கல்பங்கள்

கல்பங்கள்

கல்பங்கள் உடலை வலுவாக்கி  நீண்ட ஆயுளைத் தரவல்லவை. உலகில் 108 கல்பங்கள் உள்ளன. அவற்றைச் செய்யும் முறையைச் சித்தர்கள் மறைபொருளாகக் கூறி உள்ளனர். சிவன் 108 கல்பங்கள் உண்டார். அகத்தியர் 100 கல்பங்கள் உண்டார். கல்பம் என்பது, இருக்கின்ற நோயைப் போக்கும்; நோய் வரவிடாமல் தடுக்கும்; உடல் செல்களைப் புதுப்பிக்கும்; உடலை வலுவாக்கி  இளமையாகத் தொடர்ந்து வைத்திருக்கும் மருந்தாகும். ஒரு மருந்துப்பொருளைத் தூய்மைப்படுத்தி, பதப்படுத்தினால் அது கல்பமாக மாறும். கல்பங்கள் நம் உடலில் உள்ள அழுக்குகளை எல்லாம் வெளியேற்றி உடலுக்கு உயிர்ச்சக்தியைப் பெற்றுத்தரும்.

வாசி யோகம் என்பது கல்பங்கள் உண்டு, வாசியை உருவாக்கி, வாசியைப் பயன்படுத்தி சுழுமுனையைத் திறக்கச் செய்து, அமிர்தம் உண்டு, நீண்ட ஆயுளுடன் என்றும் இளமை குன்றாமல் இருப்பதாகும். இதற்கு அடிப்படையாக உடலைச் சுத்தப்படுத்துவதற்கு கல்பங்களை உண்டு ஆசனங்கள் செய்ய வேண்டும். மனதைக் குவிப்பதற்கு திராடகா, சூர்ய யோகம், சந்திர யோகம் போன்ற பயிற்சிகள் செய்திடவேண்டும். கல்பங்களை சித்தர்கள் கூறிய நெறிமுறைப்படி முறையே உண்ண வேண்டும்.

கடையில் கிடைக்கும் மூலிகைப் பொடிகளை வாங்கி உண்பதை விட, அவரவர் தாங்களே செய்து பயன்படுத்துவது சிறப்பானது. அத்துடன் நாமே செய்து பயன்படுத்துவது, பிற்காலத்தில் பெரிய கல்பங்கள் செய்வதற்கு முன் அனுபவமாகவும் அமைகிறது.

 

முதல் மூன்று கல்பங்கள்

சாதாரணமாக நாம் உணவாக உண்ணும் இஞ்சிசுக்குகடுக்காய் ஆகியன சில நன்மைகள் செய்தாலும் அவை கல்பமாகச் செயல்படாது. அவற்றைக் கீழ்க்கண்ட முறைப்படி சுத்தப்படுத்தி உண்ணும்போது அபரிமிதமாகச் செயல்படுகிறது. அணுவானது பிளக்கப்படும்போது சக்தி எவ்வாறு அபரிமிதமான சக்தி வெளிப்படுத்துகிறதோ அது போல மருந்துகளும் கல்பமாக மாற்றப்படும்போது மாபெரும் சக்தி வெளிப்படுகிறது.

கீழ்க்கண்ட இஞ்சிசுக்குகடுக்காய் ஆகிய மூன்று கல்பங்களையும் நாற்பது நாட்கள் தொடர்ந்து உண்டால் சர்க்கரை வியாதிரத்தக்கொதிப்புவயிற்று உப்புசம்இருதய வியாதிகள் மற்றும் பல வியாதிகளையும் கட்டுப்படுத்தும். அத்துடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய் மண்டலம் உண்டுவர

கோலை ஊன்றி நடக்கும் கிழவரும்

கோலை விடுத்து குலாவி நடப்பரே"  -என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்.

