அகர உகர சேர்கை

அகர உகர சேர்கை என்பது என்ன ?
இந்த அகர உகர சேர்கை என்பதை அறிவதற்கு முன் . சித்தர்களின் சில அடிப்படை கட்டமைப்புகளை பாப்போம் . அகரஉகர , விந்துநாத , அண்டபிண்ட, உட்கருவெளிகரு, சக்திசிவன் உப்புபுளி, காரசார, எட்டுஇரண்டு என்னும் சொல்தொடர் இரண்டு பொருட்ட்களை ஒன்றாக சேர்க்கும் பரிபாசைகள்
நிகண்டு .

ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கும் . பலசொல்லுக்கு ஒருபொருள் இருக்கும் . இந்தபரிபசைகளுக்கு பொருள் நிகண்டு என்ற நூல்களில் சொல்லபட்டிருக்கும். இதுபோக தலை பிள்ளை பிண்டம் , வாலை , துமை, ஊமை எபதற்கு நூற்று கணக்கான வியக்கியானம்.உண்டு . இவை ஒவ்வொரு குருபரம்பரைக்கும் ஏற்ப மாறுபடும் . 

உதாரணமாக திருமூலர் பரம்பரை. இது சிவனை அடிப்படையாககொண்டது . . , அகத்தியர் பரம்பரை தமிழில் முருகனை அடிப்படையாகக்கொண்டது .. நந்தி பரம்பரை சிவனை அடிப்படையாகக்கொண்டது. பல பரம்பரைகள் உள்ளன . ஓவ்வொரு பரம்பரையை சேர்ந்தவர்கள் அவர்களின் பரம்பரை நூல்களில் உள்ள பரிபாசைக்கு தனித்தனி  நிகண்டு செய்து உள்ளார்கள் , உதாரணமாக போகர் நிகண்டு ஆயிரத்து இரநூறு . அகத்தியர் பஞ்ச காவிய நிகண்டு எண்ணுரு நந்தீசர் நிகண்டு முண்ணூறுஆகியவை .
அகர உகர சேர்கை . 

பொதுவாக அகரஉகர அல்லது எட்டு இரண்டு என்பதை பாப்போம் ..
இச்சொல் தொடர் யோகா சித்தியில் சொல்லப்படும் . இதுவே வேதை சித்தியில் சொல்லப்படும் . . .
பக்தி குருமார்கள் இதை சொல்வது இல்லை . யோகத்தில், யோகசித்தி ஆனா குருமார்கள் சொல்லுவார்கள் . வேதை சித்தியில் முப்பூ முடித்த குருமார்கள் சொல்லுவார்கள் . இவர்களை அறிவது அரிது.

பக்தி யோகத்தில் அகர உகர இணைப்பு
பக்தியோகத்தில் இறைவனோடு பக்தன் இணைந்து இருப்பது . இந்த இணைப்பு இருபது வகைள் ஆக பிரித்துள்ளார்கள் . . அவற்றுள் உயர்ந்தவை இரண்டு .ஓன்று மஹா பாவம் மற்றது பிரேம பாவம் .
இறைவனிடம் எல்லையற்ற தூய அன்பே மகாபாவம் . . இதை திருமூலர் “அன்பே சிவம் என்றார் . நாரதர் விஷ்ணுவிடம் வைத்தது மஹா பாவம் . இங்கு இணைப்பாக இருப்பது அன்பு . விஷ்ணு= அ , நாரதர் =உ அன்பு= ம
.பிரேமபாவம்: இறைவனிடம் காதல் கொள்ளுதல். .
“காதலாகி கசிந்து உருகி என்றார் மாணிக்க வாசகர் . ராதை கண்ணனிடம் கொண்டது ஆகியவை பிரேம பாவம் ..
பக்தி யோகம் செய்தவருக்கே யோக சித்தி வாய்க்கும் . தூய பக்திக்கு சித்தர்கள் எதிரி இல்லை . பக்க்தியின் பெயரால் ஏமாற்று பவர்க்கும் மூட பழக்கத்திற்கும் எதிர்பாளர்கள் .

::: யோகசித்தியில் அகரஉகர அல்லது எட்டு இரண்டு இணைப்பு

மூலதாரத்தில் இருக்கும் விந்து சக்தி என்ற அகரத்தை , சகஸ்ர தளத்தில் உள்ள உகரம் என்ற நாதத்துடன் இணைத்து சுழிமுனையில் அல்லது ஆக்ஞாவில் அமிர்தம் சுரக்க செய்தல் . இத்தகு இதற்கு மூலாதாரத்தில் வெப்பத்தாலும் காற்றாலும் குண்டலி அலை உறவாகி அதை ஒளி அலையாக மாற்றவேண்டும் இந்த ஒளியே அகத்தீ என்ற வாலை . இந்த வாலை மகாரம் என்று பரிபாசையால் சொல்லப்படும் . .
விந்து+ நாதம் + வாலை = அ+ உ + ம = அமிர்தம்
இது வாலை குரு என்று சொல்லுவார்கள் இங்கு மகாரம் என்ற ஊமை எழுத்து என்ற வாலை இல்லாமல் அமிர்தம் சுரக்க்காது . ஊமை ம் என்று பேசுவார்கள் . எனவே மகரம் ஊமை எழுத்து ஆனது . இதை பரி பாசை ஆக அகர உகரத்தை ஊமை எழுத்து இல்லாமல் சேர்க்க முடித்யாது . என்று சில குருமார்கள் சொல்லுவதுண்டு ..
வேதை சித்தியில் அகர உகர இணைப்பு
வேதை என்பது ஒரு பொருளின் அணு தன்மையை மாற்றுவது . அதன் பின் இணைப்பது .. இந்த இணைப்பில் முக்கிய மானது முப்பூ இணைப்பு . இதில் விந்துப்பு= சிவ வுப்பு = அகரம :: நாத உப்பு = சக்தி உப்பு இந்த இரண்டை இணைக்க மகாரம் என்ற அண்ட உப்பு வேண்டும் இம்மூன்றையும் இணைத்தால் முப்பூ என்ற முப்பூ குரு கிடைக்கும் . = அமிர்தம்
. .
சித்தர் நிலை அகர உகர இணைப்பு .
வாலை குருவை யும் முப்பூ குருவையும் அஷ்டாங்க யோகத்தில் பத்தியம் என்ற இணைப்பால் இணைத்து செய்வது சிவயோகம் . சிவனும் சித்தர் களும் செய்தது . இதை பத்து ஆண்டுகள் செய்து சித்தி பெற்றால் சித்தர் . அவருக்கு அஷ்டமா சித்தி கிடைக்கும் . சாகா நிலை அடைவார் . இத்தகைய சித்தர்கள் இறைவனுடன் இணைந்து இறை நிலை அடைவார்கள் . இவர்களே ஞானி . இதுவே அகர உகர இணைப்பின் உச்சம் . . இதை “தான் அவன் ஆதல் “ என்பார்கள் . இதை தான் நான் வாழ்த்து வதற்கு பயன்படுத்துகிறேன்.