுத்த்திரம் என்ற நீர் .. நீயே வளம் மிக்க கோவில்குளம் . நீயே சிவ்ஆலயம் .. பத்துவகை காற்றுகள் உன்னில் பேச்சாக மூச்க்என்ற உயிராக உள்ளது . . அதனால் மனிதனாக நலமாக உள்ளாய், உன் அறிவால் . உன்னுள் இருக்கும் இறைவனை கண்டு தேறு . மடையர்களே உன்னை விட்டால் தெய்வம் வேறு இல்லை ..
• 2 hrs • Like
• பிதாவே சுதன் அதுபற்றி திரு மூலன் 

நானென்றும் தானென்றும் நாடினான் சாரவே 
தானென்றும நானென் றிரண்டிலாத் தற்பதம் 
தானென்று நானென்ற தத்துவ நல்கலால் 
தானென்று நானென்றுஞ் சர்ற்றகில்லேனே 

திரு மூலர் திரு மந்திரம் பாடல் 1441

பொருள் நான் யார் என்றும் கடவுள் யார் என்றும் ஆராயந்து பார்த்தேன் . கடவுள் மனிதனாகிய நிலையான தற்பதம் (சுதன் ) என்று அறிந்தேன் . எனவே நானே இறைவன் இறைவனே நான் என்று அனைவர்க்கும் சொல்கிறேன் . 

சன்மார்க்கம் பற்றி திரு மூலர் சொன்னது .


சன்மார்க்கம் என்ற தலைப்பில் 1477 . முதல் 1487 வரை11 பாடல்களில் சொல்லி உள்ளார்.

சாற்றும் சன்மார்க்கம்மாந் தற்சிவதத்துவம் 
தோற்றங்களான சுருதிசுடர்கண்டு 
சீற்ரம் ஒழித்து சிவயோக சித்தராய் 
கூற்றத்தை வென்றார் குறிப்றிந்தார்களே 


திரு மூலர் திரு மந்திரம் பாடல் 1441

சன்மார்க்கத்தை பற்றி சொல்கிறேன் . நான் இறைவனின்மாறுபட்ட உருவம் . நானே இறைவனாகவும் இறைவனே நானாகவும் இருக்கும் தற்பர தத்துவம் . 
இவ்விதம் மாறுபட்டஉருவில் இருக்கும் இறைவனாகிய நான் என்னுள் இருக்கும் இறைவனை சுடர் என்ற ஒளிவடிவில் கண்டேன் . ( பரிசுத்த ஆவி ஒளிவடிவில் உள்ளது என்று பைபிள் சொல்கிறது ) அதன் பின் கோபத்தை ஒழித்து வாசியோக உயர்நிலையான சிவயோகம் செய்தேன் அதனால் கூற்றம் என்ற மரணத்தை வென்று மரணமில்லா பெருவாழ்வு பெற்றேன் . இதை அறிந்தவர் சன்மார்க்கி .

தன்னுள் இருக்கும் இறை ஒளியாகிய இறைவனை அருட் பெரும் ஜோதி என்றார் வள்ளலார் .. மரணமில்லா பெருவாழ்வு எனும் கோட்பாட்டை பேசினார் ..