இந்த மூன்று கல்பங்களின் முதன்மையான பலன் ஆண்-பெண் உறவை மேம்படுத்திகுழந்தைப்பேறு நல்குவதாகும். கணினியில் பணி செய்யும் ஆண்களின் ஆண்மைத்தன்மை சற்றே குறைந்திருக்கும். சுக்கிலத்தில் உயிர்சக்தி மிகக்குறைவாக இருக்கும். குழந்தைப்பேறும் கிடைக்காது. இத்தகையோருக்கு இந்த மூன்று கல்பங்கள்சுக்கிலத்தை கெட்டியாக்கி உயிர் சக்தியை மீட்டுத் தரும். பெண்களுக்கும் சுரோணித உற்பத்தி சீராகி அதிகரித்து குழந்தைப்பேறும் கிட்டும்.

கீழ்க்கண்ட மூன்று கல்பங்களையும் முறைப்படி உண்ணவேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பமும்மதிய உணவு உண்டபின் சுக்கு கல்பமும் இரவில் கடுக்காய் கல்பமும் ஒரு மண்டலம், அதாவது 40 நாட்கள் உண்ணவேண்டும். அடுத்த சில மாதங்களுக்குள் குழந்தைப்பேறு உறுதியாகும். அந்த 40 நாட்களில் கருமுட்டை உடையும் சிலநாட்களுக்கு மட்டும் உடலுறவு கொள்வது நல்லது. மற்ற நாட்களில் உடலுறவு கொள்ளாமல் இருப்பது நன்று. வேறு பத்தியம் இல்லை. துரித உணவு வகைகளை அதிகம் உண்ண வேண்டாம். உயிர்சக்தி மிக்க கம்பு, கேழ்வரகு, வெங்காயம், முருங்கைப்பூ ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நன்று. 

1.இஞ்சி கல்பம்:

   இஞ்சி கல்பம் செய்வது மிகவும் எளிமையானது. அதன் பயன்களோ மிக அதிகம். பித்தத்தைச் சமப்படுத்தும். செரியாமைவயிற்றுப் பிரச்சனைதலை கிறுகிறுப்பு போக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். மாரடைப்பு மற்றும் இருதய நோய்களைக் கட்டுப்படுத்தும்.

 தேவையானவை:

இஞ்சி அரை கிலோ,

தூய தேன் கால் லிட்டர்.

செய்முறை:

இஞ்சி அரை கிலோ அளவிற்கு எடுத்துக்கொண்டு  நன்கு கழுவவும். அதன் தோலை நீக்கிசிறு சிறு துண்டுகளாக்கி மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுதினைப் பிழிந்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும். பின் ஒரு மணிநேரம் படிய விடுங்கள். ஒரு மணிநேரம் கழித்துப் பார்த்தால் வீழ்படிவு கீழே படிந்திருப்பதைக் காணலாம். அந்த வீழ்படிவுதான் நச்சு ஆகும். சாற்றை எடுத்துக்கொண்டு வீழ்படிவை அகற்றி விடவும்.

அந்த இஞ்சிச் சாற்றில் நன்கு பழுத்த இரும்புக் கம்பியை ஒரு நிமிடம் முக்கி எடுத்துவிடவும். இந்த தெளிந்த இஞ்சிச் சாற்றுடன் அதே அளவு தேன் கலந்து கலக்கி, ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இஞ்சிச் சாற்றைப் பருகினால் அது மூலிகை மட்டுமே. அதன் நச்சினைப் போக்கியதால் தற்போது அமிர்தமான கல்பமாகின்றது.

அதிகாலையில் வெறும் வயிற்றில் இரு தேக்கரண்டி  (10மி.லி) அளவு எடுத்து ஒரு குவளை (100 மி.லி.) நீருடன் கலந்து பருகவும். மேற்கண்டவாறு ஒரு மண்டலம் அதாவது 40 நாட்கள் தொடர்ந்து பருக வேண்டும்.

2.சுக்கு கல்பம்:

சுக்கு கல்பம் சுரப்பிகளின் சமமின்மையை சரிசெய்யும். வாயுத் தொல்லைகளை நீக்கும். வாதம் தொடர்பான நோய்களைப் போக்கும்.

தேவையானவை:

சுக்கு கால் கிலோ,

சுண்ணாம்பு 25 கிராம்,

நீர் ஒரு லிட்டர்.

செய்முறை:

சுக்கு கால் கிலோ அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைக்கவும். இந்த சுண்ணாம்பு நீரில் சுக்கினை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் சுக்கினை எடுத்து வெயிலில் காய வைக்கவும். வெயிலில் நன்கு காய வைத்தபின், சுக்கின்மீது படிந்திருக்கும் அதிகப்படி சுண்ணாம்பை நீக்கவும். பின் சிறுதுண்டுகளாக்கி மிக்சியில் அரைக்கவும். அரைத்தபின் பொடியினை எடுத்துஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு வைக்கவும்.

மதியம் உணவு உண்டபின் அரை தேக்கரண்டி அளவு சுக்கு கல்பம் எடுத்து சுடுநீரில் கலந்து பருகவும். சர்க்கரை சேர்த்துகூட பருகலாம்.

சுக்கினை வெறுமனே பொடியாக்கி உண்டால் அது மூலிகை மட்டுமே. அதனை சுண்ணாம்பு நீரில் ஒரு மணி நேரம் ஊறவைப்பதின் மூலம் நச்சினை போக்கியபின் அது கல்பமாகின்றது. ஒரு பொருளின் நச்சினைப் போக்கினால் அது அமிர்தமாகிறது.

3.கடுக்காய் கல்பம்:

தேவையானவை:

கடுக்காய் அரை கிலோ (மஞ்சள் நிறத்தில் இருப்பதே சிறப்பு)

பசும்பால் அரை லிட்டர்

செய்முறை:

கடுக்காய் அரை கிலோ அளவிற்கு எடுத்துக்கொண்டு அதனை பாலில் இட்டு கால் மணி நேரம் காய்ச்சவும். பின் வெயிலில் காய வைக்கவும். மூன்று நாள் நன்கு காய வைத்தபின்மிக்சியில் கொட்டையுடன் அரைக்கவும். அரைத்தபின் பொடியினை எடுத்துஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு வைக்கவும்.

இரவு உணவு உண்டபின் ஒரு தேக்கரண்டி அளவு கடுக்காய் கல்பம் எடுத்து வெந்நீரில் கலந்து பருகவும்.

கடுக்காயின் கொட்டை நச்சுதான். ஆனால் அதனை மேற்கண்டவாறு சுத்தி செய்தால் அதுவே அமிர்தமாகிறது. கடுக்காயினை வெறுமனே உண்டால் அது மூலிகை மட்டுமே. அதனை பாலில் காய்ச்சியதன் மூலம் அகநச்சினை போக்கியபின் அதுவே கல்பமாகின்றது.

மற்ற கல்பங்களைப் போலல்லாமல் இக்கல்பத்தை பல்லாண்டுகளுக்கு உண்ணலாம். இஞ்சி சுக்குடன் உண்ணுவதுடன் கூடகரிசாலை நெய்யுடன் கூட இதே கடுக்காய் கல்பத்தைப் பயன்படுத்தலாம். சாதாரண்மாகவும் கூட தினமும் இரவு உணவுக்குப் பின் உட்கொள்ள ஏற்றது அமிர்த கடுக்காய் கல்பம் இதுவே. 

4.கரிசாலை நெய் கல்பம்:

கரிசாலை நெய் கல்பமானது உடலுக்குள் இருக்கும் கபத்தைவிசத்தை எடுக்கக்கூடியது. கரிசாலை கல்பமானது வாதம்பித்தம்கபம் மூன்றையும் சமப்படுத்தக்கூடியது. இதனால் சளித் தொல்லைஆஸ்துமாஈசனோபிலியாஜலதோசம்சைனஸ் போன்ற கபம் சார்ந்த தொல்லைகளிலிருந்து விடுபடலாம். வாசியோகம் செய்யத்தொடங்குவோர் இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அடுத்த பத்தியில் காணலாம்.

தேவையானவை:

1. வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலைச்சாறு அரை லிட்டர்.

2. மிளகுத்தூள் 20 கிராம்.

3. நெய் கால் கிலோ.

இதேவிகிதத்தில் தேவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ செய்து கொள்ளவும்.

செய்முறை:

வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை (பூகாம்புகள் நீக்கி) மிக்சியில் அரைத்து அதன் சாறை மட்டும் எடுத்து பாத்திரத்தில் இட்டு சிறு தீயில் காய்ச்ச வேண்டும். காய்ச்சும்போதே நெய்யை ஊற்ற வேண்டும். மெழுகு பதம் வந்ததும் மிளகுத்தூளைக் இட்டுக் கலந்து இறக்கி ஆற வைக்கவும். இது கரும்பச்சை நிறத்தில் காணப்படும். நன்கு ஆறியபின் ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். குளிர்சாதனப் பெட்டி இல்லையேல் மண்பாண்டத்திற்குள் வைத்துப் பயன்படுத்துக.

பயன்படுத்தும் முறை:

அதிகாலையில் வெறும் வயிற்றில்கரிசாலை நெய்யை கட்டைவிரலின் மேல்பகுதியில் தடவிஅண்ணாக்கில் தொங்கு நாக்கிற்கு அருகே இடம் வலமாக (clockwise) சுற்றவும். மிகவும் அழுத்தம் கொடுக்கவேண்டாம். ஒரு நிமிடம் இவ்விதம் செய்யவும். கைவழியே வழுவழுப்பான திரவம் கையை சுற்றிக்கொண்டு வழியும். அதுவே வழலை என்ற விசம். செய்யும்போது கட்டைவிரல் அருகாகவும் சளி ஒட்டிக்கொண்டு வரலாம். கையை கழுவிக் கொள்ளவும்.  இவ்விதம் நான்கு சுற்றுகள், ஒரு நிமிடம் வீதம் செய்யவும். நாற்பது நாட்கள் இவ்வாறு தொடர்ந்து செய்யவும். இதனை வழலை வாங்கல் என்பர். கைவழியே வழுவழுப்பான திரவம் வழிகிறதல்லவாஅதுதான் வழலை ஆகும்.

கவனிக்க வேண்டியவை:

v அதிகாலையில் வெறும் வயிற்றில் மட்டும் செய்யவும். உண்டபின் செய்தால் வாந்தி வரும்.

v சில சமயம் குமட்டல் வரலாம். சில நாட்களில் சரியாகி விடும்.

v சில சமயம் குரல்வளைதொண்டை வலி வரலாம். சில நாட்களில் சரியாகி விடும்.

v குமட்டல்வலி இருப்பின் சுற்றுக்கள் எண்ணிக்கையை சில நாட்களுக்கு குறைதுக் கொள்ளவும்.

v எடுத்த கரிசாலை நெய்யில் மீதத்தை உள்ளுக்கு சாப்பிடலாம்.

தொடர்ந்து செய்யவேண்டியது:

ஒரு நிமிடம் வீதம் நான்கு சுற்றுகள் செய்தபின்கற்றாழை சோற்றுப் பகுதியை (கெட்டித் தோலை நீக்கி) அதிக பட்சமாக இரு அங்குல அளவிற்கு எடுத்து அதன் மீது சிறிது மிளகுத்தூள் தூவிஅண்ணாக்கில் ஒரு நிமிடம் தடவவும். பின் அதனை உண்டு விடவும். அதனால் தொண்டையில் தங்கிய மீத கபம் வெளியாகிவிடும். மேலும் குடலில் உள்ள சளியையும் இது எடுத்துவிடும். உடலுக்கு உறுதி தரும். இதில் ஏறக்குறைய இருபதுக்கும் மேற்பட்ட சத்துக்கள் உள்ளன.

இறுதியாக அரை தேக்கரண்டி கடுக்காய் பொடியை ஒரு குவளை நீரில் கரைத்து உண்ணவும். மேற்கண்டவாறு ஒரு மண்டலம் அதாவது 40 நாட்கள் தொடர்ந்து செய்ய உடலில் உள்ள கபம் மற்றும் நச்சுக்கள் குறைந்து வாசி யோகம் செய்வது எளிதாகும்.

வாசி யோகம் பழகுபவர்கள் முதலாவதாக கரிசாலை நெய்யை பயன்படுத்தி வழலை வாங்கலை முடித்துபின்னரே மற்ற கல்பங்களைப் பயன்படுத்தல் நலம். 

5. வல்லாரை தூதுவளை கல்பம்:

வல்லாரை ஒரு ஞானப்பச்சிலை ஆகும். வல்லாரை தூதுவளை கல்பம் நினைவாற்றலை வளர்த்து சளியையும் போக்கவல்லது. மூளை பலப்படும். ஞான சக்தி கூடும். நோய் எதிர்ப்புசக்தி மிகும். ஆண் பெண் உறவு மேம்படும். சாதாரணமாக பயன்படுத்தினால் அது வெறும் கீரைதான். ஆனால் அதனை முறையாகச் செய்து சித்தர்கள் கூறியமுறைப்படி உண்டால் அதுதான் கல்பம். இது நினைவாற்றலை வளர்க்கும் என அறிவியலார் தற்காலத்தில் கண்டறிந்துள்ளனர்.

தேவையானவை:

1. கைப்பிடி அளவு வல்லாரை. ( கைப்பிடி என்பது காம்புகளை மட்டும் சேர்த்துப் பிடித்தால் ஒருகைப்பிடி அள்வு இருக்க வேண்டும்)

2. ஒன்றரை கைப்பிடி அளவு தூதுவளை,

3. மிளகு 15-20.

4. கருஞ்சீரகம் 10 கிராம்.

5. தண்ணீர் ஒன்றரை லிட்டர்

செய்முறை:

வல்லாரையையும் தூதுவளையையும் இலை மற்றும் காம்புகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகு மற்றும் கருஞ்சீரகத்தையும் பொடியாக்கிக் கொள்ளவும். அனைத்தையும் ஒன்றரை லிட்டர் தண்ணீரில் இட்டுக் கலந்து சிறுதீயில் காய்ச்சவேண்டும். மிகக் குறைந்த சூட்டில் காய்ச்சவேண்டும். ஒன்றரை லிட்டர் நீர் அரை லிட்டராக சுண்ட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு மேல் கூட ஆகலாம். இந்த கசாயத்தை ஆறவிடுக. அதில் உள்ள தூதுவளை முள் இருப்பின் நீக்கி விடவும். ஆறியபின் கசாயத்தை வடிகட்டிஒரு கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். மீதி இருக்கும் விழுதில் தூதுவளைக் காம்புகள் இருப்பின் நீக்கிவிட்டு அம்மியிலோ மிக்சியிலோ இட்டு அரைத்துத் தனியே கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். இரண்டையும் குளிர் பதனப்பெட்டியில் வைத்திருந்தால் நீண்டநாள் கெடாமல் இருக்கும்.

உண்ணும் முறை:

கசாயத்தை மூன்று தேக்கரண்டி அளவு எடுத்துஒரு குவளை நீரில் இட்டு அதிகாலை வெறும் வயிற்றில் குடிக்கவும். அத்துடன்கூட அந்த விழுதினை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கவும்.

இந்த வல்லாரை தூதுவளை கல்பத்தை ஒரு மண்டலம் அதாவது 40 நாட்கள் பருகி வந்தால் நினைவாற்றல் நன்கு வளர்வதுடன் சளியும் நீங்கிவிடும். ஞானம் பெருகும். உடல் வளப்பம் பெறும். 

6.கீழாநெல்லிமஞ்சள் கரிசாலை கல்பம்:

உடலில் முக்கியமான உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும். இதன்  அனைத்து பணிகளையும் மருத்துவ அறிவியல் உலகம் இன்னும் கண்டறியவில்லை. அத்துடன் கல்லீரலைச் சுத்தப்படுத்தும் வழிகளையும் இன்னும் ஆங்கில மருத்துவம் கண்டறியவில்லை. இந்த கீழாநெல்லி கல்பமானது ஈரலைப் பலப்படுத்துவதாகும். கொழுப்பு செரிக்கவில்லை என்பவர்கள் இதனை உண்ண அச்சிக்கல் சரியாகும். குடிப்பழக்கத்தால் கெட்டுப்போன ஈரலையும் கூட இக்கல்பம் உண்பதன் மூலம் சரிப்படுத்தலாம்.

தேவையானவை:

கீழாநெல்லி ஒரு கைப்பிடி அளவு

மஞ்சள் கரிசலாங்கண்ணி ஒரு கைப்பிடி அளவு

மோர் 100 மி.லி.

செய்முறை:

கீழாநெல்லியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணியையும் நீரில் நன்கு அலசவேண்டும். பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நசுக்கிக் கொள்ளவும். அதனை மோர் விட்டு அம்மியிலோ மிக்சியிலோ அரைக்கவும். ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

காலை வெறும் வயிற்றில்இந்த கல்பத்தை பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு குவளை மோரில் கலந்து பருகவும். இது பருகும் நாளில் உணவில் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்கவும். 

மோர் ஒரு அனுபானமாகும். மோருடன் கலந்து குடிப்பதால் கல்பத்தின் செயல்பாடு மேலும் கூடுகிறது. கீழாநெல்லியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணியையும் பச்சையாகவும் உண்ணலாம். சாதாரணமாக குறைந்தபட்சம் ஒருவாரம் உண்டால் போதும்.  கல்லீரலில் தங்கியுள்ள ஹெப்படடைஸ் பி, போன்ற வைரஸ்களை நீக்கிட,மற்றும் மஞ்சள்காமாலை நோயைப் போக்க வேண்டுமானால் 40 நாட்கள் உண்ணவேண்டும். ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள பிலுரூபின் (BLIRUBIN)ஐ குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். 

7.மருந்தீடு முறிக்கும் இடுமருந்து கல்பம்:

சிலர் பிறரை வசியப்படுத்தவும்அழிக்கவும் மருந்தீடுகள் (செய்வினை) செய்து வைப்பதுண்டு. மருந்தீடு என்பது நச்சுகிருமிபிணக்கழிவுகளில் இருந்து செய்யப்படுகிறது. இதில் ஆணீடுபெண்ணீடு அதாவது ஆண் வசியம்பெண் வசியம் என இருவகை உண்டு. இந்த மருந்தீடைப் போக்கிடும் இடுமருந்து கல்பத்தை, ரோமரிஷி தன் வைத்திய காவியத்தில் அருளி உள்ளார்.

"ஆணீடும் பெண்ணீடும் கருவாகப்

போக்கென்று சொல்லக் கேளு

காட்டுவேன் இடுமருந்து கவடில்லாமல்

நன்றாக தீர்ந்திடும் மருந்தைக் கேளு

வாட்டவே கூழ்பாண்டக்காய் நறுக்கிக் கொண்டு

அப்பனே தேங்காய்ப்பால் இட்டுக் காய்ச்சி

கூட்டவே மூன்றுநாள் தின்றாயானால்

குறைந்துவிடும் மருந்தினுடை வேகந்தானும்"

-ரோமரிஷி ,வைத்திய காவியம்500.

(ரோமரிஷி காகபுசுண்டரின் மாணவர்- ரோம நாட்டிலிருந்து வந்தவர்)

இப்பாடலில் குறிப்பிடப்படும் கூழ்பாண்டக்காய் என்பது வெண்பூசணிக்காயைக் குறிக்கும். வெண் பூசணிக்காயைத் தோலுடன் நறுக்கிக் கொண்டு தேங்காய்ப்பாலில் இட்டுக் காய்ச்சி மூன்று நாள் உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் அனைத்துவகை இடுமருந்தையும் முறித்து நம்மை நலமாக்கும்.

மரபணு  மாற்றம் செய்யப்பட்ட காய்களாலும் பூச்சிமருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளாலும் உடலில் நச்சுக்கள் சேர்கிறது. இந்த கல்பத்தை மூன்று மாதத்திற்கு ஒருமுறை உண்டால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் போய்விடும்.

8.நில வாகை அவுரி கல்பம்:

செயற்கை மருந்துகளாலும் செயற்கை முறைகளாலும் நச்சாகிப்போன உணவு விசங்களைப் போக்கக்கூடிய எளிய கல்பம் இது.

தேவையானவை:

நில வாகை கால் கிலோ

நீலி அவுரி கால்கிலோ

எலுமிச்சை

செய்முறை:

நில வாகையையும் நீலி அவுரியையும் நாட்டு மருந்துக் கடையில் வாங்கிக்கொள்ளவும். தூளாகும் பதம்வரை நிழலில் உலர்த்தவேண்டும். பின் இரண்டையும் பொடியாக்கிக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதனைப் பல மாதங்களுக்கு வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். தினமும் பயன்படுத்த வேண்டியதில்லை. மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். வயிறு சரியில்லாதபோது, மலச்சிக்கலின்போது பயன்படுத்தலாம்.

நீங்கள் இக்கல்பத்தை பயன்படுத்த எண்ணும்போதுபாதியளவு எலுமிச்சையை ஒரு குவளை நீரில் பிழிந்து விடவும். அந்த எலுமிச்சை பானத்துடன் இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு இட்டு கலந்து குடிக்கவேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்களாலும் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளாலும் பழங்களாலும் விசக்கடியாலும் உடலில் சேர்ந்த நச்சுக்கள் மறுநாளே ஓடிவிடும். 

9.மூதண்ட கியாழ கல்பம்:

வாசி யோகம் செய்வதால் ஏற்படும் உடற்சூடுமூலச்சூடு போன்றன தணிக்க மூதண்ட கியாழ கல்பம் அருமருந்தாகும். அத்துடன் மூலாதார வெப்புகொப்புளம்பெண்கள் வெள்ளைப்பாடுஆண்கள் இந்திரியம் வெளியேறல் போன்ற உடல் வெப்பத்தால் ஏற்படும் வியாதிகள் தீரவும் மூதண்ட கியாழ கல்பம் உற்ற மருந்தாகும். இந்த கல்பத்தை வெறும் வயிற்றில் மூன்றுநாட்கள் உண்ண மேற்கண்ட அனைத்து வெப்பநோய்களும் தீரும்.

தேவையானவை:

அருகம்புல் ஒரு கைப்பிடி

தண்ணீர் ஒரு லிட்டர்,

மிளகு 25கிராம்,

வெண்ணெய் 10 கிராம்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றவும். அதில் கைப்பிடி அளவு அருகம்புல்லையும் 25 கிராம் மிளகையும் இட்டு காய்ச்சவும். சிறு தீயில் மெதுவாக 125மில்லியாக சுண்டும்வரைக் காய்ச்சவும். சுண்டியபின் 10கிராம் வெண்ணெய் இட்டு இறக்கவும். இதுதான் மூதண்ட கியாழ கல்பம் ஆகும்.

எச்சரிக்கை:

அனைத்துக் கல்பங்களையும் ஒரேநேரத்தில் உண்ணக்கூடாது. முதலில் கரிசாலை நெய்கல்பம், கற்றாழை கல்பம், ஆகிய மூன்றையும் ஒரு மண்டலம் அதாவது 40நாட்கள் பயன்படுத்தி வழலை வாங்கவேண்டும். குறைந்தது 10 நாட்கள் கழித்து இஞ்சிசுக்குகடுக்காய் கற்பம் மூன்றையும் முறையே காலைமதியம்இரவு உண்ணவேண்டும்.

வல்லாரைகீழாநெல்லிநிலவாகைபூசணிக்காய் கல்பம் போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தேவைப்படும்போது உண்ணவேண்டும். ஒரே நேரத்தில் பல கல்பங்களையும் பயன்படுத்த வேண்டாம்.

இறை அருள் பெறுக!!!          தான் அவன் ஆகுக!!!

                                   அன்புடன்,

                         யோகி வே.இராஜா கிருஷ்ணமூர்த்தி

Comments